அதிகாலை கண் விழிக்கும் போதே, தலைவலியோடு எழுந்தாள், இரவில் அவளை மீறி அழுத பிறகு அழுகையை நிறுத்தினாள்.
எதையும் யோசிக்க வேண்டாம் என அப்படியே சாய்ந்திருந்தாள், பின்பு தன் மனதை தேற்றிக் கொண்டவள்,
கண்ணாடி முன்னாடி போய் நின்று கொண்டு, ‘பாட்டிட்ட , உன் ப்ரண்ட் ட்ட என்ன சொன்ன, “உன்ன புடிக்கலைன்னு சொன்னா என்ன செய்வேன் ன்னு” கேட்கும் போது என்ன சொன்ன., “ஏன் ஆம்பளைங்க மட்டும்தான் விரட்டி விரட்டி லவ் பண்ணுமா., பொம்பளைங்க விரட்டி விரட்டி லவ் பண்ண கூடாதா ன்னு கேட்ட இல்ல”, முயற்சி பண்ணி பாரு’ என்று மனம் சொல்லவும்.
முயற்சி பண்ணலாம், தன் அழுது வடிந்த முகம் பாவமான தோற்றத்தை கொடுக்க, முகத்தை தண்ணீர் அடித்து ஊற்றி கழுவியவள், தன்னை சற்று ரெப்ரஸ் செய்து கொண்டு மீண்டும் கண்ணாடியில் முகம் பார்க்க.,
‘முகமே காட்டி கொடுத்துடுமோ’ என்று யோசித்தவள, ‘மேக்கப் பண்ணி மறைக்கிறோம்’ என்று நினைத்துக் கொண்டே தனக்கு தேவையான உணவை சமைக்க தொடங்கினாள்.
சமைத்து எடுத்து வைத்தவள், கிளம்பிக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள்.
தனக்குத்தானே பேசிக் கொண்டவள், “எல்லாம் ஓகே நான் விரட்டி விரட்டி லவ் பண்றது எல்லாம் இருக்கட்டும், ஒருவேளை வீட்டில் அனையன்ஸ் பாக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா, நான் சொன்னது ஒன் இயர்க்கு தள்ளி போட சொன்னேன்., அந்த ஒன் இயர்க்குள்ள இவர் மனசை மாத்த ட்ரை பண்ணனும், இல்லன்னா வீட்ல போய் டைரக்ட்டா சரண்டர் ஆயிட வேண்டியது தான், அந்த மனுஷன எனக்கு கட்டி வைங்கன்னு, அதுலயும் சம்மதிக்காம போனா, முடிஞ்ச அளவு சிம்பதி கிரியேட் பண்ண ட்ரை பண்ணலாம், அதெல்லாம் நமக்கு செட் ஆகாதே”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள்.,
“முடியலைன்னா ஃபாரின்ல போய் உட்கார்ந்துகிறேன்., அவரை நினைச்சு பாட்டு பாடிட்டு அந்த காலத்து ஹீரோயின் மாதிரி அழ எல்லாம் முடியாது., ஆனா நான் தனியா வாழ்ந்துகிறேன்., என்ன வாழ்க்கை என்கிற மாதிரி தான் தோணும், ஒருவேளை இதுக்கு பேரு காதல் இல்லையோ, அவர் நான் சொன்ன டைம் க்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கிட்டா, நோ நோ அவர் எனக்கு மட்டும் தான்”, என்று கண்ணாடி முன்னாடி சொன்னவள்.,
“ஆனா எனக்கு ஏன்டா அந்த பீலே வரல, நேத்து அழுதேன், இன்னைக்கி யோசிக்கிறேன், சரியா தப்பா.,
ஒருவேளை ஃபர்ஸ்ட் டைம் ஒரு ஆளு நோ சொல்லி கேட்கிறேன் இல்லையா”, என்று சொன்னவளின்.,
மனசாட்சியோ, “அட அறிவு கெட்டவளே, இதுவரைக்கும் எத்தனை பேர் ட்ட சொல்லி இருக்க., எத்தனை பேர் உனக்கு யெஸ் சொல்லி இருக்காங்க”, என்று கேட்க.,
“நான் யாரிடமும் சொல்லலப்பா, சொல்லவும் மாட்டேன் பா”, என்று சொல்லிக் கொண்டாள்.
பின்பு, ‘மனசு ரொம்ப பாரமா இருக்கு சரி அந்த பொண்ணுக்கு சமைச்சத எடுத்துட்டு கிளம்புவோம்’ என்று நினைத்து அந்த பொண்ணுக்கு செய்த சமையலை எடுத்துக்கொண்டு கிளம்பும் போதே,
மனமோ ‘நீ நீயா இரு, கண்டதையும் யோசிச்சு உன்னை நீ குழப்பிக்காத, பி ஹேப்பி’ என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு கிளம்பி கீழே வந்தாள்.
கீழே அவர்கள் வீட்டில் தொழிலை பற்றி ஆண்கள் பேசிக்கொண்டிருக்க., இவள் கிளம்பி கீழே வருவதை பார்த்தவுடன் அவன் பார்த்தும் பார்க்காதது போல திரும்பினான்.
‘டேய் கள்ளப்பையா நீ என்ன பார்த்த உடனே திரும்புறடா., ஓகே அப்ப நீ என்ன நோட் பண்ற ஓகே ஓகே., நான் பாத்துக்குறேன்’, என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டே கார் அருகே வரவும்.
பாட்டி தான், “என்னமா ஆளு வாட்டமா தெரியுற”, என்று கேட்டார்.
“அது ஒன்னும் இல்ல பாட்டி, லைட்டா சளி பிடிச்ச மாதிரி இருக்கு, தலை வேற வலிக்குது, அதுதான்”, என்று சொல்லவும்.,
“உன்கிட்ட தான் மாத்திரை மருந்து எல்லாம் வச்சிருப்பாயே எதையாவது போட்டுக்க வேண்டியது தானே, அல்லது எதும் மாத்திரை வாங்கணும்னா சொல்லு”, என்று சொல்லவும்.,
“இல்ல பாட்டி மாத்திரை இருக்கு போட்டுக்குறேன், ஒன்னும் இல்ல சரியா போயிரும்”, என்று சொல்லிவிட்டு காரை திறந்து ஏறப்போகும் போது தான்.,
பாட்டி, “ஏன்மா நேத்து இந்த குழம்பு குறிப்பு கேட்டியே செஞ்சியா”, என்று கேட்டார்.
“செய்தேன் பாட்டி, எடுத்து வந்து தரட்டா, உங்களுக்கு டேஸ்ட் பார்க்கிறதுக்கு” என்று சொன்னாள் .
“அதெல்லாம் வேண்டாமா, நம்ம இட்லிக்கு எப்பவும் வைக்கிற குழம்பு தானே”, என்று சொல்லவும் சிரித்துக் கொண்டே “சரி பாட்டி” என்று காரில் ஏறப்போகும் போது சரிகாவின் அம்மா தான்.
‘ச்சோ இந்த அம்மாக்கு வேற வேலையே இல்லை, ஏதாவது அட்வைஸ் ன்ற பெயரில் என்ன போட்டு கொல்லுமே’, என்று நினைத்துக் கொண்டே
“சொல்லுங்க ஆன்ட்டி”, என்றாள்.
ஆண்களுக்கு தான் “போச்சே இவ சொதப்ப போறா போலயே” என்று நினைத்துக் கொண்டனர்.
அருகில் வந்தவரோ, “அன்னைக்கு கேட்ட சமையல் செஞ்சு குடுத்தியாமா, நேத்து அத்தை கிட்ட பேசிட்டு இருக்கும் போது கவனிச்சேன்., நேத்தும் குறிப்பு கேட்ட போல, இன்னைக்கு கேட்கும் போது ஆமா செஞ்சு எடுத்துட்டு போறேன்னு சொல்ற, உனக்குன்னு ஒரு கெத்து இருக்கு இல்ல, நீ டாக்டர் மாதிரி நடந்துக்கணும்”, என்று சொல்லவும்.,
“ஓ அப்படியா, நான் டாக்டர் மாதிரி நடந்துக்கணுமா”, என்று கேட்டவள்,
அவரும் “ஆமா பின்ன மரியாதை இல்லாம போய்ட கூடாது இல்ல, அடுத்தவங்களுக்கு சமைச்சு போடவா இருக்க”, என்று சொல்லவும்.
“ஓ அப்படியா ஆன்ட்டி”, என்று விட்டு கார் கதவை சாத்திவிட்டு அதில் சாய்ந்து அமைதியாக நிற்க,
அவரோ, “இந்த மாதிரி செஞ்சு கொடுப்பதெல்லாம் இதோட கடைசியா வச்சுக்கோ”, என்று சொல்லவும்.,
தலையை லேசாக பிடித்து விட்டவள், பாட்டியை பார்த்துவிட்டு, சற்று தள்ளி நின்று ஆண்களையும் பார்த்துவிட்டு தன் போல நிமிர்ந்து நின்றவள், அவரை சற்று திமிராகவே பார்த்தாள்.
அவள் பார்வையின் வித்தியாசம், அவளையே பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேருக்குமே தெரிந்தது.
ஆன்டி சொன்னா தப்பா எடுக்கக் கூடாது, உங்க வீட்ல இருந்து சமைச்சு எடுத்துட்டு போறேனா, இல்லனா நீங்க சமைச்சு கொடுத்து விட்டீங்களா, இல்ல உங்க வீட்ல இருந்து மசாலா எடுத்தேனா, எதுவும் இல்ல தானே, இல்ல நீங்க ஏதாவது டிப்ஸ் கொடுக்குறீங்களா இல்ல தானே,
அப்புறம் இன்னொன்னு நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க., எனக்கு இந்த மாதிரி சொல்றது பிடிக்காது, அதே மாதிரி நீங்களும் என்கிட்ட இந்த மாதிரி பேசுறத இதே கடைசியா வச்சுக்கோங்க., நான் எப்பவும் ஒன்று போல இருக்க மாட்டேன்., அப்புறம் உங்க வீட்டு வேலைய மட்டும் பாருங்க., என்ன பத்தி நீங்க பார்க்க வேண்டாம்”, என்று சொல்லிவிட்டு நகர்ந்து போக.,
அவரோ, “உன் நல்லதுக்கு தானே சொல்றேன், நீ என் மகளோட நாத்தனாரா போயிட்ட”, என்று சொல்லவும்.,
கையை உயர்த்தி அவர் பேச்சை நிறுத்தியவள்., “இதுதான் லாஸ்ட் , இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும், நான் எங்க வீட்ல இன்ஃபார்ம் பண்ண வேண்டியது இருக்கும்., நான் வேற வீடு பார்த்துட்டு போயிட்டே இருப்பேன்., உங்க வீட்ல வாடகை கொடுக்காம இருக்கிறேன் என்கிறதுனால., உங்க இஷ்டத்துக்கு நீங்க என்னை பேசக்கூடாது.,
இதே மாதிரி தான் உங்க வீட்டுக்கு வாடைக்கு வர்றவங்க கிட்ட எல்லாம் பேசுவீங்களா”, என்று சொன்னவள்.
“இப்பவும் நான் டாக்டர் தான் என்கெத்த எப்படி காட்டணும்னு எனக்கு தெரியும், உங்க வேலை எதுவுண்டோ அத பாத்துட்டு போயிட்டே இருங்க., தேவையில்லாம பேசினா நடக்கிறதே வேற”, என்று சொல்லிவிட்டு கோபமாக கார் கதவை திறந்து ஏறி வேகமாக சாத்திவிட்டு காரை அவள் கிளப்பிக் கொண்டு போகும் வேகமே அவளது கோபத்தை எடுத்துரைக்க.,
வீட்டில் தான், “என்ன காரியம் செஞ்சிட்டு இருக்க நீ”, என்று சரிகாவின் அப்பா அவள் அம்மாவை பார்த்து கேட்டார்.