Advertisement

“இல்.. இல்லை.. நான் அவருக்கு ஆகாத வேலை செய்ற அதே மகன் தான், இப்போவும் அப்படி தான் செஞ்சிட்டு வந்திருக்கேன், நீ.. நீ அப்படி இல்லைடா, அவரோட பெருமை நீ, அப்படியே இரு, ஒரு மகனாவது அவருக்கு உருப்படியா இருக்கட்டும்..” என்றுவிட்டான். சூர்யா அப்படியே நின்றுவிட்டான்.

காவ்யா நண்பன் கை பிடித்து பக்கத்தில் நின்றவள் கணவனை முறைக்கவே செய்தாள். “அவர் தான் உன்னைகிட்ட கூட சேர்க்கலை இல்லை, ஏண்டா போற..?” என்று சூர்யாவை அதட்டல் வேறு. நண்பனுக்காக ரோஷம் பெண்ணுக்கு.

“காவ்யா.. என்ன இது..?” சுதா மகளை கண்டிப்புடன் பார்க்க,

“விடுங்கத்தை.. நான் பேருக்கு மட்டும் தான் அண்ணன், பொறுப்பான அண்ணனா  இதுவரை நான் அவனுக்கு  ஒன்னும் செஞ்சதில்லை, அவனுக்கு அண்ணா, அண்ணி எல்லாம் அவ தான்..” என்றுவிட்டான் கம்பன் வீரய்யன்.

“அது எனக்கே தெரியும்.. நீங்க சொல்லாதீங்க..” என்றாள் அதற்கும் காவ்யா.

சஞ்சய் வாய் மூடி சிரிக்க, கம்பன் புருவம் தூக்கி பார்த்து வைத்தான். “கால் டிராக் சொல்லி என்னை எப்படி பயமுறுத்தின இப்போ பாரு என் தங்கச்சி உன்னை பேச விடாம அடிக்கிறா..” என்று சஞ்சய் மீண்டும் சிரிக்க,

“நாங்க கால் டிராக் பண்ணும் போது கேட்கலைன்னாலும் ரிக்கார்ட் பண்ணி வைப்போம், இதோ இப்போ கூட பாலாகிட்ட சொன்னா  உடனே..”

“இல்லை.. நான் சிரிக்கல.. நீ பாரு..” என்றான் சஞ்சய் உம்மென்று. கம்பன் சிரித்து மனைவியை பார்க்க, அவள் நான் கோவமா இருக்கேன் என்று முகம் திருப்பினாள்.

கம்பன் பொதுவாக எல்லோருக்கும், “காவ்யாவும் நானும் பத்து நாள் அவுட் ஆப் ஸ்டேஷன்.. நைனிட்டால்.. உத்ராகண்ட்  போறோம்..” என்றான். எல்லோருக்கும் புரிய, “சந்தோஷம்ப்பா..” என்றனர்,

காவ்யா இதென்ன திடீர்ன்னு.. என்று பார்க்க, “இன்னும் ஒரு மணி நேரத்துல ஏர்போர்ட்ல இருக்கணும்..” என்றான்.  இப்போ சொன்னா எப்படி என்று காவ்யா கோவமாக பேச வர, கம்பன் கண்களால் கெஞ்சினான்.

‘பொழைச்சு போ..’ என்று காவ்யா அறைக்கு சென்று பேக் செய்தாள். கணவனுக்கும் சேர்த்து. கம்பன் போன் செய்து ராம்தாஸிடம் பேசினான்.

“பத்து நாள் நான் அவுட் ஆப் ஸ்டேஷன், பாலா இருப்பான்..” என்று சொல்லி வைத்தவன், பாலாவை அழைத்திருந்தான். அவனும் வர, அவனுக்கான இன்ஸ்ட்ரக்ஷ்ன் கொடுத்தவன், அம்மாவிடம் செக்கியூரிட்டி ஆபிஸ் பற்றி பேசினான்.

கிளம்பும் நேரம் வர,  கம்பனும், காவ்யாவும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர்.  சஞ்சய் கார் எடுக்க, சூர்யாவும் உடன்  வந்தான். ஏர்போர்ட் வர, அண்ணன், சூர்யாவிடம் விடைபெற்றாள் காவ்யா.

சஞ்சய்யை அணைத்து விடைபெற்ற கம்பன், தங்களை பார்த்து நிற்கும் தம்பியை கண்டதும் மனம் சுருண்டான். கால்களை இழுத்து பிடித்து அவன் அருகில் சென்றவன் தோள் தட்டி, “பார்த்துக்கோ..” என்று மட்டும் சொல்ல, சூர்யா அவனை அணைத்து கொண்டான்.

பதிலுக்கு அணைக்க கை வராத அண்ணன்காரன், “டேய் இதுக்கு எல்லாம் நான் ஒர்த் இல்லை, என்னை இன்னும் பேட் அண்ணனா  பீல் பண்ண வைக்காத..” என்று மனைவியுடன்  கிளம்பிவிட்டான்.

நைனிட்டாலில்.. புக் செய்திருந்த ரிசார்ட் சென்று சேர, “நைனா தேவி கோவில் போகலாம்..” காவ்யா கேட்க, கம்பன் மறுக்கவில்லை. இருவரும் உடனே குளித்து கிளம்பினர். காவ்யா கோவில் செல்ல வேண்டும் என்று புடவை எடுத்து வந்திருந்தாள். அதற்கு மேல் கோட் அணிந்து கொண்டு கிளம்பினர்.

ரிசார்ட்லே கார் அரேஞ்ச் செய்து கொடுக்க, கோவில் சென்று திரும்ப இரவு ஆகிவிட்டது. ரிசார்ட் டைனிங்லே இரவு உணவு முடித்து ரூம் வந்தனர். கம்பன் டவல் எடுத்து ரெஸ்ட் ரூம் சென்றான். நல்ல குளிர் நேரம். காவ்யா இரு வீட்டுக்கும்  பேசி வைத்தவள், கோர்ட்டை கழட்டிவைத்துவிட்டு  அறையின் சூட்டை அதிகப்படுத்தி திரும்ப கம்பன் வீரய்யன்.

அவனை பார்த்த காவ்யா அப்படியே சிலையாக நின்றுவிட்டாள். அவளின் அதிர்ச்சியை எதிர்பார்த்திருந்த கம்பன் புருவம் தூக்கி கண்ணடித்தான். காவ்யா வேகமாக எதுவோ எடுப்பது போல கபோர்ட் பக்கம் நகர்ந்துவிட்டாள். உள்ளம் படபடத்து போனது. எதிர்பார்த்தது தான். ஆனால் தடுமாற்றம் இல்லாமல் இருக்காதே..?

குளித்து வந்திருந்த கம்பன் உதடு கடித்து சிரித்தவன்  டிராக், டிஷர்ட் அணிந்தான். போன் எடுத்து காபி ஆர்டர் செய்தவன், பாலாவிடம் பேசி வைத்தான்.  காபி வர, காவ்யா தன்னை சமாளித்து வந்தாள். ஜன்னல் ஓரம் அமரும் மேடை இருக்க, காபியுடன் அங்கு அமர்ந்தாள்.

காவ்யா கால்களை நீட்டி அமர்ந்தவள், கண்ணுக்கு முன் இருந்த நைனிட்டால் லேக் பார்த்தபடி காபி குடித்தாள். கம்பன் நிதானமாக அவளின் நீட்டிய கால்களை எடுத்து தன் மடியில் வைத்து அவளுக்கு எதிரில் அமர்ந்தான். காவ்யா கண் விரித்து கணவனை பார்க்க, அவன் மனைவி கால்களை வருடியபடி காபி குடித்து கொண்டிருந்தான்.

இவள் தடுமாற,  கம்பன் காலி கப்பை வைத்து,  “ரொம்ப ரிலாக்ஸ்ஸா இருக்கு, எந்த டென்ஷனும் இல்லை..” என்றவன், அவளின் கால் விரல்களை ஒவ்வொன்றாக வருடி, சுளுக்கெடுத்தான். அவளின் குளிர்ந்த கால்கள் சூடாக ஆரம்பித்தது.

மிச்சம் இருக்கும் காபியை அப்படியே வைத்துவிட்டவள், கால்களை கணவனிடம் இருந்து எடுக்க, அவன் அழுத்தி பிடித்தவன், “ஏன்..?” என்று கேட்டான். என்ன சொல்வாள்..? திணறி வேறு பக்கம் பார்த்தாள்.

கம்பன் அவன் வருடலை நிறுத்தவில்லை. மிதமான வருடல் பாதம் எங்கும். சில இடத்தில் அழுத்தம் கொடுத்தான்.  காவ்யா அவன் பக்கமே திரும்ப கூடாது என்றிருந்தாள். “நல்ல சாப்ட்..” என்று ஒற்றை விரலால் கோடிழுத்தவன்,  குனிந்து பாதத்தில் முத்தமிட, காவ்யா நடுங்கிவிட்டாள்.

கம்பன் மற்றொரு பாதத்துக்கும் முத்தம் வைத்து  நிமிர, காவ்யா கண்களை மூடியிருந்தாள். கம்பன் அவள் கால்களை மெல்ல இழுத்து, மனைவியை தன்னிடம் கொண்டு வந்தான். அப்படியே தூக்கி தன் மடியில் முகம் பார்க்க அமர வைத்தவன், “என்னை பாருங்க காவியமே..” என்று மூடிய கண்களின் மேல் முத்தம் வைத்தான்.

கண்களை திறந்தால் திணற வைக்க கணவன் தயாராக இருக்க, எப்படி திறப்பாள்..? நீ கண்ணை திறக்கலன்னா மட்டும்.. மனது கேட்க, கணவனோ அவளின் கன்னத்தை உரசி கொண்டிருந்தான். தாடி எடுத்த அவன் கன்னம். ஆம் அவள் கேட்டபடி தாடி எடுத்திருந்தவன்,  ஜில்லென்ற கன்னத்தை உரசி தீப்பற்ற வைத்தான்.

“இப்போ கூசுதா..?” கம்பன் அவள் காதுக்கருகில் கேட்க, காவ்யா முகத்தை அவன் கழுத்தில் புதைத்து மறைத்தாள்.

“இது இன்னும் டேஞ்சரா இருக்கு காவியமே..” என்றவன் விரல்கள் அவளின் முதுகில் கோலமிட்டது. காவ்யா உடல் கூசி குறுக்கினாள். கம்பன் விரல்கள் வெற்று முதுகில் வருடி, அவளின் பிளவுஸ் நாட்டை அவிழ்க்க, காவ்யா வேகமாக கை வைத்து தடுத்தாள். கம்பன் நிதானமாக அவள் கைய எடுத்து, நாட்டை அவிழ்த்தவன், கழுத்தில் முத்தம் வைத்தான்.

“என் காவியம்.. என் கையில.. ம்ஹ்ம்..” திரும்ப ஒரு அழுத்தமான முத்தம். காவ்யா மூச்சு சூடேற,  கம்பன் கழுத்தும் சூடேறியது. அவள் காதுக்கு முத்தம் வைத்து முகத்தை அவன் பார்க்க நிமிர்த்தி பிடித்தான். காவ்யா கண் மூடி இருக்க, அவளை கண்ணார, மனதார ரசித்தான். அவனின் காதல் காவியம் இவள்.

கை கோர்த்து, மடி சேர்ந்து, உயிரோடு உயிர் இணைய போகிறாள். நினைப்பே அவன் நரம்புகளை வெடிக்க வைக்க, துடித்த அவளின் இதழ்களை தன் இதழ்களோடு சேர்த்து கொண்டான். கைகள் அவளை தன்னுடன் அழுத்தியது. நிமிடங்கள் சென்று அவனின்  உதடுகள் அவளின் உதடுகளை பிரிந்தும் அவளை பிரியவில்லை. எங்கெங்கோ பயணித்தது.

காவியம் தவித்து, திணறி, அச்சம் கொண்டு, அவனுள் கரைய ஆரம்பித்தாள். வருடலாக, அழுத்தமாக, தடமாக, வலியாக, சுகமாக, மருந்தாக.. மிக மிக நெருக்கமாக.. இறுக்கமாக.. மென்மையாக.. வன்மையாக அவளை எடுக்க ஆரம்பித்தான்.

தன்னுள் அவளை இழுத்து, அவளுள் இவன் தொலைந்தான். ரசித்து, கொண்டாடி, வெடித்து என.. மறந்தான். தன்னை மறந்தான். முழுக்க முழுக்க அவன் காவியம் மட்டுமே. அவளின் எல்லாம் இவன் மட்டுமே.

இதயம் முழுதும் நிறைந்து இவனை ஆட்கொண்ட காவியத்தை இவன் ஆட்கொண்டான். அவளுக்கான காதலை அவளுக்கே கொடுத்து, இருவருமே நிறைவை கண்டனர்.

கொள்ளை கொண்ட மனைவியை அள்ளி கொண்டவன், அவள் நெற்றியில் முத்தம் வைத்து,  “அன்னைக்கு நான் சொன்ன மெயின் டிஷ் என்ன தெரியுமா..?” என்று கேட்டான்.

“இன்னுமா..?” காவ்யா அச்சத்தில் கண் விரிக்க,

“ஹேய்.. அவ்வளுவாடி படுத்திட்டேன்..” கணவன் கேட்க, காவ்யா நேரம் பார்த்து அவனை பார்க்க, கம்பன் கண்ணோரம் வெட்கத்தின் சுருக்கமே.

“இது.. வேற..” என்றவன், அவளை தன் முகம் பார்க்க வைத்தான். கலைந்த முடிகளை காதோரம் ஒதுக்கியபடி மென் குரலில்,

சொல்லிக் கொடுத்த பின்னும்

அள்ளிக் கொடுத்த பின்னும்

 முத்தம் மீதமிருக்கு..!

 தீபம் மறைந்த பின்னும்

பூமி இருண்ட பின்னும்

கண்ணில் வெளிச்சமிருக்கு..!

வானம் பொழிந்த பின்னும்

பூமி நனைந்த பின்னும்

சாரல் சரசமிருக்கு..!

காமம் கலைந்த பின்னும்

கண்கள்  கடந்த பின்னும்

காதல் மலர்ந்துகிடக்கு..!!!!!

என்று காதல் கூடலுக்கு பிறகான நிலையை அவன் பாட செய்ய, காவ்யாவிற்கு அவன் முகம் காட்டும் காதலே அவளை வசப்படுத்தியது. இதயம்  நிறைத்தான். அவன் காதலின் மேல் இவள் காதல் கொண்டு, கம்பனை அரவணைத்து கொண்டாள்.

Advertisement