ஆனால்  அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த மித்ரா விற்கு தெரிந்தது…. இவன் ஏதோ பேச வேண்டும் என்று  இருக்கிறான்  என்பது….

     சற்று நேரம் பொருத்து பார்த்தவள் அவள் தந்தை வேலைக்கு கிளம்பும் வரை அமைதியாக இருந்தாள்….  பின் கிளம்பி அவர் வெளியே செல்லவும்…. அவர் முன் போய் நின்று அப்பா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்… நீங்க தாத்தாட்ட சொல்லுங்க என்று சொல்லிப் பார்த்தாள்.,

         அவரோ தாத்தா எது செஞ்சாலும் நல்லதுக்கு தான் டா செய்வாங்க…. நீ எதுக்கு யோசிக்கிற எல்லாம் நல்லபடியா முடியும்…. உன்னை விரும்பி வந்து கேக்குறவங்க தான்…. நல்ல வச்சிருப்பாங்க கவலைப்படாமல் இரு.,  தாத்தா விசாரிக்காம உனக்கு பாக்க மாட்டாங்க… நல்ல விசாரித்து இருக்காங்க பத்தியா… எல்லாரும் விசாரிச்சுட்டு தான் முடிவு பண்ணுவாங்க… நீ அவசரப்பட்டு எதுவும் அபசகுணமா பேசாத…. என்பதோடு நிறுத்திக் கொண்டார்…  இப்போ காலேஜ் கிளம்புற வழியை பாரு என்று சொல்லிவிட்டு., அவர்  கிளம்பத் தயாராகி விட்டார்…..

     தந்தையிடம் சொல்லியது…  தாத்தாவின் காதிற்கு போய்விட்டது… அவள் கல்லூரிக்கு கிளம்பி வரும்போது தாத்தா வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர்…. மித்ரா என்று அழைத்து நிறுத்தினார்…. பின்பு அவளுக்கு அறிவுரை வழங்கத் தொடங்கினார்…. கல்யாணத்துக்கு வீட்டில் பார்க்கிற  மாப்ள  சும்மா பாக்க மாட்டோம்…. நல்ல விசாரிப்போம்…. நாலு இடத்தில கேட்போம்….  எல்லாம் விசாரித்துதான் கொடுப்போம்…. உனக்கு எதுக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் எக்ஸாம் எழுதி  வேலைக்கு போய் என்ன செய்யப் போற நீ…

         ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து.,  சம்பளம் கொடுக்கிற குடும்பம்., நீ  அங்க ராணி மாதிரி இருந்து வாழலாம்… அதை விட்டுட்டு தேவையில்லாம எதுக்கு இது…  அப்பாட்ட சொன்னாப்ல  என் பேச்சை மீறி உங்க அப்பா எதுவும் செய்ய மாட்டான்…. நாங்க உனக்கு அப்படி ஒன்னும் கெடுதல் செய்ய மாட்டோம்…. எங்களுக்கும் பேத்திக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற பொறுப்பு இருக்கு…. அதனால நாங்க சொல்றபடி நீ கல்யாணம் பண்ணிக்கோ…. என்று சற்று அதிகமாகவே அதட்டி பேசினார்…  அவள் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கல்லூரிக்கு கிளம்பினாள்….

     வெளியே சென்று நடக்கத் தொடங்கி சற்று நேரத்தில் மகேந்திரன் வேக வேகமாக வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டான்…. அப்போதுதான் மித்ரா அவள் அம்மாவிடம் பேச தொடங்கினாள்…

      அம்மா ஏன்மா அப்பா இப்படி இருக்காரு..,  உடனே போய் அவங்க அப்பாட்ட சொல்லிருவாரா…. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார் என்று சொல்லி கல்லூரியில் உள்ள கதைகளை பற்றி சொன்னாள்…. இப்படி கேள்விப்பட்டேன்  அவங்க கல்லூரியைப் பற்றி சொன்ன உடனே எனக்கு இந்த பெயர் கேள்விப் பட்ட மாதிரி இருந்துச்சு….  நான் உன்கிட்ட முன்னாடி சொன்னது ஞாபகம் இருக்கா மா…. என்னோட சீனியர் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டுஇருக்கும்போது ஒரு பிரச்சினை வந்துச்சி இல்ல.,  செகண்ட் இயர்ல….  அந்த பிரச்சினைக்கு மெயின் ரீஸன் இவன் தான்…. எனக்கு என்னவோ இவன் நல்லவன் மாதிரி தெரியல…. நீங்க  கொஞ்சம் அப்பாட்ட பேசிப் பாருங்க என்று மட்டும் சொன்னார்….

     நான் பேசினா ஒன்னும் காரியமாகாது., மித்ரா,  உனக்கு தெரியாது இல்ல இப்ப நீ சொல்லி உங்க அப்பா கேட்கல நான் சொல்லியா கேட்க போறாரு…. நீ உன் வேலையை பாரு, உனக்கு என்ன தெரியும் ன்னு சொல்லுவாரு… அதனால அம்மா பேசி பிரயோஜனம் இல்ல….  ஏதாவது வழி பண்ண முடியுமான்னு பார்ப்போம்…. வரட்டும் அவங்க வரட்டும் வந்தவுடனே ஒரு அளவுக்கு பார்த்து பேசும் போது தெரியும்..  நீ பொறுமையா இரு, அம்மா அப்படி எல்லாம் ஒன்னும் விட்டுற மாட்டேன்…. அம்மா இருக்கிறவரைக்கும் அப்படி எல்லாம்   பயப்படாத என்று ஆறுதலாக அவள் அம்மா பேசிக் கொண்டிருக்கவும்…

     அதேநேரம் மஹேந்திரன்., சின்ன பிள்ளை போல பயப்படுற…. பயப்படாத முதலில் தைரியமா பேசு…. ஏன் இவ்வளவு யோசிக்கிற அவன பத்தி இவ்வளவு டீடைல்ஸ் தெரியுது ல்ல… நீ பேசாம உங்கள் சீனியர்  உனக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார் இல்லை… அவர் ட்ட பேசி பாரு அவரால ஏதாவது முடிஞ்சா ஹெல்ப் பண்ணுவாறா ன்னு கேளு….

     இல்லடா…  இப்ப அவங்க இங்க இல்ல, இந்த பிரச்சினைக்கு அப்புறம் அவங்க ஆஸ்திரேலியா கிளம்பி போய்ட்டாங்க, இப்ப யாருகிட்ட போய் சொல்றதுன்னு தெரியலை பயமா இருக்குடா….

    அதே நேரம் அவள் அம்மா, ஒரு வேளை உண்மையிலேயே உன்ன புடிச்சி கேட்கிறாங்க  னா எனக்கும் சந்தோஷம்தான் டா…. என் பொண்ண விரும்பி ஒருத்தங்க கேட்கிறார்கள் என்று.,  ஆனா அதே நேரம் அவங்க எதுக்கு கேக்குறாங்க , என்னங்கறது வரும்போது தெரிஞ்சுரும் நீ கவலை படாதேன்னு சொல்றேன்ல….

     அக்கா நீ உங்க சீனியர் ஓட ப்ரண்ட்ஸ் ட்ட ஏதாவது பேசி பாரேன்….  பேசிப் பார்த்து விஷயத்தைச் சொல்லு என்று சொல்லிக் கொண்டிருந்தான்…..

      சரி என்று பேச்சை  விட்டதோடு இருவரும் பஸ் நிறுத்தத்திற்கு வரவும்…. மகேந்திரன் வீட்டிற்கு திரும்ப நடக்கத் தொடங்கும்போது அக்கா  தாத்தா சொன்னாங்கள்ள அவர் போன் பண்ணுவார், என்று நீ ஒரு வேளை போன் வந்துச்சுனு னா கால் ரெக்கார்ட்  போட்டு கால் ரெகார்ட் பண்ணு…. ஏன்னா அப்ப தான்  தெரியும், அவர் எந்த மாதிரி  டைப் ன்னு., அவர் பேசுவதை வைத்து ஓரளவு கண்டுபிடிக்க முடியும், அதனால் ரெக்கார்ட் கால் கண்டிப்பா போடு மறந்திடாதே என்று சொல்லி… அவளிடம் அம்முறையை சொல்லிக் கொடுத்து விட்டு சென்றான்…….

     அவள் கொஞ்சம் நில்லு என்று அவனை நிறுத்தி…. நீ புத்திசாலி அதனால தான் இவ்வளவு யோசிக்க….. நான் தான் டா தத்தியா இருக்கேன்….  இது கூட தெரியாம இருக்கேன் பாரு…. நல்லவேளை சொன்ன கண்டிப்பா ரெக்கார்ட் பண்ணி விடுவேன் என்று சொல்லி கொண்டு இருந்தாள்…..

    போக்கா நீயும் புத்திசாலிதான் கொஞ்சம் யூஸ் பண்ணு மூளையை… அப்படியே பயந்து பயந்து இருக்காத… அப்பாவா இருந்தாலும் சரி, அம்மாவா இருந்தாலும் சரி,  வீட்டில் உள்ள யாரா இருந்தாலும் சரி, உனக்கு தப்புன்னு பட்டுச்சின்னா தப்புன்னு தைரியமா சொல்லு அதை விட்டுட்டு எதுக்கு பயப்படுற , நம்ம மேல தப்பு இல்லாத வரைக்கும் நம்ம யாருக்கும் பயப்பட கூடாது,  தைரியமா பேஸ் பண்ணனும்…. எந்த விஷயமானாலும் இப்படி பயப்படாதே என்று சொன்னதோடு அவனும் கிளம்பினான்…..

    பஸ் ஏறி போகும் போதெல்லாம் அவள் சித்தார்த்தின் நண்பர்கள் யாரையாவது இன்று சந்திக்க முடியுமா., என்று யோசிக்க வேண்டும் என்ற நினைவோடு சென்று கொண்டிருந்தாள்…..

       கல்லூரி வளாகத்திற்குள் பேருந்து சென்று நின்ற உடன் இறங்கி தன் வகுப்பை நோக்கி நடக்கத்தொடங்கினாள்… அந்த நேரத்தில் அவரது செல்போனில் அவளுக்கு அழைப்பு வந்தது…. எனவே போனை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தடியில் சென்று அமர்ந்தாள்…. ஏனெனில் வகுப்பில் வைத்து பேச அனுமதி கிடையாது அதனால்….

     அறியாத எண்ணில் இருந்து வந்ததால் மகேந்திரன் சொல்லிக் கொடுத்தது போல கால் ரெக்கார்டிங் ஆன் செய்து விட்டு பின்பு பேச தொடங்கினாள்….  ஒரு பயத்துடனே மெதுவாக ஹலோ என்று மட்டுமே சொன்னாள்….  மறு முனையில் ஹலோ என்று பதிலுக்கு சொன்னதுடன் நான் ஜெகதீஷ் என்ற அறிமுகத்தோடு பேசத் தொடங்கினான்…

     அவன் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அவளுக்கு சில இடங்களில் பதில் பேசினாலும் பல இடங்களில் பதில் பேச தோன்றவில்லை…. ஏனெனில் அவன் பேசியது அவ்வாறு இருந்தது….. சற்று நேரத்தில் காற்றோட்டமான மரத்தடியில் அமர்ந்து இருந்தாலும் அவளுக்கு வியர்த்து ஊற்றியது…. என்ன செய்வது என்று தெரியாமல் பதில் சொல்லவும் முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்….

    இவள் கால் ரெக்கார்டிங் போட்டிருப்பதை அறியாதவன்….  அவளிடம் தைரியமாக தன்னுடைய விஷயம் மற்றும் தான் யோசித்து இருப்பதை சொன்னான்…. சரி நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் இப்ப என்ன பண்ண போற ஏதாவது முயற்சி பண்ண போறியா…. கல்யாணத்தை நிப்பாட்ட  என்று கேட்டான்….

    அப்போதும் இவளிடம் பதில் இல்லை…. சரி இன்று இரவு உனக்கு மறுபடியும் போன் செய்கிறேன்….  முடிந்தால் அதற்குள் உன் வீட்டில் சொல்லி நிறுத்த முடியுமா என்று பார்…. இன்னும் இரண்டு நாள் தான் அதன் பிறகு நீ எனக்கு உரிமை பட்டவள் என்ற நிலைக்கு வந்து விடுவாய்…. கல்யாணம் பேசி முடிக்க வரும்போதே உன்னை நிச்சயம் செய்வதாக வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…. அது நிச்சயமாக நடக்கும்….  இது நடந்தால் நான் தான் ஜெயிப்பேன் என்றான்…..

விதி போட்ட முடிச்சு

இது  தானா…..

முடிச்சுப் போடும் முன்னே

மூச்சு நின்று விடுமா…..

இல்லை உன்னோடு

சேர்ந்து விடுமா….

 

காலம் பதில் சொல்லட்டும்

என்று காத்திருந்தால்

உன் காதல் தீர்ந்து

போய்விடுமா….

இல்லை காற்றில்

கரைந்து விடுமா…..

 

நான் இருந்தாலும்

நான் இறந்தாலும்

உன் காதல் என்

மீது தானே….

பதில் சொல்ல

தெரியாமல் நானும்….

காதலை சொல்லாத நீயும்….

நிலை தடுமாறும் உலகில்

நிலையின்றி நிற்கிறோம்….”