அவனோ அடிக்கண்ணால் அவளைப் பார்த்து விட்டு சட்டையை கழட்டி ஹேங்கரில் போட்டவன் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்று விட்டான்.
அவன் குளித்து முடித்து வந்ததும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி. வெறும் துண்டுடன் அவன் நிற்க அவள் பார்வை அவனைச் சுற்றியே.
இத்தனை நாள் இல்லாமல் இன்று அவன் அழகு அவள் கண்ணில் விழுந்தது. “மேன்லியா இருக்கான். அப்படி ஒரு உழைப்பு போல”, என்று எண்ணிக் கொண்டாள். அதுவும் அவள் கண்கள் அவனது படிக்கட்டு தேகத்தில் பதிந்தது.
அவன் அவளைத் திரும்பிப் பார்க்க அவள் முகம் சிவந்து விட்டது. ஒரு நொடி கண்கள் மின்ன அதை ரசித்தவன் பின் உடை மாற்ற ஆரம்பித்தான். அவளும் தலையை திருப்பிக் கொண்டாள்.
மனைவியின் மாற்றமும் அவளது ஆசைப் பார்வையும் ஆதிக்கு புரிந்தது. அதுவும் அவளது சிவந்த முகத்தைக் கண்டதும் அவளை நெருங்கி இழுத்து அணைக்க ஆசையாக தான் இருந்தது. ஆனால் அவள் பேச்சு நினைவு வந்து அவனை இறுக வைத்தது.
அதனால் உடை மாற்றி விட்டு எப்போது போல “சாப்பிட போகலாமா?”, என்று கேட்டான்.
“உங்க கிட்ட ஒண்ணு பேசணும்”
“அப்பா சாப்பிடாம இருப்பாங்க. சாப்பிட்ட அப்புறம் பேசலாம்”, என்று சொல்லி அவன் வெளியே செல்ல அவன் பின்னேயே சென்றவள் சமையல் அறைக்குச் சென்று தமயந்திக்கு உதவினாள்.
பின் அனைவரும் வந்து அமர தமயந்தி மற்றும் மதி இருவரும் பரிமாறினார்கள். சாப்பிடும் போது யாராவது அந்த சொத்து வாங்கியதைப் பற்றி பேசுவார்கள் என்று எண்ணினாள் மதி. ஆனால் யாருமே வாயைத் திறக்கவே இல்லை.
அனைவரும் உண்டு விட்டுச் சென்றதும் “எல்லாரும் சொல்ற மாதிரி ராயர் மாமா பெரிய ஆள் தான். நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்”, என்று எண்ணிக் கொண்டு உணவு உண்ண ஆரம்பித்தாள்.
பின் அறைக்குள் வந்ததும் சேலையை அவிழ்த்து விட்டு நைட்டிக்கு மாறி வர ஆதி கட்டிலில் அமர்ந்திருந்தான்.
அவள் அவனைப் பார்க்க “இப்ப சொல்லு என்ன பேசணும்?”, என்று நிதானமாக கேட்டான்.
“அது…. அது வந்து….. காலேஜ் எல்லாம்…”
“ஆமா அப்பா வாங்கிட்டாங்க. நீ தான் பாத்துக்கணும். இதுல என்ன பேச இருக்கு?”
“ஏன் அப்படி? எதுக்கு இவ்வளவு பெரிய வேலை செய்யணும்?”
“ஏன்னா? நீ தானே வேலைக்கு போகணும்னு சொன்ன? அது மட்டும் இல்லாம நான் சொல்ல வரதைக் கூட கேக்காம அவ்வளவு கோபப் பட்ட? நீ வேலைக்கு போறேன்னு சொல்றதுக்கு முன்னாடியே அப்பா உனக்காக ஏதாவது செய்யணும்னு தான் நினைச்சாங்க. ஆனா அவங்களுக்கு உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியலை. ஒரு வேளை உனக்கு வேலைக்கு போக விருப்பம் இல்லாம இருந்தா அப்படியே விட்டுறலாம்னு தான் பேசினாங்க. நீ போறேன்னு சொன்னதும் அடுத்து உனக்கு என்ன செய்யன்னு நாங்க யோசிச்சோம். கண்டிப்பா ஏதாவது பண்ணுறோம்னு சொல்ல வரதுக்குள்ள அவ்வளவு சண்டை”
“சாரி தப்பு தான். ஆனா இது… இவ்வளவு பெரிய பொறுப்பை… என்னால எப்படி பாத்துக்க முடியும்?”
“உன்னால பாக்க முடியும். எந்த சந்தேகம் வந்தாலும் என் கிட்ட கேளு. காலைல ஒன்பது மணிக்கு நாம கேம்பஸ்ல இருக்கணும்“, என்றவன் படுத்து விட்டான்.
“என் மேல கோபமா?”
“இல்லையே?”
“அப்புறம் ஏன் சரியா பேச மாட்டிக்கீங்க?’
“அது கோபம் இல்லை. வருத்தம் தான். இன்னுமே உன் மனசுல என்னை புருசனா நினைக்கலை அப்படி தானே?”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை”
“நான் பேசி முடிச்சிறேன். என்னை ஹஸ்பண்டா நினைச்சு வேலைக்கு போகணும்னு உன் ஆசையை சொன்னது சரி தான். ஆனா உனக்காக ஏதாவது பண்ணுவேன்னு சொன்னேன் தானே? ஆனா நீ நம்பாம அப்பா கிட்ட பேசினது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஈகோ ப்ராப்ளம்னு வச்சிக்கலாம்”
“நான் உங்க கிட்ட பேசினப்ப நீங்க நக்கலா பதில் சொன்னீங்க? அதான் நீங்க செய்ய மாட்டீங்கன்னு நினைச்சேன்”
“என்ன நக்கலா பதில் சொன்னேன்?”
“உங்க பிள்ளைகளுக்கு அம்மாவா இருக்கணும்னு”
“அது நக்கலா? என் பிள்ளைகளுக்கு நீ தானே அம்மாவா இருக்கணும்? அதை தான் சொன்னேன். அது மட்டுமில்லாம நான் என்ன யோசிச்சேன்னா ஒரு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நீ வேலைக்கு போகணும்னு. ஏன்னா குழந்தையை எல்லாரையும் விட நீ தான் நல்லா பாத்துக்க முடியும். அதுக்கு உன்னோட பிரசன்ஸ் முக்கியம். அதான் சொன்னேன்”, என்று சொல்ல அவன் சொல்வது கூட அவளுக்கு நியாயமாக பட்டது.
“இப்ப என்ன பண்ண?”
“என்னது என்ன பண்ண?”
“இல்லை, மாமா என் கிட்ட பொறுப்பைக் கொடுத்துட்டாங்களே? ஒரு வேளை… ஒரு வேளை குழந்தை வந்தா அதை எப்படி பாத்துக்குறது?”
“இது பெரிய விஷயமே இல்லை. குழந்தை வந்தா நீ குழந்தையையும் மேனேஜ்மெண்ட்டையும் சேர்த்தே பாத்துக்க முடியும். உனக்கு துணையா நான் இருப்பேன். சரி படு. நேரம் ஆகுது”, என்று சொல்ல அவளுக்கு சப்பென்று இருந்தது. அப்படி பேசினால் அவன் குழந்தை வர வேண்டி ஏதாவது செய்வான் என்று எதிர் பார்த்தாள்.
“இதற்கு மேல் எனக்கு குழந்தை வேணும்னு கேக்கவா முடியும்?”, என்று எண்ணி விளக்கை அனைத்து விட்டு படுத்தாள். அடுத்த நொடி அவளை இழுத்து அணைத்தன ஆதியின் கரங்கள். அவள் அவனை திகைப்பாக பார்க்க “இல்லாத பிள்ளைக்காக இவ்வளவு நேரம் பேசினோம் தானே? அதுக்கு ஏதாவது பாக்கணும்ல?”, என்று சொல்ல அவள் முகம் சிவந்தது. இதை தானே அவளும் எதிர் பார்த்தாள். அவள் மனம் அவ்வளவு சந்தோஷம் கொண்டது. ஒரு ஆணின் தொடுகைக்கு இவ்வளவு சக்தியா என்று எண்ணினாள்.
அவள் சிவந்த முகத்தை விடிவிளக்கு ஒளியில் பார்த்தவன் அவள் உதடுகளை சிறை செய்து இறுக்கி அணைத்தான். எப்போதுமே அவன் அணைப்பில் உருகினாலும் சாதாரணமாக இருப்பவள் இன்று அவளாகவே அவனை இன்னும் இறுகி அணைக்க அதை உணர்ந்தவனுக்கு சிலிர்ப்பாக இருந்தது.
“ஏய்…”, என்று உற்சாகமாக கூவியவன் அடுத்த நொடி அவள் மேல் படர்ந்திருந்தான்.
அன்றைய கூடலில் அவளது செல்ல சிணுங்கல்களைக் கேட்டவனுக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது. அவளை கட்டி அணைத்த படியே தூங்கினான். இருவருமே காதலைச் சொல்ல வில்லை தான். ஆனால் அந்த வார்த்தையே அங்கு அவசியமற்றதாக இருந்தது.
சொன்னது போல அடுத்த நாள் அவளை ஒன்பது மணிக்கு கல்லூரிக்கே அழைத்துச் சென்று விட்டான் ஆதி. மீட்டிங் ஹால் சென்றதும் நடுக்கத்துடன் அவள் மேடையில் அமர அவள் அருகே அமர்ந்தான் ஆதி.
மேனேஜ்மெண்ட்டில் உள்ளவர்கள் அவர்களை வரவேற்று நிர்வாகம் மாறியதைப் பற்றி பேச அங்கிருந்த பெரிய மனிதர்களைக் கண்டு வியர்த்து விட்டது மதிக்கு.
அவனைத் திரும்பி பார்த்தாள். அவளைக் கண்டு நான் இருக்கிறேன் என்னும் விதமாய் கண்களை மூடித் திறந்தான். அதுவே அவளுக்கு ஆயிரம் யானை பலத்தை பெற்றது போல இருந்தது.
“இவங்க வீட்ல எல்லாரும் நல்லவங்க தானோ? நான் தான் எல்லாரையும் தப்பா நினைச்சிட்டேனா?”, என்று எண்ணி அங்கே நடப்பதைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
போர்டு ஆப் டேரெக்டர் மீட்டிங் முடிந்து அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்றான். அங்கே ஹெச். எம்மும் மற்ற டீச்சர்ஸ் மற்றும் ஸ்டாப் அனைவரும் புது தாளாளருக்கு பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார்கள். புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட மதி அவர்களுக்கு நன்றி சொன்னாள். மனைவியின் மலர்ந்த முகத்தை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.
‘வான்மதி ஆதித்யகரிகாலன் கரஸ்பாண்டண்ட்’ என்று போட்டிருந்த அறைக்குள் சென்றார்கள் இருவரும். “இங்க வா மதி”, என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துச் சென்றவன் அங்கிருந்த சேரில் அவளை அமர வைத்தான்.
“எனக்கு பயமா இருக்குங்க. என்னால எல்லாம் சரி வர செய்ய முடியுமா? நான் சாதாரண ஒரு மேக்ஸ் டீச்சர். எனக்கு வயசும் இல்லை. அனுபவுமும் இல்லை. என்னைக் கொண்டு போய் இவ்வளவு பெரிய இடத்துல உக்கார வச்சிட்டீங்க?”, என்று பயத்துடன் கேட்டாள்.
“நீ தானே வீட்ல போர் அடிக்குதுன்னு சொன்ன? இனி உனக்கு சும்மா இருக்கவே நேரம் கிடைக்காது. ஸ்கூல் பத்தி என்ன சந்தேகம் வந்தாலும் ஹெச். எம் கிட்ட கேளு. காலேஜ் பத்தின எந்த விவரமா இருந்தாலும் நம்ம மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப் கிட்ட கேளு. இங்க ஏதாவது மாத்தணும்னு நினைச்சா அப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய். ஓகே கரஸ் மேடம் ஆல் தீ பெஸ்ட். நான் கிளம்புறேன். சாயங்காலம் வந்து கூட்டிட்டு போறேன்”
“என்ன என்னை அதுக்குள்ள தனியா விட்டுட்டு போறீங்க?”
“எனக்கும் ஆஃபிஸ்ல வேலை இருக்கு மா. சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வரப் பாக்குறேன்”
“ம்ம்”, என்றவளின் முகம் ஒரு மாதிரி இருக்க “என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.
“ஒண்ணும் இல்லை”, என்றவளுக்கு அவன் விரும்பிய பெண்ணை நினைத்து பாவமாக இருந்தது. இப்படி பட்டவனை இழந்தது அவளுக்கு எவ்வளவு பெரிய வேதனையை தந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அதை அவள் வெளியே சொல்ல இல்லை.