Advertisement

    அப்போதுதான் சித்தார்த்தின் அப்பா எல்லாருமே கிளம்புவோம், மித்ரா காரிலேயே இருக்கட்டும் நம்ம ரெண்டு பேரும் உள்ளே போய் அவங்க தாத்தா அம்மா அப்பா ட்ட எல்லாத்தையும் ஓப்பனா பேசலாம்…. பேசி பார்ப்போம் அவங்க என்ன சொல்றாங்கன்னு…   தாத்தா கிட்ட இதுக்குள்ள அந்த ஜெகதீஷ் அப்பா பேசி இருப்பாரு… அதனால பயம் இல்ல… நம்ம மித்ரா கார்ல இருக்கட்டும் நீயும் நானும் உள்ள போய் பேசுவோம் பேசி முடிச்சு…. அவங்க சரி ன்னு சொன்னதுக்கப்புறம் மித்ராவை அவங்க வீட்ல விட்டுட்டு வரலாம் கிளம்பு என்று சொல்லிக் கொண்டிருந்தார்…  ஏனெனில் அவர்கள் இருப்பது ஈசிஆர் ரோடு என்பதால் இங்கு இருந்து அத்தனை போக்குவரத்து நெரிசலையும் தாண்டி அவர்கள் இருக்கும் இடத்திற்கு போவதற்கு எப்படியும் நேரம் எடுக்கும் என்பதால் மாலை காபி டிபனை முடித்துக் கொண்டு மித்ராவை அழைத்துக் கொண்டு கிளம்பினர்…..

    இதற்கிடையில் சித்தார்த்திற்கும் அங்கிருந்து போன் செய்து தன்னுடைய முடிவை சொன்னார்….  ஜெகதீஷ் தந்தையிடம் பேசிய விஷயமும் தெரியும்., ஜெகதீஷ் போன் செய்து மித்ராவிடம் பேசியதும் அவனுக்கு தெரியும்… எனவே சரி போயிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைத்தான் மித்ராவிற்கு மெசேஜ் செய்தான்…

       வீட்டிற்கு நீ சென்ற பிறகு உன்னை அழைக்கிறேன் என்று மட்டுமே….

      அதுபோல மித்ராவின் வீட்டிற்கு சென்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டில் அனைவரும் இருக்கும் நேரமே பேசத் தொடங்கினார்… மித்ராவின் தாத்தாவிடம்  அத்தனை விஷயங்களையும் எடுத்துச் சொல்லி பொதுவாக பெண் குழந்தை இல்லாதவர்களுக்கு தான் அதன் ஏக்கமும் வலியும் தெரியும்… உங்கள் வீட்டில் தேவதை போல பெண்ணை வைத்துக் கொண்டு இதையெல்லாம் நீங்கள் யோசிக்க வேண்டாமா என்று சொன்னார்… பரசுராமனின் தொழில் துறை வட்டாரத்தில் அவரது தோற்றத்திற்கு என்று தனி மரியாதை உண்டு எப்போதுமே அவருடைய அந்த பெரிய மனிதத்தன்மை அவரது தோற்றத்தில் தெரியும்…. அதற்காகவே அவர் தாத்தாவும் பதிலுக்கு பதில் பேசாமல்  மரியாதையாகவே பேசினார்…. அவரும் இவரை அறிந்து வைத்திருந்தார் எனவே சாதாரணமாகவே பேசிக் கொண்டிருந்தார்…

     அப்போது தான் சித்தார்த்தின் அப்பா இப்படி சொல்லிக் கொண்டிருந்தது…. எங்களுக்கு வேற குழந்தை இல்லை ஒரே பையனாக போய்ட்டான்….  எங்களுடைய  சொத்துக்கு ஒரே வாரிசு அவன் தான்… இப்போ நான் சொல்றேன் எங்க பையனுக்கு  உங்க பொண்ண குடுங்க…  என் பையனுக்கு ரொம்ப புடிச்சிருக்கு இப்போ இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவுல அவளை காப்பாத்தணும்னு மட்டும் தான் அவன் யோசித்தான்… என்று சொல்லி அத்தனை விஷயங்களையும் சொல்லிவிட்டு ஜெகதீஷின் தந்தையிடம் பேசியது அந்த கடிதம் வந்தது.,  என்று அவ்வளவு விஷயங்களையும் எடுத்துச் சொன்ன பிறகு தாத்தாவிற்கு சற்று யோசிக்க தோன்றியது.,  எங்கோ ஒரு இடத்தில் தப்பு நடக்க இருந்தது தப்பித்து விட்டாள் என்று தோன்றியது…

       சித்தார்த் இரண்டு நாளில் வந்துவிடுவான் நாங்களும் கோயிலுக்கு சென்று விட்டு இரண்டு நாளில் வந்து விடுவோம் நாங்கள் வந்த பிறகு ஜெகதீசன் வீட்டிலும் வருவார்கள்… நாங்கள் எங்களுடைய பிரச்சினையை பேசி முடித்து விட்டு அதன் பிறகு உங்கள் வீட்டிற்கு பெண் கேட்டு வருகிறோம்….. முறைப்படி எங்கள் மருமகளை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்…  பரசுராம் தங்கள் வசதியோ எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் வீட்டில் உள்ளவர்களிடம் சந்தோஷமாகவே பேசிவிட்டு., மருமகளை இப்போ உங்க கைல பொறுப்பாக ஒப்படைச்சிட்டுப் போறேன்., நாங்க திரும்பி வந்து உடனே  எங்க மருமகளை எங்ககிட்ட பத்திரமாக ஒப்படைக்கனும் என்று கேட்டுக் கொண்டார்….

     தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மனதிற்குள் ஒரு புறம் வருத்தம் இருக்கத்தான் செய்தது…  நம் வீட்டுப் பெண் நாம் பேசும் திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு செல்லும் அளவுக்கு துணிந்து விட்டாலே என்று., ஆனால் மற்றொரு புறம் சந்தோஷமாகவே உணர்ந்தனர் நல்ல இடத்தில் பெண்ணை கொடுக்கப் போகிறோம்,  என்ற எண்ணத்தில் வீட்டில் உள்ள அனைவரும் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர்…

          மித்ரா மட்டும் அப்போதும் ஏதோ யோசனையில் இருந்து கொண்டிருந்தாள்…..

     அவளை வீட்டில் விட்டு விட்டு போன பிறகும் சித்தார்த்தின் அம்மா இரண்டு முறை போன் செய்து இவளிடம் பேசிக்கொண்டார்…. வீட்டின் நிலைமை எப்படி இருக்கிறது என்று கேட்டு., வீட்டில் அனைவரும் சாதாரணமாக தான் இருந்தனர்….  தாத்தா கொஞ்சம் வருத்தப்பட்டாலும் பிறகு மனதை தேற்றிக் கொண்டதாக சொல்லிக் கொண்டிருந்தாள்…

       அப்பாவிற்கு ஒருவகையில், இது பெரிய நிம்மதி என்று  அம்மாவிடம் சொன்னதாக சொன்னாள்… மற்றவர்களிடம் சாதாரணமாக பேசினாலும் அவள் யோசிப்பது கண்ட மகேந்திரன் சித்தார்த்திற்கு ஒரு மெசேஜ் மட்டும் போட்டு விட்டான் அக்கா ஓவரா யோசிக்கிறா என்று..

    சித்தார்த்தின் அம்மா பேசிவிட்டு வைத்த சற்று நேரத்தில் சித்தார்த்திடம் இருந்து அழைப்பு வந்தது… போனை எடுத்துக்கொண்டு மொட்டை மாடியில் போய் அமர்ந்து விட்டாள்….

    ரொம்ப யோசிக்கிறியா உன்ன அந்த வேலையை பார்க்காதன்னு சொல்லி இருக்கேன்ல என்று சித்தார்த் கிண்டலும் கேலியுமாக பேச தொடங்கவும்….

     பதிலே இல்லாமல் ம்ம்ம்…. என்று மட்டுமே சொன்னாள்….

    என்ன ஏதும் கோபமா என்று கேட்கவும்…

       இல்ல யோசிக்க யோசிக்க இருக்கற டென்ஷன்ல…. நான் எங்க போய் முட்டிக்க ன்னு  தெரியாம உட்கார்ந்து கிட்டு இருக்கேன்… என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க நீங்கதான் இன்னும் முடிவு சொல்லவே இல்ல என்று சொல்லவும்….

            அதான் அப்பாவும் அம்மாவும் சொல்லிட்டாங்க இல்ல….. அது மட்டும் இல்லாம நீ தான் அத்தை மாமா ன்னு கூப்பிடற…  அப்புறம் என்ன என் கிட்ட கொஸ்டின் கேட்கிற என்று கேட்கவும்….

        ஓ அப்படியா….  அப்போ உங்க அப்பா அம்மா சொல்ற தால தான் நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்க போறீங்க… அப்படித்தானே என்று கேட்கவும்….

          அப்படி கூட வச்சுக்கலாம்… அதிலே ஒன்னும் பிரச்சனை இல்ல… இப்ப  உனக்கு என்ன தெரியனும் அதைச் சொல்லு என்று கேட்கவும்….

        அவள் எதுவும் சொல்லாமல்…. ஒன்னும் தெரிய வேண்டாம் விடுங்க…  என்று மட்டும் சொன்னாள்….

    அவளின் எதிர்பார்ப்பு என்ன என்று அவனுக்கு தெரிந்தாலும்…. அவன் சொல்ல தயாராக இல்லை… அவன் சொல்லப் போவதில்லை என்று தெரிந்தாலும் அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வர வேண்டும் என்ற எண்ணம் இவளுக்கு இருந்தது….

         சற்று நேரம் அவள் மனதை மாற்றும் விதமாக அவள் படிப்பை பற்றி பேசிவிட்டு பரிட்சைக்கு ஒழுங்காக தயாராக வேண்டும் என்று மிரட்டிவிட்டு ஒழுங்கா மார்க் வரலை னா.,  எல்லாரும் என்னைதான் கிண்டல் பண்ணுவாங்க… நீ இவ்வளவு நல்லா படிப்ப உன் வொய்ப்  முட்டை முட்டையா வாங்கி இருக்கா ன்னு சொல்லுவாங்க….  அதனால ஒழுங்கா படி என் மானத்தை காப்பாற்று  என்று சொல்லிவிட்டு….  இவளிடம்   அதற்காக நன்றாக திட்டு வாங்கிக் கொண்டான்…

    ஓஹோ…. அப்படியா அப்ப ஒன்னு பண்ணுங்க நல்ல படிக்கிற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க… போங்க…. நான் எடுக்கிற மாதிரி தான் மார்க் எடுப்பேன்…. நீங்க சொன்னீங்க  ன்னு எல்லாம் ரொம்ப முட்டிமுட்டி  படிக்க மாட்டேன்…..  ஏன் நான்  நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணி வந்தால் தான் கல்யாணம் பண்ணிப்பீங்களா…. இல்லன்னா பண்ண மாட்டீங்களா…. ஏன் நீங்க ஏதாவது என்ன வேலைக்கு அனுப்ப போறீங்களா என்று அவனிடம் இவள் கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்கத் தொடங்கினாள்….

      ஐயோ தாயே தெரியாம சொல்லிட்டேன்…  இப்படி பிச்சு எடுக்குற மாதிரி போட்டு வாங்காத என்று சொல்லிக் கொண்டிருந்தான்…..

     அந்த பயம் இருக்கட்டும் என்று சொல்லி அவனை மிரட்டி விட்டு சிரித்துக் கொண்டே போனை வைத்து விட்டாள்…. இருந்தாலும் அவளின் எதிர்பார்ப்பு அவளுக்குள்ளேயே இருந்தது அவனின் பிடிவாதமும் அவனிடமே இருந்தது….

தொலைக்க முடியாத

நினைவுகள்….

தொலை தூரத்தில் நீ

தொடமுடியாத வானம் நீ

தொட்டுவிடத் துடிக்கும்

நிலவு நான்….

நினைவுகள் பரிசாய்

நிஜங்கள் எப்போது சேரும்….”

Advertisement