17

முத முறை அழகுன்னு அட

எனக்கு நான் தெரிஞ்சேன்

ஒரு முறை உன்னை நெருங்கி

பல முறை தொலைஞ்சேன்.

எப்படித் வந்தாயோ….

புன்னகை தந்தாயோ

எப்படித் வந்தாயோ….

என்னையும் கொண்டாயோ

எண்ணங்களில் எண்ணமும்

உன் யோசனை நானே

தள்ளாமலே தள்ளாடுறேன் நானே

கண்ணாடியின் பிம்பங்களில் நானில்லையே நீயே

   இவர்கள் வீட்டிற்கு வரும் போது வீட்டில் உள்ளவர்கள் படுக்க தயாராகி இருந்தனர்.

      அவளிடம் வந்த பாட்டியோ, “உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லம்மா, அவன் ஒரே வார்த்தையில் சொல்லிட்டான், எனக்கு அவளோட கௌரவம் முக்கியம் ன்னு., நீங்க சொன்ன மாதிரி இத்தனை நாள் நீங்க எப்படியும் கண்டிப்பா நல்ல பிள்ளைகள் நல்லபடியா இருந்திருப்பீர்கள், இது தெரிஞ்சதுக்கு அப்புறம் வீட்ல உள்ள யாரும் எதுவும் கண்காணிக்க மாட்டாங்க., உனக்கு தெரியும் உங்க அண்ணியோட அம்மா எப்படின்னு, அதனால பாத்துக்கோங்க, அவ எதும் சொன்னாலும் காதுல வாங்கிக்காத”, என்று சொல்ல.,

     பாட்டியை அணைத்து பிடித்தவள், “நீங்க தைரியமா இருங்க பாட்டி, நான் பார்த்துக்கிறேன்”, என்று சொல்லிவிட்டு.,

      “நீங்க போய் தூங்குங்க”, என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டு அவர் சென்ற பிறகே மாடிக்கு வந்தாள்.

      வந்த உடனே இவன் வீட்டிற்குள் சென்றிருக்க.,  வீட்டிற்குள் அவனுக்குமே அவன் அம்மா அப்பாவின் அட்வைஸ் கிடைக்க., தலையை ஆட்டிக்கொண்டு அவன் அறைக்கு வந்தவன்., அந்த புறமாக வரும் கதவை மூடியவன்.,  அறைக்கு வந்துவிட்டு வெளியே  வரக்கூடிய கதவை திறந்தவன் ‘மொட்டை மாடிக்கு செல்லலாமா’, என்று நினைக்கும் போதே லேசாக மழை தூர தொடங்கியிருந்தது.

     “என்ன திடீர் மழை”, என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளும் அப்போதுதான் மாடிக்கு வந்திருந்தாள்.

    சிரித்தபடி, “மொட்டை மாடி இல்ல, மழை வருது” என்று சொல்ல., இவளும் சிரித்தபடி அவன் அருகில் வர, வந்தவளை அவனும்  இழுத்து அணைத்து பிடித்த படி பால்கனியில் நின்றவன்,  இந்த மழைக்கு இன்னைக்கு தான் வரணுமா, பேசணும்னு நினைச்சேன்”, என்று சொன்னவன்,

     பின்பு எப்போதும் போல அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு, “மனசு நிம்மதியா இருக்கு தங்கம்”, என்றான்.

     இவளோ அவன் மார்பில் முகம் பதித்த படி அப்படியே நின்று இருக்க.,  அவளை தன்னில் இருந்து பிரித்தவன்.,

        “குட் நைட் காலைல பாக்கலாம், இதுக்கு மேல நீ இங்க இருந்தா, நான் வாக்கு தவறினவனா மாறிருவேன்”, என்று சொன்னான்.

      இவளும் சிரித்துக் கொண்டே, “ஓகே மச்சி குட் நைட்”, என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள்.

    அதன்  பின்பு நாட்கள் வேகமாக ஓடியது போல் தான் இருந்தது.,

      ஏனென்றால் 15 நாளில் இவர்கள் அங்கு வீட்டிற்கு பேச வருவதாக இருந்ததால் இவளும் விடுப்பு எடுத்துக்கொண்டு அங்கு சென்று இருந்தாள்.

    இங்கிருந்து அனைவரும் சென்றிருக்க., ஏற்கனவே அவர்கள் ஜாதகத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி இருக்க., இங்கு இவர்களும் பார்த்து நேரம் குறித்து என எல்லாம் முடித்து இருந்தனர்.

   சரியாக வளைகாப்பிற்கு ஒரு நாள் முன்பு நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ள நாள் குறிக்கப்பட்டது.

     இப்போது முறைப்படி பேசி முடிப்பதற்காக மட்டும் தான் வீட்டிற்கு சென்றனர்.  சரிகா திருமணத்திற்கு பிறகு அப்போது தான் சித்தார்த் அவள் வீட்டிற்கு வந்தான்.

    அனைவரும் பேசி முடித்து பெயருக்கு தாம்பூலம் மாற்றிவிட்டு நிச்சயதார்த்தத்தை கிராண்டாக வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தனர்.

அன்றைய மதிய உணவு அவர்கள் வீட்டில் முடித்துவிட்டு அனைவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர்.

     அப்போது தான் சரிகா இவங்க போட்டோ அனுப்பின அன்னைக்கு நான் நம்பவே இல்ல தெரியுமா., அண்ணனா அப்படின்னு தான் யோசிச்சேன்., அண்ணா எல்லார்ட்டையும் நல்லா கலகலன்னு பேசி கூட யாரும் பார்த்ததில்லை., அதுவே பயங்கர ஷாக்கா இருந்துச்சு”.,  என்று சொல்லி ஆளாளுக்கு பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.

     சித்தார்த்தோ அமைதியாக சிரித்தபடி இருக்க.,

      ராகவனோ சித்தார்த்தை நித்திலனிடம் கலாய்த்து கொண்டிருந்தான்.

     “ரெண்டு பேரும் கல்யாணம் லவ் ப்ரொபோஸ் பண்ணி முடிச்சு., ஓகேன்னு ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டு எங்க போனாங்கன்னு தெரியுமா”, என்று கேட்க,

    இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, எல்லோரும் ‘வேறு எங்கேயும் சென்றிருப்பார்கள்’ என்று நினைக்க.,

    அவன் சொன்னதோ., “முதலில் இருவரும் மீனாட்சி அம்மன் கோவில், அடுத்த வாரம் திருப்பரங்குன்றம், அதுக்கடுத்த வரம் பழமுதிர்ச்சோலை”, என்று சொல்ல.,

    வீட்டில் உள்ளவர்களோடு சேர்ந்து, “டேய் என்னடா  நடக்குது”, என்று நித்திலன் கலாய்த்தான்.,

      பாட்டியோ, “நினைச்சேன் டா, உன் தங்கச்சி இப்படி கோயிலுக்கு தான் கூட்டிட்டு போவான்னு நினைச்சேன்”, என்று கிண்டல் செய்து கொண்டிருக்க.,

      அவளோ, “பாட்டி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல”, என்று சொல்லவும்.,

     சித்துவோ இங்கிருந்து “கண்ணை காட்டி மிரட்டினான்., எதுவும் வாயை திறக்காதே”, என்று.,

     ஏனென்றால் மற்ற இடங்கள் இருவரும் சென்றது, வேறு யாருக்கும் தெரியாது,

   பின்பு நிச்சயதார்த்த புடவை எடுப்பது பற்றி பேசிக் கொண்டிருக்க.,

   “அவளுக்கு எந்த மாடல் பிடிக்கும் ன்னு பார்த்து நான் தரில நெய்ய கொடுத்துடுறேன்., டைம் இருக்குல்ல அதுக்குள்ள நெய்து வந்துரும்”, என்று சொல்ல.,

    பாட்டி தான், “தம்பி தப்பா எடுத்துக்காதீங்க, இதை மட்டும் செய்யாதீங்க, அப்புறம் நீங்க ஒவ்வொரு புடவையும் அவளுக்கு தரில கொடுத்து வாங்குற மாதிரி இருக்கும்”, என்று சொல்ல.,

   இவளோ தாத்தாவிடம் சத்தமாக பேசினாள்., “உங்க வீட்டம்மாக்கு பொறாமை தாத்தா”, என்றாள்.

    அப்போது ராகவன் தான், “அவன் பொண்டாட்டிக்காக  புது தரியே போடுவான் பாட்டி”, என்று கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

    இருவரும் சிரித்த முகமாக தங்களது மகிழ்வையும்,   வீட்டினர் மகிழ்வதையும் தங்களுக்குள் ரசித்துக்கொண்டனர்.

      நிச்சயதார்த்த நாளுக்காக இருவரும் காத்திருக்க தொடங்கினர்.

    காத்திருக்கும் நாட்கள் இருவருக்கும் அழகாகத்தான் சென்றது.

    அதன் பிறகு சித்தார்த்தன் அடிக்கடி இங்கு வருவதில்லை., ‘ஏனென்றால் யாரும் எதுவும் சந்தேகமாக பார்த்தால் கூட.,  அது தன்னவளுக்கு இழுக்கு’, என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு இருந்தது.

    ஏனென்றால் இப்போதும் அவள் அங்கு தான் இருக்கிறாள்.

    இன்னும் ட்ரெய்னிங் முடிய சரியாக இரண்டு மாதங்கள் இருக்கிறது.

    சரிகாவின் டெலிவரி வரை அவள் இங்கு இருப்பாள்., என்பதால் டெலிவரிக்கு பிறகு இரு மாதங்கள் கழித்து திருமணத்தை பற்றி தேதி குறிக்கலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

      பட்டு சேலை நெய்யும் இடத்திற்கு அழைத்து சென்றவன், அங்கு உள்ள மாடல்களை பார்த்து அவளுக்கு பிடித்த மாடலில் பிடித்த கலரில் நெய்ய கேட்டவன்., நிச்சயதார்த்த தேதியையும் சொல்லினான்.

     எப்படியும் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் திருமணம் என்ற நிலையில் குழந்தை பிறந்த பிறகு கல்யாணத்திற்கான சேலை நெய்ய கொடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தான்.

     அவளோ அவனுக்கு பிடித்தது போல கொடுக்க சொன்னாள். முதல் முதலில் அவனைப் பார்க்கும் போது கட்டிருந்த அதே பச்சை நிற புடவையில், ஆங்காங்கு ஜரிகை கொடிகளாக ஓடி., தங்க ஜரிகையில் பூக்கள் நெய்து., லேசான சிவப்பு பார்டர் மட்டும் வரும்படி சொல்லி இருந்தான்., பார்டர் கலர் அதிகமாக தெரியக்கூடாது., என்று சொல்லி இருந்தான்.

    இவளோ, “ஏன் அப்படி” என்று அவனிடம் கேட்க.,

      அவனும், “நான் உன்னை முதன் முதலில் பார்த்தது, அப்படியே கண்ணுல நிற்குது., அந்த பச்சை கலர் புடவையில் பார்த்து தான்.,  சோ பச்சைக் கலரே இருக்கட்டும்”, என்றான்.