Advertisement

அத்தியாயம் 9

 

அவனுடைய மதியம் மித்ராவிடம் இருந்து போன் வந்த பிறகு அவள் அனுப்பிய ரெக்கார்டிங்கை கேட்கத் தொடங்கினான்….  அதில் முதலில்  ஜெகதீஸ் ன்  குரல் கேட்டது….

   கல்யாணத்துக்கு பார்த்த மாப்பிள்ளை நான் தான் என் பேரு ஜெகதீஸ் என்று தொடங்கி விட்டு தான் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொண்டான்….  உனக்கு சித்தார்த்தை  நல்ல தெரியும் இல்ல…. எனவும் இவளிடமிருந்து ம்ம்ம்…. என்ற பதிலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை…  பின்பு அவன் மறுபடியும் சொல்லத் தொடங்கினான் நான் சித்தார்த் தோட எதிரி,  அவன் என்னை எல்லா விதத்திலும் ஜெயிச்சான்.,  ஏன் கடைசியா ஒரு பிரச்சினையில் மாட்டி வைக்க முயற்சி பண்ணேன்,  அப்ப நீ காப்பாற்றிவிட்டு இருக்க… அதை நான் கண்டுபிடிச்சிட்டேன் அங்கு இருக்குற  ஒரு போலீஸ்காரர் மூலமா எனக்கு விஷயம் தெரிய வந்துச்சு…..  நீ மட்டும் அன்னைக்கு உன் கூட இருந்து பாடம் சொல்லிக் கொடுத்தான் ன்னு சொல்லலைன்னா…, அவன் இந் நேரம் கம்பியை எண்ணிட்டு இருப்பான்…  அந்த அளவுக்கு மாட்டி வைக்கிறதுக்கு ப்ளான் போட்டு ரெடி பண்ணி வச்சிருந்தேன்…. ஆனா நீ தப்பிக்க வச்சுட்ட என்கவும்., இவள் அப்பொழுதும் எதுவும் பேசாமல்., ஒஒ என்று மட்டுமே சொன்னாள்  வேறு எதுவும் சொல்லவில்லை…

    என்ன கேட்க கேட்க ஷாக்கா இருக்கா என்று கேட்கவும்… அவளிடம் ம்ம்…. என்று மட்டும் பதில் வந்தது….

    மீண்டும் அவன் பேச தொடங்கினான்… உனக்கு தெரியுமா, தெரியாதா எனக்கு தெரியல…. சித்தார்த் த  ஜெயிப்பதற்கு எனக்கு இப்ப  ஒரு வழி கிடைச்சிருக்கு…  அந்த வழியே தான் ஃபாலோ பண்ண போறேன்….

               முதல்ல நினைச்சேன் நீ வந்து  சொன்னதாலதான் அவன் தப்பிச்சிட்டான் ன்னு தெரியும்போது உன்ன கடத்தி யூஸ் அண்ட் த்ரோ மாதிரி வீசிறனும் அப்படின்னு நெனைச்சேன்….  அப்படி செஞ்சா அது அவனுக்கு பயங்கரமா வலிக்கும்…. தனக்கு உதவி செஞ்ச பொண்ணுக்கு  இப்படி ஒரு நிலைமை ஆயிடுச்சுன்னு….  நினைச்சு அவனுக்கு வலிக்கும் அப்படின்னு நெனச்சேன்…. ஆனா ஒவ்வொரு தடவையும் நான் முயற்சி பண்ணும் போது எல்லாம்.,  நீ தப்பிச்சுட்ட….  காரணம் என்னன்னா உனக்கு பின்னாடி பார்டி காட்  போட்டிருக்கான்…..  காலேஜ்ல கிளாஸ் ரூம்ல இருந்து நீ  வீடு வந்து சேர்ற வரைக்கும்….. உனக்கு பின்னாடியே ஆள் வருது அதனாலதான் உன்னை என்னால கடத்தவும் முடியல…. எதுவும் பண்ண முடியல….

      அது தான் இப்ப கல்யாணம் பண்ணிட்டு அவனை பழிவாங்க  எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு….. என்றான் எரிச்சலான ஒரு குரலோடு….

     சித்தார்த் தெரிஞ்சே தப்பு பண்ணான்…..  எல்லாருக்கும் தெரியும்  ஆனால் நான் யாருக்கும் தெரியாமல்  தப்பு பண்ணுனது யாருக்கும் தெரியாது….  சோ நீ வா நீ வந்து அனுபவிப்ப…

     என்ன கல்யாணம்  பண்ணுறது னால எப்படி பழி வாங்க முடியும் என அவள் கேட்கவும்…

   அதற்கு அவனுடைய பதில்…. ஏன்னா எனக்கு இது சரியான வழி என்கிறது இப்பதான் தெரியும்….  இல்ல னா உன்ன முன்னாடியே கல்யாணம் பண்ண ட்ரை பண்ணி இருப்பேன்…. அவன் உன்ன லவ் பண்றானாம்….. சித்தார்த்  மித்ரா மேல உயிரையே வச்சிருக்கான் ன்னு வெளியே ஒரு பேச்சு. இருக்கு அவன் பிரண்ட்ஸ் டீம் பக்கம்…  சோ அவன் உயிரே  வச்சிருக்க மித்ராவை  நான் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டேன் னா….  உயிரே இல்லாமல் சித்தார்த் என்ன செய்வான் அப்படின்னு எனக்கு ஒரு ஆசை…..  அதையும் பார்க்கணும் அதுக்குதான்.,  அதுமட்டுமில்லாம உன்னை எல்லா வகையிலும் அணுஅணுவாய் சித்திரவதை பண்றத,,,  அப்பப்ப போட்டோ எடுத்து அப்பப்ப வீடியோ எடுத்து அந்த சித்தார்த் க்கு அனுப்பி வச்சா அவனுக்கு துடிக்கும் இல்ல அதுக்கு தான்….

    அசிங்கமா இல்ல நீ நேருக்கு நேர் நின்று மோதி இருந்தனா… அப்ப நீ பண்றது சரி அதை விட்டுவிட்டு அசிங்கமா என்ன வச்சு கேம் பிளே பண்ற என்று அவள் பதிலுக்கு கேட்கவும்….

    உனக்கு ஒரு கதை தெரியுமா சின்ன பிள்ளையில் கேட்டு இருப்பியே….  ஒரு அரக்கன் இருப்பான் அவனோட உயிரை ஏழு கடலுக்கு அந்த பக்கம் ஏழு மலைக்கு அந்தப் பக்கம் ஒரு கிளி கிட்டே இருக்கும்னு சொல்லுவாங்க., கேள்விப்பட்டிருக்கியா.,

     அந்த மாதிரிதான் கடல் தாண்டிப் போய் ஆஸ்திரேலியால இருந்தாலும் அந்த சித்தார்த்  தொட உயிர் இந்த மித்ரா ங்கிற கிளிகிட்ட இருக்கு…..  சோ இந்த மித்ராவை கொஞ்சம் கொஞ்சமா கொல்லனும்., அப்ப அந்த சித்தார்த் தொட உயிர் கொஞ்சம் கொஞ்சமா போகுமா எனக்கு அதுதான் வேணும்….. அவனை பழி வாங்கணும் அவனை நான் ஜெயிக்கணும்… அதுக்காக தான் இப்போ இந்த கல்யாணம் புரியுதா… இப்போ புரிஞ்சிருக்குமே…. என்ன  பதிலே இல்ல போ போ….  எப்படியிம் இரண்டு நாள்ல நீ எனக்கு சொந்தமாய் இருப்ப….  அதுக்கு அப்புறம் பார்த்துக்கிறேன் நிச்சயம் பண்ணிட்டாலே பாதி பொண்டாட்டியாமே அப்படியா என்று அவன் கேட்கவும் இவள் பதிலே சொல்லாமல் போனை கட் செய்தாள்…..

     அந்த ரெக்கார்டிங் விஷயத்தை இப்பொழுது நினைத்தாலும் சித்தார்த்திற்கு ஜெகதீஷ் கையில் கிடைத்தால் அடித்தே கொல்ல வேண்டும் என்ற வெறி வந்தது….

ஆனாலும் இப்ப எதுவும் முடியாது…. மித்ரா வோட பாதுகாப்பு முக்கியம்… அதுக்கப்புறம் தான் எதுனாலும்…..

      மதியம் பேசும்போது மித்ரா சொன்னது இதைத்தான் ஊர்ல உள்ளவங்களுக் கெல்லாம்  சித்தார்த் மித்ரா வ  லவ் பண்றது தெரிஞ்சிருக்கு….. யாருனே தெரியாத  அந்த ஜெகதீஷ் க்கு தெரிஞ்சிருக்கு…. சம்பந்தப்பட்ட மித்ராவுக்கு தெரியலையே என்கிற கோபம்…..  அதை கடைசி வரைக்கும் மித்ரா விடம்  சித்தார்த் வாயால சொல்லவே இல்ல…. அது தான் நீங்க சொல்லலையே அப்படின்னு கேட்கும்போது..,  எனக்கு சொல்றதுக்கு தகுதி இல்லை அப்படின்னு சொல்லி சித்தார்த் சொன்னது…. ஆனால்  மித்ராவிற்கு  ஜெகதீஸ்  சொன்ன பிறகு தான் அந்த காதலின் ஆழம் என்னவென்று புரிந்தது…..  தனக்காக பாதுகாப்புக்கு ஆள் ஏற்பாடு செய்து அவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தன் படிப்பிற்காக பிரபஸசர்களை ஏற்பாடு செய்தது… எல்லாம் இப்போது யோசித்துக் கொண்டிருந்தாள்…. அதேபோல மாலை ஏற்கனவே தாத்தாவிடம் பேசி அந்த கடுப்பில் அமர்ந்திருந்தவளிடம் ஜெகதீஷ் போன் பண்ணி மறுபடியும் வெறுப்பேற்ற இவளும் பதிலுக்கு பதில் பேசி விட்டாள்……

அப்போதுதான் ஜெகதீஷ் இந்த முறை நான் தான் ஜெயிப்பேன் என்று சொன்னதற்கு…

பதிலுக்கு இவள் நான் உன்னை ஜெயிக்க விடமாட்டேன் என்று சொன்னது கல்யாணம் முடிஞ்சா தானே ஜெயிப்ப கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பாரு…. நான் நடக்க விடமாட்டேன்…..  அதையும் மீறி நடந்துச்சுன்னா நான் கல்யாணத்துக்கு அப்புறம் உன்னை சித்தார்த் அப்படி ன்னு கூப்பிட்டா  என்ன செய்வ…..

        அடுத்தவனை மனசில நெனச்சிட்டு இன்னொருத்தன் கூட வாழுற  பொண்ணு கூட உன்னால் எப்படி வாழ முடியும்…. அப்போ  நீதான் நரக வேதனை அனுபவிக்க  போற என்று சொன்னாள்….. அதுமட்டுமல்லாமல் இப்ப நான் சொல்றேன் நான் சித்தார்த் அ லவ் பண்றேன்…. அடுத்தவன லவ் பண்றவளை நீ கல்யாணம் பண்ணிக்க போறியா…. நீ ஜெயிக்கிறதுக்காக அசிங்கப்பட போகிறாயா என்று கேட்டாள்….

     அதற்கு அவன் பதிலுக்கு ஏய்…. ஒன்னு உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கணும்…  இல்லாடி நீ செத்துப் போயிரு..,  உன்னை கொன்று விடுவேன், உன்ன கல்யாணம் பண்ணிட்டு அவன சாகடிக்கணும்…. இல்லாடி உன்னை கொன்று அவனது சாகடிக்கணும் இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும்…. என்று அவன் சொன்னதற்கு

       அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள் நான் கண்டிப்பா சாக மாட்டேன்…  உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…. முடிஞ்சா கொன்னு பாரு என்று சொல்லவும்

    அவன் பதிலுக்கு சொன்னான் என்ன தைரியமா இருக்கியா… தப்பி போயிடலாம் நினைக்கிறியா…. தப்பிக்கவே முடியாது நான் உன்னை ஃபிக்ஸ் பண்ண வர்ற அன்னைக்கு சித்தார்த்த ஒட அம்மா அப்பா ரெண்டு பேரும் ஊர்ல இருக்க மாட்டாங்க…. சோ நீ  தப்பிச்சி எங்கேயும் போவதற்கு வாய்ப்பில்லை….  சித்தார்த் அம்மா அப்பா இருந்தா வேண்ணா உன்னை காப்பாத்த முடியும்….. சித்தார்த் அப்பா டெல்லி போறாரு….. சித்தார்த் அம்மா திருப்பதி போறாங்க…. அவன் ஆஸ்திரேலியா ல  இருக்கான்….. ஒருத்தராலயும் ஒன்னும் பண்ண முடியாது..,  அவன் ஃப்ரெண்ட்ஸ் கூட நீ போக முடியாது,  சோ உன்ன என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என்று இவன் பதிலுக்கு பேசவும்…

     நீ என்னதான் தலைகீழா நின்னாலும் நான் உனக்கு கிடைக்க மாட்டேன்.., அதை மட்டும் உறுதியா  நம்பு…. நீ சொன்ன இல்ல நான் தலைகீழா நின்னா கூட எங்க வீட்ல நம்ப மாட்டாங்க ன்னு சொன்ன இல்ல…. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ நீ தலைகீழா நின்னா கூட என்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது….  நான் சித்தார்த் அ கல்யாணம் பண்ணிப்பேன்… என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தாள்…..

    இதைக் கேட்ட சித்தார்த் ற்கு என்ன செய்வது என்று சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை…. பிறகு  ரெக்கார்டிங் கேட்டிருப்போம் என்று தெரியும்…. கூப்பிட்டு நாம் தான் பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு மித்ராவிற்கு அழைத்தான்…

   அவன் அழைத்தவுடன் அழைப்பை எடுத்துக் கொண்டு தனியே அறையின் கதவை பூட்டிவிட்டு உள்ளே இருந்து பேச தொடங்கினாள்…. போன் பண்ணி இருந்தான் என்று மட்டும் சொல்லவும்…

      எல்லாத்தையும் கேட்டேன்…. என்ன பண்ண போற என்று மட்டும் அவனும் பதிலுக்கு கேட்க….

       ஹலோ நீங்க தான் முடிவு பண்ணனும்….. இப்ப நீங்க என்ன பண்ண போறீங்க அத சொல்லுங்க என்றாள்…..

     அதைத்தான் நானும் கேட்கிறேன் நான் என்ன பண்ணனும் நீ சொல்லு என்று சொல்லவும்…

     நீங்க ரொம்ப பிரில்லியண்ட் சொன்னாங்க….  ஆனா உண்மையிலே சரியான மக்கு சட்டியா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்…. காலையிலிருந்து சொல்லிட்டு இருக்கேன்…  என்ன வந்து கூட்டிட்டு போங்க ன்னு…..  அது கூட உங்களுக்கு புரியலையா என்று கேட்கவும்….

Advertisement