Advertisement

அத்தியாயம் 7

 

       இரண்டு நாளாக மூவர் குழுவும் சேர்ந்து மித்ராவிற்கு வேலைக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்க எல்லாம் ரெடி செய்து நாளை அப்ளிகேஷனை கொரியரில்  அனுப்புவதற்கு ரெடி செய்து கொண்டிருந்தனர்….

             ஆன்லைனில் ஒன்றும் போஸ்டில் ஒன்றும் அனுப்ப வேண்டும் என்பது அக்கம்பெனியின் விதிமுறை..,  எனவே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி இருக்கும் போது அன்று இரவு அவளுடைய தாத்தா மூவரின் தலையிலும் கல்லை இறக்குவது போல செய்தியைச் சொன்னார்…

    அனைவரும் இரவு உணவு உண்ண அமர்ந்திருக்கும்போது தாத்தா எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்… மித்ராவை ஒரு குடும்பம் மிகவும் விரும்பி பெண் கேட்பதாகவும் அந்த பையன் மித்ரா படித்த கல்லூரியில் தான் சென்னையில் படித்ததாகவும்… இவளை எங்கோ பார்த்துவிட்டு வீட்டில் சொல்லி வீட்டில் உள்ளவர்களும் கல்லூரியில் வைத்து பார்த்து பிடித்திருப்பதாக வலிய வந்து பெண் கேட்கின்றனர்., என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்…

     உணவை உணவு உண்ணுவதை நிறுத்தி விட்டு சற்று நேரம் அமைதியாக இருந்தவள்.,  வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் மீண்டும் உணவு உண்ணத் தொடங்கும் போது மறுபடியும் இடியை இறக்கினார்….

   பெண்ணின் தந்தையாக இந்த முறை தான் உருப்படியான பேச்சு மித்ராவின் தந்தையான வேணுகோபாலிடம் இருந்து வந்தது…

    விரும்பி கேட்டவர் சொல்றீங்கப்பா… என்ன ஒர்க் பண்றங்க…  அப்புறம் எவ்வளவு சேலரி எல்லாம் தெரியவில்லை….

   என்னடா இப்படி கேட்டுட்ட..,  அந்த பையன் பிசினஸ் பண்றான் அப்பாவோட பிசினஸை எடுத்து நடத்திட்டு இருக்கான்…  அவன்  ஆயிரம் பேருக்கு  சம்பளம் கொடுத்துட்டு இருக்கான்…. அவங்க ட்ட சம்பளம் என்னன்னு கேட்க முடியுமா…

    எந்த ஊரு பா… சென்னைதானா சென்னை ன்னா…  யாருன்னு சொல்லுங்க விசாரிப்போம் என்று சொல்லவும்….

    சென்னை இல்லடா பையன்  திருப்பூர்…. அங்க  பனியன் கம்பெனி வச்சிருக்காங்க., பையன் படிச்சதுதான் சென்னை….

    ஏனோ மித்ராவிற்கு மனதிற்குள் , ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது…  இது போல யாரையோ கேள்விப்பட்டது போல இருக்கிறதே என்று….

    பையன் பேமிலி பத்தி சொல்லுங்க பா… என்று பெண்ணைப் பெற்ற தகப்பனாக கேள்வி கேட்டார்…

    திருப்பூரில் பனியன் கம்பெனி இருக்கு., பையன் பேரு ஜெகதீஸ்…, பையன் கூட பிறந்தது ஒரு தம்பியும் ஒரு அக்காவும் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சு கோயம்புத்தூரில் கட்டி கொடுத்திருக்காங்க தம்பி படிச்சிட்டு இருக்கான் போதுமா….

    நாமளும் விசாரிக்கணும்னு இல்ல., பொண்ண கொடுக்கிற நாம நேர்ல விசாரிச்சா இன்னும் நல்லாயிருக்கும்…..

     அதெல்லாம் உன் தங்கச்சி மூலமாதான் துப்பு வந்துச்சு…. யாரோ  கம்பெனில ஒர்க் பண்றவங்க மூலமா கேட்டிருக்காங்க…. நல்ல குடும்பம்.,  நல்ல பேமிலி பேக்ரவுண்ட்.,  உன் பொண்ணு அங்க போன கஷ்டப்படாம இருக்கலாம் இதுக்கு மேல என்னடா வேணும்….

       தேடி வந்து பொண்ணு கேக்குறாங்க. நாளைக்கு மாப்பிள்ளை வீட்டார் பற்றி விசாரித்தவர் நேர்ல வரேன் ன்னு சொல்லி இருக்காரு….  நீ கேட்டுக்க., அவரிடம் நான் பேசிட்டேன்….  ரெண்டு நாள்ல வர சொல்லி இருக்கு ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவாங்க பேசி முடிச்சிடலாம்னு இருக்கு…..

    தாத்தா இவ்வளவு சொன்ன பிறகு அதன் பிறகு அப்பா வாய்திறக்கவில்லை…. அம்மாவிடம் பேச்சுக்குக் கூட சரியா என்று கேட்கவில்லை….  அவர்களை விட்டாலும் பரவாயில்லை மித்ராவிடம் ஒரு வார்த்தை உனக்கு சம்மதமா என்று கேட்கவில்லை….

       ஏனோ அந்த ஜெகதீஷ் என்ற பெயர் எங்கேயோ கேட்டது போலிருந்தது….  அவளுடைய கல்லூரி,  திருப்பூர் பனியன் கம்பெனி , இம்மூன்றும் சேர்ந்து அவளை குழப்பிக் கொண்டிருந்தது…. என்ன செய்வது என்று தெரியாமல் சரி நாளை கல்லூரியில் விசாரித்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு அமைதியாக அமர்ந்திருந்தாள்….  இன்னும் மூன்று நாள் நேரம் இருக்கிறது.,அதற்குள் ஏதாவது முடிவு செய்யலாம் என்ற எண்ணத்தோடு இருந்தாள்., அவளுக்கு தெரியவில்லை பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று….

     அன்று இரவே அவளுக்கு பாடத்தில் ஒரு சந்தேகம் வர அதை சொல்லித் தரும் ப்ரொஃபஸர் க்கு போன் செய்தாள். மற்றவர்கள் ஆக  இருந்தால் கண்டிப்பாக போன் செய்திருக்கமாட்டாள்….  இது ஒரு பெண் ப்ரொபசர் என்பதால் இரவில் போன் செய்தால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் போன் செய்து சந்தேகம் கேட்க தொடங்கினாள்…

       அவர் படத்தை பற்றி சொல்லி முடித்த பிறகு,  சாதாரணமாக அவரிடம் கேட்பது போல நம் கல்லூரியில் திருப்பூரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்று யாரும் படித்தார்களா என்று மட்டும் கேட்டாள்… பனியன் கம்பெனி வைத்திருப்பவர்கள் என்று சொன்னவுடன்……..

       அந்தப்பக்கம் அந்த ப்ரொபசர் மேடம்.. என்னம்மா சித்தார்த்  கூட ப்ரண்ட்டா இருக்க., இது யாருன்னு தெரியாதா என்று கேட்கவும்., இவளுக்கு மனதில் ஒரு சின்ன சந்தேகம் வந்தது…. அது உண்மையா பொய்யா என்று தெரியாமல் பேசக்கூடாது என்று….

           எனக்கு தெரியல ஆனா எங்கயோ கேள்விப்பட்ட பேரு மாதிரி இருக்கு…  அதனால தான் கேட்கிறேன் என்று,  மறுபடியும் மேடம் இடம் கேட்கவும்….மேடம் விளக்கமாக சொல்லத் தொடங்கினார்…..

       சித்தார்த் யு ஜி, பி ஜி , இரண்டுமே நம்ம காலேஜ்ல தான் பண்ணான்…  இந்த ஜெகதீஷ் பிஜி  தான் நம்ம காலேஜ்ல வந்து ஜாயின் பண்ணான்…  அப்படி இருக்கும் போது ஜெகதீஷ் கும் சித்தார்த்துக்கும் படிப்பில் போட்டி வரும்… சித்தார்த் அ படிப்புல அடிச்சிக்கவே முடியாது…. ஜெகதீஷ் நல்லா படிப்பான்.. ஸ்கன்ட்  ப்ளேஸ்ல இருப்பான்….. ப்ர்ஸ்ட் பிளேஸ் ல  வரணும் ன்னு ட்ரை பண்ணி அவனால முடியல…. அதனால அவனுக்கு சித்தார்த் மேல ஏகப்பட்ட கோபம்…. ஆனால் சித்தார்த் தன் தப்பை மறக்கவே மாட்டான்…. நான் இப்படித்தான் அப்படிங்கிற மாதிரி தான் சுத்துவான்…..  ஜெகதீஸ் மத விஷயத்தில் நல்ல பையன் மாதிரி இருப்பான் ஆனா அவன் நல்ல பையனா கெட்ட பையனா ன்னு எங்களுக்கு யாருக்கும் தெரியாது…. என்ன தப்பு பண்றவங்க எல்லாரும் ஓபனா பண்ணுவது கிடையாது…. சித்தார்த் மாதிரி..,  அதனால் எங்களுக்கு தெரியாது ஆனா அவன் மேல எங்களுக்கு எல்லாருக்குமே ஒரு சந்தேகம் உண்டு…. கடைசியாக பிரச்சினையில் மாட்டி விட்டது இதே ஜெகதீஷ் தான்….அதுக்கப்புறமா போலீஸ் போன் பண்ணி பேரன்ஸ் ட்ட வார்ன் பண்ணி அனுப்பி வச்சாங்க….

        அதுக்கப்புறம் பிரச்சினை இல்ல… அதே சமயத்தில் சித்தார்த்தும் ஊர்ல இல்ல… ஆமா நீ ஏன் ஜெகதீச பற்றி விசாரிக்க என்று கேட்கவும்….

        சும்மா தான் இப்போ ஒருத்தங்க சொன்னாங்க….. அதான் யார் என்னன்னு  என்று கேட்டேன் என்று சொன்னதுடன்…  பாடத்தின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு நன்றி சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்….

       அதன் பிறகு அன்று இரவு  என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தால் அந்த நேரம் தாத்தாவிடமிருந்து அழைப்பு வந்தது……

      என்ன தாத்தா என்ற கேள்வியோடு தாத்தாவின் முன் போய் நின்றாள்…  அங்குதான் வீட்டில் உள்ள அனைவரும் இருந்தனர்….

         ரெண்டு நாள்ல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க., பேசி முடிக்கிறதுக்கு ரெண்டு நாள் கழிச்சு காலேஜுக்கு லீவ் போடு.,  மாப்பிள்ளை பையன் உன் கிட்ட பேசணும் சொல்லி போன் நம்பர் கேட்டாரு., உன் போன் நம்பர் கொடுத்திருக்கேன்…. கூப்பிட்டா மரியாதையா பேசு நல்லபடியா பேசு என்றதோடு நிறுத்திக் கொண்டார்…..

       இவளுக்கு தலை வலிப்பது போலிருந்தது., என்ன சொல்வதென்றும் தெரியவில்லை, வீட்டில் விஷயத்தைச் சொல்லவும் முடியாது , பேச முயல வேண்டும் என்ற எண்ணத்தோடு அமைதியாகத் திரும்பி சென்று விட்டாள்…..

     அன்று அவளுக்கு எந்த போனும் வரவில்லை.,  நிம்மதியாக உணர்ந்தாள்., ஆனால் தூக்கம் மட்டும் வருவேனா என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது….  பாதி நேரம் தூங்கியும் மீதி நேரம் விழித்தும் நேரத்தை போக்கி கொண்டு அறைக்குள் நடைபயின்று கொண்டிருந்தாள்….

        அம்மாவிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்லுவது என்று யோசனையோடு இருந்தாள்…..  பார்த்துக்கொள்ளலாம் நாளை காலை கல்லூரிக்கு போகும்போது ஏதாவது சொல்ல முடிகிறதா என்று பார்த்துக்கொள்ளலாம்., என்ற எண்ணத்தோடு அமைதியாகிவிட்டாள்…

         முதலில் சித்தார்த் தை எப்படி தொடர்பு கொள்வது, என்று அவளுக்கு தெரியவில்லை… சித்தார்த்திடம் சொன்னால் ஏதாவது உதவி செய்வான், என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது… சித்தார்த்தின் எதிரி என்று இப்போதுதான் தெரியும், அவன் எதற்கு பெண் கேட்கிறான்..  அதுவும் வலியவந்து என்ற எண்ணம் அவளுக்கு தோன்றியது… ஒரு வேளை தான் சித்தார்த்திற்கு சாதகமாக அன்று சொன்னது அவனுக்கு தெரிந்திருக்குமோ…  சித்தார்த் அதை வெளியே தெரியக்கூடாது என்று சொன்னானே, என்ற யோசனையோடு குழப்பத்தோடும் சுற்றிக்கொண்டிருந்தாள்…. காலை அனைவருக்கும் மகிழ்ச்சியாக விடிய இவளுக்கு மட்டும் எரிச்சலுடன் விடிந்தது….

     எப்போதும் போல கல்லூரிக்கு கிளம்பினாள்…. ஆனால் யாரிடமும் எதுவும் பேசவில்லை குழப்பங்கள் அவள் முகத்தில் நிறைந்திருப்பதை அவள் அம்மா மட்டுமே கண்டு கொண்டாள்….. மகேந்திரனும் அவள் முகத்தை பார்ப்பதும் பின்பு யோசிப்பதும் ஆக இருந்தான்…. அன்று கல்லூரிக்கு மகேந்திரன் செல்லவில்லை ஏன் என்று கேட்டதற்கு கொஞ்சம் எழுத வேண்டியது இருக்கிறது… ரெக்கார்ட் முடியல என்று அவன் தாத்தாவிடம் காரணம் சொல்லிக் கொண்டிருந்தான்….

Advertisement