மாலை நேரம் ஜெகதீஷின் தந்தை நேரடியாகவே போன் செய்து சித்தார்த்தின் தந்தையிடம் பேசினார்…. தொழில்துறை நண்பர் மூலம் சித்தார்த்தின் தந்தை ஜெகதீசன் தந்தையிடம் பேச சொல்லி இருந்தார்…. அதை வைத்து அவரே நேரடியாக போன் செய்து விட்டார்., அப்போதுதான் விஷயத்தை விளக்கத் தொடங்கினார் சித்தார்த்தின் தந்தை….
வணக்கங்க தப்பா எடுத்துக்காதீங்க., பிள்ளைங்க படிக்கிற நேரத்தில் சண்டை போடுறது சகஜம்தான்., ஆனா ஒரு வயசுக்கு அப்புறம் அவங்கவங்க தொழிலும் அவங்கவங்க குடும்பம் ன்னு பொறுப்பா போய் கிட்டு இருப்பாங்க… ஆனா இன்னும் பிரச்சினை வந்துகிட்டே இருக்கே ன்னு., நான் யோசிச்சிட்டே தான் இருந்தேன்., இப்போ என் பையனும் இங்க இல்ல அவனும் வெளிநாட்டில் இருக்கான்.. அப்படி இருக்கும் போது இப்ப ஏன் பிரச்சனை அப்படின்னு யோசிச்சு பார்க்கும் போது.,
நீங்க பொண்ணு கேட்டு இருந்த அந்த பொண்ணு வந்து விஷயம் இதுதான் என்று சொல்லுது…. சித்தார்த்தின் விருப்பத்தையும், அதை தெரிந்து கொண்ட ஜெகதீஷின் பேச்சையும் விலாவரியாக சொன்னார்…. அதைக் கேட்ட பிறகு ஜெகதீசன் தந்தைக்கு சற்று வருத்தம்தான்.,
ஐயோ மன்னிச்சுக்கோங்க., இது இப்படி என்று தெரியாது, இவன் புடிச்சிருக்குன்னு சொன்னதும் சரி நம்ம புள்ள ஆசைப்பட்டு இதுவரைக்கும் எதையும் இல்லைன்னு சொன்னது இல்ல அப்படிங்கறதால சரி நாமளும் பொண்ணு கேக்கலாம்னு நெனச்சேன்…. விசாரிச்சதில் நல்ல குடும்பம் நல்ல பொண்ணுன்னு சொன்னாங்க…. அதனாலதான் பேசலாம் நினைச்சேன்., ஆனா இவன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கு ன்னு எங்களுக்கு தெரியாது என்று சொல்லவும்…..
இல்லை உண்மையிலேயே பையன் விரும்பி இருந்தான் னா., அது வேற விஷயம், விரும்பினது இந்த பொண்ணு இல்ல… கோயம்புத்தூர் காலேஜ்ல உங்க பையன் யூ ஜி படிக்கும்போது கூட படிச்ச பொண்ண தான்…. அந்த பொண்ணு மூலமாதான் இப்ப தகவல் தெரிஞ்சு இருக்கு….. அந்த பொண்ணுதான் காலேஜ்ல வந்து லெட்டர் கொடுத்துட்டு போய் இருக்கு…. அந்த பொண்ணு இங்க சென்னையில் வேலை பார்த்தது போல…. சில விஷயங்கள் ப்ரண்ட்ஸ் மூலமாக தெரிஞ்சிருக்கு….. அந்த லட்டரிலிருந்து விஷயம் என்னன்னா…. ஜெகதீஸ் வந்து உண்மையாவே மித்ராவை கல்யாணம் பண்ணனும்னு ஆசை படல உண்மையை சொல்லனும்னா… அப்படி ஒரு ஐடியாவே ஜெகதீஷ் க்கு வரல., நம்ம இடையில ஒரு பிரச்சனை வந்து, போலீஸ் வந்து போன் பண்ணி நானும் உங்ககிட்ட பேசி அத்தோட முடிச்சும் போச்சு இல்ல , அதோட பிரச்சனை முடிஞ்சிருச்சு , ஆனா திரும்ப இந்த பிரச்சினை எப்படி வந்துச்சு அப்படின்னா உள்ள இருந்து ஒரு ஆள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான்…. அது யாருன்னு சொல்லி அந்த பொண்ணு சொல்லியிருக்கா.., உங்க சொந்தக்கார பையன் அப்படின்னு, அதாவது உங்களுக்கு சொந்தமா இல்ல உங்க மனைவிக்கு சொந்தமா தெரியல நீங்க அந்த பையன படிக்க வைக்கிறீங்க…. அந்த பையன் தான் இப்ப இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கிறான் அப்படிங்கிற மாதிரி அந்த பொண்ணு அதுல சொல்லி இருக்கு…. அது மட்டுமில்லாம அந்த பையனுக்கு தான் வந்து முதன்மையாய் இருக்கணும்… நீங்க ஜெகதீச எப்போதும் குறைவா நினைக்கணும் அப்படிங்கறதுக்கு ஆகவே, ஒவ்வொரு பிரச்சினையா இழுத்து விடுகிறான் அப்படின்னு அந்த பொண்ணு லெட்டர்ல சொல்லி இருக்கு…. இது தான் பிரச்சனை இப்போதும் ஜெகதீச டைரக்டா வச்சு சித்தார்த்தையும் வச்சு பேசுனா யார் என்ன சொன்னா ன்னு தெரிஞ்சிடும்…. ஜெகதீஷ் க்கு சித்தார்த் மேல கோபத்தை உண்டு பண்ணுகிற மாதிரி பேசறான்…. அதுமட்டுமில்லாம சில தப்பான ஐடியாக்களை எல்லாம் இப்படி பண்ணினா, நல்லா இருக்கும்.. அப்படி பண்ணினா நல்லா இருக்கும்… இப்படி பழிவாங்கலாம் அப்படின்னு சொல்லி குடுக்குறது அந்தப் பையன் தான்…. அப்படின்னு சொல்லி அந்த பொண்ணு லெட்டரில் சொல்லி இருக்கா.,
அது உண்மையா பொய்யான்னு தெரியாது…. ஆக்சுவலி லெட்டர் எழுதி இருக்க அந்த பொண்ணும் ஜெகதீஷ் ம் விரும்புகிறார்களாம்…. அதனால தான் சொல்லுது ஜெகதீஷ் அந்த மாதிரி தப்பு பண்ணவே மாட்டான்…. இந்த மாதிரி பேசவே மாட்டான்…. இந்த மாதிரி ஒரு விஷயம் நடக்குது அப்படின்னா அதுக்கு பின்னாடி தூண்டுதல் இருக்கு…
கோயம்புத்தூர்ல இருந்த வரைக்கும் இந்த மாதிரி பிரச்சினைகள் எதுவும் இல்ல… ஏன்னா அவங்க அம்மாவோட கண்காணிப்பில் இருந்தான்… நீங்க வளர்க்குற பையன் வந்து கொஞ்சம் பயந்து போயிருந்தான்…. அதே இது சென்னைக்கு படிக்க வந்த உடனே ஜெகதீஷ் ஏதாவது ஒரு விதத்தில் மட்டம் தட்டி…. வேற ஏதாவது பிரச்சனை னா…. நீங்க இவனை முதன்மையாக தூக்கி உங்க சொந்தக்கார பையன் அப்படிங்கறதால… எல்லா விஷயத்திலும் இவனுக்கு முன்னுரிமை கிடைக்கும் அப்படிங்கிறது காக அந்தப் பையன் பண்ற மாதிரி சொல்றாங்க…. யார் அந்த பையன் ன்னு நீங்க தான் பார்க்கணும்…. நீங்கள் படிக்க வைக்கிற பையன் உங்களுக்கு தெரியாமல் இருக்காது கண்டுபிடிங்க… அதுமட்டுமில்லாமல் ஜெகதீச தனியா கூப்பிட்டு விஷயத்தை எடுத்துச் சொல்லுங்கள்…. நான் ரெண்டு நாள் ஊருக்கு போய்ட்டு வந்து விடுவேன்…. நான் வந்த உடனே சித்தார்த் அ வர சொல்றேன்…. நீங்களும் ஜெகதீஸ் அ வர சொல்லுங்க… நம்ம பொதுவாக ஒரு இடத்துல வச்சு பேசுவோம்…. நம்ம பிள்ளைங்க சண்டையே இப்படி வளரவிடக்கூடாது…. இவங்க இனிமேல்தான் வாழப்போற பிள்ளைங்க.. அவங்க மனசுல ஒரு வெறுப்பு கோபம் பொறாமை இதோட அவங்க இருந்தா நல்லா இருக்காது…. வாழப்போற வாழ்க்கையை பிள்ளைங்க சந்தோசமா வாழனும்., அதுக்காக தான் ரெண்டு பிள்ளைகளையும் நேரில் வைத்து பேசிடுவோம்… நான் அந்த பொண்ணோட போன் நம்பர் இதுல இருக்கு…. அந்த பொண்ணையும் பேசி அன்னைக்கு அங்க வர சொல்லிடுறேன்…. எல்லாரையும் நேரில் வச்சு ஒன்னாவே பேசிடுவோம்…. நீங்க தப்பா எடுக்கலைன்னா நீங்க எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணனும் என்று பரசுராம் சொல்லவும்..
சொல்லுங்க என்ன பண்ணனும் சொல்லுங்க…. நீங்க என் பையனுக்கும் சேர்த்து நீங்க யோசிக்கும்போது…. நான் செய்யணும்னு நினைக்கிறீங்க சொல்லுங்க செய்றேன்…..
வேற ஒன்னும் இல்ல….அந்த பொண்ணு வந்து என் பையன் விரும்புறான்…. நீங்க சரின்னு சொல்லிட்டீங்கன்னா நான் என் பையனுக்கு பேசுவேன்…. நீங்க உங்க பையன் விரும்புற பொண்ண கல்யாணம் பண்ணி வைங்க என்று சொல்லவும்…
இவ்வளவுதானா நான் பொண்ணு வீட்ல இப்பவே போன் பண்ணி பேசிவிடுறேன்…. நாங்க ரெண்டு நாள் கழிச்சு வந்த பிறகு விஷயத்தை பேசி தீர்க்குறன்னைக்கு வீட்டுக்கு வாறோம்…. ஜெகதீஷ் நான் பேசி சமாளிச்சுக்கிறேன் எனக்கு அந்த லட்டர் மட்டும் கொஞ்சம் போட்டோ எடுத்து அனுப்பி வைங்க…. அப்போதுதான் என் பையன் நம்புவான்., என்று சொல்லவும் கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லியபடி இருவரும் போனை வைத்தனர்….
ஒரு சுமூகமான முடிவுக்கு வருவது போல் தெரிந்தது அந்த லெட்டரை போட்டோ எடுத்து சித்தார்த்திற்கும் ஜெகதீஷின் அப்பாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது… அந்த லெட்டர் ஜெகதீஷ் கைக்கு கிடைத்தவுடன் அவன் போன் செய்தது மித்ராவிற்கு….
இவன் பயந்து கொண்டே போனை எடுத்து பேசவும்., அருகிலேதான் சித்தார்த்தின் அம்மா அப்பா இருவரும் இருந்தனர்.. தைரியமா பேசு என்று சொல்லவும் பேசினாள்… ஜெகதீஷ் அவளிடம் சாரி சொல்லிவிட்டு சித்தார்த் வந்தவுடன் நான் நேரில் வருகிறேன் என்று மட்டுமே சொன்னான்…. அப்பா எல்லா விஷயமும் சொன்னாங்க நான் நேர்ல வரும்போது நேர்ல பேசுவோம் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்… அதேநேரம் சித்தார்த்திற்க்கும் அந்த லட்டர் கிடைத்தது… அவனும் யார் இந்த நடுவிலிருந்து குழப்பி விட்ட ஆள் என்று யோசித்துக் கொண்டே இருந்தான்….
அதன் பிறகு மித்ராவின் அம்மாவிடம் போன் செய்து நடந்த விஷயங்களுக்கு தீர்வாக ஒரு நல்ல முடிவு கிடைத்திருப்பதாகவும்., அதனால் பயப்பட வேண்டாம் மாலை உங்கள் வீட்டில் பேசிவிட்டு மித்ராவை வீட்டில் விட்டுவிட்டு செல்கிறோம், என்று மித்ராவின் தாயிடம் சித்து அம்மா பேசினார்….
அதன் பிறகே மித்ராவின் முகம் சந்தோஷத்தை காட்டியது….
மாலை வரை சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தாலும் மித்ராவின் முகத்தில் முழுமையான மகிழ்ச்சி வரவில்லை என்பதை கண்டு கொண்டனர்…. ஏன் என்று கேட்கும் போது அவள் தன் வீட்டைப் பற்றி சொல்லி கொண்டிருந்தாள்…
சின்னப் பிள்ளையிலிருந்து அப்படியே வளர்ந்தாச்சு அத்தை… வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போனது கிடையாது., எங்க போனாலும் அம்மா அப்பாவோட தான் போயிட்டு வீட்டுக்கு வருவோம், தனியா பிரண்ட்ஸோட போனாலும் ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வரணும், இல்லாட்டி தாத்தாக்கு பிடிக்காது திட்டுவாங்க , இதுல பெண் பிள்ளை., ஆண்பிள்ளைன்னு பார்க்க மாட்டாங்க., தாத்தா யாரா இருந்தாலும் அந்த நேரத்துக்கு வீட்டுக்கு வந்திருக்கானும்., நைட் போல வெளியே என்ன சுத்துற அப்படின்னு கேட்பாங்க… அதுதான் ரொம்ப ஒரு மாதிரி பயந்துட்டே இருந்தேன்., நான் அம்மா அப்பா இல்லாம வெளியே எங்கேயும் தங்குனது கிடையாது இதுதான் முதல் தடவையா வெளிய அம்மா அப்பா இல்லாம தனியா வந்தது…. அந்த பயம் தான் வேற ஒன்னும் இல்ல என்று சொல்லும்போது….
அப்படி ஏன் நினைக்க….. சித்தார்த்துக்கு அம்மா அப்பா னா., உனக்கும் அம்மா அப்பா மாதிரி தான்… அத்தை மாமா நா என்ன அர்த்தம்., நாங்களும் அம்மா அப்பா தான் சரியா, அதனால எங்க கூட தான் இருக்க., இப்போ பகல் தான்., வேற யார் கூடயும் உன்னை தனியா விடலை., நாங்க ரெண்டு பேரும் உன் கூட தானே இருக்கிறோம்., அதனால பயப்படாம இரு., இப்ப மாமா உங்க வீட்டுக்கு பேசுவாங்க பேசிட்டு அதுக்கப்புறம் உன்னை கொண்டு விட்டு வரலாம் சரியா பயப்படாதே என்று சொன்னார்…