Advertisement

அவன் சொன்னான்.,  இல்ல…. மித்ரா நான் உனக்கு தகுதியானவனா  எனக்கே தெரியல…. எனக்கு என்ன பாத்தா அருவருப்பா இருக்கு…. நான் சில தவறுகள் எல்லாம் பண்ணி இருக்கேன்…. என்று அவன் சிகரெட் பிடிப்பது தண்ணி அடித்தது பெண் சகவாசம் என்று அனைத்தையும் ஒத்துக் கொண்டான்…. அதனாலதான் என்னால உன் கிட்ட ஓபனா பேச கூட முடியல…. நான் உனக்கு தகுதியானவன் இல்லை என்று சொல்லவும்….

     நீங்க எல்லாருக்கும் தெரிஞ்சு தப்பு பண்ணி இருக்கீங்க…. அங்க ஒருத்தன் நாளை  மறுநாள்  வாரேன்னு சொல்லி இருக்கானே….  அவன் எல்லாருக்கும் தெரியாம தப்பு பண்ணி இருக்கான்….  காலையில கேட்டீங்களா எப்படி பேசினான்….  அவன் கைல என்னை ஒப்படைக்க  நினைக்கிறீர்களா என்று கேட்க….

      இல்ல அது மட்டும் முடியாது…. ஒருவேளை அவன் நல்லவனாக இருந்து அவன் உண்மையிலேயே உன்னை விரும்பியிருந்தால்., நான் ஒதுங்கிப் போய்  இருப்பேன்…. ஆனா அவனோட எண்ணம் ஃபுல்லா அது இல்ல… ஷட்…. எப்படி நம்பி ஒப்படைக்க முடியும்… முடியாது என்னால் அப்படியெல்லாம் உன்னை விட்டுக் கொடுக்க முடியாது., என்று சொல்லவும்.,

அப்ப என்ன வந்து கூட்டிட்டு போங்க என்று மறுப்படியும் சொன்னாள்….

  நீங்க நினைக்கலாம் இது சாதாரண படிப்பு விஷயத்தில் வந்த போட்டி தானே….  இதுல எதுக்கு ரெண்டு பேருக்குள்ள இவ்வளவு பெரியதாக நினைக்கலாம்…..  அது வேற ஒண்ணுமில்ல சின்னதா ஆரம்பிச்சதுதான் அதுக்கப்புறம் அது பகையா மாறிடுச்சு….

ஏன் இந்த அளவுக்கு போச்சு ன்னு., எவ்வளவு தான் யோசிச்சாலும்… ஒன்னுமே புரியலை…. இந்த அளவுக்கு அந்த ஜெகதீஷ் க்கு என் மேல வெறுப்பு….

       பிள்ளைகளுக்கு தோல்வி ன்னா என்ன ன்னு., சொல்லி கொடுக்கணும் ங்க… அப்ப தான் போராடி வாழ கத்துக்குவாங்க…. தோல்வி னா என்ன ன்னு தெரியாம தோல்விய சந்திக்கும் போது…. ஜெயிக்க குறுக்குவழிய தான்… தேடுவாங்க…

இப்ப வந்த பகையை முடிக்காம முடியாதுங்கிற…. லெவலுக்கு வந்துருச்சு அவ்வளவுதான்…

    என்னால இப்போ உடனே அங்கிருந்து வர முடியாது….  அவன் சொன்ன மாதிரி எங்க அம்மாவும் அப்பாவும் வெளியே போவது உண்மைதான்…. அதனால தான் யோசிக்கிறேன்..  இப்ப என்ன செய்ய என்று தெரியாமல் யோசிச்சிட்டு இருக்கேன், நான் அம்மாகிட்ட போன் பண்ணி பேசிட்டு உனக்கு திருப்பி கூப்பிடுறேன் என்று சொன்னான்…..

     அதுபோல அவன் பெற்றவர்களிடம் பேசிவிட்டு சற்று நேரத்தில் மித்ராவிற்கு அழைப்பு விடுத்தான்….

     நான் உங்க அம்மா கிட்ட பேச முடியுமா என்று கேட்டான்…. இவளும் அவள் அம்மாவை மெதுவாக எழுப்பி வந்து போனை கொடுக்கவும் மறுபடியும் பேசத் தொடங்கினான்..,

    இதற்கு முன்பு மித்ராவின் அம்மாவிடம் பேசியது, அவளை நல்லபடியாக நான் காப்பாற்றுவேன் என்னை நம்புங்கள்,  தைரியமாக இருங்கள் என்று மட்டுமே சொல்லி இருந்தான்….

        இப்போது மித்ரா ஏற்கனவே ஜெகதீஷ் பேசியதை அவன் அம்மாவிடம் சொல்லி இருந்தாள்…. அதனால் சித்தார்த்  அவள் அம்மாவிடம் எங்க அம்மா அல்லது அப்பா யாராவது வருவாங்க…. அவங்க கூட இப்போ மித்ராவை அனுப்பி வைக்கிறீங்களா என்று கேட்டான்…

   இல்ல தம்பி அப்படி அனுப்புனா வீட்டில் பெரிய பிரச்சினை ஆயிரும்…..  வெளியே தெரிஞ்சா என்ன வீட்டை விட்டே விரட்டிருவாங்க என்று சொல்லவும்….

       சரி நான் இதற்கு ஒரு முடிவு பண்றேன்.,  ஆனால் மித்ரா நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு வர மாட்டா…. நீங்களும் மத்தவங்களோட சேர்ந்து தேடுங்க அவ எங்க இருக்கான்னு நான் உங்களுக்கு சொல்கிறேன்…   நான் உங்க நம்பருக்கும் கூப்பிட மாட்டேன் நான் பார்த்துக்கிறேன் யார் மூலமாவது உங்களுக்கு ஸ்கூலுக்கு இல்லை னா… எங்கேயோ ஒரு இடத்துக்கு தகவல் வரும் ஆனா வெளியே தெரியக்கூடாது பார்த்துக்கோங்க… என்று சொன்னான் மித்ராவின் அம்மாவும் அதற்கு சம்மதித்து மித்ராவிடம் போனை கொடுத்து விட்டு சென்றாள்..,  இது மித்ராவின் தம்பிக்கு மட்டும் தெரியும்….

   அவனுக்கு நடு இரவை தாண்டி விட பேசிக்கொண்டிருந்தான் இவளோடு….

       மித்ரா இப்ப வேற வழி இல்ல நான் சொல்ற மாதிரி செய்… என்று சொல்லி விட்டு அவனுடைய பிளானை சொல்லத்தொடங்கினான்…. காலை எப்பொழுதும் போல காலேஜுக்கு போ காலேஜில் கேன்டீனில் பதினோரு மணிக்கு போய் உட்காரு….  நேத்து வந்த  என்னோட ஃபிரண்ட் வருவான்…. அவன் வந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துல அம்மா வருவாங்க…. நீ அம்மாக்கூட கிளம்பிரு  எங்க கார் வராது…. எங்க கார் வந்தா தெரிஞ்சிடும்.,  அதனால கார் இல்லாம வேற எதுலயாவது உன்னை கூட்டிட்டு போயிட்டு வாங்க…. அதுக்கப்புறம் உன்னை பாத்திரமான இடத்தில் இருக்க வைத்துவிட்டு போவாங்க….. உனக்கு பாதுகாப்புக்கு ஆள் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்….

           அம்மாவும் அப்பாவும் அவங்க பிளான்படி  ஊருக்கு போவாங்க…. நான் ஆஸ்திரேலியா ல  தான் இருப்பேன்… நான் உடனே வர மாட்டேன்…. ஏன்னா அவங்களுக்கு நீ எங்க இருக்க ன்னு தெரியக்கூடாது…. கண்டிப்பா அவன் தேடுவான் அவனை பத்தி எனக்கு தெரியும் அவனுக்கு இங்கே சில ஃபிரண்ட்ஸ் இருக்காங்க …. அவங்க கண்காணிக்கிறார்கள்…

        அதனால நீ  நான் சொல்றதை மட்டும்  செய்….  நாளைக்கு காலேஜுக்கு எப்பவும் போல கிளம்பி போ என்று சொல்லவும்…  இவள் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டதற்கு எதுவும் எடுக்காதே….  நீ மட்டும் கிளம்பு என்று சொன்னான்….

     சரிவர தூங்காமல் அதிகாலையிலேயே எழுந்து அவள் அம்மாவிடம் மெதுவாக  சித்தார்த் சொன்னதை சொன்னாள்…. அவள் அம்மா சத்தம் போட்டு பேசாதே வெளியே தெரிந்துவிடக்கூடாது…. என்று சொல்லிவிட்டு அவளது கல்லூரி கொண்டு பேக் ல்  அவளது புத்தகத்திற்கு இடையே  அவளுக்கு  இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை எடுத்து வைத்து அனுப்பினார்…. அன்றும் மகேந்திரன் இவர்களோடு பஸ் ஸ்டாப் வரை நடந்து வந்தான்… அப்போது மகேந்திரனும் மித்ராவின் அம்மாவும் சொன்ன ஒரே வார்த்தை ஜாக்கிரதையாக இரு….

       எங்கிருந்தாலும் சித்தார்த் தகவல் அனுப்புவதாக சொல்லி இருக்கிறார் அல்லவா….  நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்ன மித்ரா…. மகேந்திரனிடம் அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொள்.,  வீட்டில் எந்த பிரச்சினை வந்தாலும் நீ அம்மாக்கு துணையா நில்லு., நான்  நன்றாக தான் இருப்பேன் கண்டிப்பா வருவேன்…. இந்த பிரச்சினை முடிஞ்சதுக்கப்புறம் சித்தார்த் அம்மா கூட வாரேன் என்று சொன்னாள்….

    மகி உன்னை நம்பி தான் அம்மாவ விட்டுட்டு போறேன்…. பத்திரமா பாத்துக்கோ கண்டிப்பா., தாத்தா அத்தை எல்லாரும் அதிகமா பேசுவாங்க… அப்பாவும் அதிகமா வார்த்தை விடுவாரு., வேற வழி இல்ல நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் யாரும் நம்பல….. அதான்  போன் நம்பர் ஓட காமிக்கிறேன்…  ரெக்கார்டிங் கூட., அப்பவும் தாத்தா நம்ப மாட்டார்….

       நான் என்ன செய்ய என்று வேறு வழியில்லாமல்தான் போகிறேன்… என்று சொன்னாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை நீ பார்த்துக் கொள் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தனர்…

     ஒரு பெண்ணை பெற்றவளாக மித்ராவின் தாய்க்கு இது மிகவும் வருத்தமாக இருந்தாலும்… வேறு வழி இல்லை மகளின் வாழ்க்கையை காப்பாற்ற தானே என்று மனதைத் தேற்றிக்கொண்டாள்….  மகேந்திரனும் அதைதான் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்…. அம்மா அக்காவோட வாழ்க்கை பத்திரமா இருக்கணும் நேத்து அந்த போன் ரெக்கார்டிங் கேட்டீங்க இல்ல..,  கேட்டும் அதுக்கு அப்புறம் எப்படிமா நம்மளால அக்காவை அப்படிப்பட்டவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்பாதிக்க முடியும்…. நானே ஏதாவது பண்ணி அக்கா கல்யாணத்தை நிறுத்த நினைச்சிட்டு இருந்தேன்…. ஆனா தாத்தா தனக்கு தான் எல்லாம் தெரியும் ன்னு பேசுவாங்க…… நல்லவேளை சித்தார்த் சார் அந்த வேலையை  பார்க்கிறேன் ன்னு சொல்லிட்டாங்க….   பார்க்கலாம் இன்னைக்கு ஈவ்னிங் பிரச்சினை இருக்கு…  ஸ்கூல்ல இருந்து வரும்போதே தைரியமா வாங்க…,  எதைப்பற்றியும் யோசிக்காதீங்க,

        கரெக்டா வீட்டு ஆட்களோடு சேர்ந்து நம்மளும் தேடணும்…. எந்த சூழ்நிலையிலையிலும் நமக்கு தெரியும் ன்னு  முகத்தில்  காட்டக்கூடாது….  சின்ன செய்கை கூட நீங்களோ., நானோ   காட்டிவிடக்கூடாது…. ஜாக்கிரதையா இருங்க மா என்று சொல்லிவிட்டு அவனும் கல்லூரிக்குக் கிளம்பினான்….

    பெண்ணைப் பெற்றவள் எப்போதும் நெருப்பு ஆற்றில் தான் நடக்கிறாள்…. பிறந்த நிமிடத்திலிருந்து ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும் வரை தினம் தினம் நெருப்பில் குளித்து, நெருப்பில் மூழ்கி, நெருப்போடு தான் அவளது நிலை ஓடிக்கொண்டிருக்கிறது…. பிடித்துக் கொடுக்கும் கை ஆதரவாக இருந்தால்.., அந்த நெருப்பில் இருந்து சற்று ஓய்வெடுக்க ஏதோ ஒரு மர நிழலில் இடம் கிடைக்கும்…. இல்லை என்றால் மீண்டும் மகளையும் சேர்த்து நெருப்பு குழிக்குள் இழுத்துக் கொண்டு நடக்க வேண்டிய சூழலுக்கு  பெண்ணைப் பெற்றவர்களுக்கு வந்துவிடும்…. வாழ்க்கை பெண்ணுக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகளையும் வேதனைகளையும் வைத்து செல்கிறது… என்று யாருக்கும் தெரிவதில்லை…  அது பெண்களின் தலையெழுத்தா இல்லை பெண்ணை சுற்றியுள்ள சூழ்நிலையின் சித்தரிப்பா….

 

உன் வார்த்தை சொல்லாமலே

உன்னோடு நடைபோட துணிந்து

விட்டேன்….

வாழ்க்கை வரமா சாபமா

என்று தெரியாமலே….”

Advertisement