“நினைத்தேன், மறுநாள் உன் முகத்தை பார்த்த உடனே எனக்கு தோணுச்சு., அது மட்டும் இல்லாம சித்திக்கு சரியா கொடுத்துட்டு போனீயா., அப்ப தோணுச்சு என் மேல உள்ள கோபத்தை அங்க காட்டிட்டு போற ன்னு”., என்று சொல்லவும்.
“நீங்களும் அதுக்கப்புறம் வராமல் இருந்துட்டீங்க”, என்று சொல்ல.,
“வரக்கூடாதுன்னு இல்லடா., மனசுக்குள்ள பயம், எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும், ரொம்ப பிடிச்சிருந்துச்சு., உன் மேல மோதுன உடனே, நெஜமா அந்த செகண்ட் உன் கையில பூவ குடுத்துட்டு., நான் டிஷ்யூ வச்சு அந்த குங்குமத்தை தொடச்சிட்டு போகும் போது., ராகவன் வைஃபை முன்னாடி நடக்க விட்டுட்டு., ராகவன் கேட்டான், என்னடா அந்த பொண்ண பார்த்து அஞ்சு நிமிஷம் சிலையா நின்ன ன்னு., கேட்டான் .,
அப்போ எனக்கு என்னவோ ஒரு பீல் வந்துச்சு., அதை எனக்கு சொல்ல தெரியல., ஆனா ராகவன் சொன்னான்., உனக்கு புடிச்சிருக்கு இல்ல அந்த பொண்ண., பார்த்த உடனே சிலரை பிடிக்கும் டா, ஆனா நான் தான் சொன்னேன்., புடிக்கிற எல்லாரையும் இந்த மாதிரி பொண்ணு வேணும் ன்னு வேணா நினைக்கலாம்., இந்த பொண்ணே வேணும்னு நினைக்க முடியாது இல்லையா., அப்படின்னு சொல்லிட்டு இருந்தேன்., சொல்லிட்டு நான் போய் ஃபேமிலியோட நிக்கிறேன்., நீயும் வந்து நிக்கிற, எனக்கு அதுக்கப்புறம் பதட்டம் தான் வந்துச்சு., மாப்பிள்ளையோட சிஸ்டர்ன்னு தெரிஞ்ச உடனே கூட கொஞ்சம் டென்ஷனாவும் இருந்துச்சு., அதுக்கு அப்புறம் தான், நான் பந்தகால் நடுவதற்கு எல்லாம் வராமல் இருந்தது., எங்க உன்ன பாத்தா என் மனசு கண்ட்ரோல் இல்லாம போயிரும்னு ஒரு பயமும் இருந்துச்சு., அப்புறம் என்ன நானே பேசி மாத்திக்கிட்டேன்., அதுக்கப்புறம் நீ என்கிட்ட சொல்லும் போது., நீ சொல்ல போறேன்னு எனக்கு தெரிஞ்சுச்சு., ஏன்னா கல்யாணத்து அப்பவும் சரி, அதுக்கு முன்னாடி உள்ள சில பங்க்ஷனில் மீட் பண்ணும் போதும் சரி, ராகவன் கண்டுபிடிச்சிட்டான்.,
உனக்கு புடிச்சிருக்கு என்பதை ராகவனே கண்டு பிடிக்கும் போது., நான் கண்டுபிடிக்க மாட்டேனா., எங்க நீ சொல்லுவியோனு தான் ஒதுங்கி ஒதுங்கி போனேன்., ஆனா நீ சொல்லிட்ட., சொல்லும் போது எனக்கு ஃபேமிலி மட்டும்தான் கண்ணுக்கு தெரிஞ்சுச்சு., மத்த எதுவும் யோசிக்கல., ஏன் என்னோட விருப்பத்தை கூட நான் யோசிக்கல., நான் என் மனச மாத்திக்கிட்டதுக்கு நானா சொல்லிக் கொண்ட ரீசன்., நீ வளர்ந்த விதமும்., இந்த வீட்ல உன்னால வாழ முடியுமா அப்படிங்கறது மட்டும் தான்., அந்த ரீசன் வச்சு தான் என் மனச மாத்திக்கிட்டேன்”, என்று சொல்லவும்.
“ஒன்னுமில்ல, இப்படியே இரண்டு பேரும் ஓடிப்போயிருவமா”, என்று கேட்டாள்.
அவனும் “இப்பதானே சொன்ன, வீட்ல சொன்னா உடனே கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க., உன் படிப்பு ஸ்பாயில் ஆயிடும், உன்னுடைய டிரெய்னிங்க்கு டிஸ்டபன்ஸா இருக்கும், நீ என்கூட வர முடியாது ன்னு இப்படி நிறைய ரீசன்ஸ் சொன்ன., இப்ப ஓடிப்போலாமா ன்னு கேக்குற”, என்று சொல்லவும்.
“அப்படித்தான் தோணுது, ஆனா வேண்டாம் லவ் பண்ணனும்., என் பிரண்ட் கிட்ட அப்படி தான் சொன்னேன்., ஆசை தீர லவ் பண்ணனும்”, என்றாள்.
“ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் லவ் பண்றதுக்கு டைம் இருக்காதா”, என்று கேட்டான்.
“அப்பவும் லவ் பண்ணுவோம், அப்ப இருக்குற லவ் மெச்சூர்டு லவ் ஆயிரும்., இப்போ சின்ன பிள்ளைத்தனமான சின்ன சின்ன ஆசைகள், கள்ளத்தனமா பண்ணிக்கிற இதோ இப்படி நிக்கிற மாதிரி., இது எல்லாமே தனி கிக்கு தானே”, என்றவள்.
“ஆமா மனசுக்குள்ள ஒரு பயம் இருந்தாலும் இப்படித்தான் இருக்கணும் மனசுக்கு தோணுது தானே”, என்று கேட்டாள்.
“ஆமா நல்லா தான் இருக்கு., ஆனா என்னை நீ ரொம்ப மாத்திட்ட”, என்று சொன்னவன். “வீட்டு மொட்டை மாடியிலேயே உன்னை இப்படி பிடிச்சுட்டு நிக்க வச்சு இருக்கியே”, என்று சொல்ல.,
“சரி சரி அப்படி ஒன்னும் நீங்க பயந்துகிட்டு நிக்க வேண்டாம், என்னை விடுங்க”, என்று சொல்லி அவனிடமிருந்து நகர்ந்து செல்ல முயன்றவளை மீண்டும் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டவன்.,
“அதான் சொல்லிட்டேன்ல, இனிமேல் அப்படி எல்லாம் என்னை விட்டு நீ போக முடியாது”, என்று சொல்லி விட்டு, “நெக்ஸ்ட் டைம் நான் வரும்போது நம்ம ரெண்டு பேரும் மீனாட்சி அம்மன் கோவில் போறோம், சரியா”, என்று சொன்னவன்.
“உனக்கு புடவை தான் ரொம்ப பிடிக்குமா”, என்று கேட்டான்.
“யார் சொன்னது”, என்று கேட்டாள்.
“இல்ல கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தடவை பாட்டி தாத்தா எல்லாரும் இங்க வந்து இருந்தாங்கல்ல., அப்போ நீ ஏதோ ப்ராக்டிஸ் இருக்கு வர முடியாதுன்னு சொல்லிட்ட அப்படின்னு சொல்லி சொன்னாங்க., அந்த டைம்ல உங்க பாட்டி தான் சொல்லிட்டு இருந்தாங்க, என் பேத்திக்கு இங்க வந்தா தறில நெய்யுற அந்த காட்டன் சாரீஸ் எல்லாம் வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தா., அதை காரணம் சொன்னா வந்துருவான்னு நினைச்சு தான், அவளை கூப்பிட்டேன்., ஆனா நான் இன்னொரு தடவை வாங்கிக்கிறேன் பாட்டி ன்னு சொல்லிட்டா” என்று பாட்டி சொன்னதை சொன்னவன்.
“அதையும் மனசுல நினைச்சு தானே வச்சிருந்த”, என்றான்.
“ஆமா_ என்று சொல்லவும்.,
“சரி, அதுக்கு நான் கூட்டிட்டு போறேன்., நானே வாங்கி தர்றேன்”, என்று சொல்லவும்.,
“ஓஹோ”, என்று சொன்னாள்.
அவனும், “இங்கே விட திண்டுக்கல்ல நல்லா இருக்கும்., போலாமா” என்றான்.
“ஓகே நீங்க வரும்போது, ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு இடத்துக்கு போலாம்”, என்று சொல்லவும்.,
“கண்டிப்பா போலாம்” என்று சொல்லி அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன்.,
அப்படியே படியில் அமர அவன் கால்களுக்கு அருகில், அதற்கு அடுத்த படியில் அமர்ந்தவள்., இருவரும் கையைப் பிடித்துக் கொண்டு சற்று நேரம் எதுவும் பேசாமல் அவர்களின் தனிமை ரசித்துக் கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் ராகவன் “சித்து” என்று சத்தம் கொடுத்துக்கொண்டே வர.,
இவள் எழுந்து தள்ளி நின்று கொண்டாள், சித்து மாடி படியிலிருந்து ராகவனை நோக்கி செல்ல.,
அதன் பிறகு “பேசியாச்சா” என்று கேட்டவன்., “சரி மீதி அப்புறம் பார்க்கலாம், இப்ப நாங்க சாப்பிட போறோம், நீ வரியா மா”, என்று கேட்க.,
“இல்ல ண்ணா சாப்பாடு இருக்கு, ஓகே பை”, என்று சொல்லிவிட்டு அவள் தன்னறைக்கு திரும்பவும்,
சித்துவும், “போன் பண்றேன் போ”, என்று சொன்னான்.
இவளும் அறைக்குள் வந்து கதவை சாத்திக்கொண்டு, கண்ணாடி முன்னாடி நின்றவள், ‘பார்றா நேத்திக்கு தான் சொன்னேன், அந்த சித்து பையனுக்கு குடுத்தே வைக்கல ன்னு, இன்னைக்கு பாரு எல்லாம் மாறிப் போச்சு, ஆஹா வந்துருச்சு ஆசையில் ஓடி வந்தேன்’, என்று தனியாக பாடிக் கொண்டிருந்தவள்.
சிரித்துக்கொண்டே தனக்கான உணவை எடுத்துக் கொண்டாள். அதன் பிறகு அன்றைய இரவு உறக்கம் அவளுக்கு ஒரு நிம்மதியான உறக்கமாக இருந்தது.
அந்த நிம்மதியான உறக்கமோ என்னவோ, காலையில் அவள் முகம் அவ்வளவு மகிழ்வாகவும் அவ்வளவு அழகாகவும் தெரிந்தது.