Advertisement

மாலை சூர்யா சென்று இந்திராணியையும் அழைத்து வந்துவிட, நண்பர்கள் இரவு உணவு முடித்து தான் கிளம்பினர். இந்திராணியுடன் சேர்ந்து எல்லாம் ஒதுங்க வைத்த காவ்யா, கணவனை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

இந்திராணி, சூர்யாவும் இவளுக்காக தூங்க செல்லாமல் இருக்க, காவ்யா “தூங்க போறேன்..” என்று ரூம் வந்துவிட்டாள். நேரம் ஆக ஆக, கட்டிலில் படுத்து தூங்கியும் விட்டாள். நடுஇரவில் எங்கோ பேச்சு குரல். தூக்க கண்களுடன் திறந்து பார்க்க, கம்பன் தான் போனில் ஏதோ கோவமாக பேசி கொண்டிருந்தான்.

“என்கிட்ட சொல்லதீங்க,  எனக்கு எதுவும் தெரிய வேணாம் அய்யா.. நாம எடுத்த வேலை முடியுமா முடியாதா அதை மட்டும் சொல்லுங்க..” என்று அறையில் நடந்தபடி பேச, காவ்யா அவன் கோவத்தில் எழுந்தமர்ந்தாள். கம்பன் மனைவியை பார்த்தாலும், அந்த பக்கம் ஏதோ சொன்னதில் திரும்ப கவனம் அங்கு சென்றது.

“அய்யா.. உங்களுக்கு நல்லா தெரியும் இந்த வேலைக்காக மட்டும் தான் நான் உங்ககிட்ட வந்ததே..”

“……..”

“சரி இப்போ தெரிஞ்சுக்கோங்க.. இதுக்காக தான்.. இதுக்காக மட்டும் தான் நான் உங்ககிட்ட வந்தேன், செய்யுங்க, உங்களுக்கு என்ன வேணும், யார் வேணும் சொல்லுங்க, நான் தூக்கிட்டு வரேன், இறங்கி செய்றேன்.. அய்யா.. அந்த மனுஷனுக்கு நான் எதுவும் செஞ்சதே இல்லை, அட்லீஸ்ட் இதையாவது செய்யணும்..”

“…..”

“ஆமா.. அவருக்கு இது பிடிக்காது, அதனால தான் இது நடக்க விடாம பண்றார், எனக்கு தெரியும், இப்போ ஏன் அது எல்லாம், நீங்க செய்யுங்க, எதாவது செய்யுங்க, உங்ககிட்ட இருக்கிற பவர், பணம் என்கிட்ட இல்லை, நீங்க வச்சிருந்து ஏன் இப்படி பூச்சு புடிச்சிட்டு இருக்கீங்க, என்ன பிரச்சனை உங்களுக்கு..?”

“…..”

“நான் அப்படி தான் பேசுவேன், என்ன என்னை கொன்னுடுவீங்களா, கொன்னுக்கோங்க, அதுக்கு முன்ன இதை முடிச்சுட்டு என்னை செய்ங்க.. போங்க..” போனை தூக்கி கட்டிலில் போட்டான். அதில் ராம்தாஸ் பேர் மின்னி மறைய, கால் கட்டானது.

கம்பன் மாற்றுடை எடுத்து ஓய்வறை சென்றான்.  திரும்ப கால் வந்தது. ராம்தாஸ் தான். கம்பன் ரிப்ரெஷ் செய்து டிராக் மாற்றி வருவதற்குள் மறுமுறை  கால் வந்துவிட்டது. சஞ்சய் சொன்னது வேறு மனதில் ஓட, காவ்யா தூக்கம் முழுதும் பறந்தோட அமர்ந்திருந்தாள்.

கம்பன் வந்தவன்  போனை எடுத்தான். அந்த பக்கம் என்ன சொன்னாரோ..? “ஆமா நான் அதே ரவுடி வீரா தான். அடங்காதவன் தான். திமிர் பிடிச்சவன் தான்.. மரியாதை தெரியாதவன் தான்..  எனக்கு தெரியும் அந்த மனுஷனுக்காக தான் என்னை சேர்த்தீங்கன்னு, நானும் அவருக்காக தான் உங்ககிட்ட வந்தேன்..”

“………”

“சரி மன்னிச்சுக்கோங்க.. எனக்கு தெரியும் நீங்க என்னை கேர் பண்றீங்கன்னு..”

“……”

“பேருக்கு எல்லாம் மன்னிப்பு கேட்கலை, நீங்க ஏதாவது செய்வீங்கன்னு தான் கேட்கிறேன்..”

“…….”

“ஆமா சுயநலம் தான், செய்ங்க அய்யா.. எனக்கு தெரியும் உங்களால முடியும்ன்னு.. நீங்க பெரியவர் மகன், உங்களால முடியலைன்னா யாரால..”

“……”

“ஹாஹா.. உங்களை பேசி கரெக்ட் பண்ணி நான் என்ன பண்ண..? எனக்கு என் பொண்டாட்டி இருக்கா..” மனைவியை பார்த்து கண்ணடித்து சிரித்தான் கம்பன்.  அதன் பின்னே காவ்யா முகம் தெளிந்தது. அதுவரை என்னவோ, ஏதொன்று என்றே இருந்தது.

கம்பன் தொடர்ந்து நல்ல மனநிலையிலே பேசி வைத்தான். “கொஞ்ச நேரத்துல என்னை டென்சன் பண்ணிட்டீங்க..” என்றாள் காவ்யா.

கம்பன் விளக்கணைத்து கட்டிலுக்கு வந்தவன், “எனக்கும் டென்ஷன் தான் காவியமே..” என்றான்.

“பார்த்தேன்.. இப்போ ஓகே வா..?” காவ்யா கேட்க,

“ம்ம்.. அய்யா எடுத்த வேலையை டிராப் பண்ணிடுவாரோன்னு கொஞ்சம்  டென்ஷன் ஆகிட்டேன், இப்போ ஓகே..  நம்பிக்கை இருக்கு, பார்ப்போம்..” கம்பன் கைகளை  தூக்கி சோம்பல் முறித்தான்.

“ஏதாவது சாப்பிடுறீங்களா..?” காவ்யா கேட்க,

“இல்லை.. தண்ணீர் மட்டும் வேணும், எடுத்துகிறேன்..” என்று எழுந்து சென்று குடித்துவிட்டு வந்தவன், “வேணுமா..?” என்று தண்ணீர் பாட்டில் நீட்டினான்.

“ம்ஹூம்.. தூங்கணும்..” என,

“தூங்கணுமா..?” கணவன் ஒரு மாதிரி புருவம் தூக்கியவன்,  “முழிச்சுட்டியே..” என்றான் கட்டிலுக்கு வந்தபடி.

“முழிச்சா.. திரும்ப தூக்கம் வரும்..” காவ்யா அவன் பார்வையில் வேகமாக அவள் இடத்தில் படுத்தாள்.  அவளை ஒட்டி அவளின் கணவன்.

‘என்ன இவ்வளவு கிட்ட படுக்கிறார்..?’ பெண்ணின் இதய துடிப்பு கொஞ்சம் வேகமாய். கம்பன் நிதானமாக அவளை திருப்பி தன் நெஞ்சோடு அணைத்து படுத்தான்.

‘ஹான்..’ காவ்யா திகைத்தாள். அவளின் முகம் அவனின் நெஞ்சில். அதை விட இம்சை வெஸ்ட் பனியன் அணிந்திருந்தவனின் நெஞ்சு முடி அவளின் முகத்தில் உரசி குறுகுறுப்பை கொடுத்து கொண்டிருந்தது.

காவ்யா தலையை லேசாக பின்னுக்கு இழுக்க, கணவன் அவளின் பின் தலைக்கு கை கொடுத்து இன்னும் அழுத்தினான். “மூச்சு முட்டுது..” காவ்யா முனக,

“நீ தள்ளி படுத்தா எனக்கு மூச்சு முட்டும்..” என்றான் கணவன்.

அதெப்படி..? காவ்யா தலையை தூக்கி அவன் முகம் பார்க்க, நெற்றி முட்டியவன், “இப்படியே படுக்க பழகிக்கோ..” என்றான்.

‘இதென்ன அதிகாரம்.. போயா..’ காவ்யா கண்களை சுருக்கி வெளியே வர பார்க்க,

“தள்ளி போனா நான் உன்கிட்ட இப்படி படுப்பேன் பரவாயில்லையா..?” என்றான் அவன்.

‘ஆஹ்ன்..’ காவ்யா முறைத்தவள், திமிறி வெளியே வந்தாள். மறுபக்கம் திரும்பி படுத்தவளுக்கு, இப்போது தான் கொஞ்சம் நன்றாக இருந்தது. ரிலாக்ஸாக மூச்சை இழுத்தவள் விடும் நேரம், அவள் கழுத்தில் கணவன் முகம். அதிர்ச்சியில் இழுத்த மூச்சு வெளியவே வரவில்லை.

“மூச்சை விடுடி..” என்றான் கணவன் சிரிப்புடன்.

காவ்யா வேகமாக இழுத்த மூச்சை விட்டவள், “என்.. என்ன பண்றீங்க..? தள்ளி படுங்க..” என்று அவன் தலையில் கை வைத்து தள்ள, கணவன் இன்னும் அழுத்தமாக தலையை வைக்க, தாடி கழுத்தை உரச காவ்யாவிற்கு தான் முடியவில்லை.

“இப்போ உங்களுக்கு என்ன வேணும்..?”

“எதுவும் வேணாம்..” என்றான் கணவன் முகத்தை கழுத்தில் உரசி.

“முதல்ல இந்த தாடி கொஞ்சம் எடுக்கிறீங்களா..?” மனைவி சொல்ல,

“ஏன்..?  எனக்கு தாடி  நல்லா இல்லையா..?” அவன் முகத்தை தள்ளி வைத்து கையால் தாடியை தடவியபடி கேட்டான்.

“ம்ஹூம்.. சுத்தமா நல்லா இல்லை..”  என்றாள் காவ்யா உதட்டோரம் நெளியும் சிரிப்புடன். கம்பன் முகம் சுருங்கியது. “இத்தனை நாளா உங்களுக்கு இது தெரியலையா..?” காவ்யா அவன் பக்கம் திரும்பி படுத்து கேட்க,

“அப்படி நான் யோசிச்சதே இல்லை, இப்போ தான் என் பொண்டாட்டி பிடிக்கலை சொல்றா..” என்றவன், பக்கத்தில் இருந்த மொபைல் எடுத்து முகம் பார்த்தான். ரைட், லெப்ட் என்று திரும்பி திரும்பி பார்த்தவன், “உண்மையாவே நல்லா இல்லையா.. எனக்கு ஓகேவா தான் இருக்கு..” என்றான்.

“எனக்கு பிடிக்கலை.. அப்பறம் உங்க இஷ்டம்..” காவ்யா சிரிப்பை அடக்கி சொன்னவள், மறுபக்கம் திரும்பி படுத்துகொண்டாள். பின்னால் சத்தமே இல்லை.

நிமிடங்கள் சென்று, “எடுத்தே ஆகணுமா..?” என்றான் கணவன்.

“எனக்கு தெரியாது..” காவ்யா சொல்ல,

“இப்படியே பழகிட்டேன்டி.. என் வேலைக்கு இந்த லுக் கொஞ்சம் ரஃபாவும் இருக்கு, யோசியேன்..” என்றான்.

“அப்போ ஏன் என்கிட்ட கேட்கிறீங்க..? உங்களுக்கு வேணும்ன்னா வச்சுக்கோங்க, போங்க..” காவ்யா இப்போது கொஞ்சம் உர்ரென்று சொன்னாள். எனக்கு பிடிக்கலை சொல்லி வைப்பாரா என்ற மனைவி அதிகாரம்.

“லவ் பெயிலியர்ன்னு காட்டணும் போல..” என்றாள் முணுமுணுப்புடன்.

“ஆமா லவ் பெயிலியர் ஆச்சு தானே..? அப்பறம் என்ன..?” கம்பனும் சொன்னான்.

“அப்பறம் ஏன் என்னை கேட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களாம்..? அப்படியே தாடி, காவின்னு சந்நியாசம் போக வேண்டியது தானே..?” என்றாள் மனைவி கடுப்புடன்.

“இப்போ மட்டும் என்ன காவி மட்டும் தான் இல்லை, மத்தபடி  சந்நியாச வாழ்க்கை தான்..” என்றான் கணவனும்.

“ஓஹ்.. அப்போ நேத்து நைட் என்கிட்ட பண்ண வேலை சந்நியாசி பண்ற வேலை தானா..?” மனைவி எழுந்தமர்ந்து கொண்டாள்.

“என்ன பண்ணிட்டேன் பெருசா.. சும்மா ஒரு முத்தம் அவ்வளவு தான், அதுக்கு போய் விருந்தே சாப்பிட்ட மாதிரி..”

“சும்மா முத்தமா அது.. அவ்வா.. இழுத்து, முழுங்கி, கடிச்சுன்னு..”

“ஹேய்..” மனைவி வாய் மூடிய கம்பன் கண்ணோரம் வெட்கத்தின் சுருக்கம் அதிகமே.

“இதையெல்லாம் சொல்வாங்களா..?” என்றான் கண்ணை உருட்டி மிரட்டலாக.

“நீங்க தான் சொல்ல வைச்சீங்க..” அவன் கையை தட்டி விட்டவள், திரும்ப படுக்க போக,

“சும்மா இருந்தவனை ஞாபகபடுத்திவிட்டுட்டு எங்க போறீங்க காவியமே..?” அவளை  அப்படியே அள்ளி தன் மேல் போட்டு கொண்டவன், நேற்றை போல உதடு வழி பயணத்தை தொடங்கி முடித்தான்.

காவ்யா மூச்சு வாங்க கணவனை முறைத்தவள், “இந்த கத்தை மீசை, தாடி எடுக்காம இனி என்கிட்ட வராதீங்க..” என்றாள் மிரட்டலாக.

“ஓஹ்.. காவியத்துக்கு கூசுதா..?” கம்பன் புரிந்து சிரிக்க, காவ்யா அவன் தோளில் அடிக்க, அவன் அவளை அணைத்து, தூங்கி போனான்.

Advertisement