Advertisement

அத்தியாயம் 2

 

        ஐயா கொஞ்ச நாள் கழிச்சு தான் எனக்கு விஷயம் தெரியும்., அய்யா முதலே தெரிஞ்சிருந்தா நான் அப்பவே உன் கிட்ட சொல்லி இருந்திருப்பேன்… அப்படியேனாலும் தம்பி விஷயத்தில் நாம ஒன்னும் சொல்ல முடியாது என்பதற்காக தான் நானும் வாயை திறக்கவில்லை….

        உங்களுக்கு தெரியும் ஐயா., தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி கிடையாது… ரொம்ப மாறி இருக்காப்ல என்று உங்களுக்கு தெரியும்….  நம்ம பசங்க எல்லாம் பேசுகிறது என்னன்னா அந்த பொண்ண பார்த்ததுக்கு அப்புறம் தான் தம்பி மாறிடாங்க   அப்படின்னு…  அதுக்கு முன்னாடி தம்பி இருந்த வாழ்க்கை முறை வேற.., ஐயாவுக்கு தெரியாதது இல்லை… இப்போ தம்பி இருக்கிறது உங்களுக்கே நல்லா தெரியும்….

     இடையில் பேச ஆரம்பித்த காமாட்சி சொன்னார்… அதுக்காக தாண்டா கேட்கேன் அந்த பொண்ண பத்தி எனக்கு தெரிஞ்சுக்கணும்னு… தம்பி இப்படி மாறி இருக்காம் இல்ல… அதுக்கு தான் கேட்டேன் சொல்லு என்று கேட்கவும்…

    பரசுராம் குடும்பம் பற்றிய விஷயங்கள் எல்லாம் தெரியுமா….  என்று கேட்க தொடங்கினார் அதற்கு கஜா…

     இல்லையா தம்பி என்ன முடிவுல இருக்குன்னு தெரியாம  அதெல்லாம் விசாரிக்க வேண்டாம் ன்னு தான்…. ஐயா விசாரிக்கலாம் ன்னு சொன்னா விசாரித்து உங்களுக்கு எல்லா விஷயமும் கொண்டு வந்து விடுவேன் என்று சொல்லவும்….

        அதை   பிறகு பார்ப்போம் என்றார்…

       சித்தார்த்தின் அம்மாவோ முழுசா விஷயத்தைச் சொல்லு…. நீ பாதிலேயே விட்டுட்ட என்றார்…..

     நீ குறுக்க பேசாம கேளு என்று பரசுராம் சொன்னார்…..

     ஐயா தம்பி படிப்பு முடித்தவுடன் அப்போ காலேஜ் போகும்போது முதன் முதலில் பார்த்தது தான் அந்த பொண்ண…  அதுக்கப்புறம் தம்பி அங்க காலேஜில் ராகிங் ல தான்  அந்த பொண்ண காப்பாற்றிவிட்டதா நம்ம பசங்க சொன்னாங்க…..  அப்புறம்  அந்த காலேஜில் படிக்கிற  தெரிஞ்ச பசங்க ட்ட  சொல்லி அந்த பொண்ண யாரும் ராகிங் பண்ணாம பார்த்துக்கோ அப்படின்னு சொல்லி விட்டு வந்ததாகவும் நம்ம பசங்க சொல்லிக்கிட்டு இருந்தாங்க…. அதுக்கப்புறம் கொஞ்ச நாளா தம்பி காலேஜ் க்கு காலையில சாயந்திரம் போய் நின்னு அந்த பொண்ண பார்க்கிறதா கேள்விப்பட்டேன்….. ஆனா அது உண்மையா பொய்யான்னு தெரியாது…  தம்பி கிட்ட கேட்டா தெரியும்… அதுக்கு அப்புறம் இடையில காலேஜ் கேண்டீன் க்கு போய்  அந்த பொண்ண பாத்து பேசிட்டு வருவாப்புல  அப்படின்னு சொன்னாங்க…. வேற எதுவும் தெரியல நானும் வேற ஏதும் கேட்டுக்கள…  ஆனா அந்த பொண்ண  அடிக்கடி பார்க்க போவது மட்டும் தெரியும்…. ஆனா அந்த பொண்ணுக்கு  இப்ப  கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தம்பி பேரு தெரியுமாம்… அது வரைக்கும் பெயர் கூட தெரியாதாம்…..

     பொண்ணு ரொம்ப அழகா இருக்குமா டா….   அப்படியாடா கஜா…

     ஏன் நம்ம பிசினஸ் பண்ற சைடுல பொண்ணு அழகாக இருக்காதா…. எல்லா பொண்ணுங்களும் நல்லாதான் இருக்கும். தம்பிக்கு என்ன அழகு குறைந்த பொண்ணா பார்க்க போறேன்… நீ இப்படி பண்ணிட்டு இருக்க என்று பரசுராம் கேட்கவும்….

    பிசினஸ் பண்றவங்க வீட்டிலுள்ள புள்ளைங்க எப்படி இருக்குன்னு நம்மளும் பார்த்துட்டு தான் இருக்கோம்…. பார்ட்டி, ஹோட்டல்,  ரெஸ்டாரன்ட் , ரிசார்ட் ன்னு எல்லாம் போய் சுத்திட்டு தான் வருது…  அது இப்ப என்ன கருமாந்திரமோ வந்து இருக்காம் அதற்கெல்லாம் சேர்ந்து எல்லாம் போறாங்களாம்…. எந்த பொம்பள புள்ள  ஆம்பள பையன் ஃப்ரெண்ட் இல்லாமல் சுத்துது ன்னு நீங்க சொல்லுங்க பாப்போம்….  உங்க பிசினஸ் சைடு ல உங்களுக்கு தெரிஞ்ச பிள்ளையிலிருந்து….

    இப்ப எல்லாம் அப்படித்தான் சுத்துது….  நீ பிசினஸ் சைடு ல  உள்ளவங்களை மட்டும் சொல்லாதே….  எல்லாம் அப்படித்தான் இருக்கு எல்லா பயலும் அப்படித்தான் இருக்கான்…. அதனால இவங்க தான் அப்படி அவங்க தான் இப்படி எல்லாம் சொல்லாத….  அப்படி சொல்றது தப்பு பார்த்துக்கோ…. என்று பரசுராமனும் காமாட்சியும் வேறு விஷயத்திற்கு சென்று விவாதம் செய்ய தொடங்கவும்….

    கஜா அங்கிருந்து மெதுவாக நகர தொடங்கினான் அதை பார்த்த காமாட்சி….

     ஏஏ…கஜா…எங்க போற சொல்லிட்டு போ பொண்ணு எப்படி இருக்குன்னு கேட்டமில்லா…..

     நல்லா இருக்குமா…. நல்ல பொண்ணு ரொம்ப அமைதியா இருக்கும் பார்ப்பதற்கு…  ரொம்ப குடும்பப் பாங்கா இருக்கும் அதுதான் தம்பிக்கு புடிச்சிருக்குன்னு எனக்கு தோணுது….

    அது தானே அவன் அப்படி இப்படி சுத்துனாலும் வீட்டுக்கு குத்துவிளக்கு மாதிரி பொண்ணு தானே கொண்டுவரணும்னு நினைப்பான்……

    காமாட்சி அதிகமா கற்பனையை வளர்த்துக்காத….  என்ன விஷயம் எதுவும் தெரியாது ஊர் உலகத்துல இருக்கிற பிள்ளைகள் ஆகட்டும்… பாவம் அவங்க அவங்களுக்கு நான் ஆயிரம் விருப்பம் இருக்கும்…. ஆயிரம் ஆசையிருக்கும்…. ஆனால் எல்லாருக்கும் எல்லா ஆசையும்  நிறைவேறாது….  எல்லாருக்கும் எல்லாம் நடக்கிறது கிடையாது…. நம்ம புள்ளைக்கு  எங்க முடிச்சு போட்டிருக்கோ அது நடக்கும் தேவை இல்லாம நீ  கற்பனையை வளர்த்துக்காத…..  தம்பி ட்ட இத பத்தி பேசாத… அவன் மனசுல ஆசையை தூண்டி வைக்காதே பாத்துக்கலாம் விடு  என்றதோடு அவர் பேச்சை முடித்துக்கொண்டார்….

      ஏங்க அவனை ஏர்போர்ட் வரை கொண்டு போய் விட்டுட்டு வருவோமா…  நீங்க கூட வாங்களேன்….

      அவன் வரக்கூடாது என்று தான் சொல்லுவான்….

      போற வழியில அப்படியே அந்த காலேஜ் வரைக்கும் போய் அந்த பிள்ளையை பார்த்து விடுவோம் எனவும்…

    நீயே கெடுக்காத…  ஒவ்வொரு விஷயத்திலும் பேசாம இரு என்கவும்….

     கண்கலங்கியபடி காமாட்சி பதில் சொல்லத் தொடங்கினார்….  ஒரு நல்ல மருமகள் வீட்டுக்கு வரணும் நினைக்கிறது தப்பா…. அவன் கிட்ட கேட்டாலும் அவன் அப்படித்தான் சொல்லுதான்…. நான் வந்து ரொம்ப யோக்கியம் கிடையாது மா…எனக்கு அந்த மாதிரி பொண்ணு எல்லாம் கிடைக்கவே கிடைக்காது,… ன்னு…

     ஆமா அப்பவும் நீ தான் செல்லம் கொடுத்து அவனைக் கெடுத்த…. இப்பவும் நீதான் கெடுக்க  பார்க்குற என்று இவரும் கோபமாக கேட்கவும்….

     நான் என்ன கெடுத்தேன்…. இப்ப  நீங்க சொன்ன மாதிரி ஊரு உலகத்தில் இல்லாததையா என் பிள்ளை பண்ணுனான்…  அது தான் சொன்னேன் அது மட்டும் இல்லாம…. நீங்க மட்டும் எல்லா தப்பும் தெரிஞ்சுதான் பண்ணுவீங்க அது அவனுக்கு கூட கொஞ்சம் வசதியா போயிட்டு அதுக்கு நான் என்ன பண்ணுவேன்…

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கஜா வாசலுக்கு சென்று விட…

  இப்படி சொல்லிச் சொல்லித்தான் நீ அவனைக் கெடுத்த…

        நீங்க மட்டும் யோக்கியமா என் பிள்ளையை குறை சொல்லுவீங்களா….  என்று சொல்லிச் சொல்லியே அவனுக்கு எல்லாம் போட்டு கொடுத்து நீயே அவனை கெடுத்திட்ட… இப்ப என்ன பண்ண சொல்லு..   பார்ப்போம் கடவுள் அவனுக்கு நீ என்ன நடக்கும்னு வச்சிருக்காரோ அதுதான் நடக்கும்… 25 வயசு முடியுது…  இன்னொரு மூணு வருஷம் நாலு வருஷம் போட்டும் அதுக்குள்ள  அவன் மனசிலேயும் சில மாற்றங்கள் வரும்…. அவன் என்ன விரும்புறான்னு அதுக்குள்ள தெரியும் அப்ப பார்த்துக்கலாம்… புரிஞ்சிச்சா அவசரப்படாத எனவும்….

     இல்லங்க நீங்க சொல்றது புரியுது… நான் அவசரப்படலை அந்த பொண்ண பார்க்கணும்….  பார்த்துட்டு  வந்து பொண்ணு எப்படி இருக்கு ன்னு தெரிஞ்சுகிட்டு  வந்தோம்னா நல்லாயிருக்கும்……  எம் பிள்ளை  அந்த பொண்ண தேவதை ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்…. அதுக்கு தகுந்த போல நானும்  ஒரு தேவதை மாதிரி பொண்ணு  பார்க்கனும் இல்ல…. பையனுக்கு  என்று பரசுராமன் மனைவி கேட்க வேறு வழியில்லாமல்….

       ஏர்போர்ட் கிளம்பும் போது அவன் கிட்ட பேசி பார்ப்போம்….. அப்படி இல்லைன்னா அவன் ஊருக்கு போனதுக்கப்புறம் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காலேஜ் ல போய் பார்த்துட்டு வருவோம்….  போதுமா என்று பேச்சை முடித்தார்…..

     சித்தார்த்தும் அனைத்தையும் பேக் செய்து எடுத்து வைத்துவிட்டு வந்து மதிய உணவை பெற்றோருடன் சேர்ந்து அமர்ந்து உண்டுவிட்டு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்….. சற்று நேரத்தில் எல்லாம் கிளம்ப வேண்டும் என்ற நிலையில் காமாட்சி தான் சித்தார்த் டம் பேச்சை தொடங்கினார்….

      தம்பி அம்மாக்கு ஒரே ஒரு ஆசை தான் அதை மட்டும் நிறைவேத்தி வைத்துவிட்டு போ என்க்கவும்…..

      அம்மா இப்ப நிறைவேற்ற கூடிய ஆசையா இருந்தா சொல்லுங்க…. நிறைவேத்தி வைக்கிறேன் அதுக்காக பெரிய பெரிய ஆசை எல்லாம் சொல்லி என்னால முடியாத விஷயத்தை செய்ய சொல்லாதீங்க செய்ய முடியாது… இப்பவே சொல்லிட்டேன் அப்புறம் நான் உங்க ஆசையை நிறைவேற்றலை என்று சொல்லக்கூடாது….

    சொல்ல மாட்டேன் டா எனக்கு ஒரு சின்ன ஆசை ரொம்ப சின்ன ஆசை…. நீ நினைச்சா இப்ப போகும் போது எனக்கு அந்த ஆசையை நிறைவேற்றி விடலாம்….

Advertisement