Advertisement

இந்திராணி மருமகளை தன்னறையில் ரெஸ்ட் எடுக்க சொன்னவர், வாசுதேவனுக்கு விருந்தினர் அறை காட்டினார். ஆதிரா உணவு முடித்து முன்னமே அவள் அறைக்கு சென்றுவிட்டாள். இந்திராணி, சுதா இருவரும் காவ்யா தூக்கத்தில் இருக்க, அதே அறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

சஞ்சய், கம்பன் இருவர் மட்டும் சோபாவில் ஓய்வாக பேசி கொண்டிருக்க, சூர்யா  கொஞ்சம் ஏக்கமாக அவர்களை பார்த்து ரூம் சென்றான்.

“உன்கிட்ட ஒன்னு கேட்கணும்..” சஞ்சய் சொல்ல,

“கேளுங்க..” என்றான் கம்பன் நன்றாக சாய்ந்தமர்ந்து டீபாய் மேல் கால் நீட்டி கொண்டு.

சஞ்சய் அவன் பக்கம் திரும்பி அமர்ந்தவன், “என்ன நடக்குது..? ராம்தாஸ் சார் பிஸ்னஸ் மேன் தானே..? இந்த அரசியல், ஆட்சியில என்ன பண்றார்..?” என்று கேட்டான்.

“உங்க அப்பா சொல்லலையா..?” கம்பன் கேட்க,

“என்ன கேஸ்ன்னு  மட்டும் தான் நான் அவர்கிட்ட கேட்டேன், இதெல்லாம் கேட்கலை, கேட்டிருந்தா சொல்லியிருப்பார், இப்போ நீ சொல்லு..” என்றான் சஞ்சய்.

“எனக்கு தூக்கம் வருது.. காபி வேணுமே..” என்றான் கம்பன் வீரய்யன்.

“இது உன் வீடு..” சஞ்சய் பல்லை கடிக்க,

“இப்போ உங்க தங்கச்சி வீடும் லாயர் சார்..” என்றான் அவன். சஞ்சய் கடுப்பாகி முறைக்க, “முறைக்காதீங்க.. நைட் எல்லாம் தூக்கம் இல்லை, கண் எரியுது.. தலை வலிக்குது.. ரெஸ்ட் எடுக்கிற நேரத்துல கதை கேட்டா.. போங்க, ஏதோ உங்களை விட ஆறு மாசம் சின்ன பையங்கிறதுக்காக நான் உங்களை ‘டா’ சொல்லி பேச கூடாது நினைக்கிறீங்க தானே.. அப்புறம் என்ன,  மச்சானுக்கு இதெல்லாம் செய்ங்க,  போங்க.. அட போங்க..” என்றான் விடாமல்.

“பொறுடா..” சஞ்சய் எழுந்து செல்ல, இந்திராணி அறையில் பேச்சு குரல் கேட்டது. சஞ்சய் அவர்களுக்கும் சேர்த்து காபி கலந்தவன், அறைக்கதவு தட்டி கொடுத்து, இவர்கள் இருவருக்குமான  காபியுடன் சோபாவில் அமர்ந்தான்.

கம்பன் பார்த்திருந்தவன், “இப்படி எல்லாம் நீங்க பண்ணா நான் இம்ப்ரெஸ் ஆகாம இருப்பேனா சொல்லுங்க..” என்று கேட்க,

“இதெல்லாம் பேஸிக் மேனர்ஸ்..” என்றான் சஞ்சய்.

“ம்ஹ்ம்..” கம்பன் காபி குடித்தவன், “பெரியவருக்கு எப்போவும் இந்த அரசியல், அதிகாரம் பிடிக்கும். அவருகிட்ட இருந்து தான் ராம்தாஸ் சார்க்கு..” என்றான்.

“அவங்களுக்கு பணம், சொத்து பத்தி எல்லாம் கவலை இல்லை, தனியா எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு கொடுக்க மாட்டாங்க,  கட்சி எந்தளவு இவங்களுக்கு சப்போர்ட் பண்ணுது, எதிர்க்குதுனு தான் பார்ப்பாங்க, ஏன்னா ஒவ்வொரு கட்சிக்கும் அவங்க சார்ந்த  பிஸ்னஸ் மேன்ஸ் உண்டு. அவங்களுக்கு தான் நிறைய செய்யவும் செய்வாங்க..”

“பெரியவர் போல இடைநிலை ஆளுங்க, அதை பெருசா கண்டுக்க மாட்டாங்கன்னாலும், இவங்க மேல கை வைக்கும் போது தான் கோவம் வரும், அவங்க சார்ந்த ஆளுங்களுக்காக இவங்களை காலி பண்ண பார்க்கிறது, ரெயிட் நடத்துறது, சட்டத்தை வைச்சு கார்னர் பண்றதுன்னு நிறைய நிறைய இடைஞ்சல், டார்ச்சர் பண்ணிடுவாங்க, இன்பேக்ட் இவங்க பணம் கொடுத்துட்டு தான் இருப்பாங்க, ஆனாலும் இது நடக்கும், இது பெரியவருக்கு ஆகாது..”

“அதிலும் அந்த குறிப்பிட்ட கட்சி.. கடைசி முறை ஆட்சியில இருந்தப்போ, பெரியவர்கிட்ட அவங்க வேலையை காட்ட பார்த்திருக்காங்க.. இவர் டக்குனு சமாளிச்சு வெளியே வந்துட்டாலும், மனசுல வைச்சுட்டார், ‘நீங்க என்னங்கடா எங்களை காலி பண்றது, நான் உங்களை காலி பண்றேன் பாருங்க’ன்னு அடுத்த எலெக்ஷன்ல சொல்லி அடிச்சு அவங்களை ஆட்சிக்கு வர விடாம வேட்டு வச்சுட்டார்..”

“ரிசல்ட் வர முன்னமே, அந்த கட்சி.. அதோட தலைமை.. நாம தோற்க தான் போறோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு, அந்த கோவத்துல பெரியவரை அப்பாவை.. ஆக்சிடென்ட்ன்னு சொல்லி முடிச்சுட்டாங்க, ராம்தாஸ் சாரும் விட்டுட்டார். அமைதியாகிட்டார். இவர் பயந்துட்டார்ன்னு அவங்க நினைச்சுக்கிட்டாங்க, ஆனாலும் ராம்தாஸ் சார் மேல கண்காணிப்பு உண்டு..”

“ராம்தாஸ் சார் இந்த முறை அவங்க அப்பா பண்ண தப்பை பண்ணல, வெளியே யாருக்கும் தெரியாம தான் பண்றார், சொல்ல முடியாது. கெஸ் பண்ணியிருக்கலாம், இவர் ரொம்ப தீவிரமா இருக்கார், கண்டிப்பா இந்த முறையும் அவங்க ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை..” கம்பன் சொல்லி முடித்தான்.

“ஓஹ்.. அதனால தான் இந்த கேஸ் எல்லாமா..?” சஞ்சய் இப்போது பிடித்து கொண்டான்.

“ம்ம்..” என்ற கம்பன் விழிகள் சோர்வில் மூடி கொண்டது. சஞ்சய் எல்லாவற்றையும் தனக்குள் உள்வாங்கி கொண்டான்.

“இவ்வளவு பெரிய வேலைக்கு தான் அவ்வளவு பணமும் கூட.. எனக்கு அந்த பணம் வேண்டாம்.. எல்லாம் பிளாக் மணி.. கண்டிப்பா நான் சிக்க வாய்ப்பிருக்கு.. பொதுநலத்துக்காக,  மக்களுக்காக நான் இந்த கேஸ் எல்லாம் பைல் பண்றதா இருக்கட்டும்..” என்றான் சஞ்சய்.

“அது உங்க இஷ்டம்..” என்றுவிட்டான் கம்பன். இவன் கண்டிப்பா பிளாக் மணி வாங்க மாட்டான்.. சஞ்சய்க்கு தோன்றியது. கேட்கவும் செய்தான்.

“வாங்குறதில்லை..” என்றான் கம்பன். “நாம எல்லாத்துக்கும் அப்ரூவ் வாங்கி சட்டப்படி இயங்குற கார்ட் சர்வீஸ், எல்லாம் முறையா பேங்க் டிராங்க்சேக்ஷன்.. வரி கட்டி தான் செய்றோம்..” என்றான்.

அதை தொடர்ந்து பேச்சுக்கள் செல்ல, மாலை ஆகிவிட்டது. எல்லாம் ஹாலுக்கு வந்தனர். அருகில் இருந்த உறவுகளும் வந்தனர். டீ, பலகாரம் நடந்தது. கம்பன் அவன் ரூம் சென்றான். ஆதிரா ஹாலுக்கு வரவே இல்லை. சூர்யா மட்டும் வந்தவன் வாசுதேவன், சஞ்சயிடம் பேசி கொண்டிருந்தான்.

சுதா மகளுக்கு டீ, பலகாரம் எடுத்து சென்றவர், நேரம் ஆகவும் மகளை குளிக்க அனுப்பி வைத்தார். அண்ணி, தங்கை முறை பெண்கள் வந்திருக்க, காவ்யாவை அவர்கள் தயார் செய்தனர்.

கம்பனும் குளித்து வேஷ்டி சட்டையில் வந்தான். காவ்யா அறையை விட்டு வெளியே வந்தாள். அவ்வளவு நேரம் பார்க்காத மனைவியை கம்பன் பார்க்க, இருவருக்கும் ஒன்றாக இரவு உணவு பரிமாறபட்டது. அடுத்து திருநீறு பூசி இருவீட்டின் பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து அறைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் கம்பன் சென்றுவிட, அடுத்து காவ்யா சென்றாள்.

கீழே உறவுகளும் உணவு முடித்து கிளம்பிவிட்டனர். காவ்யா வீடும் கிளம்பியது. “ஆதிராக்கு சொல்லணும்..” என்று சுதா கேட்க, அதுவரை வெளியே வராத மனைவியை சூர்யா என்ன செய்ய..?

“பரவாயில்லை ஆன்ட்டி.. இல்லை அத்தை..” என்றான். சுதாவிற்கும் அவளின் செயல் ஒப்பாததால் இந்திராணியிடம் விடைபெற்று கிளம்பிவிட்டனர். வீடு அமைதியானது.

மேலே கம்பனும், காவ்யாவும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். காலையில் இருந்த கோவம் மனைவியிடம் இன்னும் இருக்கிறதா என்று பார்த்தான் கம்பன். ஆமா இருக்கு.. என்று மனைவி முகம் தூக்கி வைத்து காட்டினாள்.

“காவியம்  என் ரூம்ல, என் பொண்டாட்டியா இருக்கிறதே என்னால இன்னும் நம்ப முடியல, இதுல கோவம் எல்லாம் வேறயா..?” என்றான் கம்பன் அந்த திவானில் சாய்ந்தபடி.

“நீங்க ஏன் காலையில அந்த வார்த்தை சொன்னீங்க..?” காவ்யா கேட்டாள்.

“இருக்கிறதை.. நான் பீல் பண்றதை தான் சொன்னேன்..” என்றான் கம்பன்.

“ஏன் என்னை தவிர நீங்க வாழ உங்களுக்கு வேற காரணம் இல்லையா..?” காவ்யா கேட்க,

“கடமை இருக்கு.. காரணம், பிடிப்பு நீ மட்டும் தான்..” என்றான் கம்பன்.

“அப்படியென்ன எனக்கே தெரியாத ஒரு காதல் என்மேல..” காவ்யா கேட்டுவிட்டாள்.

“உனக்கு என் காதல் தெரியும்ன்னு.. ம்ப்ச்.. விடு..”

“எனக்கு தெரியற மாதிரி நீங்க என்ன செஞ்சிருக்கீங்க.. சொல்லுங்க..”

“நான் போட்ட அத்தனை டிக்டாக் வீடியோ பாட்டும்  உன் பேரை.. நான் உன்னை கூப்பிடுற பேரை வச்சு தான் போட்டேன்..” கம்பன் சொல்ல,

“காவியமா.. நான் பார்க்கவே இல்லையே..” காவ்யா அதிர்ந்தாள்.

“நான் உன்னை கூப்பிட்டு என் பேஜை பாலோ பண்ண சொன்னேன், தினமும் வீடியோ பார்க்க சொன்னேன்..” கம்பன் இப்போது கோவமாக சொன்னான்.

“சொன்னீங்க தான், ஆனா எப்படி என்னை கூப்பிட்டு  சொன்னீங்க..?” காவ்யாவும் கோவமாக கேட்டாள்.

“ஒரு மாதிரி அதிகாரமா, செஞ்சு தான் ஆகணுங்கிற மாதிரி ஆர்டர் போட்டீங்க, என் மொபைல் எடுத்து நீங்களே பாலோவும் போட்டீங்க, அந்த கோவத்துல தான் நான் பார்க்கலை..” என்றாள் இவளும்.

“எனக்கு உன்கிட்ட அப்போ அப்படி தான் பேச வந்தது..” கம்பனுக்கு அதற்கு மேல் அதை தொடர பிடிக்கவில்லை. “இப்போ எதுக்கு அந்த பேச்சு..?” என்றான்.

“வேறப்போ பேசணும்..? நீங்க தான் உங்களை பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னா உங்க பொண்டாட்டியா இருக்கணும் சொன்னீங்க இல்லை, இப்போ நான் உங்க பொண்டாட்டி தான்.. சொல்லுங்க..” என்றாள் காவ்யா.

அவள் வாயால் உங்க பொண்டாட்டி சொல்ல கேட்க கம்பனுக்கு குளுகுளு உணர்வு. கோவம் இருந்த இடம் தெரியாமல் ரசனை ஆட்கொண்டது. “பொண்டாட்டின்னு தள்ளி உட்கார்ந்து சொன்னா..” குறும்பாக, சீண்டலாக கேட்டான்.

“மடியில உட்கார்ந்து சொல்லட்டா..?” காவ்யா கேட்டவள் எழுந்து இவன் அருகிலும்  வர,

“ஹேய்.. என்ன பண்ற..?” கம்பன் சாய்ந்திருந்தவன் எழுந்தமர்ந்துவிட்டான்.

“நீங்க தானே கேட்டீங்க..” காவ்யா அவன் முன் நின்று கை கட்டி புருவம் தூக்கினாள்.

சேலை உரச நின்ற அவளின் அந்த நெருக்கமே கம்பனுக்கு புதிது. ஆழ்ந்து மனைவியை பார்த்தவன், “இது விளையாட்டில்லை காவியமே..  நான் என் காவியத்தை பிரிச்சு படிக்க ஆரம்பிச்சிட்டா  என்ன பண்ணுவீங்க..?” என்றான்.

Advertisement