Advertisement

     ஆனால் அடுத்த நொடி அவளை மீண்டும் நெருங்கி நின்றவன் “இப்ப தெரியுதா நான் ஏன் எல்லாத்துக்கும் தயாரானேன்னு?”, என்று கேட்ட படி அவளை இறுக்கி அணைக்க “போச்சு நானே இப்படிச் சொல்லிட்டேனே?”, என்று எண்ணிக் கொண்டு “இல்லை கொஞ்சம் டைம்”, என்றாள்.

     “உனக்கு நான் கொடுத்த ஆப்சன் முடிஞ்சிருச்சு. அதுக்கு நீயும் பதில் சொல்லியாச்சு. என் பொண்டாட்டியை நெருங்க யாரோட பெர்மிசனும் எனக்கு தேவை இல்லை”, என்றவனின் இதழ்கள் முதல் முறையாக அவள் கன்னத்தில் பதிய அவள் தேகமும் சிலிர்த்தது.

     அவன் மனதில் என்ன இருக்கிறது என்று எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அந்த மெஸ்ஸேஜ் பொய் என்றும் அவளுக்கு புரிய வைக்க ஆசை தான். ஆனால் எப்படிச் சொன்னாலும் அதை அவள் நம்புவது கடினம் என்று தெரியுமே? நிச்சயம் அவன் அவளிடம் தன் மனதைச் சொன்னாலும் அதை அவள் நம்பப் போவதில்லை. காலமே என்னோட காதலை அவளுக்கு புரிய வைக்கட்டும் என்று எண்ணியவன் இப்போது மற்றொரு கன்னத்தில் இதழ் பதிக்க அவள் கரம் உயர்ந்து அவன் முதுகில் பதிந்தது.

     தன்னை ஏற்க அவள் தயாராகி விட்டது அவனுக்கு புரிந்ததும் பேருவுவகை கொண்டான். அவன் நெருக்கத்தில் அவள் கண்களை இறுக மூடிக் கொள்ள அவன் இதழ்கள் அவளுடைய இதழ்களில் பதிந்தது. அவன் முத்தத்தில் மூச்சு வாங்கியவளுக்கு இதயம் பந்தய குதிரை போல துடித்தது.

     கன்னத்தில் முத்தமிட்ட போது உடனே விலகியவன் இப்போது அவள் இதழ்களை உள்வாங்கிச் சுவைக்க மதி மொத்தமாக அவள் வசம் இழந்தாள்.

     சில பல நிமிடங்கள் அவள் இதழ்களில் ஆழப் புதைந்திருந்தவன் சற்று விலகி அவள் முகத்தை பார்த்தான். அவளும் அவனை கண் விழித்துப் பார்த்தாள். அந்த முத்தத்தில் அவன் உணர்வுகள் தாறுமாறாக கிளற அதை விழி வழியே அவளுக்கு உணர்த்தினான். இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது.

     அவள் முகத்தில் இருந்த வெட்கமே அவளது சம்மதத்தை அவனுக்குச் சொன்னது. அவனது இதழ்கள் மீண்டும் அவளைக் கொள்ளையிட, அவனது கரங்களோ அவள் மேனியில் பதிந்து அவளை உணரத் துவங்கி இருந்தது.

     அவன் கரங்களை தடுக்க முயன்றாளே தவிர விலக்க முயல வில்லை. அவன் கரங்கள் அவள் வேற்று தேகத்தில் பதியும் போது தான் அவன் மட்டுமே அவளுக்கு ஆடையாக மாறி இருப்பதே புரிந்தது.

     அவன் இதழ்கள் அவள் தேகத்தில் இறங்க துடித்து தவித்து கிறங்கிப் போனாள். அவளது முனகல் அவனை இன்னுமே தூண்டியது. அவன் அறிமுகப் படுத்தும் உணர்வுகளை இழக்க அவளால் முடிய வில்லை.

     அன்றைய இரவின் தேடல்கள் நீண்டு கொண்டே இருக்க அதிகாலையில் தான் இருவரும் தூங்கவே ஆரம்பித்தார்கள்.

     காலையில் ஆதி கண் விழித்த போது அவனது நெஞ்சத்தை மஞ்சமாக்கி சுக நித்திரையில் இருந்தாள் அவனது ஆருயிர் மனைவி. அவனும் அவளை வாகாக அனைத்துக் கொண்டு கனகளை மூடி படுத்திருந்தான். அவளது அருகாமையை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தான். நேற்றைய நினைவில் அவன் உடல் மெல்ல சூடேறியது.

     ஆனால் உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியும் எழுந்தது. அவள் விருப்ப படி அவளுக்கு சில நாட்கள் கொடுத்திருக்க வேண்டுமோ என்று யோசிக்க நிச்சயம் அவளை இதே அறையில் அவளை கண்ணால் பார்த்துக் கொண்டு மட்டும் அவனால் இருக்க முடியாது என்று புரிந்தது.

     அவளை இறுகி அணைக்க ஆசை எழுந்தது தான். ஆனால் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் என்று எண்ணி அவள் தலையை மெதுவாக தூக்கி அருகில் கிடந்த தலையணையில் வைத்தவன் அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவளது முடிக்கற்றை ஏ. சி காற்றால் அவள் முகத்தில் விழ அதை ஒதுக்கியவன் அவள் முகம் நோக்கி குனிந்து அவளது பிறை நெற்றியில் முத்தமிட்டான்.

     அவன் கண்களில் காதல் பெருகி வழிந்தது. அதை அவள் காணாதது தான் இங்கே பிரச்சனை. அவனது காதல் எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று அவளுக்கு புரிய வில்லை. ஒரு பொருளின் அருமை தேடினால் தான் நமக்கு தெரியும். நம் கையில் தானாக வந்தால் அதன் அருமை தெரிவதில்லை. அவனது காதலை அவளும் ஒரு நாள் தேடுவாளோ?

     நேரம் ஆவதை உணர்ந்து துண்டை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான் ஆதித்யா. சவரின் அடியில் நின்றவனுக்கு உடலிலும் மனதிலும் அவ்வளவு புத்துணர்ச்சி. தாம்பத்தியத்தில் இந்த அளவுக்கு நிறைவு கிடைக்கும் என்று அவன் உணர்ந்த தருணம் இது தான்.

     குளித்து முடித்து துண்டுடன் வந்தவன் அவளையே பார்த்தான். இப்போதும் உறங்கிக் கொண்டு தான் இருந்தாள். குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வந்தாலும் அவளைக் கண்டதும் அவனது தாகம் அடங்காமல் மோகம் மேலேற மனைவியை நெருங்கி விட்டான். அவளை நெருங்கி தன் தலையில் இருக்கும் நீர்த் துளிகளை அவள் முகத்தில் தெளித்தான்.

     ஜில்லென்ற தண்ணீர் முகத்தில் பட்டதும் அவள் கண் விழிக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நொடி கண் விழித்தவளுக்கு மூளை பிளாங்க்காக இருக்க அடுத்த நொடி எல்லாம் நினைவில் வந்தது.

     அதுவும் அவனைக் கண்டதும் நேற்றைய நினைவுகள் மேல் எழும்ப சிறு கோபத்தை மீறி அவள் முகம் சிவந்தது. சிவந்த முகத்துடன் அவனைப் பார்க்க அந்த அழகு அவனைக் கொள்ளை கொண்டது. நிறைவான தாம்பத்தியத்தின் விளைவால் அவள் முகமும் மலர்ந்து தான் இருந்தது. அவளுமே இப்போது சற்று ஆர்வமாக அவனைப் பார்த்தாள். என்ன இருந்தாலும் இனி அவன் தான் அவளுக்கு அல்லவா?

     முடி படர்ந்த அகன்ற மார்பும் திண்ணிய தோள்களும் சிறுத்த இடையில் கட்டிய துண்டு மட்டும் அணிந்து வசீகரமாய் இருந்தான். ரோமானிய சிற்பம் போல இருந்தவனின் தேகத்தின் கட்டமைப்பு முதல் முறையாக அவள் பார்வையில் பட்டு அவளை முகம் சிவக்க வைத்தது. “பார்ரா நம்ம ஆளுக்கு சிக்ஸ் பேக் எல்லாம் இருக்கு”, என்று உள்ளுக்குள் எண்ண அவளது ரசனைப் பார்வையை சரியாக படித்தான். தன்னை மனைவி ரசிக்கிறாள் என்பதே அவனுக்கு அப்படி ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது.

     “ஹா ஹா முப்பத்தஞ்சு மார்க் எடுத்து பாஸ் ஆகிருவேனா?”, என்று சிரிப்புடன் கேட்க கண்டு கொண்டானே என்று எண்ணி அவள் முகம் சிவந்தது.

     அவளது சிவந்த முகத்தைப் பார்த்தவன் “குளிச்சு முடிச்சு வந்துட்டேன் பேபி. ஆனாலும் முடியலை. சாரி. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”, என்றவன் அவள் என்னவென்று உணரும் முன்னே அவளை நோக்கி குனிய அவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள். அதையே சம்மதமாக எண்ணி அவள் உதடுகளைச் சிறை செய்தவன் அவள் மேல் படர்ந்து அவளை ஆக்ரமிக்க அவள் கரங்களும் உயர்ந்து அவனை அனைத்துக் கொண்டது.

     வேண்டாம் என்று சொன்னாலும் அவன் விடப் போவதில்லை. அதனால் தான் சம்மதிக்கிறேன் என்று மூளை சொன்னாலும் மனம் அவன் தொடுகையை விரும்பியதை அவள் ஒத்துக் கொள்ள தான் வேண்டும்.

     குளித்து முடித்து வந்ததால் அவனது சோப்பின் மனம் அவளை மயக்கியது என்றால் அவளது வியர்வை வாசம் அவனை கொள்ளை கொண்டது. நேற்றையை விட அதிக மோகத்தில் அவளை கொள்ளையடித்தவன் அவளை தன்னுடைய கை அணைப்பிலே வைத்திருக்க மீண்டும் அவன் மார்பிலே முகம் புதைத்து தூங்கிப் போனாள்.

     அவள் தலையை தலையணைக்கு மாற்றி விட்டு சிறு சிரிப்புடன் எழுந்தவன் மீண்டும் குளித்து விட்டு வேறு உடை மாற்றி கீழே வந்தான்.

     திருமண களைப்பில் அனைவரும் உறங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். அன்னை மட்டும் சமையல் அறையில் இருக்க “மா காபி”, என்றான்.

            “இதோ தம்பி எடுத்துட்டு வரேன்”, என்றவள் காய்ச்சி இருந்த பாலில் அவனுக்கு பிடித்த மாதிரி காபி கலந்து எடுத்து வந்து மகனிடம் கொடுத்தாள்.

     அன்னையின் கண்கள் மூத்த மகனை பரிவுடன் வருட அன்னையை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான்.

            “என்ன மா அப்படி பாக்குறீங்க?”

            “அழகா இருக்க டா தம்பி”, என்று சொல்ல சிறு சிரிப்புடன் “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு போல?”, என்றான்.

            “ஏன்? என் மகனுக்கு என்ன குறைச்சலாம்? சரி எங்க டா என் மருமக?”

            “அவ சரியான கும்பகர்ணி மா. தூங்கிட்டு இருக்கா”

            “அண்ணன் அண்ணியை நைட் முழுக்க தூங்க விட்டுருக்க மாட்டான்”, என்று சொல்லிக் கொண்டே அங்கே வந்தாள் நந்தினி.  “என்ன பேச்சு இது?”, என்பது போல தமயந்தி மகளை முறைக்க தங்கையின் பேச்சில் ஆதி அழகாக வெட்கப் பட்டான். மகனின் வெட்கம் அன்னைக்கு புரிய மலர்ந்து போனது தமயந்தி முகம்.

Advertisement