Advertisement

அத்தியாயம் – 9

அவளின் சடங்குகள் முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்து. இன்று தான் மீண்டும் பள்ளி  செல்ல தொடங்கி இருந்தாள். அந்த வயதுக்குரிய பேச்சுகள் தோழிகளின், கின்டல் கேலி என்று எல்லாவற்றையும் கடந்து அந்த நாட்கள் எல்லாம் அவளுக்கு இனிமையே, அவளுக்கு பள்ளியில் பல பேர் தோழிகளாக இருந்தாலும். அவளது நெருங்கிய தோழி என்றாள் நந்தினி தான். நந்தினியின் வீடும், அவள் இருக்கும் தெருவிற்க்கு அடுத்த தெருவில் தான் உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் இருவரும் பள்ளிக்கு ஒன்றாக சென்று வருவார்கள். அவள் பெற்றோருக்கு அவள் ஒரே மகள், இவர்கள் வீட்டினர் அளவுக்கு வசதியானவர்கள் இல்லை, அவர்களுக்கு என்று 2 ஏக்கர் நிலம் இருந்தது, அதில் காய்கறிகள் பயிர் செய்து மொத்தமாக சந்தையில் விற்றுவிடுவார்கள். 

அவர் மூன்று பேருக்கு அது தாராளம். இப்போது எல்லாம் கதிர் அதிகம் அவளுடன் இருப்பது இல்லை, நடந்த பிரச்சனைக்கு பின் கனேசன் அவனை தனியாக ஏதாவது தொழில் தெடங்குமாறு கூறிவிட, தங்கள் தென்னம் தோப்பில் இருந்து வரும் தேங்காய் நார்களைளைக்கொண்டு கயிறு திரிப்பது, தேங்காய் ஒடுகள் வைத்து கைவினைப்பொருட்கள் செய்வது என்று முதலில் சிறிய அளவில் செய்து பார்த்தவன் அது நல்ல  லாபம் தரவே அதையே கொஞ்சம் விரிவு படுத்து நினைத்தான். அது விஷயமாக அவன் அலைந்துக்கொண்டு இருக்க, அவனால் முன்பு மாதிரி கதிரழகியுடன் நேரம் செலவு செய்ய முடிவில்லை. 

அந்த வருட பொது  தேர்வில் அவள் நல்ல மதிப்பெண் பெற்று இருக்க, அடுத்து அவள் கணினி பிரிவை தேர்ந்து எடுத்து இருந்தாள். இவளோடு நந்தினியும் அதே பிரிவில் சேர்ந்து இருந்தாள். இந்த இடைபட்ட நாட்களில் அன்பழகனுடன் அவளுக்கு ஒரு நட்பு உருவாகி இருந்து. முன் போல் கதிருக்கு இவளிடம் நேரம் செலவு செய்யமுடியாமல் போக, தனக்கு ஏற்படும் பாடம் சம்பந்தமான சந்தோகங்கள், மற்றும் தேவைகளை அவள் தந்தையிடம் கேட்க, அவர் அன்பழகனை கைகாட்டினார். 

அவனும் அவளிடம் நல்ல முறையில் நடந்துக்கொண்டான். நாம் தான் இவரை இத்தனை நாள் தவறாக நினைத்துவிட்டோம் போல என்று எண்ணியவள், கதிரை போல் அவனிடமும் நட்பு பாராட்டினால். இவளோடு எப்போதும் இவள் தோழியும் இருப்பாள்.  நந்தினிக்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் அன்பழகன் மேல் எப்பொதும் ஒரு ஈர்ப்பு இருந்துக்கொண்டே இருந்து. அவன் அமைதியும், அழகும், நாகரிகமாக நடந்துக்கொள்ளும் தன்மையும் அவளுக்குள், அந்த பருவத்துக்குன்டான ஆர்வத்தை தூண்டிவிட்டு இருந்து. 

கதிரழகியை கொண்டு பார்க்கும் போது நந்தினி நல்ல நிறமாக இருப்பாள், அவள் பெற்றோருக்கு ஒரே பெண் என்பதால் அவள் கேட்டது கிடைத்துவிடும், தன் நடை உடை பாவனைகளில் அதிக கவனம் எடுத்துக்கொள்வாள். இதை எல்லாம் அன்பழகனும் கவணித்துக்கொண்டு தான் இருந்தான். இருவரும் கதிரழகியின் முன் படிப்பு சம்பந்தமாக நிறைய பேசியும் இருக்கிறார்கள். கொஞ்ச காலத்திலேயே தோழியின் மனதை கண்டுக்கொண்ட கதிரழகி, அவளிடம் இது எல்லாம் இந்த வயதில் தேவை இல்லாத வேலை நந்து, நாம் நன்றாக படித்து முடிப்பது தான் இப்போது  நம் வேலை, அதை விடுத்து தேவையில்லாத வேலைகளை செய்யாதே என்றாள். அப்போதைக்கு அவள் தலையாட்டினாலும். அதை பற்றி அதிகம் கதிரழகியிடம் பேசுவதை தவர்த்தாலும். அவள்  மனதில் அன்பழகன் இடம் பிடித்து இருந்தான். அவனும் அவளிடம் எதையும் வெளிப்படையாக பேசவில்லை என்றாலும், இருவருக்கும் இடையில் ஒரு பிடிப்பு இருந்ததுவோ? ஆனால் அதன் பின் கதிரழகி அதை பற்றி பேசவில்லை, நந்தினியும் அதை பற்றி கதிரழகியிடம் பேசிக்கொள்ளவில்லை.

இவர்கள் படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் தான் பாக்கியலட்சுமி, கணவன் வேறு ஊரில் பணியில் இருக்க, மகன்  +2 முடித்து  இரானுவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்க, இவர் இந்த ஊரில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

இப்போது ரத்தினத்தின் குழந்தைகள் வளர்ந்து இருந்தனர், அவர்களும் கிதிரழகி படிக்கும் பள்ளியில் தான் 5ஆம் வகுப்பு படிக்கிறார்கள், கனேசன் அம்மாவிற்க்கு எங்க ஆண் வாரிசே இல்லாமல், தன் மகன் இருந்து விடுவானோ என்று இருந்து. ஆனால் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று தந்த ரத்தினத்தின் மீது இப்போது அவருக்கும் பிரியம் வந்து இருந்து, வீட்டு பெறுப்புகள் அனைத்தும் அவளிடம் கொடுத்துவிட்டு ஒய்வு எடுக்கிறார்.

கதிர் இப்போது தன் தொழிலில் ஒரு திடமாக நிலையை அடைந்து இருந்தான். அவன் பெருட்களை தேடி சென்று விற்றது போய், இப்போது அவனுக்கு ஆடர்கள் வர தொடங்கி இருந்து. இப்போது எல்லாம் வீட்டில் நிறையை நேரம் இருக்க முடிந்தது. அதுவும் இல்லாமல், கதிரழகி அவள் அவனுக்கு புதிதாக தெரிந்தாள்.  எப்போதில் இருந்து இந்த பெண் இவ்வளவு பெரிய பெண் ஆனால். தான் பார்க்க வளர்ந்த அக்கா பெண்ணா இவள் என்ற பிரம்மிப்பு அவனுள்.

அவளை குழந்தை முதல் வளர்த்தவன் அவன் தான், ஆனால் அப்போது எல்லாம் அவள் அவனுக்கு குழந்தையாக தான் தெரிந்தாள். ஆனால் இப்போது, அக்கா மகள் என்பதை விட, அவள் என் மாமன் மகள் என்ற எண்ணம் வந்து இருந்து. அவள் மீதான அவனின் பார்வை மாறி இருந்து. அவள் நினைத்தை எல்லாம் அவளுக்கு செய்ய வேண்டும், அவளை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்று நினைத்தவன், இன்னும் கடினமாக உழைக்க துடங்கினான்.

கதிரழகியிடமும் அவனின் பேச்சுகளில் இப்போது சில வித்தியாசங்கள் இருந்து, ஆனால் அதே சமயம் அந்த சிறு பெண்னை அவன் திசை திருப்பவும் நினைக்கவில்லை. அவள் படித்து முடிந்து, வரும் வரை காத்து இருக்க முடிவு செய்தான். அவன் கிணற்றி தண்ணீரை ஆற்று வெள்ளமாக கொண்டு போய்விடும். தன் மாமா அவளை தனக்கு திருமணம் செய்யாமல் போய்விடுவாரா என்ன என்று இருந்துவிட்டான். அவனாவது அவன் மனதில் இருப்பதை கனேசனிடம் சொல்லி இருக்கலாம்………………..

இப்படியே இவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து, நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்கள். கதிரழகி இளகளை கணினி அறிவியல் படிப்பை தேர்ந்து எடுக்க, குடும்ப நிலை காரணமாக நந்தினி டிப்ளமோ இன் டீச்சர் எஜூகேஷன் (DTEd.) தேர்ந்து எடுத்தாள். 

அவள் முதல் வருடம் கல்லூரியில் சேர்ந்த பின் அவளுக்கு நிறைய புது நன்பர்களும், அனுபவங்களும் கிடைத்து. அதன் பின் நந்தினியுடன் இருந்த நெருக்கம் சற்று குறைந்து போய்யிற்று. இருந்தும் இருவரும் பார்க்கும் போது எல்லாம் பேசிக்கொள்ளவார்கள்.

கல்லூரி தெடங்கி 3 மாதம் முடிவதைந்த நிலையில், கனேசன் தாய் பார்வதிக்கு உடல் நிலை மிகவும் குன்ற துவங்கியது. என்தான்  மருத்துவம் பார்த்தும், அவள் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. மகனை அழைத்தவர், தன் பேத்தி திருமணத்தை நடத்துமாறு கூற, கனேசன் அவரை கோவமாக திட்டிவிட்டார். என்னமா பேசுறிங்க அவளுக்கு என்ன வயசு ஆச்சு, இப்போ போய் கல்யாணம் அது இதுனு பேசுறீங்க என்றார், தாய்யின் உடல் நிலை மறந்து. அவள் இப்பதான் காலேஜ் படிக்கிறா படித்து முடித்து இருந்தால் கூட பரவாயில்லை, என்றார் கோவமாக. இங்க பார்றா, நான் எத்தனை நாள் இருப்பேன் தெரியலை, அவள் தாய் வழியிலும் பெரியவர்கள் யாரும் இல்லை  நாம என்னதான் பார்த்து செய்தாலும், தாய் இல்லாத பெண் பின்னாளில் ஒரு பேசு வரும். அவ சடங்கு அப்ப பாத்தியில்ல எண்ணவெல்லாம் பேசுனாங்கனு. 

நீ ஏன்டா அவளை வெளியில் அனுப்ப நினைக்கிற, அவளுக்கு மாப்பிளை வீட்டிலேயே இருக்க, அவனுக்கு திருமணத்தை முடித்து அவளை படிக்கவை யார் வேணாம் என்று சொன்னது. என்று அவர் கதிர் வேலனை மனதில் வைத்து சொல்ல. அவருக்கு அன்று வரை அப்படி ஒரு எண்ணம் இல்லை. இருவரும் சிறு வயது முதல் அவரிடம், அவர் பார்க்க வளர்ந்தவர்கள். கதிரை தன் மகன் போலவே எண்ணி இருந்தவருக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை, என்பதை விட வரவில்லை. கதிரும் கூட அப்படி மகளிடம் எப்போதாவது பழகி இருக்கிறானா? என்று யோசித்தால் அப்படி ஏதும் அவருக்கு நினைவில்லை. அம்மா அந்த காலத்தில் இருப்பது போலவே இப்போதும் இந்த உறவுக்குள்ள கல்யாணம் பண்ணுவது எல்லாம் சாத்திய படுமா தெரியல. இனிமே அதை பற்றி பேச வேண்டாம் என்றார்.

ஆனால் பார்வதி அதை அப்படியே விடவில்லை. பேத்தியிடமும் தன் கடைசி ஆசை அவள் திருமணத்தை பார்ப்பது தான் என்று அவள் கைபற்றி கூறியிருந்தாள். சிறு வயது முதல் அவளை வளர்த்தவர், இப்படி அவள் கைபிடித்து கேட்பது அவளுக்கு சங்கடமாக இருந்து. வீட்டில் நடக்கும் இந்த பேச்சு எல்லாம் கதிர் வேலன் காதுக்கு கனேசன் கொண்டு செல்லவில்லை. அவனுக்கு தெரிந்தால் அவன் மனம் சங்கட படுவான். என்று நினைத்தவர் அதை அதோடு விட்டுவிட்டார்.

ஆனால் பார்வதி விடுவதாக இல்லை, மகன் விஷயத்தில் செய்த்து போல் இப்போதும் செய்ய தொடங்கினார். மருந்துகளை எடுத்துக்கொள்ள மறுத்தார், சரியாக உணவு எடுத்துக்கொள்ளவில்லை. என்று அவர் அவரை ஒரு பக்கம் நெருக்க மனிதர் நெந்தே போனார்.

வீட்டில் நடக்கும் அனைத்தும் தெரிந்து இருந்தும், அது ஏதுவும் ரத்தினத்திடம் நேரடியாக வரவில்லை. கனேசனுக்கு இதை யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை. கதிரிடம் பேசினால், அவன் அதை எப்படி எடுத்துக்கொள்வான் என்று நினைத்தவர். என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார். ஆனாலும் அவருக்கு அப்போதும் மகளுக்கு திருமணம் செய்யும் எண்ணம் மட்டும் வரவில்லை.

ரத்தினம் அவரிடம் என்ன இவ்வளவு கவலையாக இருக்கிங்க என்றார். அவர் அம்மாவின் எண்ணத்தை கூற, அதை கேட்டவர், நீங்க சொல்லுறது சரிதான் ஆனா அவங்க மனசுல இந்த குறையோட இருக்க வேண்ணாம்மே என்றாள். என்ன பேசுற ரத்தினம், கதிரை நான் என் புள்ளை மாதரி தான் பார்க்கிறேன். அவன்கிட்ட போய் எப்படி இத கேப்பேன். அவன் என்னை பற்றி எண்ண நினைப்பான். என்றவர், அம்மா ஆசைபடுவதாக வைச்சிகிட்டாலும், இந்த வயதில் அவளுக்கு என்ன தெரியும் என்று கல்யாணம் பன்னி வைக்க, அதுவும் இப்போ உடனடியா மாப்பிள்ளைக்கு எங்க போக, அவன் கிடைச்சாலும் என் மக எப்படி……………. என்று தன் மனதில் இருப்பதை எல்லாம் அவளிடம் கொட்டிவிட, இது தான் உங்க பிரச்சனையா, அப்போ அவளுக்கு வீட்டோட இருக்க போல் மாப்பிளை அமைந்தால் உங்குக்கு பிரச்சனையில்லையா? என்றாள்.

அவளை கேள்வியாக பார்க்க, நான் சொல்லுறேன் தப்பா நினைக்காதீங்க, கதிர் மட்டும் இல்லை, அன்பும் கூட தான் அவளுக்கு முறை மாமன். நீங்க சொல்லுற மாதிரி கதிரும், அழகியும் சிறு வயது முதில் ஒன்றாக வளர்ந்தவர்கள். அவங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லாமல் இருக்கலாம். ஆனா அன்பு அப்படி இல்லை. படித்து நல்ல வேலையில் இருக்கான், எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, நல்லா சம்பாதிக்கிறான். நம்ம பெண்ணு நம்ம கண்ணு முன்னாடியே இருப்பா. கல்யாண முடிந்து அவ படிக்க போகட்டும், அவளை யார் வேணம் என்று சொல்லுவா?

என்று தன் எண்ணத்தை கனவனிடம் கூறினார். அவர் அந்த நேரத்தில் எதுவும் சொல்லவில்லை என்றாலும், மறுத்தும் பேசவில்லை. கதிரழகியின் சடங்கில் நடந்து எல்லாம் ரத்தினத்துக்கு இன்றும் மறக்கவில்லை. அவர் கதிரழகியை உண்மையான தாய் அன்போடு தான் பார்த்துக்கொண்டார். அவளுக்கு எப்படியோ, ஆனால் அவருக்கு தான் முதல் பிள்ளை.அன்று நடந்த பிரச்சனையில் கூட பார்வதியும், கனேசனும் அவர்கள் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. கதிர் வந்து பேசிய பின் தான் அவர்கள் அடங்கினார்கள். 

என்ன தான் தான் உண்மையான பாசம் வைத்து இருந்தாலும், இந்த வீட்டில் தன் நிலை இதுதான் என்பதை அந்த நாளில் அவர் கசப்பாக உணர்ந்தார். திருமணம் ஆன புதிதில் கனேசன் புறக்கணிப்பு எல்லாம் அவருக்கு பெரியதாக தெரியவில்லை. அவருக்கு நன்றாக தெரியும், அவர் தாயின் வற்புறுத்தால் தான் தன்னை மணந்தார் என்று, ஆனால் அவருடன் வாழ ஆரம்பித்து. இரண்டு குழந்தைகள் பிறந்தபின்னும் அவர் தனக்காக பேசாதது அவருக்கு மிகுந்த மன வருத்ததை கொடுத்து. வீட்டில் இருக்கும் உறவுகளே இப்படி இருக்க, நாளை கிதிரழகிக்கு திருமணம் முடிந்து வெளியில் இருந்து வரும் உறவுகள் தன்னையும் தன் மகன்களையும் எப்படி நடத்துவார்கள், அதற்கும் இவரகள் இப்படி அமைதியாக தானே இருப்பார்கள் என்று நினைத்தார். 

இன்று பார்வதியின் பேச்சுக்கள் அதை மேலும் அவரிடம் கிளறி இருந்து. இந்த வயிதில் அவளுக்கு திருமணம் அவசியமா, அதுவும் பார்வதி சென்னது, நான் இருக்கும் போது என் பேத்திக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும், அவள் அம்மா வழியிலும் பெரியவர்கள் இல்லை என்று கூறியது. ரத்தினத்திற்க்கு இன்னும் காயபடுத்துவதாக  இருந்து. ஏன் நான் என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தரமாட்டேன்னா? என்ற கேள்வி அவரிடம். இப்போதும் கனவர் ஏதும் சொல்லவார் என்று பார்க்க, அவரோ மகளுக்கு இந்த வயதில் திருமணம் வேண்டாம் என்றாரே தவிர, ஏன் நாங்கள் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க மாட்டோமா என்று கேட்கவில்லை. அப்படி என்றால் அவர் மனிதிலும் தான் என்னவாக இருக்கிறோம் என்று நினைப்பு அவருக்கு, பெரும் பயத்தை கொடுத்து. 

ஒரு வேளை தனக்கு குழந்தைகள் இல்லை என்றால், அவர் தன்னுடன் வாழாமல் இருந்து இருந்தால், மகளுக்கு திருமணம் முடித்து என்னை என்ன செய்து இருப்பார். என்று கேள்விகள் அவரை மனதை தாக்க அதற்கு பதில் தான் அவரிடம் இல்லை. அவரின் பயன் அதீத கற்பனையை அவருக்கு தோற்றுவிக்க. நன் நிலையை நினைத்து மிகவும் பயந்து போனா் ரத்தினம்.

இதை எல்லாம் மனதில் வைத்து தான் அவர் அன்பழகனுக்கு அவர் அழகியை திருமணம் செய் கேட்டது.

இவரின் இந்த முடிவால் மூவரின் வாழக்கையும் திசைமாறி போகும் என்று தெரிந்து இருந்தால், அன்று அதை செய்து இருக்க மாட்டாரே என்னவோ?

மகன் போல் வளர்த்த கதிர், கனேசனின் சட்டையை பிடித்து சன்டையிட்டு இருக்கமாட்டானோ?

இல்லை அன்பழகன் தான் தன் காதலை மறைத்து இருக்க மாட்டானோ?

  

   

தொடரும்……………. 

Advertisement