Advertisement

வாசுதேவன் கார் பின் இவன் நிறுத்தி இறங்கினான். வீடு இப்போது பழையபடி மாறியிருந்தது. அன்று ஏற்பட்ட சேதம் இல்லை. “பயந்துட்டே  வந்தேன்..” என்றார் சுதா ஆசுவாசத்துடன்.

கேட்டில் புதிதாக இரண்டு செக்கியூரிட்டி இருக்க, நாய் ஒன்றும் அதை பார்க்க ஆளும் இருந்தனர். அது போக வீட்டில் அங்கங்கு கேமரா, மேற்பார்வைக்கு ஒரு கார்ட் வேறு இருந்தார். ‘ஒன்னு கூட எங்ககிட்ட கேட்கலை, சொல்லவும் இல்லை..’ கம்பனை பார்த்து சஞ்சய் முணுமுணுத்தான்.

கம்பன் அவனை கண்டுகொள்ளாமல் வீட்டை அலச ஆரம்பித்தான். பின் புற கேட், மொட்டை மாடி கேட் எல்லாம் லாக் செய்ய சொல்ல கார்ட் உடனே செய்ய சென்றார்.  “எனக்கு மொட்டை மாடிக்கு போகணும்..” சஞ்சய் சொல்ல,

“அர்த்த ராத்திரியில அங்கிருந்து பத்து பேர் குதிச்சு உங்க ரூம்க்கு வந்து உங்க வாய் மூடி கதற கதற  கத்தியால..”

“போதும்..” என்றான் சஞ்சய் கை நீட்டி.

கம்பன் தோள் குலுக்கியன், “மொட்டை மாடிக்கு வந்து நிலாவை பார்த்தா தான் ரொமென்டிக்கா பேச வருதுன்னா  பிரச்சனை உங்ககிட்ட தான், எதுக்கும் ஒரு முறை டாக்டரை பார்த்துக்கோங்க..” என்றான் கம்பன் சீரியசாக.

“அப்போ நான் சாதனாகிட்ட பேசினது எல்லாம் ஒட்டு கேட்டுட்ட இல்லை..” சஞ்சய் அவன் மேல் பாய,

“பத்து மணி டாக்டர் என்ன பேசுவார்ன்னு எங்களுக்கு தெரியாது பாருங்க..” என்றான் கம்பன் சிரிப்புடன். காவ்யா இவர்கள் கலாட்டாவில், கம்பன் பேச்சில் அதிர்ந்து நின்றுவிட்டாள்.

‘இவருக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா..?’

சுதா வரவும், சஞ்சய், கம்பன் அமைதியாக, “நைட் டின்னர் ரெடி பண்ண சொல்லிட்டேன், இங்க சாப்பிட்டு தான் கிளம்பணும்..” என்றார் மூவருக்கும் டீ கொடுத்து.

கம்பன் மறுக்குமுன், “இல்லைம்மா.. நாங்க கிளம்புறோம்..” என்றாள் காவ்யா. சுதா ஏதோ சொல்ல வர, சஞ்சய் அம்மாவிற்கு கண் காட்டிவிட்டான். கம்பன் டீ குடித்து இறுதியாக எல்லாம் ஒரு முறை செக் செய்து கொண்டவன், அவனின் ஆட்களுக்கு மட்டுமில்லாது சஞ்சய் குடும்பத்துக்கும் இன்ஸ்ட்ரக்ஷ்ன் கொடுத்து மனைவியுடன் கிளம்பினான்.

கார் வீட்டுப்பக்கம் செல்ல, “எனக்கு வெளியே  டின்னர் போகணும்..” என்றாள் காவ்யா. கம்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மனைவிபால் மனம் கொஞ்சம் உருகி தான் போனது. இதுவரை அவளை வெளியே எங்கேயும் அழைத்து சென்றதே இல்லை. இடையில் ஆறேழு நாட்களாக அவ்வளவு டென்சன் வேறு, இப்போதும் அவளே கேட்கும்படி வைத்து கொண்டோமே..?

“எங்க போலாம்..?” என்றான் தன் கோவத்தை விட்டு. காவ்யா சொன்ன ஹோட்டல் பாண்டிச்சேரி செல்லும் சாலையில். இங்கிருந்து இருபது கிலோ மீட்டரே வரும். கம்பன் மறுக்காமல் காரை அந்த வழிக்கு விட்டான்.

காவ்யா வீட்டுக்கு அழைத்து இந்திராணியிடம் சொல்லி வைத்தாள். டிராபிக் இருக்க, கொஞ்சம் நீந்தி தான் சிட்டியை கடக்க வேண்டியிருந்தது. அதன்பிறகு கொஞ்சம் வேகமே சென்றுவிட்டனர். காவ்யா டேபிள் புக் செய்திருக்க, இருவரும் உணவுக்கு அமர்ந்தனர்.

கம்பன் “நீயே ஆர்டர் பண்ணு..” என்றுவிட்டான். தூரத்தில் கடல் தெரிய, கார்டனில் தனி தனி கூடாரம் அமைத்து,  தள்ளி யாரோ பாடி கொண்டிருந்தனர். மெல்லிசையும், சில் காற்றும், அவன் மனைவியும் அவனை தளர வைத்தனர். உடல் இறுக்கமே குறைந்து, நன்றாக ஓய்வாக அமர்ந்தான்.

சூப்’பில் இருந்து ஆம்பித்தனர். காவ்யா அவனுக்கு பிடித்தது போல் ஆர்டர் செய்திருக்க, “அம்மாவா சொன்னாங்க..?” என்றான் கம்பன்.

“என் ப்ரண்ட்..” என்றாள் காவ்யா கெத்தாக முகம் தூக்கி வைத்து.

“அவனுக்கு என் பேவரைட்ஸ் தெரியுமா..?” கம்பன் ஆச்சரியமாக கேட்டு சாப்பிட செய்ய,

“அவனுக்கு எல்லாம் தெரியும், உங்களுக்கு தான் அவனை பத்தி ஒன்னும் தெரியாது..” என்றுவிட்டாள் காவ்யா.

கம்பனிடம் ஒரு வெறுமை சிரிப்பு. இப்போது எதையும் பேசி அவன் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

“ஆனா நான் அப்படி எல்லாம் உங்களை விட மாட்டேன், என் பேவரைட்ஸ் உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும்.. எனக்கு ரோஸ்ல யெல்லோ, சரமா வைக்கிறதில..”

“மல்லி..” என்றான் கம்பன். காவ்யா புருவம் தூக்க, அவளின் விருப்பம் எல்லாம் வரிசைபடுத்திவிட்டான்.

“இவ்வளுவா என் பின்னாடி சுத்தியிருக்கீங்க..?” காவ்யா கேட்க, கம்பன் தோள் குலுக்கி உணவை தொடர்ந்தான்.

அவன் எப்போதும் எடுக்கும் அளவே உணவு எடுக்க, காவ்யா இன்னும் வைக்க போனாள். “ம்ஹூம்.. ஒரு  நாள் கூட என் கண்ட்ரோலை நான் பிரேக் பண்ண மாட்டேன்.. டைட்  டையட்..” என்றுவிட்டான்.

“சீட்டிங் டே இருக்கலாம், தப்பில்லை..” காவ்யா சொல்ல,

“என் லைப்ல சில வருஷங்கள் முழுசாவே நான் அப்படி தான் இருந்திருக்கேன், அதுல வந்தது தான் இந்த கண்ட்ரோல்..” என்றான்.

காவ்யா ஏற்று கொண்டுவிட்டவள், மேலும் அவனை வற்புறுத்தவில்லை. இறுதியாக ஐஸ்கிரிம் வர, “ஒரு ஸ்பூன் மட்டும்..” என்றாள்.

“சாப்பிட்டு கொடு..” என்றான் கம்பன். காவ்யா தான் சாப்பிட்டு கொடுக்க, கம்பன் சிறிது மட்டும் எடுத்து கொண்டான்.

பில் வரவும், “என்னோட டே.. நான் தான் கேட்டேன்.. நீங்க இல்லை..” காவ்யா உர்ரென்று சொன்னவள், பில் தானே தான் கட்டினாள். கம்பன் சிரித்து அமைதியாகிவிட்டான்.

மேலும் சிறிது நேரம் அந்த இதமான சூழலில் இருந்தே கிளம்பினர். கார் இப்போது மிதமான வேகத்தில் சென்றது. “தேங்க்ஸ்..” என்றான் கம்பன் ஆத்மார்த்தமாக.

“தேவையில்லை..” காவ்யா சொன்னவள், தன் மொபைல் இணைத்து பாட்டு போட, ஒலித்த பாடல் கேட்டு அப்படி ஒரு வெடி சிரிப்பு அவளிடம்.

‘ஒரு தல காதல் தந்த..

இந்த தறுதலை மனசுக்குள்ள வந்த..’ என்று பாட,

கம்பன் கோவம் கொண்டு அந்த பாட்டை நிறுத்த போக, காவ்யா அவன் கை பிடித்து தடுக்க என்று ஒரு குட்டி கலாட்டா அங்கு.

“அந்த லைன் மட்டும் பார்க்காத, அடுத்து வர லைன்ஸ் பாரு..” கம்பன் சொல்ல,

“எனக்கு அது மட்டும் தான் உங்களோட சிங்க் ஆகுது..” என்று மனைவி சிரித்தாள்.

“போடி..” கம்பன் கடுப்பாக சொல்லி கார் ஓட்ட, அடுத்த பாட்டிலும் காவ்யாவிற்கு சிரிப்பு தான்.

“இதுல என்ன..?” கம்பன் புரியாமல் கேட்க,

“ம்ஹூம்.. ஒன்னுமில்லை..” காவ்யா வேகமாக தலையாட்டினாள். கம்பன் சந்தேகம் கொண்டு திரும்ப அதே பாடலை ஒலிக்கவிட்டான்.

“ஜிமிக்கி பொண்ணு..” என்ற பாடல். இதில என்ன..? கம்பன் அந்த பாடல் வரிகளை கவனித்தே வந்தவன், ஓரிடத்தில் காவ்யாவின் சிரிப்பும் கண்ணில் பட, அந்த வரிகளை திரும்ப கேட்டான்.

‘டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு..

ஸ்டாட்டருக்கு உன்னை கொடு என்ன தப்பு..’ வரிகளில் காவ்யா திரும்ப சிரித்து வெளிப்பக்கம் முகம் திருப்பினாள்.

“என்ன லைன்ஸ் இது..? ஆமா என்ன நினைச்சு சிரிக்கிற நீ, கண்டிப்பா  எதாவது வில்லங்கமா தான் நினைச்சிருப்ப..? என்னன்னு சொல்லு..” என்றான் கம்பன் சந்தேகமாக.

“சொல்ல மாட்டேன்..” காவ்யா சொல்ல,

கம்பன் காரை ஓரமாக நிறுத்திவிட்டவன், “சொல்லு..” என்றான்.

“நீங்க பச்சை புள்ள.. இதை எல்லாம் கேட்டா கெட்டு போயிடுவீங்க..?” என்றாள் கிண்டலாக.

“நான் பச்சை பிள்ளயா, சிகப்பு பிள்ளையான்னு அப்பறம் பார்ப்போம், இதுக்கு  முதல்ல நீ பதில் சொல்லு..” என்றான்.

“இதுல சொல்ல என்ன இருக்கு, ஸ்டாட்டருக்கு உன்னை கொடு’ன்னு வாங்கிட்டா மெயின் டிஷ்’க்கு  என்ன பண்ணுவான் நினைச்சேன்..” என்றாள்.

“அடிப்பாவி..”

“இதுக்கு தான் சொன்னேன்..” என்றாள் காவ்யா.

கம்பன் வேறு பேசாது காரை வீட்டுக்கு விட்டான். நேரம் ஆகியிருக்க, வீடு அடங்கியிருந்தது. இருவரும் ரூமுக்கு வர, காவ்யா கட்டிலில் ஓய்வாக விழுந்தாள். பாதி உடல் மட்டும் கட்டிலில் இருக்க, கால்கள் கீழே தரையில் இருக்க, அவள் முன் கம்பன் நின்றான்.

காவ்யா என்னவென பார்க்க, “மெயின் டிஷ்க்கு என்கிட்ட பதில் இருக்கு..” என்றான்.

“ஆஹ்..” காவ்யாவிடம் அதிர்வு.

கம்பன் நிதானமாக அவள் கால்களை உரசி, இடித்து நின்றவன், “அது என்னன்னு இப்போவே சொல்ல ஆசை தான், ஆனா எனக்கு உன்மேல கொஞ்சம் கோவம் இருக்கே.. என்ன பண்ணலாம்..?” என்றான் மனைவியிடம்.

அவனின் புதிதான உரசலில், நெருக்கத்தில் திணறி போன காவ்யாவோ, “நீ.. நீங்க முதல்ல கொஞ்சம் தள்ளி நில்லுங்க..” என்று தன் கால்களை கட்டிலுக்கு தூக்க பார்க்க, கம்பன் அவன் கால்கள் விரித்து, தனக்குள் பிடித்து வைத்து கொண்டவன், மனைவி பார்த்து புருவம் தூக்கினான்.

“புருஷனை பொண்டாட்டி பச்சை பிள்ளை சொல்றது.. அதுவும் இந்த விஷயத்துல சொல்றது நாட் குட் காவியமே..” என்றான்.

“அது.. அதுக்கு.. நான்.. நான் சும்மா உங்களை..”

“ஏன் காவியத்துக்கு பதறுது.. ம்ம்.. எனக்கு  கால் வலிக்கிற போல இருக்கு, நிக்க முடியலையே..” என்றவன் அவள் மேல் விழுவது போல வர,

‘அம்மா’ என்று காவ்யா அரண்டு கண்களை மூடி கொண்டாள்.

அவனின் வாசம் வெகு அருகில் இருக்க உடலில் பாரம் இல்லை. காவ்யா ஒற்றை கண் திறந்து பார்க்க, அவளுக்கு இரு பக்கமும் கை ஊன்றி அவளுக்கு ஒரு அடி இடைவெளியில் அவள் மேல் இருந்தான் அவன்.

“கை விட்டுடவா..?” என்றான்.

“வேண்டாம்.. வேண்டாம்.. நான் நசுங்கிடுவேன்..” காவ்யா வேகமாக சொல்ல,

“அப்படிங்கிற.. செக் பண்ணிடுவோமா..?” என்றான் கம்பன் கை எடுப்பது போல. காவ்யா அச்சத்தில் கண்களை விரித்து கணவனை  பார்க்க, அவன் கண்ணடித்து வைத்தான்.

“என்.. என்ன பண்றீங்க.. தள்ளு.. தள்ளுங்க முதல்ல..” காவ்யா மேலுதட்டின் மேல் வேர்க்க சொன்னாள்.

“நான் இன்னும் ஒன்னுமே பண்ணல, அதுக்குள்ள வேர்க்குது..” என்றான் கணவன் விடாமல்.

“இப்போ என்ன நீங்க அந்த விஷயத்துல எல்லாம் தெரிஞ்ச சிகப்பு பிள்ளை தான், ஒத்துகிறேன், போதுமா.. தள்ளுங்க.. எனக்கு ஒரு மாதிரி மூச்சு முட்டுது.. ப்ளீஸ்..” என்றாள்.

“இவ்வளவு கிட்ட வந்து ஒன்னுமே கொடுக்காம, வாங்காம தள்ளி போக சொன்னா எப்படி காவியமே..?” என்றான் கணவன்.

“என்ன கொடுக்கணும், வாங்கணும்..” காவ்யா உள்ளே சென்ற குரலில் கேட்க,

“டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு..” என்று பாடினான் அவன்.

“ஆஹ்ன்..” காவ்யா முழிக்க,

“ஏன் வேண்டாமா..?” என்றான் கம்பன் ஆழ்ந்த குரலில்.

‘என்னை கேட்டா நான் என்ன சொல்லட்டும்.. ஐயோ படுத்துறாரே..’

“பத்து மணி டாக்டர் இதெல்லாம் கேட்க சொல்லி சொன்னாரா..?” என்று முணுமுணுப்பாக கேட்டாள்.

கம்பன் சிரித்தவன், இரு கைகளையும் மெல்ல மெல்ல எடுத்து, இடைவெளியை குறைத்தவன், அவள் மேல் பாரம் இல்லாமல் சாய்ந்தான். அதற்கே காவ்யாவிற்கு இதய துடிப்பி எகிறியது. கம்பனுக்குமே.. அவனின் இத்தனை வருட காதல் பெண்ணின் உடல் தீண்டல், நெருக்கத்தில் சிலிர்த்தபடி அவனின் உதடுகள் அவளின் நெற்றியில் பதிந்து, மூக்கு கன்னம் என்று  இதழ்களில் வந்து உரசி நின்றது.

ஆம் உரசி தான் நின்றது. முழுதும் பதியவில்லை. அவளின்  உதடுகளை தன்னுள் இழுக்கவும் இல்லை. முழங்கவும் இல்லை. அந்த உரசல் இருவருக்கும் சுகவதை. காவ்யாவின் இதய துடிப்பின் வேகம் மிஞ்சவும், உரசிய உதடுகள் நான்கையும் ஒட்ட வைத்தான். அழுத்தம் கூடியது. அவளின் உதடுகளின் அளவுகளை தன் உதடுகளால் கணக்கெடுத்தான். மேலுதடு, கீழுதடு என்று தனக்குள் எடுத்து, உள்வாங்கி, ருசி பார்த்து, மேலும் சிவக்க வைத்து,  வலிக்க வைத்து, மருந்து கொடுத்து என்று உதடு வழி அவளுள் பயணித்து வெளியே வந்தான் கம்பன்.

கண் மூடியிருந்த காவ்யா உடல் மேல் இப்போதும் முழு பாரத்துடன் கணவன். இவ்வளவு நேரம் மிதந்தவளுக்கு இப்போது தான் பாரம் உணர முடிந்தது. கம்பன் இறுதியாக அவள் உதட்டில் திரும்ப ஒரு அழுத்தத்தை கொடுத்து எழுந்து சென்றான்.

Advertisement