சிதார்த்தத்தை திரும்பி பார்த்தவர், “நீயும் இன்னைக்கு தான் மெட்ராஸ்ல இருந்து வந்தாயாடா”, என்று கேட்டார்.

     அவனோ, “யார் சொன்னா உங்களுக்கு”, என்றான்.

      அதே நேரம் தாத்தாவும் நித்திலனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

     “ரவியோட பிரண்ட் உன்னை ட்ரெயின்ல பார்த்ததா சொல்லி, போட்டோ எடுத்து அனுப்பி”, என்று  அவர்கள் முழுதாக சொல்லி முடிக்கும் முன், அவன் கைக்கு ரவியின் செல்போன்  வர.,

    அதை பார்த்தவன், “தங்கம்” என்று அழைக்க.,

     அவளோ, “என்ன மச்சி” என்று எழுந்து அவன் அருகில் சென்றாள்.

     “இந்த போட்டோ நல்லவா இருக்கு”, என்றான்.

       அவளோ, பார்த்து விட்டு “நல்லாவே இல்ல, யார் எடுத்தா., போட்டோ கிளாரிட்டி சரியில்லையே”, என்று சொன்னாள்.,

    நித்திலண்ணன் அடக்க முடியாமல் சிரித்து விட்டான்., “கடைசில உன் டிபி ல உன் கையை பிடித்து இருந்த கைக்கு சொந்தக்காரர் இவர்தானா” என்று நித்திலன் கேட்க,

     “நானே சொல்லலாம் ன்னு நினைச்சேன், அதுக்குள்ள போட்டு  உடைச்சிட்டாங்க., சஸ்பென்ஸ் உடைஞ்சு போச்சு, என்ன செய்ய”, என்று அவள் அண்ணனை பார்த்து கேட்க.,

தாத்தாவோ எழுந்து வந்து சித்தார்த் கையைப் பிடித்தவர்., “ஒருவழியா உங்கள புடிச்சிருக்குன்னு சொல்லிட்டாப்பா, எங்களுக்கு நிம்மதி”, என்று சொல்லி அவர்கள்  பேசத் தொடங்க.,

     மதுரை வீட்டினர் தான்., ‘பெரிய பிரச்சினையாகுமோ என்று நினைத்து பார்த்திருந்தனர்’, நமத்து போன பட்டாசாக பிரச்சனை ஓய்ந்து போனது தான் மிச்சம்., மற்றவர்கள் நிம்மதி பெருமூச்சு விட., சரிகாவின் அம்மாவிற்கு தான், ‘இவனுக்கு டாக்டர் பொண்ணா’, என்ற எண்ணம் வந்தது.

தாத்தாவும் நித்திலனும் சித்தார்த்திடம் பேசிக் கொண்டிருக்க., நித்திலன் தான் கையைப் பிடித்து “இவள வச்சு எப்படி சமாளிக்க போறீங்கன்னு தான் தெரியல”, என்று சொல்லி பேசிவிட்டு.,

  அவனை அணைத்து கொண்டவன், திரும்பி பார்க்க தங்கையோ அந்த செல்போனில் இருந்த போட்டோவை தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

     நித்திலன் னோ, “பாப்பா என்னடா பண்ற”, என்று கேட்க,

       நித்திலனையும், சித்தார்த்தையும் பார்த்து சிரித்தபடி அருகில் வர,

       அவனும் அவளை தோளில் கை போட்டு தன்னோடு சேர்த்து பிடித்தவன், “ஒரு போட்டோவ வச்சுட்டு ஏன் இப்படி எல்லாம் பாத்துட்டு இருக்கீங்க, இதோ ரெண்டு பேரும் நேர்ல தான் இருக்கிறோம் பார்த்துக்கோங்க., அவதான் என்னோட லைஃப், நான் முடிவு பண்ணிட்டேன். அவ படிப்பு முடிக்கணும் அதுக்கப்புறம் சொல்லணும் ன்னு ரெண்டு பேரும் யோசிச்சிருந்தோம்., இப்போ அதுக்கு முன்னாடியே தெரிஞ்சதால எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல., உனக்கு ஏதாவது பிரச்சனையா தங்கம்”, என்று அவளிடம் கேட்க.,

    அவளோ, “இல்ல மச்சி ஆனால் கல்யாணம் மட்டும் படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் தான்”, என்று சொல்ல வீட்டில் உள்ளவர்கள் சிரித்தபடி பார்க்க,  அவர்கள் உலகத்தில் அவர்கள் இருவரும் மட்டுமே என்று நினைப்போடு சொல்லி இருந்தனர்.

     சித்தார்த்தனோ, நித்திலனிடமும், அனாமிகாவின் தாத்தாவிடமும், “உங்களை  இதுக்காக அலைய வச்சிருக்காங்க., நான் தான் சாரி சொல்லணும்., அவங்க என்கிட்ட கேட்டு இருந்தா., நானும் அவளுமே சொல்லி இருப்போம்., இதுக்காக உங்களை கூப்பிட அவசியமே இல்ல”, என்று சொன்னவன்.,

      “நீங்க சம்மதம் கொடுத்து இருக்கீங்க அப்படின்னு அவ என்கிட்ட சொல்லிட்டா.,  ஏற்கனவே யாருன்னு தான் கேட்டுட்டு இருந்தீங்க அப்படி ன்னு சொன்னா., சரிகா வளைகாப்புக்கு முன்னாடி   வீட்டில்  சொல்லிடுவேன் அப்படின்னு சொல்லிட்டு இருந்தா”,  என்று சொன்னவன்.

     அவன் அம்மா அப்பாவை திரும்பிப் பார்த்து, “எனக்கு யாரை பற்றியும் கவலை கிடையாது., எனக்கு என்னோட அம்மா அப்பா சம்மதித்தால் போதும்”, என்று சொல்ல.,

அவன்  அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள்., நேராக நித்திலன் அருகில் வந்து நின்றபடி, தாத்தாவிடம் “நாங்க முறைப்படி கேட்டு வாரோம்., சரிகாவோட வளைகாப்புக்கு முன்னாடியே இவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தத்தை முடிச்சுக்குவோம்”, என்று சொல்லவும்.

      வயதில் மூத்தவராக அனாமிக்காவின் தாத்தா தான், “உங்க தாத்தா பாட்டி கேக்கணும் இல்ல” என்று சித்தார்த்தனை பார்த்து சொல்ல .,

   அவன் பாட்டியை திரும்பி பார்த்தவுடன், “இதுல நாங்க சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல, அவன் கல்யாணம் ன்னு சொல்லும் போது அவ்வளவு கோவப்பட்டான், அப்பவே நாங்க யோசிச்சி இருக்கணும், யோசிக்கல தங்கமான பிள்ளை உங்க வீட்டு பிள்ளை நீங்க கொடுப்பீங்களா ன்ற பயம் தானே ஒழிய, அவ எங்க வீட்டுக்கு மருமகளா வர்றது எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை., சந்தோஷம் தான் ரொம்ப சந்தோஷம்”, என்று பாட்டியும் தாத்தாவும் சொன்னார்கள்.

       பின்பு இரவு உணவுக்கு செல்லும் போது, அவன் தான் “உனக்கு ஆர்டர் போட்டு இருக்கேன் டா, வந்துரும்”, என்று சொன்னான்.

    சரி என்று சொல்லிவிட்டாள்.

  “நீயும் இங்கேயே சாப்பிடலாமே மா” என்று பாட்டி சொல்ல.,

“இல்ல பாட்டி, இப்ப வரைக்கும் நான் மாடியில் இருக்கிற பொண்ணு தான்”, என்று சொல்ல.,

    அதுவரை அமைதியாக இருந்த சரிகாவின் அம்மா தான், “இனிமேல் எப்படி ஒரே வீட்டில்” என்று சொன்னபடி.,

    “அத்தை இனிமேல் சித்தார்த்தனை கொஞ்ச நாளைக்கு இங்க வர வேண்டாம் ன்னு சொல்லுங்க”, என்று சொல்லவும்.,

     சித்தார்த்தனோ, “நான் ஏன் வரக்கூடாது”, என்றான்.

     “இல்ல ரெண்டு பேரும் விரும்பறீங்கன்னு தெரிஞ்சுட்டு”, என்று சொல்லவும்.

    “நாங்க ஏழு மாசமா விரும்பி கொண்டு தான் இருக்கோம்., இதுவரைக்கும் உங்களுக்கு தெரியாது, இப்ப தெரிஞ்சுடுச்சு அவ்வளவு தானே., உடனே கற்பனை எல்லாம் கண்ட மேனிக்கு ஓட விடாதீங்க., நாங்க ரெண்டு பேரும் மெச்சூரான ஆட்கள்., எங்களுக்கு வாழ்க்கைனா என்னன்னு தெரியும்., எங்க வாழ்க்கையே எப்படி கொண்டு போகனும் ன்னு  எங்களுக்கு தெரியும்., அதனால நீங்க பயப்படாதீங்க”,  என்று சொல்லவும்.,

      “இல்ல ரெண்டு பேரும் ஒரே இடத்தில்”, என்று  இழுக்கவும்.,

   “உங்க எல்லாரையும் விட, அவளோட கௌரவம் எனக்கு ரொம்ப முக்கியம்”, என்று சொன்னவன், “அவளை நான் பாத்துக்குவேன்”, என்று சொல்லிவிட்டு.,

     ரவியிடம் திரும்பியவன்., “டேய் அவன் போட்டோ எடுத்து அனுப்புனா முதல்ல என்கிட்ட கேட்டிருக்க வேண்டியது தானே.,  இதைவிட நல்ல போட்டோவா தந்து காமி டா ன்னு சொல்லி இருப்பேனே”, என்று சொல்லவும் வீட்டில் உள்ளவர்கள் சிரித்துக் கொண்டனர்.

     சித்தார்த்தின் அப்பா தான்., “என் பிள்ளை இப்பதான் வாயைத் திறந்தே பேசுறான்ப்பா”, என்று சொல்ல.,

    “அது என்னுடைய ட்ரெய்னிங் மாமா”, என்று இங்கிருந்து சத்தம் கொடுத்தாள் அனாமிகா.

   அவனோ அவள் தலையில் கையை வைத்து வாலு என்று அவள் தலையை ஆட்டியவன்.,

        அவளிடம் அவன் போனை தந்தவன், “உன்னோட புட் எங்க வருது ன்னு பாரு”,  என்று சொல்லிவிட்டு நித்திலனையும் அவன் தாத்தாவையும் உபசரிக்க தொடங்கினான்.

   அதன் பிறகு இருவரும் இரவு பிளைட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லவும்.,

    தானே கொண்டு வந்து ஏர்போர்ட்டில் விடுவதாக சொன்னான்.

     அவளோ “நானும் வருவேன்”, என்று சொல்லிவிட்டே மாடிக்கு சென்றாள்.

       அதன் பிறகு நித்திலன் தான் சித்தார்த்தின் அருகில் அமர்ந்து, அவன் கையை இறுக பற்றியவன்.,

     “இவங்க சொன்ன மாதிரி யாரும் சொல்லிடுவாங்களோ ன்னு நான் பயந்தேன்., ஆனா நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்க பார்த்தீங்களா., அவளோட கௌரவம் உங்களுக்கு முக்கியம்னு., ரொம்ப தேங்க்ஸ்”, என்று சொல்லிவிட்டு.,

     “உங்களுடைய லவ் எப்ப ஸ்டார்ட் ஆச்சு”, என்று கேட்கவும்.

    “உங்க தங்கச்சிய கேளுங்க, என்னைவிட நல்ல கதை சொல்லுவா”,  என்று சொல்லி சிரித்தான்.

       அதற்குள் அவர்களுக்கு இரவு உணவு தயாராகி இருக்க, உணவு உண்டு விட்டு தாத்தாவும் நித்திலனும் கிளம்பினர்.

      சித்தார்த்தனும் அனாமிகாவுமே காரில் அவர்களைக் கொண்டு ஏர்போர்ட்டில் விட சென்றனர்.

    பின்னாடி தாத்தாவோடு அமர்ந்து கதை பேசிக்கொண்டு வந்தவள்.,

“வீட்டுக்கு போட்டோ காட்டனும் இல்ல., இந்த போட்டோ எல்லாம் காட்டாதீங்க.,  நான்  போட்டோ தர்றேன்”, என்று சொல்லிவிட்டு தனது செல்லை தாத்தாவிடம் கொடுத்தவள்.,

   “எந்த போட்டோ அழகா இருக்குன்னு சொல்லுங்க தாத்தா., பேமிலி குரூப்ல அனுப்பிருவோம்”, என்று சொன்னாள்.

      தாத்தாவும் சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார்.

நித்திலன் முன் பக்கம் அமர்ந்திருக்க, அவனோ, “கொடு நான் பார்த்து செலக்ட் பண்றேன்” என்று சொல்லி  வாங்கினான்.

    நித்திலனிடம் போட்டோவை காட்டினாள்.

அவன் தான், “எல்லா போட்டோவும் அழகா இருக்கேடா”, என்று சொல்ல.,

    “ஏதாவது ஒன்னு தான் செலக்ட் பண்ணனும்.,  எல்லா போட்டோவும் தர மாட்டேன்”, என்றாள்.

   உடனே நித்திலனே அவள் செல்லிலிருந்து ஒரு போட்டோவை செலக்ட் செய்து வீட்டிற்கு குரூப்பில் அனுப்பி வைத்தான்.

எப்படியும் இவர்கள் வீடு போய் சேர்வதற்குள் அனைவரும் பார்த்து விடுவார்கள் என்று தெரியும்., அது மட்டுமல்லாமல் அவர்களோடு ஏர்போர்ட்டில் வைத்து ஒரு செல்பி எடுத்து அதையும் நித்திலன் அனுப்பி வைத்துவிட்டு .,

    ‘ஏர்போர்ட்டில் இருந்து கிளம்புகிறோம், வந்து பேசிக்கொள்கிறேன்’ என்று மட்டும் மெசேஜ் செய்தான்.

     பின்பு இவர்கள் இருவரும் திரும்பி வரும்போது அவன் கையைப் பிடித்துக் கொண்டவள், அவன் தோளோடு சாய்ந்து அமர்ந்தபடி இருக்க.,

     அவன் தான், “நீ ஹேப்பியா”, என்று கேட்டான்.

       “ஹேப்பியா இருக்கு, டக்குனு தெரிஞ்சிருச்சு இல்ல., ஆனா வீட்ல எதுவும் சொல்லுவாங்களோ ன்னு யோசிச்சேன்.,  யாரும் வாயைத் திறக்கல., எனக்கு அதுவே ஷாக்கா இருக்கு., யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க தானே”, என்றாள்.

    “ஒருத்தரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க, நீங்க இப்ப தேனிக்கு போகணுமா”, என்றாள்.

   “இல்லையே, இங்க தான்” என்று சொல்ல.,

    “ஓகே,  இனிமேல் நோ மொட்டைமாடியா”, என்றாள்.

   அவனும், “எனக்கு மொட்டைமாடி ஓகே தான் ” என்று சொல்லி, “பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தனர்.

     யாரும் அதைப்பற்றி பேசவில்லை,  அதன் பிறகு ‘எப்போது சென்னைக்கு போகலாம், முறைப்படி பேசலாம் ‘என்று மட்டும் பேசிக் கொண்டிருந்தனர்.

     பத்து நாளில் சென்னை சென்று முறைப்படி பேசிவிட்டு வருவதாகவும், அதன் பின்பு சரிகாவின் வளைகாப்பிற்கு முதல் நாள் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்வதாகவும் பேசிக் கொண்டிருந்தனர்.

இன்னும் நாள் மட்டும் பார்க்க வேண்டும் என்பதையும் பேசி வைத்திருந்தனர்.