Advertisement

அத்தியாயம் 8

 

            மரத்தடியிலேயே அமர்ந்திருந்தாள்… மித்ரா எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாலோ…. திடீரென அங்கு பறவைகளின் சத்தம் கேட்கவும் தான்… அவ்விடத்திலிருந்து நகர்ந்தாள்.,  ஏனெனில் எதிர்முனையில் பேசிய ஜெகதீஸ்  வார்த்தைகள் அவளை அந்த அளவு பாதித்திருந்தது…. என்ன செய்வது இதை எப்படி கையாளுவது என்று தெரியாமல் சற்று நேரம் பயந்துதான் போனாள்….பிறகு அவன் பேசியதை எல்லாம் சற்று நேரம்  யோசித்துக் கொண்டிருந்தாள்….. எழுந்து வகுப்பிற்கு செல்வதற்கு பதிலாக கேண்டீன் நோக்கி நடக்கத் தொடங்கினாள்….

     கேன்டீனுக்கு சென்றவள் எவ்விடத்திலும் அமராமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வேலை செய்யும் ஆள்களை நோக்கி நகரவும்…. அங்கிருந்து ஒருவன் வேகமாக வந்தான், சொல்லுங்க என்ன விஷயம் என்று கேட்டான்…. இவள் அவனை கேள்வியாக நோக்கவும்.,..

    உங்களுக்கு ஏதாவது பிரச்சனை, உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டா நீங்க வருவீங்கன்னு… சித்தார்த் அண்ணா சொல்லி இருக்காரு..  இவ்ளோ நாள் வராது நீங்க இப்ப வந்த உடனே தான் கேட்கிறேன்…. என்ன விஷயம் ஏதாவது ஹெல்ப் வேண்டுமா என்று கேட்டான்..,

      சற்று நேரம் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தவள்…. சித்தார்த் ப்ரண்ட்ஸ் யாரையாவது பார்க்கணும்….  இல்லாட்டி கூட சுத்திட்டு இருப்பாங்க இல்ல அவங்க ட்ட பேசணும் என்று சொல்லவும்….

            அப்படி உட்காருங்க ஒரு பத்து நிமிஷத்துல யாரையாவது வர சொல்றேன்…  எனக்கு சித்தார்த் அண்ணா  நம்பர் தெரியாது…. அவங்க பிரெண்ட்ஸ் யாராவது வர சொல்றேன்…. அவங்ககிட்ட கேட்டுக்கோங்க என்று சொன்னான்….

    அவள் கேண்டினில் ஒரு ஓரமாக சென்று அமரவும்…. அவள் தோழியிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது ஏன் வகுப்பிற்கு வரவில்லை…. இன்னும் சற்று நேரத்தில் வகுப்பு தொடங்கப் போகிறது என்று.,.

    இல்ல எனக்கு தலைவலி நான் கேன்டீன்ல இருக்கேன்…. கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்…..

     மனதிற்குள்ளே., பேசியவன் சொல்லிய விஷயங்களே  ஓடிக்கொண்டிருந்தது…. அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற எண்ணத்தோடு காத்துக் கொண்டிருந்தாள்…  வேலை பார்ப்பவன் சொன்னது போல அடுத்த பத்தாவது நிமிடம் சித்தார்த் உடன் இருக்கும் நண்பனும், அவனுடன் கைதடி போல சுற்றிக் கொண்டிருக்கும் ஒருவனும் வந்து சேர்ந்தனர்…..

     வந்தவன் இவள் தனியே அமர்ந்திருப்பதை பார்த்து மூவருக்கும் சேர்த்து  டீ வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தான்….

     அவனைப் பார்த்தவுடன் பேசத்தொடங்கியவளுக்கு பேச்சு வராமல் அண்ணா என்றதோடு, அவள் சொல்ல திணறுவதை பார்த்துவிட்டு முதலில் டீயைக் குடித்து விட்டு அப்புறம் பேசு…  ரொம்ப பயந்து போய் இருக்கே ன்னு நினைக்கிறேன்…. எதுவா இருந்தாலும் நாங்க இருக்கோம் தைரியமா இரு….  இப்ப என்ன பிரச்சனை என்று மட்டுமே கேட்டான்…..

      அவன் சொன்னது போல முதலில் டீ அருந்தியவள்., பின்பு அவனிடம் பேசிய விஷயங்கள் அனைத்தும் சொல்லாமல் வீட்டில் பிரச்சனை சித்தார்த் டம்.,  நான் உடனடியாக பேச வேண்டும் என்று மட்டுமே சொன்னாள்……

     வீட்ல என்ன பிரச்சனை எங்களால தீர்க்க முடிஞ்சா நாங்க தீர்க்கோம்….  முடியாட்டி மட்டும்தான் சித்தார்த் க்கு கால் பண்ண முடியும்….  என்று சித்தார்த்தின் நண்பர் சொல்லவும்….

    இல்லன்னா…. எனக்கு வீட்ல அலையன்ஸ் பார்க்க ஆரம்பிச்சாங்க…  இப்ப அதுல தான் ஒரு பிரச்சனை நான் அதிலிருந்து தப்பிக்க எனக்கு இப்ப சித்தார்த் மட்டும் தான் ஹெல்ப்  பண்ண முடியும்…. நீங்கள் இதில் தலையிட முடியுமா என்று எனக்கு தெரியல…  ப்ளீஸ் நான் அவங்ககிட்ட பேசணும் என்று திரும்பவும்…  சித்தார்த்திடம் பேச வேண்டும் என்று மட்டுமே சொன்னாள்…….

     சரிம்மா நீ இங்கே உட்கார்ந்து இருக்கியா, நான் ஒரு அஞ்சு நிமிஷத்தில் திரும்பி வருகிறேன், என்று சொல்லிவிட்டு வெளியே சென்று அலைபேசியில் பேசி விட்டு மறுபடியும் வந்தான்….

     அவன் நண்பன் உள்ளே வந்து அமர்ந்து அடுத்த பத்து நிமிடத்திற்குள்  நண்பனுக்கு சித்தார்த் டம்  இருந்து அழைப்பு வந்தது….

        நண்பன் அழைப்பை ஏற்று இதோ அவங்க கிட்ட  கொடுக்கிறேன்…  பேசு என்று சொல்லி விட்டு போனை அவள் கையில் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்….

     அலைபேசியில் அவனது சொல்லு மித்ரா என்ற குரலைக் கேட்ட உடனே இங்கு இவளுக்கு கண்ணீர் வழிந்தது…. அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு  ப்ளீஸ் எப்படியாவது என்னை இங்கிருந்து கூட்டிட்டு போய்டுங்க என்று மட்டும் சொன்னாள்….

      மித்ரா புரிஞ்சுக்கோ…. என்ன விஷயம் சொல்லாம கூட்டிட்டு போ ன்னு சொன்னா என்ன அர்த்தம்….  என்ன விஷயம் சொல்லு ஏன் திடீர்னு கூப்பிட்ட வீட்ல ஏதோ அலையன்ஸ் பாக்குறாங்க… அதுல பிரச்சனை அப்படின்னு அவன் கிட்ட சொன்னியா….  என்ன விஷயம் சொல்லு என்ற உடன் இவள் வீட்டில் பேசிய அனைத்து விவரங்களையும் அவனிடம் சொல்லி இருந்தாள்…. ஜெகதீஷ் சித்தார்த்தை பழிவாங்குவதற்காக மித்ராவை திருமணம் செய்வதாக சொன்ன சில விஷயங்களை மட்டும் சொல்லி விட்டு மற்றவற்றை சொல்லவில்லை…

     மகேந்திரன் சொன்ன மாதிரி அவன் பேசுவதை ரெக்கார்ட் பண்ணி இருக்கியா.,  என்று கேட்டான் ஆமா என்று சொன்னதற்கு எனக்கு இப்போ அந்த ரெக்கார்டை அனுப்பிவை என்றான்…..

           இல்ல அது வந்து வேண்டாம் என்று சொல்லவும்….  சொன்னத செய் நீ என்னை நம்புற தானே…..  நான் உன்ன  காப்பாத்தணும் நெனச்சேன்னா…. எனக்கு இப்போது ரெக்கார்ட் வேண்டும் என்று மட்டுமே சொன்னான்…..

      உங்க நம்பர் என்று சொல்லவும்… நான் உனக்கு இப்போ உன்னோட நம்பருக்கு மெசேஜ்  போட்டுவிடறேன்…. அந்த நம்பருக்கு நீ அனுப்பி வை என்று சொன்னான்….

     அதன் படி அவனிடம் இருந்து இவளுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வரவும் அவனுடைய  நம்பர் க்கு ரெக்கார்ட் செய்து வைத்த ஜெகதீஷ் பேசிய விஷயங்களை அனுப்பி வைத்தாள்…..

      பிறகு அவன் நண்பனிடம் போனை கொடுத்துவிட்டு…. சற்று நேரத்தில் இவளுடைய எண்ணிற்கு  அழைத்தான்….  நான் ரெக்கார்ட் இன்னும் கேட்கல கேட்டுட்டு உன் கிட்ட பேசுறேன்…. இப்ப கிளாஸ் போ டென்ஷன் ஆகாம இரு…. யாரும் அவ்வளவு சீக்கிரம் உன் பக்கத்துல வர முடியாது… நான் வரவும் விட மாட்டேன்… நான் பார்த்துக்கிறேன் போ என்று மட்டும் சொன்னான்….  இவளும் அவனிடம் வேறு எதுவும் கேட்கவில்லை அப்போதுதான் அவன் நண்பன் அங்கு இருக்கிறானா என்று கேட்டான்…  ஆமாம் என்று சொன்னபோது உன் போனை அவனிடம் கொடுத்துவிட்டு போனை கட் பண்ணு என்று மட்டும் சொன்னான்…. எதற்கு என்றதற்கு….

        பத்து நிமிடத்தில் உன் கைக்கு மறுபடியும் போன் வரும்…. என்று மட்டும் சொல்லி அவளது போனை நண்பனிடம் கொடுக்க வைத்தான்….

    நண்பனிடம் பேசி அவளது செல்லில் ஒரு வித ஆப் பை சொல்லி.,  அதை டவுன்லோட் பண்ணு என்று சொல்லி விட்டு அவனது செல்லிலும் அந்த ஆப்பை ஏற்றிக்கொண்டு,  இரண்டுக்குமான கணக்கு நம்பரை இருவர் செல்லிலும் பதிந்து, இவளது செல்லுக்கு கால் வந்தால் அவனுக்கும் சேர்த்து ரெக்கார்ட் ஆகும் படி ஏற்பாடு செய்தான்…

        பின்பு அவளிடம் அவன் நண்பனின் போனில் மறுபடியும் பேசினான்… உன்னோட பாதுகாப்புக்காக தான் உன் செல் ல அந்த ஆப் வச்சிருக்கேன் பிரச்சனை எல்லாம் முடிஞ்ச பிறகு எடுத்துவிடலாம்… அது வரைக்கும்  இருக்கட்டும்… டெலிட் பண்ணி விடாதே என்று சொன்னதும் சரி என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்…. அது எதற்காக  என்று கூட அவளுக்கு தெரியாது…….

        அவனிடம் பேசிய பிறகு வகுப்பிற்கு சென்று அமர்ந்தாள்… ஆனால் பாடம் கவனிக்கும் மனநிலையில் இல்லை…. பரீட்சை நெருங்கிக் கொண்டிருப்பதால் அதற்கு தேவையான குறிப்புகள் மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்தார்கள்… ஏனோதானோவென்று கவனித்துக் கொண்டே அமர்ந்திருந்தாலும்… அதற்கு மேல் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தால்… மதிய உணவு எடுத்துக் கொள்ளவில்லை அந்த நேரத்தில் அவளது அலைபேசி மறுபடி அழைக்க யார் என்று பார்க்கவும் மறுபடியும் சித்தார்த்திடம் இருந்து போன் வந்தது….

     போனை எடுத்துக் கொண்டு மறுபடியும் மரத்தடியில் போய் அமர்ந்தாள்……

     சொல்லுங்க என்று மட்டுமே சொன்னாள்……

Advertisement