Advertisement

அத்தியாயம் 10

 

        மனிதர்கள் போடும் திட்டப்படி எல்லாம் நடந்து விட்டால்…..

         பஸ்ஸில் ஏறி கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் மனதிற்குள் ஏனோ பயம் பிடித்துக் கொண்டது. அது தவறு தான் என்பது அவளுக்கு தெரியும் வீட்டை விட்டு பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் செல்வது தவறு தான், என்று தெரிந்தாலும் வேறு வழி இல்லை என்பதால் மனதை திடப்படுத்திக் கொண்டாள்… ஆனாலும் மனதில் ஒரு எண்ணம் மாலை வீட்டிற்கு சென்று விடுவோமா  என்று,  பிறகு தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்  அப்படி போகக்கூடாது என்று…

        பின் கல்லூரியில் இறங்கும் முன் ஒரு  முறை தம்பிக்கும் அம்மாவுக்கும் போன் செய்து கேட்டாள் இருவரும் ஒன்று போல் நீ தைரியமாக இரு , ஒரு பிரச்சினையும் இல்லை சித்தார்த் பார்த்துக் கொள்வார் என்று மட்டுமே சொன்னார்கள்…

   ம்ம் ம்ம் சரி என்று வாய் சொன்னாலும் மனதிற்குள் ஒரு வித பதட்டம் இருந்து கொண்டே இருந்தது….

      கல்லூரிக்கு வந்து இறங்கிய சமயத்தில் சித்தார்த் திடம் இருந்து போன் வந்தது… எடுத்து அன்று போல் மரத்தடியில் அமர்ந்தாள்….  என்ன ஆச்சு என்ன பயம் என்று கேட்டான்…

     அது வந்து என்று இவள் பேசத் திணறும் போதே மனதிற்குள் யார் சொல்லியிருப்பார்கள் என்ற எண்ணம்….

     அதைப் புரிந்து கொண்டவனாக மகி மெசேஜ் பண்ணி இருந்தான்…..  என்ன பிரச்சினை உனக்கு இப்போ என்று கேட்கவும்…

    ஒன்னும் இல்லை….  என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் அந்தப் பக்கம் சொன்ன அறிவுரை களுக்கெல்லாம்  ம்ம் ம்ம் ம்ம்….  என்று மட்டும் கொட்டிக் கொண்டிருந்தாள்…

     என்ன ஆச்சு ரொம்ப அமைதியாயிட்ட என்று கேட்கவும்….

    ம்ம் ம்ம்… யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொன்னாள்…

      தேவையில்லாத வேலை எல்லாம் பாக்காத….  அது உனக்கு சூட்டாகாது…. நீ எப்பவும் போல உன் வேலைய மட்டும் பாரு என்று பதில் சொன்னான்….

     ஹலோ என்ன ஓவரா பேசுறீங்க…    உங்க அம்மா வரட்டும்… சொல்லி கொடுக்கிறேன்., என்று சொல்லவும்…

      ஏய் அம்மாகிட்ட ஏடாகூடமா பேசி வச்சிராத…. அம்மா ரொம்ப ஜாலி டைப் தான் நார்மலா பிரன்ட்ஸ் கிட்ட பேசுற மாதிரி பேசு… என்ன விட  நல்லா பேசுவாங்க என்று சொன்னான்….

     சரி நீ கிளாசுக்கு போ….  கரெக்டா பதினோரு மணிக்கு கேன்டீன் போய் இரு., என்று சொல்லி போனை வைத்தான்…

    வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் அங்கு அமர்ந்து இருந்தாலும்…. மனம் என்னவோ மற்ற விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தது… ஜெகதீஷ் க்கு பழிவாங்கும் எண்ணம் மட்டுமே இருப்பதாக தோன்றியது… அவனுக்கு இத் திருமணத்தில் பெரிதாக ஈடுபாடு எதுவும் இல்லை என்பது அவன் பேசும் போதே தெரிந்தது… வேண்டுமானால் அவனிடம் இன்னொரு முறை பேசி பார்த்தால் என்ன என்று தோன்றியது….  ஆனால் பேச வேண்டும் என்று சொன்னாலே சித்தார்த்திடம் திட்டு விழும் என்பதால் யோசிக்க வேண்டும், என்று நினைத்துக் கொண்டாள்… இவள் யோசிக்க வேண்டும் என்று நினைத்ததும் சித்தார்த்  சொன்ன உனக்கு அது சூட்டாகாது என்று சொன்னது ஞாபகம் வந்தது…. திமிரு நேர்ல வரட்டும் இருக்கு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்….

     அவன் சொன்ன நேரத்திற்கு சற்று முன்னதாகவே சென்று கேன்டீனில் ஒரு ஓரமாக அமர்ந்தாள்… அதேநேரம் அங்கு வேலை பார்க்கும் சித்தார்த் ற்கு தெரிந்தவன், அவளுக்கு ஒரு ஜூஸ் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றான்…   அமைதியாக அதைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கும்போதே சற்று நேரத்தில் சித்தார்த்தின் நண்பன் வந்து சற்று தள்ளி அமர்ந்தான்….

    அவன் தான் மித்ராவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்… ஜூஸ் குடி மா.,அம்மா இப்ப வந்திடுவாங்க என்று…

     இல்லை ண்ணா… டென்ஷ்ட் டா இருக்கு எதுவும் வேண்டாம் என்றாள்…

       அன்று காலை சித்தார்த்திடம் பேசிவிட்டு அவள் வகுப்பிற்கு செல்லவும்,  வகுப்பில் உள்ள ஒரு தோழி இவளிடம் ஒரு கவரை கொடுத்து சென்றாள்., ஒரு பெண் வந்து உன்னை பார்த்து கொடுக்க வந்திருந்ததாகவும் நீ வரவில்லை என்றவுடன் என்னிடம் கொடுத்து விட்டு சென்றார்கள்., என்றும் சொல்லி கவரை மித்ராவின் கையில் ஒப்படைத்தாள்… அது என்ன என்று நிதானமாக பிரித்து வாசிக்கும் போது அதில் ஒரு கடிதம் சித்தார்த்.,  ஜெகதீஷ் சம்பந்தப்பட்ட ஒரு கடிதம் இருந்தது…. அதில் சில விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தது இப்போது அதுவும் அவளுக்கு சேர்ந்து குழப்பத்தை உண்டு பண்ணியது….

    கேன்டீனில் அமர்ந்து அதையும் யோசித்துக் கொண்டே இருந்தாள்… இதை சித்தார்த்திடம் எப்படி சொல்வது என்ற யோசனையோடு இருந்தாள் வேறு வழியில்லை சொல்லித் தான் ஆக வேண்டும்… என்ற எண்ணமும் மனதிற்குள் இருந்தது….

      இவள் முன்வைக்கப்பட்டிருந்த ஜூஸ் குடிக்கப் படாமல் இருக்கவும் அதை சித்தார்த்தின் நண்பன் எடுத்து கேன்டீனில் கொடுத்துவிட்டு சித்தார்த்தின் அம்மா வந்த பிறகு இருவருக்கும் டீ வாங்கி வந்து கொடுத்தான்….

   மித்ரா..,  பயந்துபோய் இருக்கியா மா என்று கேட்டபடி அருகில் வந்து அமரவும்…

   வாங்க ஆண்ட்டி என்று சிரித்தபடியே கேட்டாள்…. நான் உங்க எல்லாரையும் ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன் இல்ல ஆன்ட்டி என்று கேட்டபடி அமர்ந்திருந்தாள்…

    யார் சொன்னா…  அப்படியே நீயா நினைச்சுக்கோ கூடாது சரியா…. அது என்ன ஆன்ட்டி ன்னு கூப்பிடுற., அத்தை ன்னு கூப்பிடு என்று சொல்லும் போது சிரித்துக்கொண்டே அமைதியாக இருந்தாள்….

     அவரும் சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருக்கவும்… என்ன ஆன்ட்டி சாரி அத்தை அப்படி பாக்குறீங்க என்று கேட்கவும்….

    அமைதியா சிரிச்ச முகமா, அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கம்மா அதுதான் பாத்துட்டே இருக்கேன்….

     இவளும் சிரித்துக்கொண்டே எல்லாரும் பொண்ணுங்க எல்லாத்தையும் மகாலட்சுமி மாதிரி இருக்கேன்னு சொன்னா…. அப்ப மத்த சாமி எல்லாம் கோவிச்சுக்காதா அத்தை என்று கேட்டாள்….

      ரொம்ப பேச மாட்டேன்னு சொன்னான்… நல்ல வாய் அடிக்கிறியே…

     அது என்னவோ தெரியல உங்களை பார்த்தா  பேச்சு தானா வருது….

       அப்ப நான் சொன்னதுதான் சரி…. நீ என்ன அத்தை கூப்பிட்டா தான் நம்ம ரெண்டு பேரும் பேசுவதற்கு சரியா இருக்கும்…. ஆனால் சண்டை எல்லாம் போடக்கூடாது இப்பவே சொல்லிட்டேன்.,  நம்ம சண்டை போட்டா அவனுக்கும் அவனோட அப்பாக்கும் குஷியா போயிடும்…..

    இவள் அமைதியாக சிரித்துக் கொண்டே இருக்கவும்…. முதல்ல இந்த பிரச்சினை முடியட்டும்., அதுக்கப்புறம் மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன், என்னடா வந்தவுடனே இப்படி சொல்றாரேன்னு யோசித்திராத நான் ஏற்கனவே நினைச்சது தான், என்று சொல்லியபடியே அவளுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்புவோமா,  என்று கேட்டு கால் டாக்ஸி வரவழைத்து அதில் கிளப்பிக் கூட்டிக் கொண்டு கிளம்பினார்,,, கிளம்புமுன் மித்ராவின் போனிலிருந்து அவள் அம்மாவிற்கு அழைத்து பேசி விட்டு கிளம்பினார்…..

     காரில் போகும்போது தான் பேசிக் கொண்டே சென்றார்.,  இது நமக்கு வேண்டப்பட்ட பையன்  அதனால்தான் இவனுடைய கால் டாக்ஸி வர சொன்னேன்., வேறு யார் எது என்றாலும் தெரிந்துவிடும், நம்ம காருல போனாலும் கண்டு பிடிச்சிடுவாங்க ன்னு,  சித்தார்த் சொன்னான்…  அதனாலதான் இங்கிருந்து தள்ளி  போய் நம்மளோட இன்னொரு வீடு இருக்கு…. ஈசிஆர் ரோட்டில் அங்க கொண்டு போய் உன்னை தங்க வைக்கலாம் ன்னு., உனக்கு  சமையலுக்குப் எல்லாத்துக்கும் ஆள்  இருக்காங்க….  பாதுகாப்புக்கு எப்பவுமே இருப்பாங்க… உன்ன இங்க விட்டுட்டு நானும் மாமாவும் ஊருக்கு போறோம்….  ரெண்டு நாள் கழிச்சு நாங்க வரும்போது சித்தார்த்தும் வந்திருப்பான்…. அதுக்கப்புறமா மத்தத பார்த்துக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே….

      இவள் கல்லூரிக்கு வந்த கடிதத்தை பற்றி மெதுவாக சொல்லிக் கொண்டு வந்தாள்…. அதை கேட்டவுடன் சித்தார்த்தின் அம்மா சித்தார்த்தின் அப்பாவிற்கு போன் செய்து இவளை தங்க வைக்கப் போகும் வீட்டிற்கு வரச்சொன்னார்…. அவரும் சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விடுவதாகச் சொன்னார்….

     சித்தார்த் கிட்ட சொல்லிட்டியாமா என்று கேட்கவும்….  இல்லை அவங்க மத்தியானம் கால் பண்ணுவாங்க அப்புறம் தான் சொல்லணும்… என்று சொல்லும்போது அவன் கால் பண்ணாட்டா என்ன ஒரு மெசேஜ் போட்டுவிட்டு., அந்த லெட்டரை போட்டோ எடுத்து அவனுக்கு அனுப்பி வைத்திரு., அதுக்கு அப்புறம் என்ன முடிவு பண்ணலாம் யோசிப்போம் என்று சொன்னார்.., அவளும் சரி என்று சொல்லி விட்டு அவனுக்கு மெசேஜ் மட்டும் போட்டு விட்டாள்….

     லெட்டரை வீட்டிற்கு சென்ற பிறகு போட்டோ எடுத்து அனுப்பி கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு….

     ஆனால் சற்று நேரத்தில் எல்லாம் அவளுக்கு சித்தார்த்திடமிருந்து போன் வந்துவிட்டது…. என்ன விஷயம் என்று கேட்டு அவள் கார்ல போயிட்டு இருக்கேன் வீட்டுக்கு போயிட்டு சொல்லட்டுமா என்று கேட்கும்போது…..  போட்டோ எடுத்து அனுப்பு என்று திரும்பவும் கேட்கவும், இல்லை இப்ப கரெக்டா எடுக்க முடியாது…  நான் உங்களுக்கு அப்புறமா டீடெயிலா சொல்றானே என்று சொல்லவும்..,

சரி எனக்கு விஷயத்தை சொல்லு என்று கேட்கவும்….  இவள் மேலோட்டமாக  அந்த கடிதத்தில் இருந்த விஷயத்தை மட்டும் சொன்னாள்….  சற்று நேரம் யோசித்துக் கொண்டே இருந்தவன் சரி நான் அப்பாட்ட பேசிட்டு திருப்பி உனக்கு கால் பண்றேன்., என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்….

     சற்று நேரத்தில் மறுபடியும் அவளுக்கு போன் செய்து அப்பாட்ட பேசிட்டேன்…  அப்பா அங்கதான் வந்துவிட்டு இருக்கிறாராம் அப்பா வந்து மத்த டீட்டெயில்ஸ் எல்லாம் சொல்லுவாரு.,  என்று மட்டுமே சொன்னான்….

   சித்தார்த்தின் அம்மாவோடு சென்று அவள் தங்கப்போகும் வீட்டில் சேர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் சித்தார்த்தின் அப்பா வந்து சேர்ந்தார்….

      என்னம்மா..,  மருமகப் பொண்ணு எப்படி இருக்க என்று மித்ராவை பார்த்தவுடன் கேட்டார்….

     நல்லா இருக்கேன், அங்கிள் என்று சொல்லவும் சித்தார்த்தின் அம்மா உன்கிட்ட இப்பதான சொன்னேன்…, என்ன அத்தை ன்னு கூப்பிடும்போது., அவர் எப்படி அங்கிள் ஆவாரு….  மாமானு கூப்பிடு என்றார்….

     தயக்கத்தோடு தலையாட்டினாலும் யோசனையோடு அமர்ந்திருந்தாள்… அதேநேரம் சித்தார்த்தின் அப்பா அந்த லெட்டர் கொஞ்சம் தாமா என்று கேட்டார்….

     அவள் தயங்கி கொண்டே கொடுக்கவும் சித்தார்த் அனைத்து விஷயத்தையும் தன்னிடம் சொன்னான் என்பதை மட்டும் அவளுக்கு தெளிவுபடுத்தினார்…. பின்பு அந்த கடிதத்தை வாசித்து பார்த்துவிட்டு நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் எல்லாம் நல்லபடியா நடக்கும் பயப்படாமல் இரு., என்று சொல்லிவிட்டு யாரிடமோ போனில் பேச சென்றார்….

      சில போன் கால்களை பேசிவிட்டு அங்கேயே நின்று யோசித்துக் கொண்டு இருக்கவும்… சித்தார்த்தின் அம்மா எழுந்து சென்றார்.. என்ன என்று கேட்கும் போது இந்த லெட்டர் விஷயமாக அந்தப் பையனின் வீட்டிற்கு இரண்டு மூன்று பேர்களின் உதவியோடு பேச முயற்சி செய்கிறேன்., அந்தப் பையனை அழைத்து வைத்து சித்தார்த்தையும் வைத்து பேசி முடிப்பது தான் சரி, இது யாரோ இடையில் இருந்து பார்க்கும் வேலை என்பது தெளிவாக தெரிகிறது, இந்த பிரச்சினையை இப்படியே வளர விட்டால் அவர்கள் வீட்டிற்கும் பிரச்சினை நமக்கும் பிரச்சனை அதனால் பேசி தெரிந்து கொள்வது நல்லது அதனால் காத்திருக்கிறேன், என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

   நாளைக்கு நம்ம ஊருக்கு போறத பத்தி யோசிக்கனுமா…..

         அது போறது போ தான் செய்யணும்.,  வேற வழி இல்ல, போகுறதுக்கு முன்னாடி முடிஞ்சா இன்னைக்கு ஈவ்னிங் மித்ரா வீட்ல போய் பேசிட்டு அவங்க என்ன முடிவு பண்றாங்க என்கிறது பொறுத்து நம்மளும் முடிவு பண்ணுவோம், அதுக்குள்ள அந்த ஜெகதீஷ் வீட்டிலிருந்து போன் வந்துச்சுனு னா,  நல்லா இருக்கும் சித்தார்த் இரண்டு நாளில் கிளம்பி வர சொல்லி இருக்கேன், எல்லா வேலையும் முடித்து அங்கு உள்ளவர் கையில் ஒப்படைத்து விட்டு வர சொல்லி இருக்கேன்,  வேற வழி இல்ல அவனும் வரணும் வந்து பேசி இதுக்கு ஒரு முடிவு பண்ணாம வேற எந்த ஒரு காரியமும்  இறங்க முடியாது …

     வந்தவுடனே கேட்க நினைத்தேன் மருமகளே ன்னு  கூப்பிட்டீங்க…

    நல்ல பொண்ணா இருக்கா…. இதுக்கு மேல அவனுக்கு எங்க போய் பொண்ணு தேட., அவனும் இந்த பிள்ளையை தான் மனசுல இன்னும் நினைச்சிட்டு இருக்கான்னு தெரியுது…, அப்புறம் என்ன பண்றது என்று சொன்னார்….

       சாயங்காலம் மித்ரா வீட்டுக்கு போவது பேசி முடிக்க தான் கேட்டுப்பார்ப்போம் முறைப்படி கேட்போம்…  அவங்க சரின்னு சொல்லி சம்மதிச்சிட்டாங்க னா… இந்தப் பிரச்சினையும் ஓரளவுக்கு முடிஞ்சது…. போனில் பேசிவிடுவோம் அப்படின்னா பிள்ளையைக் கொண்டு போய் வீட்ல விட்டுட்டு போவோம் இல்லன்னா பிள்ளையே கையோட கூட்டிட்டு போய் விடுவோம் அவ்வளவுதான்….

     நான் என்னோட திருப்பதி கூட்டிட்டு போட்டுமா…

     பேசாம இரு, எல்லாம் நல்லபடியா முடியட்டும் அதுக்கப்புறம் குடும்பமா போயிட்டு வருவோம் என்றார்….

     இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க அவள் அமைதியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டே இருந்தாள்….

     இவர்கள் இங்கு என்ன பேசினார்கள் என்று தெரியாது…  சரி மருமகளிடம் பேசுவோம், அவள் வாயிலிருந்து என்ன வருகிறது என்று பார்ப்போம் என்று யோசித்துக்கொண்டே சித்தார்த்தின் அம்மாவிடம் சொல்லிவிட்டு சித்தார்த்தின் அப்பா மித்ராவிடம் கேட்கச் சென்றார்….

     மித்ரா நீ என்ன யோசிக்க இந்த லெட்டர் விஷயத்தைப் பொறுத்த வரைக்கும் உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா என்று கேட்டார்….

     அது வந்து அங்கிள் இல்ல இல்ல மாமா… மாமா வந்து அந்த ஜெகதீஷ் வீட்டில் உள்ளவர்களை கூப்பிட்டு இந்த லெட்டரை காமிச்சா என்ன….. அவங்கட்ட  பேசி, என்ன விஷயம் யார் மூலமா இந்த பிரச்சினை வருது அப்படிங்கறத கொஞ்சம் கண்டுபிடிக்க ட்ரை பண்ணா தெரிஞ்சிடும் இல்ல…. இல்லன்னா இவங்க எப்பவுமே இதே பிரச்சினையோட  எப்போ அவன் பிரச்சினை பண்ணுவான் அப்படின்னு  யோசிச்சிட்டு இருக்க முடியாது இல்ல….  அது மட்டுமில்லாம நடுவிலிருந்து பிளே பண்றவங்க நாளைக்கு யாருக்கு னாளும் பிரச்சினை உண்டு பண்ணி…. யார் மேல வேண்டும் னாளும் பழி போடுவதற்கு வாய்ப்பு இருக்கு இல்ல அதான்….  யோசிச்சுக்கிட்டு இருக்கேன் மாமா என்று சொல்லவும்….

    பாத்தியா காமாட்சி என் மருமக என்ன மாதிரியே யோசிக்கா….  உன் மகனுக்கு தான் மண்டையில் அறிவே இல்லாம போயிருச்சு என்று சொல்லவும்…..

    சரி நீங்களும் மருமகளும் கூட்டுச் சேர்ந்து கோங்க….  அதுக்காக என் பிள்ளையை குறை சொல்லாதீங்க…. என் பிள்ளை என்ன சொன்னான்….

     அந்தப் பையனை கூப்பிட்டு  விஷயத்தை சொல்லிட்டு…  ஒரு தடவை வார்ன்  பண்ணி அனுப்பிடுங்க..  அப்படின்னு மட்டும் சொன்னான்….. இந்த பிரச்சனையில் இருந்து முழுசா வெளிய வரணும்னா என் மருமகளும் நானும் யோசிக்கிறது தான் சரி.,  என்று சொல்லிவிட்டு மித்ரா விடம் திரும்பி நானும் இதுதான் யோசிச்சேன்… இப்ப ரெண்டு மூணு பேர் ட்ட பேசி இருக்கேன்., முடிந்தளவு கிளம்புறதுக்குள்ள பேசிவிடுவோம்., அப்படி இல்லேன்னா நாங்க ஊருக்கு போய்ட்டு வந்து ரெண்டு நாள் கழிச்சு சித்தார்த் தையும் வர சொல்லிட்டு நாம எல்லாம் பேசி முடித்து விடலாம்….  நீ பயப்படாம இரு..

உங்க வீட்லயும் பேசி கல்யாணத்தை ஸ்டாப் பண்ண வேண்டியது.,  என் பொறுப்பு மா என்று சொன்னார்…..

      கவலைப்படாதம்மா இன்னைக்கி ஈவ்னிங் குள்ள  தெரிஞ்சிடும்., அதுக்கப்புறம் நான் பார்த்துக்கிறேன்.,  என்று அவர் சொல்லவும், அப்போ நான் இன்னைக்கு வீட்டுக்கு போய் விடலாமா, என்று அவள் கேட்க பரசுராமன் காமாட்சி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்….

   என்ன ஆச்சு அத்தை என்று கேட்கவும், இதுதான் நல்ல குடும்பத்தில் வளர்ந்த பிள்ளைங்களோட பழக்கம், வெளியே தங்கறதுக்கு யோசிச்சு நான் வீட்டுக்குப் போய் விடலாமா.,  வீட்டுக்கு போய்டலாமா.,  என்று கேட்டு கிட்டே இருக்க பாத்தியா.,

இதுதான் சித்தார்த் சொன்னான்.,  ஏற்கனவே நீ  காலையிலேயே வேண்டாம் நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னியாமே.,  ஒன்னுமில்ல  எல்லாம் பேசி முடித்து இதுக்கு ஒரு முடிவு பண்ணிட்டு தான்., நாங்க நாளைக்கு போவோம் கவலைப்படாதே என்று சித்தார்த்தின் அப்பா சொல்ல..,  சரி என்று தலையை ஆட்டிக்கொண்டு இருந்தாள்…  அவர் எதிர்பார்த்த போன் வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர்….

சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும்

சதி செய்தாலும்….

மாறாத மனம் அது

ஒன்றே போதும்…

நினைவுகள் ஆயிரம்

சொல்லலாம்….

நிஜங்கள் சொல்லும் நீ

யார் என்பதை…

நான் யார் என்பதை…”

Advertisement