Advertisement

கம்பன் காதல் கொண்டு 21

காவ்யா விடாது கணவனின் கை பற்றியிருக்க, அவன் முகம் திருப்பி நின்றிருந்தான். “என்ன.. அப்படியென்ன  கோவம் உங்களுக்கு..?” காவ்யா கேட்க, கம்பன் பதில் சொல்ல வேண்டுமே.

“ஆதிரா பண்ணது மட்டுமே உங்க கோவம் இல்லைன்னு எனக்கு தெரியும், அதுக்கு முன்னமே ஏதோ அப்செட்ல தான் இருந்தீங்க, என்னன்னு சொல்லுங்க..” என்று கேட்டாள்.

கம்பன் முகம் திருப்பியே இருக்க, காவ்யா அருகில் வந்தவள், “என்னை பாருங்க..” என்றாள்.

“பார்க்க முடியாதுடி..” கம்பன் குரல் அழுத்தமாக வந்ததுடன், அவளிடம் இருந்த கையை இழுத்து கொண்டு மேலேறியும் விட்டான். காவ்யா தன்னை கட்டுப்படுத்த முடியாமல், அங்கேயே சேரில் அமர்ந்து கொண்டாள்.

‘பார்க்க முடியாது சொன்னா.. பின்னாடியே போய் நான் கெஞ்சுவேன்னு நினைச்சாரா..? அதே திமிர் இன்னும் குறையாம இருக்கு..’ பொருமி கொண்டிருக்க,

“காவ்யா..” என்று வந்தான் சஞ்சய். அண்ணனை அதே கடுப்புடன் பார்த்தாள் தங்கை. “என்ன குடும்பமே கொதிக்கிற பானையில உட்கார்ந்திருக்கீங்க..?” சஞ்சய் கிண்டலாக கேட்டு தங்கை பக்கம் சேர் இழுத்து போட்டு அமர்ந்தான்.

“நீ ஒன்னும் எங்க குடும்பத்தை பத்தி பேச வேண்டாம், முதல்ல உன்னை போனா போகுதுன்னு லவ் பண்ணாங்க இல்லை ஒரு பாவப்பட்ட ஜீவன், அவங்களுக்கு ஒரு போன் பண்ணி பேசு..” என்றாள் தங்கை.

“பேசிட்டேன் பேசிட்டேன்..” சஞ்சய் ஒரு மாதிரி தலையை ஆட்டி ஆட்டி சொன்னான்.

“என்ன செம மரியாதையா..?” காவ்யா கேலியாக கேட்க,

“எடுத்ததும் ‘எதுக்குடா இப்போ எனக்கு போன் பண்றன்’னு ஆரம்பிச்சா பாரு.. ஹப்பப்பா.. முடியல, அவளுக்குள்ள இப்படி ஒரு சொர்ணாக்கா இருக்கான்னு இன்னைக்கு தான் எனக்கு தெரிஞ்சுது..” சஞ்சய்  நொந்து போய் சொன்னான்.

“நேர்ல போ கொலையும் செய்வாள் பத்தினி’ன்னு அண்ணி  காட்டுவாங்க..” என்றாள் காவ்யா சிரிப்புடன்.

“நேர்ல போனா தானே.. எனக்கு என்னமோ  உன் மேல தான் சந்தேகம், அவ முதல்ல எல்லாம் இப்படி  இல்லை, உண்மையை சொல்லு நீ தானே அவளுக்கு சொல்லி கொடுத்த..” சஞ்சய் கடுப்பாக கேட்க,

“நீ பண்ணதுக்கு யாரா இருந்தாலும் கோவம் வரும் தான், ஏண்டா’ண்ணா  அவங்கிட்ட ஒரு ஹிண்ட் மட்டுமாவது கொடுத்திருக்கலாம் இல்லை..” என்றாள் காவ்யா.

“ஹிண்ட்  கொடுத்து.. உன் புருஷன் என்னை தூக்கி அவுஸ் அரெஸ்ட்ல வைக்கவா..? போன் பேசுறது எல்லாம் ஒட்டு கேட்கிறானுங்க, நான் வேற இது தெரியாம சாதனாகிட்ட என்னென்ன பேசி வைச்சிருக்கோனோ தெரியல..” சஞ்சய் யோடித்தபடி சொன்னான்.

“அப்படியாடா’ண்ணா..” காவ்யா கேட்க,

“அப்படி தான்.. நாம தான் இதெல்லாம் தெரியாம அப்பாவிகளா இவன்கிட்ட வந்து சிக்கிட்டிருக்கோம், உனக்கு தெரியுமா காவ்யா எல்லா கேடித்தனமும் ரொம்ப சர்வ சாதாரணமா பண்றானுங்க..” தங்கையிடம் ரகசிய குரலில் சொன்னான்.

“இங்க கூட நம்ம தலைக்கு மேல கேமரா இருக்குண்ணா..” என்றாள் காவ்யா அப்பாவியாக.

“எங்க..?” சஞ்சய் அதிர்ந்து நிமிர்ந்து மேலிருந்த கேமராவை பார்த்து முழிக்க, காவ்யா சத்தமாக சிரித்துவிட்டாள்.

“நீ கூட இந்த கேடி கூட்டத்தோட சேர்ந்திட்ட இல்லை..” சஞ்சய் கேட்க,

“ஹாஹா.. அவங்க வேலை என்னென்னு உனக்கு தெரியும் இல்லை, எல்லாம் தான் பண்ணுவாங்க, நீ தான் உஷாரா இருந்திருக்கணும், இது கூட தெரியாம என்ன லீடிங் லாயரோ..?” தங்கை இன்னும் சிரித்தாள்.

“ஏதோ பொண்டாட்டியோட அண்ணா, மச்சான்காரன்னு பார்ப்பாங்க நினைச்சேன், இவங்க சரியான எமகாதனுங்க, உனக்கு தெரியுமா இரண்டு நாள் முன்னாடி வா வெளியே போலாம்ன்னு என்னை நைட் ஒரு மணி ராத்திரிக்கு எங்க இழுத்துட்டு போனான் தெரியுமா..? அந்த கட்சியோட  தலைமை வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு..” என்றான்.

காவ்யா அதிர்ந்து பார்க்க, “அவங்க பக்கத்து வீடு இவங்க ஆளுங்களாம், அந்த வீட்டு மொட்டை மாடியில போய் உட்கார்ந்துகிட்டு, ட்ரோன் பறக்கவிட்டு அங்க என்ன நடக்குதுன்னு பார்க்கிறான், எனக்கா உயிரே போகுது, அந்த அர்த்த ராத்திரியிலயும் அங்க அவ்வளவு ஆளுங்க, மேல ட்ரோன் பறக்கிறது ஒருத்தன் கூடவா பார்க்காம போயிடுவான், நாம இன்னைக்கு காலின்னு தான் முடிவே பண்ணிட்டேன்..” சஞ்சய் இப்போதும் திகிலாக சொல்ல,

“மாட்டலையா..?” காவ்யா கதை கேட்டாள்.

“உன் முன்னாடி உசுரோட உட்கார்ந்திருக்கிறதுலே தெரியலையா மாட்டலைன்னு, டக்குன்னு மின்னல் மாதிரி ஒரு ஷாட் எடுத்துட்டு கிளம்பிட்டோம், அதுவும் எதுல போனோம் தெரியுமா ஸ்விகி டிஷர்ட், ஹெல்மெட் போட்டுக்கிட்டு.. அந்த தெருவுக்குள்ள போலீஸ், அவங்க ஆளுங்கன்னு பாதுகாப்பு வேற..” என்றான்.

“இரண்டு பேரா போய் கேட்கலையா..?” காவ்யா கேட்க,

“இது போல மிட்நைட் டெலிவரிக்கு மோஸ்டலி பசங்க சேர்ந்து போய் தான் டெலிவரி கொடுப்பாங்க போல, இன்ஸ்ட்டாமார்ட் டெலிவரி, பிஸ்கெட் வேற கையில..”  என்றான்.

“கடைசில பிஸ்கட்டை அந்த வீட்ல கொடுத்தீங்களா இல்லையா..?”  காவ்யா கேட்க,

“ரொம்ப முக்கியம், டென்ஷன்ல நான் தான் சாப்பிட்டேன்..” என்றான் சஞ்சய் கடுப்புடன். காவ்யா சிரிக்க, சஞ்சய் முகத்திலும் சிரிப்பு தான்.

“ஏன் இவ்வளவு கோவம்..?” என்றான் தங்கையிடம் மெல்ல. தங்கை முகம் உடனே கடுப்பாக, “காவ்யா..” என்றான் அண்ணன் கொஞ்சம் கண்டிப்புடன்.

“இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம அவர் கோவப்படவும் நானும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் அவ்வளவு தான்..” என்றாள்.

“இங்க என்ன நடக்குதுனு  தெரியாம வீரா கோவப்பட்டுட்டான்.. தப்பு தான், ஓகே.. அதே போல வேலைக்கு போயிட்டு வரவங்களும் என்ன மனநிலையில இருக்காங்கனு தெரியாம வீட்ல உள்ளவங்களும் நடந்துக்க கூடாது இல்லை..” என்றான் அண்ணன் நிதானமாக.

“அப்போ வீட்ல இருக்கிறவங்களுக்கு டென்சனே  இல்லையாண்ணா..” காவ்யா அதே கண்டிப்புடன் அண்ணனிடம் கேட்டாள்.

“இது ஆண், பெண், வேலைக்கு போறவங்க, போகாதவங்கன்னு எல்லோருக்கும் சேர்த்து தான் சொல்றேன், எல்லா நேரமும் எல்லோரும் ஒரே மனநிலையில இருக்க மாட்டாங்க, அந்த நேரம் அவங்க மன வருத்தத்துல இருக்கலாம், உடல் கஷ்டத்துல இருக்கலாம், கோவத்துல இருக்கலாம், நமக்கு தெரியாது, ஒரே பேமிலியா  இருக்கோம், யாரும் உடனே எங்கேயும் போயிட போறது இல்லை, ஒரு பத்து நிமிஷம் பொறுத்து பார்த்து பேசினா போதும்..”

“அதிகமான வீட்ல  பிரச்சனை வர காரணமே, எதிர்ல இருக்கிறவங்க என்ன நிலையில இருக்காங்கன்னு தெரியாம நம்மளை முன்னிலை படுத்தி நடந்துகிறது தான்.. நம்மளோட  எந்தவிதமான உணர்வுகளையும் உடனே வெளிப்படுத்தி ஆகணும்ன்னு எந்தவிதமான கட்டாயமும் இல்லை காவ்யா, டைம் கொடுக்கலாம் நமக்கும் சரி, எதிர்ல இருக்கிறவங்களுக்கும் சரி.. இது நான் கோர்ட்ல நிறைய பார்க்கிறது வச்சு சொல்றது தான், இது உனக்கே தெரியும், என்ன கோவத்துல நம்ம மூளை ஸ்ட்ரைக் பண்ணி, மனசு ரொம்ப எமோஷனலை தூண்டிவிட்டு நம்மளை ஒரு வழி பண்ணிடும், அவ்வளவு தான், பார்த்துக்கோ..” என்றான் அண்ணனாக மிகவும் பொறுமையாக.

காவ்யா சில நொடிகள் அமைதியாக இருந்தவள், “ஒத்துகிறேன் நீ ஒரு லாயர் தான்னு..” என்றாள் மென் சிரிப்புடன்.

“என்னது இதுக்கே நான் லாயர்னு ஒத்துகிட்டியா..? இது முன்னாடியே தெரியாம போச்சே, உட்கார வைச்சு பேசி கொன்றிருப்பேனே..” சஞ்சய் அங்கலாய்த்து கொண்டான்.

“உனக்கு கொடுத்த பொன்னான வாய்ப்பு முடிஞ்சு போச்சு பிரதர்.. இனி இப்படி வந்துடாத..” என்றாள் தங்கையும் மிரட்டலாக.

“வந்துட்டாலும்..” சஞ்சய் நொடித்து கொண்டவன், “ஆனா ரொம்ப டென்ஷனான வேலை தான் காவ்யா, இந்த ஒரு வாரத்துக்கே நான் நொந்து போயிட்டேன், எப்படி தான் உன் புருஷன் அசால்ட்டா சுத்துறானோ.. இப்போ இவ்வளவு ரிஸ்க் எடுத்து செய்ற வேலை கூட பாசிட்டிவ் ரிசல்ட் நம்ம பக்கம் கண்ணுக்கு தெரியலை, அதான் கம்பன் கோபம், அப்செட்..” என்று சஞ்சய் சொல்லி கொண்டிருக்க, கம்பன் வீரய்யன் குளித்து கீழிறங்கி வந்தான்.

“நேரம் ஆச்சு.. வோட் போட போலாமா..?” வாசுதேவன் பொதுவாக கேட்டார்.

சூர்யா வர, “ஆதிரா எங்கடா..?” இந்திராணி கேட்டார்.

“அவளுக்கு அங்கேயே அவங்க அம்மா வீட்லே வோட், போட்டுட்டு தான் வந்திருக்காம்மா..” என்றான் மகன். சரியென்று இவர்கள் கிளம்பினர். வாசுதேவன் மனைவி, மகனுடன் ஒரு காரில் வர, இவர்கள் நால்வர் கம்பன் காரில். மூன்றாவதாக கார்ட்ஸ் கார் வந்தது.

வாக்களிக்கும் இடத்தில் ஒரு பெரிய லைன் நின்றது. சஞ்சய், கம்பனை அடையாளம் தெரிந்து கொண்டனர் அங்கிருந்த மக்கள். நெருங்கி பேச இடம் கொடுக்கவில்லை. சஞ்சய் பாதுகாப்பு பார்த்தான் கம்பன்.

காவ்யா மெசேஜ் படி மூன்று நண்பர்களும் வந்து இவர்களுடன் இணந்து கொண்டதோடு, சஞ்சய், கம்பனிடம் நலம் விசாரித்தனர். “இவங்க இரண்டு பேருக்கு எப்படி இப்படி பொறுப்பான ப்ரண்ட்ஸ்ங்க தான்னு எனக்கு தெரியல..” என்றான் சஞ்சய்.

சூர்யா முகம் வாடியது. மனைவி செய்ததன் பலன். காவ்யா அண்ணனை முறைக்க,  “ஏய் நான் காமெடிக்கு தான் சொன்னேன்..  சரண்டர்..”சஞ்சய் கை தூக்கிவிட்டான். கம்பன் மனைவியை அழுத்தமாக பார்த்து சென்றான்.

இவர்கள் எல்லாம் ஒரே ஏரியா தான் என்பதால், பூத் ஒன்றாக தான் இருந்தது. அவரவர் லைனில் நின்று வாக்களித்து வந்தனர்.

வாசுதேவன் பேமிலி அங்கிருந்து அப்படியே அவர்கள் வீடு கிளம்பினர். “நீங்க கார்ட்ஸோட வீட்டுக்கு போங்க.. நான் இவங்களை விட்டு, அங்க பார்த்துட்டு வரேன்..” என்றான் கம்பன் அம்மாவை பார்த்து. இந்திராணி, சூர்யா கிளம்ப, காவ்யா மட்டும் நின்றாள்.

“நானும் வரேன் உங்களோட..” என்றாள் கணவனிடம். கம்பனுக்கு அவளிடம் பேச முடியவில்லை. கோவம். சஞ்சய்யை கூப்பிட்டுவிட்டான்.

“என்ன காவ்யா..?” என்று சஞ்சய் வர,

“நான் உன்னை கூப்பிடலையேண்ணா..” என்றாள் தங்கை.

“என்னடா கூப்பிட்டு வைச்சு அசிங்கபடுத்துறியா..?” கம்பனை கத்திவிட்டு சென்றான் சஞ்சய். கம்பன் மனைவியை முறைத்து காருக்கு செல்ல, காவ்யா முன் சென்று ஏறி கொண்டாள். கார் நேரே சஞ்சய் வீடு சென்றது. ‘அங்கேயே தங்க போறாளா..?’ கம்பனுக்குள் கேள்வி. வாய்விட்டு கேட்கவில்லை.

Advertisement