Advertisement

இந்தியாவிலிருந்து, அவனுடைய மாலை நேரத்திற்கு , அதாவது இந்தியாவில் நண்பகல் வேளையில் அவனுக்கு செய்தி வந்தது… இங்கு எந்த பிரச்சினையும் இல்லை எப்போதும் போல் போய்க்கொண்டிருக்கிறது… என்று இவன் மறுபடி அவர்களை அழைத்து எதற்கும் ஜாக்கிரதையாக கவனித்துக்கொள்ள வேண்டும்… ஏனோ மனதில் ஒரு சின்ன நடுக்கம் இருந்து கொண்டே இருக்கிறது…  பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டுமே சொன்னான்…. காரணமின்றி அப்படி சொல்ல மாட்டான் என்பதால் அவர்களோ, அவனுக்கு வேறு எதுவும் செய்தி கிடைத்து இருக்குமோ, அதனால்தான் அப்படிச் சொல்கிறாரோ என்று நினைத்தார்கள்… ஆனால் அவனது மன உளைச்சல் தான் அவனை அப்படி சொல்ல வைத்தது…..

     இந்தியாவிலோ மித்ரா வீட்டின் நிலைமை அதேபோல்தான் போய்க்கொண்டிருந்தது…. அவர்களது வீட்டில் தாத்தாவின் அதிகாரமும் அத்தையின் அதிகாரமும் ஓங்கியிருந்தது…  அப்பாவிடம் என்ன பேசினாலும் கதை நடக்காது எது சொன்னாலும் அது அப்படியே தாத்தாவிடம் போய்விடும் என்பதால் அதிகமாக அப்பாவிடம் எதுவும் சொல்வதில்லை… அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவளது மேற்படிப்பும் தொடர்ந்தது அதற்கு காரணம் அவளுடைய அம்மாவும், மகேந்திரனும்… அவர்கள் இருவரும் ஒருவழியாக போராடி இவளுக்கு  படிப்பை தொடர வழி செய்தனர்…  அந்த விதத்தில் மித்ராவின் தாய் அடிக்கடி வீட்டினரிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலையில் தான் இருந்தாள்…

      இவளோ ஏதாவது பரிட்சையில் பாஸ் செய்து வேலைக்கு போய் விட வேண்டும், என்ற எண்ணத்தில் சில பரீட்சைகளுக்கு தயார் செய்துகொண்டிருந்தாள்…. ஆனால் வீட்டினருக்கு தெரியாமல்தான் ஏனெனில் வீட்டினர் அவளது மேற் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைத்து விட வேண்டும்,என்ற எண்ணத்தோடு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி இருந்தனர்… ஏற்கனவே வாய்திறக்க முடியாத சூழலில் இருப்பவள் ஆதலால் மேற்கொண்டு எதுவும் தடை சொல்லாமல் அவள் படிப்பு முடியும் வரை தள்ளிப் போடலாம் என்ற எண்ணத்தோடு அமைதி காத்து கொண்டிருந்தாள்….

     அதுவும் இது கடைசி வருடம் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பார்த்துக்கொண்டிருந்தாள்… இதற்கிடையில் கல்லூரி பேராசிரியர்கள் படிப்பிற்கு உதவி செய்து கொண்டுதான் இருந்தனர்…  ஏனெனில் அவள் இப்போதெல்லாம் நன்றாக படிக்கத் தொடங்கி இருந்தாள், எப்போதாவது சித்தார்த்தின் நண்பர்களை வெளியில் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் எப்படி இருக்கிறான் என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்வாள்…. அவர்களும் அவ்வப்போது வந்து எப்படி இருக்க நல்லா இருக்கியா என்ற கேள்வியோடு அவளது சூழ்நிலைகளை மட்டும் பார்த்துக் கொண்டு சென்றுவிடுவர்… அதற்கு மேல் யாரும் கேட்பதில்லை இவளுக்கு தெரியாத விஷயம் அவளை அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்… அவளது பாதுகாப்பு சூழ்நிலை சரியாக இருக்கிறதா, என்பதை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது…

       சித்தார்த்திற்கு பயம் எல்லாம் அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்… அவளுக்கு எந்தப் பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதுதான்…

   மகேந்திரன் வேறு கல்லூரியில் சேர்ந்து சேர்ந்து இருந்ததால் சற்று சீக்கிரமாகவே வீட்டிலிருந்து கிளம்பி விடுவான்… நடக்கும்போது முன்பு எப்போதும் போல அவளுடைய அம்மா மட்டும் அவளோடு நடந்து வந்து கொண்டிருந்தார்… அன்று அவள் அம்மா சொன்னது எப்படியாவது எக்ஸாம் ல ஏதாவது வேலைக்கு ரெடி பண்ண பாரு 2 எக்ஸாம் எழுதி இரண்டிலேயும் போயிருச்சு…

    நான் என்னம்மா பண்ண இந்த முறை கொஸ்ட்டின் பேப்பர் உங்களுக்கே தெரியும் எல்லாரும் சொன்னாங்க இல்ல….   நான் மட்டும் என்னமோ பெயிலான மாதிரி சொல்றீங்க….  பாடத்திலேயும் கான்சென்ரேட் பண்ணனும்….  இதுக்கும்  பண்ணும் போது எனக்கு முடியல மா…  படிச்சு முடிச்சதுக்கப்புறம் ஃப்ரீயா உட்கார்ந்தவுடன்  கொஞ்சம் ஸ்டேயின்  பண்ணுனா நல்ல எழுதிரலாம்…  பாஸ் பண்ணிடலாம்னு நினைச்சேன்……

    அப்படி நடக்கிறது கஷ்டம் பாத்துக்கோ… ஏற்கனவே உங்க தாத்தா இப்பவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க  பேசிக்கிட்டு இருக்காங்க…  அம்மா உனக்கு படிக்க பெர்மிஷன் வாங்கிக் கொடுத்ததே பெரிய விஷயம் இதுக்கு மேல அம்மா வால ஒன்னும் பண்ண முடியாது., அதை யோசிச்சுக்கோ.,  படிப்பை முடி ஏதாவது ஒரு வேலை எப்படியாவது போயிரு…  அட்லீஸ்ட் பிரைவேட் கம்பெனியில னாலும் முதல்ல போய் ட்ரை பண்ணு….  உனக்குன்னு ஒரு வருமானம் இருக்கணும்…. நீ அடுத்தவங்களை டிப்பன் பண்ணி இருக்கிற மாதிரி இருக்க கூடாது…  இவங்க எப்படி மாப்பிள்ளை பார்க்குறாங்க என்று எனக்கு தெரியாது.,  நான் தலையிடவே முடியாத சிட்டுவேஷன்…. உங்க அப்பா வாயை திறக்க மாட்டார்., உங்க அத்தை எப்ப சான்ஸ் கிடைக்கும் என்ன கஷ்டப் படுத்ததாலம் ன்னு.,  பார்ப்பா அதனால புரிஞ்சு எப்படியாது படித்துவிட்டு ஏதாவது எக்ஸாம் எழுதிரு….

     அப்ளை பண்ணி இருக்கம்மா அடுத்து எக்ஸாம் வரதுக்கு லேட்டாகும் பார்க்கலாம்… ட்ரை பண்றேன் நான் பார்த்துக்குறேன் மா பயப்படாதீங்க… ஏதாவது ஒரு வழி கிடைக்கும் எப்படியாவது நான் பேசுகிறேன் அல்லது மகேந்திரன் விட்டு பேசுவோம் மகி பேசினா வீட்ல கேப்பாங்க….

      மத்த விஷயம் மகிய பேசச் சொல்லலாம் மித்ரா…. கல்யாண விஷயத்தில் அவன் எப்படி பேச முடியும்… பாட்டியும் தாத்தாவும்  உடனே சொல்லிருவாங்க….  நீ சின்ன பையன் உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு…

    சரிமா பாக்கலாம்… நான் பிரண்ட்ஸ் ட்ட சொல்லி வச்சுட்டு வரேன்…. அதுல ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காம போகாது ட்ரை பண்றேன்…. என்ன ஜாப் கிடைச்சுருச்சு னா அதை வச்சு நான் கல்யாணத்தை ஒரு ஆறு மாசம் தள்ளிப்போட முடியும்…. ட்ரை பண்றேன் என்று சொல்லிவிட்டு பஸ் ஸ்டாண்ட் வரவும் எப்போதும் போல் இருவருக்கும் அடுத்தடுத்து பஸ் வர அவரவர் வேலையை பார்க்க கிளம்பினர்…

        விரைவில்  கடைசி  செமஸ்டர் தேர்வு, வர இருப்பதால் அதைப் பற்றிய பேச்சு என்று ஓடிக்கொண்டிருந்தது… கல்லூரியில் அப்போதுதான் தன் தோழிகளிடம் வேலை பற்றிய விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஏதாவது ரெடி பண்ணனும், என்று சொல்லும் போது தான் ஒரு தோழி சொன்னாள்… பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலைக்கு ஆள் எடுப்பதை பற்றி அதற்கான விளம்பரத்தை பற்றியும் சரி  பார்க்கிறேன்…  என்று சொல்லிவிட்டு அந்த தகவலை தனது அலைபேசியின் வாட்ஸப்  க்கு அனுப்பச் சொல்லி தோழியிடம் சொல்லி கொண்டு இருந்தாள்… அது கிடைத்தவுடன் அதை பற்றிய தகவல்களை ஆன்லைனில் சென்று சேகரித்துக் கொண்டிருந்தாள்…. சரி இது போதும் இப்போதைக்கு எதையாவது சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அந்த வேலையை பற்றி உடனே தன் தாய்க்கு தொலைபேசியில் தெரிவித்தாள்….   மீண்டும் மகேந்திரனுக்கு தொலைபேசியில் சொல்லவும் அவனும் விசாரித்து விட்டு வருவதாக கூறி கொண்டிருந்தான்…. தன் நண்பன் ஒருவன் பெங்களூரில் இருந்து இங்கு படிக்க வந்திருப்பதாகவும் அவனிடம் கேட்டு உனக்கு சொல்கிறேன் என்று சொன்னதோடு அவன் மாலை வீட்டில் வந்து  மற்ற தகவல்களை சொல்கிறேன் என்று வைத்துவிட்டான்….

        இவளும் ஓரளவு அன்று மன நிம்மதியோடு வீட்டிற்க்கு கிளம்பினாள்… எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் வீட்டில் பேசிக் கொள்ளலாம்… இவ்வேலை மட்டும் கிடைக்க வேண்டும் அதை வைத்துதான் வீட்டில் பேச முடியும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு கிளம்பி சென்றாள்…

    கல்லூரி பேருந்தில் வீட்டிற்கு செல்லும் போது தான் தோழியும் அவளும் பேசிக் கொண்டு சென்றனர்… அப்போது அவள் தோழி தான் சொன்னால் பெண்ணாய் பிறந்து விட்டால் எத்தனை விஷயங்களுக்கு பயப்பட வேண்டியது இருக்கிறது… அவசர திருமணம் என்பது பெண்களைப் பொறுத்தவரை தான் அதிகமாக நடக்கிறது…  பெண் பிள்ளைகள் என்றால் அவர்களுக்கென்று தனி விருப்பங்கள் இருக்கக்கூடாது என்று சில வீடுகளில் நினைக்கிறார்கள்… ஒன்று அந்த விதத்தில் ஹையர் ஸ்டடிஸ் பண்ண விடமாட்டாங்க…  உங்க வீட்டில ஒரு விதத்தில் சந்தோஷப்பட்டுக் கோ சிலருக்கு டிகிரி படிக்கும் போதே கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…  சிலரெல்லாம் ஸ்கூல் முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க….    இந்த அளவுக்கு படிக்க போராட முடிஞ்சது… உங்க அம்மாவும் ஹெல்ப் பண்ணினாங்க நினைச்சு சந்தோஷப்பட்டு கொள்… என்று சொல்லி கொண்டிருந்தாள்…. அத்தோழி.,

     அது என்னவோ உண்மைதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்… அம்மாவின் பக்கபலம் மட்டும் இல்லையென்றால்… தம்பியின் தோழமையும் இல்லையென்றால்… இந்நேரம் அவளை அத்தனை பேரும் சேர்ந்து விரட்டி இருப்பார்களோ., என்று தோன்றியது இப்பொழுதெல்லாம் தாத்தாவிடம் பேசுவதற்கு அவளுக்கு கடுப்பாக  தான் இருந்தது….

    எப்போதும் திருமணம் பெண் பிள்ளைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்… என்று நிறைய விதிமுறைகள் வகுக்கும் தாத்தா அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் இருக்கும் தந்தை தாத்தாவை தூண்டிவிடும் அத்தை இப்படி குடும்பமே சேர்ந்து அவளுக்கு குழி பறிப்பது போலவே ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது… அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற யோசனையில் தான் இப்பொழுது இந்த பெங்களூர் வேலை நன்றாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலோடு சென்று கொண்டிருந்தாள் வீட்டிற்கு…

கடல் தாண்டி இருந்தாலும்

உன் காதல் மட்டும் போதுமடி…

ஒரே ஒரு முறை சொல்லி விடு 

உன்னோடு ஏழேழு ஜென்மம்

வாழ்ந்த மகிழ்ச்சியோடு

தனித்து நின்று விடுவேன்…

தவம் இருக்கிறேன்

உன் வார்த்தையை

கேட்பதற்காக….”

Advertisement