“அப்படின்னு நீ சொல்லுத, அந்த புள்ள அப்படி நினைக்கலையே”, என்று சொன்னவன் லேசாக சிரிக்க,

         “அப்படி ஒன்னும் ஏஜ் தெரியலையே”என்று கண்ணாடி பார்த்தப்படி பேசிக் கொண்டிருந்தவன்.,

       மாநிறமாக அவன் உயரத்திற்கு ஏற்ற உடம்போடு பார்ப்பதற்கு அழகாகவே இருந்தான் , அவனை கிண்டல் செய்வதற்காக இவள் அங்கிள் என்று சொல்லி, அதற்கு பதில் இவன்  சொல்ல, இவனுக்காக அவன் நண்பன் பதில் சொல்ல,  என்று  கடைசியில் அவனை கண்ணாடி பார்த்து புலம்ப வைத்திருந்தாள்.

       இவளோ  வீட்டினரை பார்ப்பதும் அவனைப் பார்ப்பதுமாக இருந்தவள் போய் பாட்டியின் அருகே நின்று கொண்டாள்.

    அங்கு எடுத்து வைத்திருந்த சேலையில் முடிவாக ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு புடவையை செலக்ட் செய்து இருந்தனர்.

       அதில் மற்றொன்றை சரிகாவின் பாட்டி அவளுக்கு மறு வீட்டிற்கு என எடுத்து இருந்தார்.

ஒரு வழியாக பெண்ணிற்கான புடவை எடுக்கும் படலம் முடிந்து மாப்பிள்ளைக்கான உடைக்கும் வேலையும் முடிந்தது. பின்பு அருகில் இருந்த உயர்தர உணவகத்தில் அனைவரும் உணவு உண்டு விட்டு இவர்கள் பிளைட்டிற்காக அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினர்.

அவர்கள் புடவை எடுப்பதில் பிஸியாக இருந்ததால் இவள் அவனிடம் சென்று பேசியதை யாரும் பார்த்திருக்கவில்லை. கிளம்பும்போது அனைவரிடமும் பொதுவாக கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

     இவளுடைய பெரியப்பா மகள் தான், “ஏண்டி வந்ததுக்கு ஒரு புடவை எடுத்து இருக்கலாம் இல்ல”, என்று கேட்டார்.

    “எடுப்போம் எடுப்போம் எடுத்துக்கலாம்., இங்க காட்டன் வெரைட்டி நல்லா இருக்குமாம், அதுதான் பாக்கணும்னு நினைச்சேன்., ஆனா இன்னைக்கு மத்தியான பிளைட் இல்ல., அதனால தான் கிளம்பியாச்சு சாயந்திரம் வரைக்கும் சுத்துறதா இருந்தா, அவங்க வீட்ல உள்ளவங்க கிட்டயே கேட்டு, அங்க போய் கொஞ்சம் புடவை செலக்ட் பண்ணி இருக்கலாம்”, என்று சொல்லவும்.

     பாட்டி தான், “அம்மா தாயே போதும் வா” என்று சொல்லி அழைத்துக் கொண்டு சென்றார்.

     நாட்கள் அதன் பின்பு வெகு வேகமாக சென்றது போல இதோ விடிந்து திருமண நாளிற்கான காலையும் தொடங்கியது.

       இவள் அவர்களுக்கான மாலையை எடுத்துக் கொண்டு வடபழனி கோயிலுக்கு சென்று இருந்தாள்.

    வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று அவரவர் தக்கப்படி அறைகள் அமைத்துக் கொடுத்திருந்தனர்.

   காலையில் கோயிலுக்கு சென்றவள் மாலையை கொடுத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போதே., எங்கேயோ கேட்ட குரல் போல காதில் விழ சாமியை மனம் நிறைய கும்பிட்டு கண்ணை திருப்பியவளுக்கு அவள் கண்ணையே நம்ப முடியல்லை.,

அவன் நண்பன் குடும்பத்தினரோடு சித்தார்த்தனும் அதே முருகன் சன்னதியில் நின்று இருந்தான்.

   ஆச்சரியமாக பார்த்தவள் பொதுவாக  “ஹாய்” என்றாள்.

   அவன் நண்பன் தான், “என்ன சிஸ்டர், நீங்க இங்க” என்று சொல்லவும்.,

    “கல்யாண மாலை சாமி கிட்ட வச்சு வாங்கிட்டு போறதுக்காக வந்தேன்”, என்று சொன்னாள்.

     அதேநேரம் கோயில் பூசாரியும் “மிகா மா”, என்று கூப்பிட,

    “இந்தாம்மா மாலையெல்லாம் வச்சு கும்பிட்டாச்சு. இதுல தனியா பிரசாதம் இருக்கு, கொண்டு போய் கொடுத்துடு” என்று சொல்லவும்,

    “தேங்க்ஸ் அங்கிள்”,என்று சொல்லி வாங்க போக,

      “முதலில்  பிரசாதத்தை வாங்கிக்கோ”, என்று கொடுக்க,

    அதை வாங்கி கொண்டவள், மாலை தட்டை  வாங்குவதற்கு முன் கடவுளை வணங்கி விட்டு வாங்கும் போது அவளுடைய கை தாம்பூலத்தை பிடிக்க முடியாமல் சற்று திணறலாக  தன்னோடு சேர்த்து பிடிக்கப் போகும் போது அவள் அருகில் நின்ற அவனின் ஒரு கை அந்த தாம்பலத்தை தாங்கி இருந்தது.

   “என்ன ஆச்சு பேலன்ஸ் பண்ண முடியலையா”, என்று கேட்டான்.

     அவளோ, “இந்த கையில பிரசாத பை வேற கொடுத்தாங்களா, என்னால பிடிக்க முடியல”, என்றாள் மெதுவாக,

    அவன் கையில் தான் மொத்தமாக இப்போது தாம்பளத்தட்டு இருந்தது.

    பின்பு அனைவரும் கடவுளை வணங்கி விட்டு வெளியே வர, வெளியே வந்த பிறகுதான் அவன் கையில் இருந்து தாம்பளத்தை வாங்க வந்தவள், “நீங்க எப்படி வந்தீங்க”, என்று கேட்டாள்.

    அவர்களோ ரூம்ல இருந்து ஒரு கால் டாக்ஸி புக் பண்ணி வந்தோம்,இப்போ கால் டாக்ஸி புக் பண்ணனும் ” என்று சொல்ல,

     “அதெல்லாம் வேண்டாம், வாங்க நானும் மண்டபத்துக்கு தானே போறேன், நீங்களும் மண்டபத்துக்கு தானே போகணும், ஒன்னா போகலாம் வாங்க” என்று அழைத்தாள்.

   அவன் நண்பன் குடும்பம் குழந்தையோடு பின்னாடி ஏற இவனும் முறைத்து பார்த்தான்,

     “ஏறுடா” என்று கண்ணடித்து சொல்ல.,

  சித்துவோ கையை காட்டி தன் நண்பனே மிரட்டியபடி, “டேய் பேசாம இரு” என்று  முனுமுனுத்தான்.

   “மாப்பிள்ளை மாதிரி ஜம்முனு இருக்க.,  பட்டு வேஸ்ட்டில ஏறு ஏறு”, என்று கிசுகிசுப்பாக சொன்னான்.

கையில் வைத்திருந்த மாலை தட்டை குனிந்து பார்த்தப்படி,

‘எப்படி கேண்டில் பண்ண’ என்று யோசித்து நிற்க.,

   அவள் டிரைவிங் சீட்டில் அமர  இருந்தவள், அவன் அருகே வந்து மாலை தட்டை தன் கையில் வாங்கிக் கொண்டு, “இப்ப ஏறுங்க” என்றாள்.  அவன் ஏறி அமரவும்., சீட் பெல்ட்  போட்ட பிறகு அவன் கையில் தாம்பளத்தை கொடுத்துவிட்டு., தன் இடம் சென்றவள் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள்.

    சென்னையின் அந்த காலை நேரம் கூட அத்தனை வாகன போக்குவரத்து இருந்தது.

     அதில் லாவகமாக காரை ஓட்டிக்கொண்டு வந்தவளை.,  ஒரு நிமிடம் திரும்பி பார்த்தவனுக்கு,  “பக்காவா வளர்த்திருக்காய்ங்க” என்று நினைத்துக் கொண்டான்.

    பின்பு திரும்பி நண்பனை பார்க்க, அவனும் கையை காட்டி அதையே தான் கண் ஜாடையில் சொன்னான்.

    இவனோ அவனை முறைக்க இவளோ “பாட்டு போட்டா, உங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இல்லையே”, என்று அனுமதி கேட்டாள்.

   அவர்கள் “இல்லை” என்று சொல்லவும்.,

     காலை நேரத்திற்கான மெலோடி பாடல்களை ஒலிக்க விட்டவள், சரியாக மண்டபத்தில் வந்து நிறுத்தி அவர்களோடு சேர்ந்து இறங்கி வந்தாள்.

   மாலை தட்டை அவன் கையில் இருந்து வாங்க வந்தவள்,  “நான் கொண்டு போகட்டுமா, இல்ல நீங்களே கொண்டு போறீங்களா”, என்று கேட்டாள்.

     “நீங்கதாங்க கொண்டு போகனும்,  நீங்கதாங்க மாப்பிள்ளை வீடு”, என்று சொல்லி அவள் கையிலே கொடுத்து விட,

    பிரசாதத்தை அவன் கையில் கொடுத்தவள், “ப்ளீஸ் இதை மட்டும் கொண்டு வந்து உள்ள தந்துடுவீங்களா” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

   காரை அதற்கான இடத்தில் நிறுத்தி விட்டே அவர்கள் சென்று இருக்க, பின்புறம் தன் நண்பனோடு சேர்ந்து நடந்தவன் தன் நண்பனின் மனைவியை பார்த்து “நீங்க சேர்ந்து போங்க”, என்று சொல்லி பிரசாதத்தை நண்பனின் மனைவி கையில் கொடுத்து அனுப்பினான்.

  அவளோ அண்ணா என்று தலையை ஆட்டிவிட்டு செல்ல.,

    அவனும் “ஏன்மா ஏன்”, என்றான்.

     “இல்ல அவங்க உங்களை கிண்டல் பண்ணுவாங்கன்னு இவங்க சொன்னாங்க”, என்று மெதுவாக சொன்னாள்.

     “எம்மா தயவு செய்து சும்மா  இருங்க, இன்னைக்கு தான் அங்கிள் ன்னு கூப்பிடாம இருக்கா,  பழையபடி கூப்பிட வைத்து விடாதே”, என்று சொல்லி சிரித்த வண்ணம் சேர்ந்து உள்ளே சென்றனர்.

அதன் பிறகு திருமணங்களுக்கான காரியம் நடக்க.,  நல்ல நேரத்தில் நித்திலனின் சரிபாதியாக சரிகாவை மணமுடித்துக் கொடுத்திருந்தனர்.

அன்று வந்தவர்களிடம் எல்லாம் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தவளோ அவ்வப்போது பார்வை அவனை விட்டு விட்டு பார்த்துக் கொண்டு தான் இருந்தது.

      ஆனால் மனமோ ‘நான் எதிர்பார்த்த லப்பு டப்பு வரல, கண்ணு படபடன்னு அடிச்சுக்கல, வயித்துல பட்டாம்பூச்சி பறக்கல, என்ன பண்ண’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

     இருந்தாலும் மற்றவர்கள் முன் சிரித்த முகமாக வளைய வந்தவளுக்கு மனமோ, ‘இல்ல இன்னும் கொஞ்சம் எனக்கு கன்சிடர் பண்ணனும்., இது ஜஸ்ட் சொந்தக்காரங்க என்கிறல வர்ற ஒரு சின்ன அட்ரக்சனா, இல்ல உண்மையிலே புடிச்சி இருக்கான்னு தெரியலையே., ஐயோ முருகா என்னைய ரொம்ப சோதிக்கிறடா நீனு’ என்று புலம்பி கொண்டவள்.

   அதன்பிறகான காரியங்கள் எல்லாவற்றிலும் நித்திலனின் தங்கையாக நின்று அத்தனையும் செய்தாள்.,

    அவர்களின் பெரியம்மா மகள்தான் தன் கணவனோடு சேர்ந்து மற்ற காரியங்கள் எல்லாம் செய்தாலும்,  குடும்பத்தினர் மத்தியில்  அவள் எத்தனை செல்லம் என்று அன்றுதான் மற்றவர்களுக்கு தெரிந்தது.

   நல்லபடியாக சரிகாவை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு தங்களிடம் திரும்பினர் மணமகள் வீட்டினர்,

   சரிகா தன் வாழ்க்கையை தன் புகுந்த வீட்டினரோடு ஒன்றும்படி வாழத் தொடங்கியிருந்தாள்.