Advertisement

அத்தியாயம் 12

 

         இரவு தூங்கப்போகும் முன் இவளுக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. என்னவென்று தெரியாமல் எடுத்து பேச தொடங்கவும் ஒரு பெண் பேசினாள் தன்னை மித்ராவிற்கு லெட்டர் கொடுத்த பிரதீபா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினாள்… அப்போது சொன்னாள் ரொம்ப சந்தோஷங்க… உங்க பிரச்சனை முடிஞ்சது..,  நான் உன்கிட்ட லட்டர் கொடுக்க மூணு நாலு நாளா ட்ரை பண்ணிட்டு இருக்கேன்…. உங்களுக்கு மேரேஜ் பேசுறாங்க அப்படின்னு தெரிஞ்ச நாள்ல இருந்து ட்ரை பண்ணிட்டு இருக்கேன்…. என்னால உங்கள கான்டாக்ட் பண்ணவே முடியல.,  அதனால தான் வேற வழி இல்லாம நேரில் காலேஜ்ல வந்து கொடுத்துட்டு போனேன்… அப்பவும் உங்களை நேரில் பார்க்க நினைத்தேன், முடியல.,

       ரொம்ப தேங்க்ஸ் நீங்க ரிஸ்க் எடுத்து லட்டர் கொடுத்து இன்பார்ம் பண்ண போய் எல்லாத்தையும் பேசிட்டாங்க…. இல்லாடி இது எப்படி முடிஞ்சி இருக்குன்னு தெரியல…. என்று மித்ரா கூறவும்.

                ஜெகதீஷ் காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்….  ஜெகதீஷ்க்கு  அந்த மாதிரி ஒரு எண்ணமே கிடையாது… உங்க கிட்ட பேசினது எல்லாம் தப்பு தான்…., சாரி  அவன்  அப்படி யோசிக்கிற ஆளும் கிடையாது…, அப்படி பேசுற ஆளும் கிடையாது…, எனக்கு தெரியும் அவன் தப்பு பண்றான்  நான் இல்லைன்னு சொல்லலை..,  ஆனா அந்த  மாதிரி மோசமான கேரக்டர் கிடையாது.., கடத்திட்டு போய் அப்படி இப்படின்னு சொன்னதெல்லாம்  இன்னொருத்தன் இருக்கானே., அவன் எழுதிக் கொடுத்து இவன் பேசினது., உங்களை மிரட்டுவதற்காக, அவனோட பிளான்தான் இது எல்லாமே உன் கிட்ட இப்படி பேச சொல்லி உங்களை மிரட்டி மேரேஜ் பண்ண.,  அப்படியே உங்களை மேரேஜ் பண்ணி இருந்தா கூட கண்டிப்பாக ஜெகதீஷ் அந்த அளவுக்கு கொடுமை படுத்திற டைப்லாம் கிடையாது…,  அது எனக்கு தெரியும்  அவன் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிற பையனாலும் ரொம்ப நல்ல குடும்பத்தில் உள்ள பையன் அதனால அப்படி பண்ண மாட்டான்…., அவன் கேட்கிறதெல்லாம் அவங்க அப்பா அம்மா வாங்கி கொடுத்து இருந்தாங்க., இல்லன்னு சொல்லல அவன்கிட்ட ஒரு பிடிவாதம் இருக்கும்… ஆனா  வந்து மத்தவங்கள கொடுமைப்படுத்தி பார்க்கிற அளவுக்கு  அளவுக்கு தப்பான பையன் கிடையாது…  சாரி மன்னிச்சுக்கோங்க… என்று அவனுக்காக பிரதீபா அதிகமாக பேசவும்…,

       அவள் சிரித்துக்கொண்டே ரொம்ப லவ் பண்றீங்கன்னு தெரியுதுங்க….. ஓகே டேக் கேர்.., ஒரு நாள் நேரில் பார்க்கலாம்…

      நீங்க தப்பா எடுக்காதீங்க… ப்ளீஸ் என்கவும்…

        இல்ல…  இல்ல….  நான் தப்பா எடுத்துக்கல…  நீங்க கவலை படாதீங்க… என்று சொல்லி.,  சிரித்துப் பேசிக் கொண்டே சொன்னாள்…எனக்கும் இந்த பிரச்சினை முடியனும் தான் யோசிச்சேன்.,  இந்த பிரச்சினை இப்படி வளர்ந்துட்டே இருந்துச்சுனா…, ரெண்டு பேரோட லைப்பும் நல்லா இருக்காது.., ரெண்டு பேரும் யாரை எப்ப திட்டலாம்., யார் எப்ப எந்த பிரச்சினையை கிரியேட் பண்ணுவாங்க தெரியாம பயந்துட்டே இருக்கனும்., இந்த பிரச்சினை  முடிகிறது நல்லது தான்.., அந்த வகையில் எனக்கு சந்தோஷம்தான்., தேங்க்ஸ்ங்க என்று சொல்லிவிட்டு இருவரும் சாதாரணமாகப் பேசிவிட்டு சிரித்தபடியே இருவரும் குட் நைட் சொல்லி போனை வைத்து  விட்டனர்….

      அன்றைய இரவு தூக்கம் இவளுக்கு நிம்மதியாக இருந்தது…, ஏனெனில் சித்தார்த் அதற்கு முன்பே தூங்கி இருந்ததால்., அவன் அந்த போன் பேச்சை கேட்க வில்லை இருந்தாலும் கண்டிப்பாக நாளை கேட்பான் கேட்டுக் கொள்ளட்டும் என்று நினைத்து.,  விட்டு விட்டால்….  எப்படியோ பிரச்சினை முடிந்தால் சரி, என்ற எண்ணத்தோடு நிம்மதியான தூக்கம்  நீண்ட நாளுக்கு பிறகு கிடைத்ததாக நினைத்தாள்….

          இரண்டு நாள் சென்று கோயில் போய்விட்டு திரும்பியவர்கள்…  சிறிது நேரத்தில் எல்லாம் சித்தார்த்தின் அம்மா கிளம்பிக் கொண்டிருந்தார்….

        காமாட்சி எங்க போற காலையிலேயே என்று கேட்கவும்..,

               போய் மருமகளை பார்த்துட்டு வந்துடறேன். கோவில் பிரசாதத்தை கொடுத்துட்டு என்று சொல்லவும்…

           அப்ப இரு நானும் வாரேன்., பேசிட்டு வருவோம்…, நாளைக்கு தம்பி வந்துருவான் இல்ல.,  வந்தவுடனே பேசி முடிக்கலாம் ன்னு., சொல்லிட்டு வந்துருவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்….

    அவன் தான்  நைட்டே வந்துடுவானே என்று சொல்லவும்.,

        நைட் வந்த நைட்டா போய் பேசிட்டு வர முடியும்…, காலைல தான் போக முடியும்  என்று சொன்னபடி அவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்….

         இருவரும் கிளம்பி மித்ராவின் வீட்டிற்கு சென்று., கோயில் பிரசாதத்தை கொடுத்துவிட்டு பெரியவர்களைப் பார்த்து பேசிவிட்டு நாளை மாலை வருவதாகவும்.,  ஜெகதீசன் வீட்டிலும் வருவதாக சொல்லி இருக்கிறார்கள்… என்று கூறிவிட்டு நாளை மாலை வருகிறோம் என்று விடை பெற்று கிளம்பினர்….,

       மித்ராவிடம் வந்த சித்தார்த்தின் அம்மா.,   நீ ஏன் டல்லா இருக்க…. ரெண்டு நாளா காலேஜ் போல ன்னு , அம்மா சொன்னாங்களே,  ஏன் மா என்று கேட்கவும்…

     வீட்டில் இருந்து படித்தேன்., அத்தை,  எக்ஸாம் வருது இல்ல என்று சொல்லிக் கொண்டிருந்தாள், பரீட்சை பற்றிய விஷயங்களை கேட்டுக் கொண்டு அவர் கிளம்பி விட்டார்….

        அதன் பிறகு வீட்டில் சற்று எல்லோருமே நிம்மதியாக மூச்சு விடுவது போல் அவளுக்கு தோன்றியது….. இரண்டு நாளாக வீட்டில் தாத்தாவும் பாட்டியும், அவ்வப்போது தனியே பேசிக் கொண்டாலும் அனைவரும் என்ன ஏது என்று தெரியாமல் ஒரு குழப்பத்தோடு இருப்பதாகவே தோன்றியது….. சித்தார்த் அப்பா  தெளிவாக சொல்லியும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க மறுத்தது.. அவர்கள் மனநிலை..,  ஏனெனில் அவரின் நிலை அப்படி.,  தொழில் நிலையில் அவ்வளவு உயர்ந்த ஒருவர் தானாக வந்து பெண் கேட்பாரா என்ற சந்தேகம் மட்டும் தாத்தாவிற்கு இருந்து கொண்டே இருந்தது….

      இரண்டு நாட்களுக்கு பிறகு அன்று கல்லூரிக்கு சென்று வந்தாள்…,  மறுநாள் மதியத்திற்கு மேல் கல்லூரியில் இருந்து வந்து விட வேண்டும் என்று அனைவரும் சொல்லி இருந்ததால் சரி என்று சொல்லியிருந்தால்.., மதியத்திற்கு மேல் யாராவது அழைத்து செல்ல வருவதாக கூறி இருந்தனர்….

      முதலில் விடுப்பு எடுக்க சொல்லித்தான் தாத்தா சொன்னார்., ஏற்கனவே இரண்டு நாள் விடுமுறை எடுத்தாயிற்று இன்னும் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது., பரீட்சை முடியும் நேரம் என்று  சொல்லியிருந்தாள்….. மறுநாள் மதியம் அழைக்க வருவதாக சொன்னதற்கு இவள் முடியாது என்று சொல்லிருந்தாள்…. மாலை கல்லூரி முடிந்து வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி சொல்லிவிட்டாள்….

         ஏனோ மனம் மட்டும் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது….  அது எதற்கு என்று அவளுக்கு புரியவில்லை, ஒரு பெண்ணாக அவளின் நிலை  உணர்ந்து., சித்தார்த்தின் அம்மாவும் அப்பாவும் மருமகள் என்று சொல்லிவிட்டார்கள், அவன் வாயிலிருந்து இன்னும் ஒரு வார்த்தை கூட வரவில்லை…,  உண்மையிலேயே விரும்புகிறானா இல்லை பிரச்சினையில் இருந்து  காப்பாற்றி விட்டோம் என்பதற்காக திருமணம் செய்து கொள்கிறானா.,  என்று குழப்பம் இருந்துகொண்டே இருந்தது….

     சில நேரங்களில் மித்ராவின் தாயே அவளை திட்டியிருந்தாள்.,  உன்னை நீ குழப்பிக்கிறது., பத்தாது னு  இப்ப எங்களையும் சேர்த்து குழப்புற…. உன் வேலை மட்டும் பாரு., ரொம்ப யோசிக்காத, நாங்க பார்த்துக்குறோம் எல்லாத்தையும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்…..

     காலை கல்லூரிக்கு கிளம்பும்போதே  அனைவரும் சொல்லி விட்டது அவர்கள் மாலை வந்துவிடுவார்கள்… நீ எப்படியாவது மதியம் வர பார் என்று., முடிந்தால் வருகிறேன்…. என்று சொல்லிவிட்டு காலை கல்லூரிக்கு கிளம்பி சென்றாள்.,  சித்தார்த் இரவே வந்து இருப்பான் என்பது அவளுக்கு தெரியாது., இன்று காலையில் தான் வருவான் என்று நினைத்துக் கொண்டாள்….

Advertisement