Advertisement

சாரி… மித்ரா என்னால தான் உனக்கு இவ்ளோ பிரச்சனை அன்னைக்கு நான் எவ்வளவோ பிரின்ஸி கிட்ட சொன்னேன்… மித்ரா பேர் இதுல  வேண்டாம் ன்னு….  சொன்னதை  கேட்காமல் சொல்லிட்டாரு… ஆனா எனக்கு இந்த விஷயம் இப்படி லீக் ஆகும் என்று., எனக்கு தெரியாது சாரி…

     சாரி சொன்னா எதுவுமே சரியாக போறது இல்ல…. என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க., இப்பவும் எனக்கு என்ன பண்ணனும்னு தெரியல்ல…

     நீ சொன்ன இல்ல , அம்மாவும் தம்பியும் ஹெல்ப் பண்ணுவாங்க என்று , அது மாதிரி எதாவது அவங்ககிட்ட இருந்து கிடைக்குமா ன்னு பாக்கிறியா… இந்த விஷயத்தை சொல்லி ரெக்கார்டை போட்டுக்காட்டு…  நான் வேண்ணா.,  உங்க அம்மாட்ட பேசட்டுமா…  ஒரு முயற்சி தான் வீட்ல என்ன பதில்  வருதுன்னு தெரியனும்…. அதற்காக ஒரு சின்ன முயற்சி மட்டும் பண்ணி பாரு…

          எதாவது மாறுவதற்கு வாய்ப்பு இருக்கா ன்னு பாப்போம்… அப்படி இல்லன்னா நான் என்ன பண்ணனும்னு யோசிக்கிறேன்… தைரியமா இரு  மறுபடி போன் வந்தாலும்….  இல்ல வேற ஏதும் பேசினாலும் தைரியமா அன்ஸர் பண்ணு, பயந்துட்டே  பதில் பேசாமல் இருக்காத….

     எனக்கு  ஏதாவது தெரிஞ்சா தானே பதில் பேச முடியும்…. எனக்குத்தான் எதுவுமே தெரியாதே, என்ன நடந்தது என்ன விஷயம் எதுவும் தெரியாது , சரி உங்க ரெண்டு பேருக்குள்ளே உள்ளது எனக்கு தெரியாது ன்னே இருக்கட்டும்…. என் சம்மந்தப்பட்ட தே எனக்கு தெரியாது….. அந்த பக்கி வாயால சொல்ல போய் தான் தெரியும்…. லாஸ்ட் வரைக்கும் நீங்க ஒரு வார்த்தை சொல்லவே இல்ல இல்ல…

     புரியாம பேசாத…அது என்னவோ உண்மைதான், ஆனால் என்னால் அதை சொல்ல முடியல,  ஏன்னா எனக்கு அந்த தகுதி கிடையாது, அதைச் சொல்வதற்கான ஒரு தகுதி வேணும் மித்ரா புரிஞ்சுக்கோ….

     என்ன தகுதி இருக்கணும், அதுக்கு ன்னு ஏதாவது தனியா படித்திருக்கனுமா என்ன சொல்லுங்க….

      மித்ரா ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ… நான் சொல்வதற்கு நிறைய ரீசன் இருக்கு…..

      சரி நீங்க சொல்லல….  ஆனா அவனுக்கு எப்படித் தெரிஞ்சதது….. அப்பவும் உங்கள சுத்தி இருக்கற  எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கு…. உங்க கூட பழகுறவங்க கண்டு பிடிக்கிற அளவுக்கு இருக்கீங்க….

      சரி அதெல்லாம் விடுங்க… எனக்கு எதுக்கு பார்டிகாட் போட்டு இருக்கீங்க… அதை சொல்லுங்க… பிரச்சினை வரும் பயந்துதானே போட்டிருக்கீங்க…  அப்ப அவன் கேக்குறதுக்கு, நான் என்ன பதில் சொல்றது , எனக்கு யார் வாரா ,யார் போறா, எதுவுமே தெரியாது…..

     உனக்கு கடைசி வரைக்கும் எதுவும் தெரியாம இருக்கனும் ன்னு.,  நினைச்சேன் தெரிஞ்சிருச்சு சரி விடு, இதை பத்தி பேசாத ஆனா அவன் சொன்னதுக்கு…  அவன் என்ன  வாங்க போறான் ன்னு மட்டும் பாரு…..

     முதல்ல என்னை எங்கேயாவது கூட்டிட்டு போங்கனு சொல்றேன்ல….  அதை  நீங்க முதல்ல பாருங்க…. என்னாலே இவங்ககிட்ட போராட முடியும் நம்பிக்கை இல்லை….

      நான் சொல்றதை கேளு நீ இப்போ வீட்டுக்கு போயிட்டு,  உங்க அம்மா  தம்பி கிட்டயும் விஷயத்தைச் சொல்லு,  அவங்க ரெண்டு பேரையும் வச்சு பேச சொல்லு, அவங்க பேசியும் எந்த ரெஸ்பான்சும் இல்லன்னா , அதுக்கப்புறம் என்ன பண்ணனும்  ன்னு  நான் பார்க்கிறேன்… சரியா நீ வீட்டுக்கு ஒரு பைவ் தேர்டி க்குள்  போயிருவியா…..

      போயிருவேன்… ஆனால் உங்களுக்கு தூங்குற டைம் ஆயிரும்….

    எத்தனையோ நாள் தூங்காமல் முழிச்சு இருந்துருக்கேன்… இன்னிக்கு ஒரு நாள் இந்த ப்ராப்ளம் சால்வ்  பண்றதுக்காக முழிக்கிறது, பிரச்சினை இல்ல நான் பார்த்துக்கிறேன்,..  உனக்கு நாளைக்கு காலைல விடியும் போது எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியா  இருக்கனும் ன்னு நான் நினைக்கிறேன்… தைரியமா இரு நான் பாத்துக்குறேன் ன்னு சொல்லிட்டேன் இல்ல……  வீட்டுக்குப் போயிட்டு உங்க அம்மாவும் தம்பியும் வைத்து  நான் பேச  சொன்னத மறந்திராத…. பேசிட்டு என்ன ரெஸ்பான்ஸ் வருதுன்னு…  எனக்கு சின்னதா ஒரு மெசேஜ் போடு அதுக்கப்புறம் நான் உனக்கு கால் பண்றேன்….

      நாளையும் பொழுதையும் வகுப்பில் பாடம் கவனித்தும் கவனிக்காமலும், கடத்திவிட்டு மாலை வீட்டிற்கு சென்றவுடன் அம்மாவை அழைத்து அத்தனை விஷயங்களையும் சொன்னாள்…. அதன் பிறகே தம்பியிடம் சொன்னாள்….

     அதுபற்றி சித்தார்த்திடம் பேசியதையும் சொன்னாள்… ஆனாலும் சித்தார்த் எந்த பதிலும் சொல்லவில்லை… அவனை பார்த்துக் கொள்வதாகவும் உனக்கு எந்த பிரச்சனையும் வராது என்று மட்டுமே சொன்னார்….  இருந்தாலும் ஒரு முறை வீட்டில் பேசி பார்க்கும்படி சொன்னார்..

    அன்றுமாலை மித்ராவின் தந்தை வந்தவுடன் தாத்தாவையும் அருகில் வைத்துக்கொண்டு சில விஷயங்களை சொன்னார் மித்ராவின் தாய் அவன் பேசியது பற்றிய விஷயங்களை மட்டும் சொன்னார் அதற்கு மித்ராவின் தாத்தா…

   மாப்பிள்ளை பையன் போன் பண்ணியிருந்தார் மா…. அவருக்கும் யாரோ போன் பண்ணி நீ காலேஜ்ல யாரையோ லவ் பண்றதா போன் பண்ணி சொல்லி இருக்காங்க….  கல்யாணத்தை நிறுத்த  ஏற்பாடு பண்ணனும் சொல்லி இருக்காங்க..  மாப்பிள்ளை எனக்கு போன் பண்ணி சொன்னாரு அதே மாதிரிதான்  ஒரு பொண்ணு வாய்ஸ்ல எனக்கு போன் வந்துச்சுனு சொன்னாரு…. என் பேத்திக்கு உங்க நம்பர் தெரியாதுன்னு சொன்னேன்…

    இப்ப மாப்பிள்ளை பையன் தான் பேசியது… என்ன நிச்சயம் வேற யாராவது போன் பண்ணி… வேணும்னே கல்யாணத்தை நிறுத்த அப்படி பேசி இருக்கலாம் இல்லையா….  அதனால நீ அதெல்லாம் போட்டு குழப்பிக்காம போய் வேலையை பாரு…. நாளை மறுநாள் மாப்பிள்ளை வீட்டார்கள் வருவது வர தான் போறாங்க…. பேசி முடிகிறது முடிக்க தான் போறோம்…. நல்ல இடம் வரும் போது நாலு பேர் வேற மாதிரி ட்ரை பண்ண தான் செய்வாங்க… அதெல்லாம் நம்ம தான் ஜாக்கிரதையா பார்த்துக்கனும்..,  உடனே எல்லாத்தையும் நம்பிவிடக்கூடாது போ போ என்று அனுப்பி வைத்தார்…….

      மித்ரா வின் அம்மாவும் எனக்கு தெரிந்து தான் இவரிடம் சொல்வதும் ஒன்றுதான்.,  பாறாங் கல்லில் முட்டிக்கொள்வதும் ஒன்றுதான்….  என்று சொல்லிக் கொண்டிருந்தார்….

     அந்த ஜெகதீஷ் இவளிடம் பேசிவிட்டு எவ்வளவு அழகாக இங்கு மாற்றி சொல்லி இருக்கிறான்…. என்று நினைத்து நினைக்கும்போதே மித்ராவின் அம்மாவிற்கு பயம் கொடுத்தது…. இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லையே என்று யோசித்தார்…. அப்போதுதான் நீ முதலில் உன் சீனியருக்கு போனை போடு அவரிடம் விஷயத்தைச் சொல்லு என்ற பிறகுதான்… இவளுக்கும் சித்தார்த்திடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது…  உடனே அவனுக்கு ஒரு மெசேஜ் மட்டும் போட்டு விடவும் சற்று நேரத்தில் அவனே அழைத்து விட்டான்..,

    அவனுக்கு இங்கு நடந்த விஷயங்களை சொல்லவும்…. அவன் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான் இரவு வரை பொறுமையாக இரு…. நான் வீட்டிற்கு பேசி விட்டு மறுபடியும் உன்னை அழைக்கிறேன்…. என்று சொல்லிவிட்டு மித்ராவின் அம்மாவிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டும்…. என்று சொல்லி மித்ராவின் அம்மாவிடமும் தனியாக பேசிவிட்டு வைத்தான்….

     சற்று நேரத்தில் எல்லாம் ஜெகதீஷ் இடமிருந்து மித்ராவிற்கு போன் வந்தது அதேநேரம் சித்தார்த்தின் போனிலும் அழைப்பு தெரிந்தது அவனும் இவர்கள் பேசுவதை கேட்க தொடங்கினான்…

     மனதிற்குள் அவள் எதுவும் பேசாமல் விடக்கூடாது…. தைரியமாக பேச வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்தான்…

      என்ன வீட்ல யாரும் நம்பலையா என்று எடுத்தவுடன் ஆரம்பித்தான் ஜெகதீஷ்….

     இவள் பதில் ஏதும் சொல்லாததால் மீண்டும் தொடங்கினான்…..  நீ தலைகீழா நின்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க…. நாளை மறுநாள் மேரேஜ் பிக்ஸ் ஆகப்போறது ஆகப் போறது தான்…. இந்த தடவை நான் தான் ஜெயிப்பேன் என்று சொல்லவும்…..

     மித்ராவும் பதிலுக்கு பேச தொடங்கினாள்…  அது எப்படி ஜெயிக்க முடியும்… நான் ஜெயிக்க விடமாட்டேன்… என்று சொல்லவும்…. ஏய் என்று அவன் பதிலுக்கு கோபத்துடன் கத்தினான்…  இவள் பதிலுக்கு சொல்லத் தொடங்கினாள்..  இவள் பேசியதை கேட்டவுடன் சித்தார்த் சிரித்துக் கொண்டான்…  அடிப்பாவி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்… அந்த அளவுக்கு பேசி தீர்த்து விட்டு முடிஞ்சா ஜெயிச்சுக்கோ…. உனக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தாள்….

    அதைக் கேட்டவனுக்கு ஜெகதீஷ் முதலில் பேசியதற்கு இவள் அமைதியாக இருந்தது… இப்போது பதிலுக்கு பேசியதையும் நினைத்து ஒரு புறம் சிரிப்பு வந்தாலும்… தனக்கு அந்த தகுதி இல்லையே என்ற எண்ணமும் வந்தது….

கரையில் நிற்கிறேன் நான்

கதிரவனாய் இருக்கிறாய் நீ

நமக்கு இடையில் இருக்கும்

கடலைத் தாண்ட என் காதல்

போதுமா……

 

நித்தமும் உன் நினைவோடு

உன்னை மட்டுமே

நின்று கரையோரம் ரசிக்கிறேன்

காதலிக்கிறேன் ஆனால்

சொல்லத்தான் தடுக்கிறது

தவறுகளாய்  போன

என் தவறுகள்….”

Advertisement