Advertisement

இந்திரஜா அதை கவனித்து, மாணவர்களை கண்டிப்புடன் பார்த்தவள்,  “கிளாஸ்ல இப்படி தான் மொபைல் பார்த்துட்டு இருப்பீங்களா..? HODகிட்ட மொபைல் கொடுத்துடுறேன், வாங்கிக்கோங்க..” என்று கையோடு எடுத்து சென்றுவிட்டாள்

அன்று அவளுக்கு தெரியவில்லை அந்த கிங்க் நிஞ்சா என்பவன் ஆதித்யனாக அவள் கண்ணில் படுவான். அதுவும் அவன் வாழ்நாளின் கடைசி நாளில் என்று. “ஆம் கிங்க் நிஞ்சா.. அலைஸ் ஆதித்யன்.. அம்பிகா, சதாசிவம் மகன், வெளி உலகத்திற்கு முகம் காட்டாத  ஒரு பைக் ரேசர்..” 

அவன் இன்ஸ்ட்டா பேஜில் இருக்கும் அவன்  போட்டோக்களை, விடியோக்களை ஓடவிட்டு பார்த்தாள். இது ஆதித்யன் தான் என்பது அவளுக்கு உறுதியாக தெரிந்தது. பிரபாகரன் இவன் தான் ஆதித்யன் என்று போட்டோ காட்டும் போது அந்த டேட்டூ தான் அவள் கண்ணில் பட்டது

ஆக்சிடென்ட் நடந்த அன்று ஹோட்டலில் வைத்து இவள் அவர்களை இடது பக்கம் கடந்திருக்க, ஆதித்யன் வலது கழுத்தோரம் அந்த டேட்டூ இருந்திருக்கிறது. இன்று அம்பிகா அவளிடம் பேசியதையும் யோசித்து பார்த்தாள்.

அவனுக்கு ஒரு காதல் இருக்கிறது, ஒரு நாள் காட்டுகிறேன்னு சொன்னான்..” என்று அவர் அழுதது. அவனின் அந்த காதல் இந்த பைக்காக, ரேஸாக இருக்குமோ..?  வாய்ப்பு அதிகம்

அந்த பைக்கின் விலை அரை கோடிக்கு அருகில். அம்பிகாக்கு அது பற்றி தெரியவில்லை என்றால் அவன் அப்பா வாங்கி கொடுத்திருக்க வேண்டும். அதன் விலை, ஹோட்டலில் அவன் கடக்கும் போது அடித்த மதுவாடை, இன்ஸ்ட்டா ஐடியில் பெண்களிடம் அவன் பேசிய பாவம் என்று இந்திரஜா அவனை பணக்கார ஸ்பாயில்ட் கிட் என்று தான் நினைத்திருந்தாள்

இன்று அதை எல்லாம் திரும்ப யோசிக்க, எங்கோ தன் எண்ணங்கள் தவறு என்று உணர முடிந்தது. பைக் ரேஸ் அவன் லட்சியமாக இருக்கலாம். அன்று அடித்த மதுவாடையும் மற்றவர்கள் மேல் இருக்கலாம். இவன் நேராக நிமிர்ந்து, ஒரு வித இறுக்கத்துடன் தான் ஹோட்டல் உள்ளே சென்றான்

ஆனாலும் இன்ஸ்ட்டாவில் பெண்களிடம் பேசியிருப்பது, சர்வ சாதாரணமாக லவ் யூ, டார்லிங், பியூட்டி, பேபி, என்று பேசியிருந்தான்வுமனைசராக இருப்பானோ..? ஆனால் அப்படி ஏதும் அவன் மேல் புகார் இல்லையே, வெளியே தெரியும் படியா செய்திருப்பான்..? 

ஒருவேளை அம்பிகா சொல்வது போல் அவன் நல்லவனாக இருந்திருந்தால், அவனுக்கு அநியாயம் நடந்திருந்தால்..? பல கேள்விகள், குழப்பங்கள். அன்றிரவு வெகு நேரம் சென்று தான் உறங்கினாள்.

மறுநாள் மாலை பிரபாகரன் அவளுக்கு போன் செய்து, “அம்பிகா மேடம், அவங்க பக்கம் இருந்து யாராவது திரும்ப  உன்னை கான்டெக்ட் பண்ணாங்களா..?” என்று கேட்க, “இல்லை..” என்றாள் பெண்

நல்லது.. இப்படியே இந்த விஷயம் முடியட்டும், நீ ஏதும் இதுல தலை கொடுத்துக்க வேண்டாம், வைரவேல் அண்ணாகிட்டேயும் சொல்லிடு..” என்று மேலும் சில வார்த்தைகள் பேசி வைக்க, இந்திரஜாவிற்கு அப்போது தான் வைரவேலிடம் அதுபற்றி கேட்காதது நினைவிற்கு வந்தது

அப்பா மாலை டியூட்டியில் இருக்கும் நேரம்  பார்த்து அவருக்கு போன் செய்து விசாரித்தாள். “இல்லை இந்து.. ஆனால் கடைசில ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டாங்க, எனக்கு கஷ்டமா போச்சு, ஆனா விஷயம் எவ்வளவு பெருசுன்னு தெரியாம எப்படி நுழைய முடியும்..? குடும்ப குட்டிக்காரன், மறுத்துட்டேன், அவங்களும் திருப்பி கூப்பிடல..” என்றார் மனிதாபிமான வருத்தத்துடன்

இந்திரஜாவிற்கும் அந்த வருத்தம் உண்டானது. ஆனால் இதில் தான் செய்ய என்ன இருக்கு..? என்று அதை ஒதுக்கி வைக்க முயன்றாள். ஆனால் என்னவோ ஒரு அசவுகரியம் மனதில். எப்போதும் இருக்கும் அந்த அமைதி இல்லை. பிரபாகரனுடனான கனவுகளில் ஒரு நிறைவில்லை. தனிமையில் இனிமை இல்லை, தனிமையே  பிடிக்கவில்லை

மரகதம் அவளுக்கு ஏதாவது செய்யும் போது அங்கு சம்மந்தமே இல்லாமல் அம்பிகா நினைவிற்கு வந்தார்.  “அவங்களும் இப்படித்தானே அவங்க மகனை உயிரா நினைச்சிருப்பாங்க, நாளைக்கே எனக்கு ஏதாவதுன்னா என் அம்மாவும் அப்படி தானே துடிப்பாங்க..” சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ நினைத்தாள்

ச்சு.. என்ன இந்து நீ..? நீ இப்படி நினைச்சது அம்மாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்..” தன்னை தானே கடிந்தும் கொண்டாள். ஆனால் அவள் மனஓட்டம் நிற்கவில்லை. அடிக்கடி ஆதித்யன் இன்ஸ்ட்டா பேஜ் எடுத்து பார்த்தாள். அவனின் அந்தஎழுத்து அம்மாவாக அவள் கண்ணுக்கு தெரிந்தது

என் மகன் பெஸ்ட் மகன்..” அம்பிகா சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தது. ஆதித்யனும், அம்பிகாவும்  அவள் தலையில் ஏறி உட்கார்ந்திருந்தனர். ஏதோ தான் தவறு செய்வதாக ஒரு மாயை வேறு. பிரபாகரன் பற்றிய அவள் நினைவுகளிலும்  மூக்கை நுழைத்தது

நாட்கள் செல்ல செல்ல மறையும் என்று பார்த்தால் இது அதிகம் தான் ஆகியது. எப்போதும் ஒரு யோசனை. குழப்பம். திருமண வேலைகள் மரகதத்தை இழுத்து கொள்ளமகளை கவனிக்க முடியாமல் போனது.  

“ஒரு உயிர் இவ்வுலகை விட்டு சென்றிருக்கிறது. அதற்கான நியாயம் கிடைக்கவில்லை என்றாலும் சரி, பெற்ற தாய்க்கு அது எப்படி என்று தெரிந்து கொள்ள கூட உரிமை இல்லையா..?” அம்பிகாவின் கேள்வி இப்போது அவளின் கேள்வியாக மாறியது.  அவளின் நேர்மையான மனது  குடைந்தது

இயல்பிலே உள்ள தாய்மை, அம்பிகா எனும் அம்மாவிற்காக வக்காலத்து வாங்கியது. “நான் இப்போ அடையாளம் காமிச்சா அவங்களால குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்ன்னா ஏன் கூடாது..?” கடைசியில் இப்படி தான் நிறைவுற்றது

“ஆமா.. அம்பிகா மேடம்க்கு உதவுவோம்..”

முதல்ல அப்பாகிட்ட பேசுவோம், இதுவரை அவர்கிட்ட இது பத்தி சொல்லாம விட்டதே தப்பு, இனி சொல்லி கேட்கணும்.. அப்புறம் பிரபாகரன்கிட்ட பேசணும்..” முடிவெடுத்தவள், அன்றிரவு அப்பாவின் வரவிற்காக காத்திருந்தாள்

அவர் இன்று நேரத்திற்கு வரவும், குடும்பமாக உணவு நேரம் சென்றது. மரகதம் எப்போதும் போல மகளின் திருமண வேலைகளை பற்றி பேச, இந்திரஜா உணவை முடித்து ஹாலுக்கு சென்றாள். “நடக்க போகலையாமா..?” ஆவுடையப்பன் பேத்தியிடம் வர

அப்பாகிட்ட  பேசணும் தாத்தா.. உட்காருங்க..” என்றாள் பேத்தி

என்ன பேசணும்..?” கேட்டபடி கேசவனும், மரகதமும் வந்தனர். இந்திரஜா சில நொடி எடுத்து கொண்டவள், தயங்கினால் ஆகாது என்று போன் வந்ததில் ஆரம்பித்து, அம்பிகா வந்து பேசியது வரை எல்லாம் சொல்லிவிட்டாள், வைரவேலை அவர்கள் சந்தித்தது வரை

பெற்றவர்கள் இது என்ன புது குழப்பம்..? என்று அதிர்ந்து போக, ஆவுடையப்பன்என்கிட்டேயும் இது பத்தி சொல்லையே இந்து..” என்றார்

ஏன் சொல்லணும் நினைச்சிருப்பா மாமா..? இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் இப்போ தான் பெத்தவங்ககிட்ட சொல்ல தோணுச்சா உனக்கு..? அன்னைக்கு மாப்பிள்ளை கோவமா இருந்ததுக்கும் இது தான் காரணமா..? நான் கூட அவரை தப்பா நினச்சுட்டேன், கடைசில வேலை உன்கிட்ட தான் இருந்திருக்கு..” மரகதம் மகளை கோவமாக திட்ட, கேசவன் எதையோ யோசித்தபடி மகளை பார்த்திருந்தார்

இப்போ எதுக்கு இதை சொன்ன இந்து..? என்ன செய்ய நினைச்சிருக்க..?” கேசவன் மகளை கணித்து கேட்டார்

இல்லைப்பா.. அம்பிகா மேடம்க்கு அவங்களை அடையாளம் காட்டலாம்ன்னு தோணுது..” என்றாள் மகள்

என்ன..? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு, கல்யாணம் பக்கத்துல வச்சுக்கிட்டு இதென்ன இந்து..? ஒரே பொண்ணுன்னு உனக்கு செல்லம் கொடுத்தது இதுக்கு தானா..? இனி நீ வேலைக்கு ஒன்னும் போக வேண்டாம், வீட்லே இரு..” அம்மா பொரிந்து தள்ளினார்

மகள் மிகவும் அதிகமான நிதானத்தில் அப்பாவை பார்த்தாள். கேசவனுக்கு மகளை என்ன சொல்லி தடுப்பது என்ற யோசனை. அவள் முடிவெடுத்து தான் கேட்கிறாள் என்று கண்டு கொண்டார் தந்தை. துணைக்கு வருங்கால மாப்பிள்ளையை அழைக்க நினைத்தார்

பிரபாகரன்கிட்ட இது பத்தி பேசிட்டியா..?” அப்பா கேட்க

இல்லைப்பா.. இனி தான் பேசணும்..” என்றாள் மகள்

இப்போவே பேசிடாலம்.. அவருக்கும் தெரியணும் இல்லை..” என்றவர், உடனே போன் எடுத்து அவனை வீட்டுக்கு வர சொன்னார். இந்திரஜாவிற்கு கொஞ்சம் பக்கென்று தான் இருந்தது. அவன் ஏற்பான் என்ற நம்பிக்கை இல்லை. கேசவன் ஆதரவு வைத்து அவனிடம் பேசலாம் என்று நினைத்திருக்க, அப்பா அந்த வழிய அடைத்து அவனிடமே மாட்டிவிட்டார்

பிரபாகரன் அடுத்து சில நிமிடங்களில் இந்திரஜா முன்பு நின்றான். மரகதம் மகளை முறைத்தபடி இருக்க, வைரவேலும் அங்கு வந்தார். கேசவன் அவரையும் வர வைத்திருந்தார்

என்ன மாமா இந்த நேரத்துல..?” பிரபாகரன் தன்னை பார்க்காத இந்திரஜாவை பார்த்து கேட்டான்

சாரி மாப்பிள்ளை, தொந்தரவு பண்ண வேண்டியதா போச்சு, சூழ்நிலை அப்படி..” என்றவர், மகளிடம்நீ சொல்றியா..? நான் சொல்லவாம்மா..?” என்று கேட்டார்

நீங்.. நீங்களே சொல்லுங்கப்பா..” பெண் அப்பாவை பார்த்து சொன்னவள் மறந்தும் பிரபாகரன் பக்கம் திரும்பவில்லை. அதிலே அவனுக்கு பிடிக்காத ஏதோ ஒன்றை செய்ய போகிறாள் என்று கண்டுகொண்டான் பிரபாகரன்

அதுங்க மாப்பிள்ளை.. பூமிகா கல்யாணத்துக்கு முந்தின நாள் நடந்த ஆக்சிடென்ட் பத்தி  உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இல்லை, அம்பிகான்றவங்க கூட இந்துகிட்ட பேசினாங்க இல்லை..” என

மேல சொல்லுங்க மாமா..” என்றான் மாப்பிள்ளை இந்திரஜா மேல் இருக்கும் பார்வையை அகற்றாமல்

அதான்.. அவங்களுக்கு உதவி செய்யலாம்ன்னு இந்து நினைக்கிறா போல, அவங்க யாருன்னு அடையாளம் காட்டட்டுமான்னு கேட்கிறா..?” என்றார் தந்தை.

“அதெல்லாம் வேண்டாம் மாமா..” பிரபாகரன் அவர் முடித்த நொடி அவன் முடிவை சொன்னான்

யார் யார்ன்னு அடையாளம் மட்டும் தானே காட்ட போறோம்..” இந்திரஜா அப்பாவை பார்த்தே  மெல்லிய குரலில் சொல்ல

அதான் வேண்டாம்ன்னு சொன்னேன் இல்லை..” பிரபாகரன் குரல் உயர்ந்து  ஒலித்தது

இந்திரஜா இப்போது அவனை நேராக பார்க்க, அந்த பார்வை பிரபாகரனுக்கு உவப்பாக இல்லை. அதன் தொடர்ச்சி அவர்கள் திருமண பேச்சில் எதிரொலித்தது.

நம்மிடம் ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவர் தான்அவர்என்று நாம் நினைப்பது தான் பல இன்னல்களுக்கு, வருத்தங்களுக்கு காரணமாகி விடுகிறது.

Advertisement