Advertisement

அத்தியாயம் – 8

கதிரழகி அன்று பள்ளிவிட்டு தன் கதிர் மாமாவுடன் பேசியபடியே வீட்டிற்குள் வந்த, வழகத்துக்கு  மாறாக, அன்று ரத்தினம், அவரின் அம்மா, அன்பழகன், கதிரின் அம்மா, பார்வதி என எல்லோரும் கூடத்தில் இருக்க, எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி இருந்து. அவள் வீட்டில் அவள் இப்படி எல்லோரையும் ஒன்றாக பார்த்து இல்லை. அதுவும் எல்லோரும் சிரித்த படி அமர்ந்து இருந்த விதம் அவளை மிகவும் கவர்ந்து.

காலையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின் தான் ரத்தினம் வீட்டில் விஷயத்தை சொல்லி இருந்தாள், அந்த ஊரில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பார்வதியும் ரத்தினமும் அதை உறுதிபடுத்திக்கொண்டு, அப்படியே அவள் வீட்டிற்க்கும், கதிரின் அம்மாவிற்க்கும் தகவல் சொல்லி இருந்தார். எல்லோருக்கும் இதில் அளவற்றை மகிழ்ச்சி தான், அதனால் அன்றே அவளை பார்க்க எல்லோரும் வந்து இருந்தனர். 

கனேசன் முகத்திலும் மகிழ்ச்சியின் சாயல் தான். இப்படி இருக்கும் போது தான் கதிரழகி வீட்டுக்குள் நுழைந்தாள். எல்லோரையும் பார்த்தவளுக்கும் கொண்டாடமாக தான் இருந்து. 

அவளுக்கு தெரிந்து அவள் வீட்டில் இத்தனை பேர் வருவது செந்தாமரையின் நினைவு நாள் அன்று தான். செந்தாமரையின் இறப்புக்கு பின் பெரியதாக அந்த வீட்டில் விழாக்கள் இருந்து இல்லை. அன்று கூட எல்லோர் முகத்திலும் சிரிப்பு இருக்காது. அதனால் குழந்தை அதை பார்த்த படி இருந்தாள். பார்வதி அவள் வந்த உடன் அவனை அழைத்தவர், போய் இரண்டு பேரும் கால் கை கழுவிட்டு வாங்க, பலகாரம் தரறேன் என்றார். அவளும் வேகமாக ஒட அவள் பின்னே கதிரும், கதிர் இப்போது பதின்ம வயதில் இருந்தான். முன்னைவிட இப்போது அக்கா மகளின் மேல் அவனுக்கு அதிக அக்கரை.

எல்லாம் முடித்து வந்தவள், பார்வதி கொடுத்த பலகாரத்தை எடுத்துக்கொண்டு ரத்தினத்தின் மடியில் அமர போனாள், சட்டென்று அவளை பிடித்து நிறுத்திய பார்வதி, முன்னாடி மாதிரி அவ மடியில் இனி உட்கார கூடாது, அவ வயிற்றில் குட்டி பாப்பா இருக்கு என்றார். இது ஒரு எதார்த்த மான பேச்சு தான். ஆனால் அதில் அவள் முகம் சுருகிவிட, அப்போ நான் அவங்க பாப்பா இல்லையா? அவங்க பாப்பா இப்பதான் வயிற்றில் இருக்க? என்றாள். இந்த கேள்வியில் அடுத்து யாருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. குழந்தை இப்படி கேட்டுவிடுவாள் என்று யாரும் எதிர்பாக்கவும் இல்லை. 

இதுவே இவர்கள் மட்டும் இருந்து இருந்தால் பார்வதி  என்ன சொல்லி இருபாரோ, கதிரின் அம்மாவும், ரத்தினத்தின் அம்மாவும் இருப்பாதால் அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை. அதுவரை அந்து வீட்டில் இருந்த மகிழ்ச்சி முற்றிலும் வடிந்து போனது எல்லோர் முகத்திலும். கதிர் சட்டென்று நிலையை ஊகித்தவன், அழகி பாப்பா இப்படி எல்லாம் பேச கூடாது என்று  கூற, அவன் சொன்ன தோனியே தான் ஏதோ தவறாக கேட்டுவிட்டோம் என்று அவளுக்கு தோன்றியதோ, அமைதியாகிவிட்டாள், 

ரத்தினம் திருமணம் முடித்து வந்த போது கதிரழகி குழந்தை, அதே போல் ரத்தினத்தை எப்படி அழைக்க வேண்டும் என்று யாரும் அவளுக்கு சொல்லவில்லை. பார்வதி மகன் திருமனத்துக்கு பின் இருந்த நிலையை பார்த்து அவருக்கு குற்ற உணர்வாக இருந்தது. அம்மா என்று அழைக்க சொன்னால் அது அவனை வருத்துமோ என்று நினைத்தார், அதனால் அவர் அதை பற்றி யோசிக்கவில்லை. எப்போதாவது வந்து போகும் ரத்தினத்தின் அம்மாவிற்க்கு மகளின் வாழ்க்கை இப்படி இருக்கிறதே என்ற கவலையில் அதை எல்லாம் அவர் கவனித்தது இல்லை, கதிரின் அன்னைக்கோ என் தான் மாப்பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், மகளின் இடத்தில் இன்னோரு பெண் என்பது அவருக்கு வருத்தம். கனேசன் இதை பற்றி பேசியதே கிடையாது.  ரத்தினத்துக்கும் கணவன் மற்றும் மாமியார் ஏதும் சொல்லாத போது தான் என் சொல்லுவது என்று தயக்கம். இப்படியே நாட்கள் செல்ல,  அவள் சிறிது வளர்ந்த பின் கதிர் அவளை மாமி என்று அழைப்பதை பார்த்தவள் அவளும் அப்படியே அழைப்பாள், இதை யாரும் இதுவரை பெரியதாக எடுத்துக்கொண்டு இல்லை. 

ஆனால் அவள் பள்ளியில் சேர்ந்து 3 வருடங்கள் கடந்து இருந்து, இந்த இடைபட்ட நாட்களில் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் மற்றும் அவள் சந்திக்கும் வெளிமனிதகள், அவளிடம் அவள் அம்மா பற்றி கேட்டாள் அவளுக்கு சொல்ல தெரியாது முழித்தாள், கதிர் இடம் இதை பற்றி கேட்டால் அவனும் அதற்கு சரியான பதிலை சென்னது இல்லை. 

கதிர் மட்டும் அல்ல கனேசன் கூட இதற்கு சரியான பதிலை சொன்னது இல்லை, அவள் இதை பற்றி பேசினால் வேறு எதாவது பேசி அவளை திசை திருப்பி விடுவார்கள். இன்று அவள் பள்ளியில் அவள் தோழி ஒருத்தி அவளுக்கு தம்பி பிறந்து இருப்பதாக கூற, அது எங்க கிடைக்கும் என்றாள்.  அது அம்மா வயித்துல இருந்து வரும், என்றாள் அந்த பெண். அதை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தவள், பார்வதி அவள் வயிற்றில் குழந்தை இருப்பதாக கூறியவுடன், இப்படி கேட்டு விட்டாள். இதுவே அவர் உண் கூட விளையாட இந்த வீட்டுக்கு ஒரு பாப்பா வரபோகுது என்றோ அல்லது அவளுக்கு தம்பி தங்கை வர போகிறார்கள் என்றோ சொல்லி இருந்தாள், அவள் ஒரு வேளை ரத்தினத்தை தன் அம்மாவா  நினைத்து இருப்பாளோ என்னவோ?

அவள் அப்படி கேட்டதும், கதிர் அவளை அதட்டி அங்கு இருந்து அழைத்து செல்ல நினைக்க, ரத்தினத்தின் அன்னையோ அவளை அழைத்தார், அவளை தன் மடியில் அமர வைத்து, உனக்கு இவ தான் அம்மா என்று சொன்னார் ரத்தினத்தை கை காண்பித்து. அவர் அப்படி சொன்னதும் குழந்தை எல்லோர் முகத்தையும் பார்க்க யாரும் அதை இல்லை என்று சொல்லவில்லை. 

உடனே அவள் அப்போ நான் அவங்களை அம்மானு கூப்பிடலாமா? என்றாள்..

ஆம் என்றவர், அந்த பாப்பாவ நீ தான் பாத்துக்கனும் நீ தான் அதுக்கு அக்கா என்றும் சேர்த்து கூறியிருந்தார். சரி என்று தலையை அசைத்தவள், விளையாட வெளியே சென்றுவிட்டாள். அவள் போன பின் அங்கு கனத்த அமைதி தான், ரத்தினத்தின் அம்மாவே பேச தொடங்கினார். யார் ஒத்துக்கொண்டாலும் இல்லைனாலும் இந்த கல்யாணம் இந்த குழந்தைக்காக தான் நடந்து, ஆனாலும் யாரும் அடுத்த அடி எடுத்து வைக்கல, ஒரு அம்மாவா இவ இப்படியோ வாழாமா போய்விடுவாளே என்று எனக்கு பயம் இருந்தது, அதனால் குழந்தை இவளை உறவு சொல்லி கூப்பிட்டா இன்னும் அவ கூட ஒட்டிகிட்டா, அவ வாழ்க்கை என்ன ஆகும், அது தான் இது வரைக்கும் இத பத்தி நான் பேசல, கதிரழகி என் மகள் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், அவள் அவளுக்கு அம்மா தான், அவ என் பேத்தி தான் என்ற அவர் பேசியது அங்கு இருந்த எல்லோருக்கும் மன நிறைவை தந்து இருந்தது.  கேட்டு இருந்து கனேசனுக்கும்.

அவர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிப்பது போல், அடுத்த முறை அவர்கள் மருத்து பரிசேதனைக்கு செல்லும் போது, அது இரட்டை குழந்தைகள் என்று தெரிவந்தது. ரத்தினத்தை முன்னிட்டு அவள் அம்மாவும், அன்பழகனும் அடிக்கடி அங்கு வந்து பொக இருந்தனர். அப்போது எல்லாம் அவன் கதிரழகியை பார்த படியே இருப்பான் ஆனால் அருகில் சொல்லவோ, பேசவே மாட்டான். 

9 ஆம் மாத முடிவில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை கவனித்துக்கொள்ள ரத்தினத்தின் அம்மாவும், தம்பியும் இங்கேயே இருப்பாத முடிவு செய்யப்பட்டது. குழந்தைகளுடன் இவர்கள் பொழுது இனிமையாக இருந்தது கதிரழகிக்கு.

அதே சமயம் இவர்கள் யார் கருத்திலும் பதியாத ஒன்று இருந்து, அது கதிருக்கும், அன்பழகனுக்கும் இடையே நடந்துக்கொண்டு இருந்த பணிப்போர்.  அன்பழகனுக்கு கதிர் அளவுக்கு அந்த வீட்டின்னுடன்னும், அங்கு இருந்த மற்றவரகளுடனும் ஒன்ற முடியவில்லை, கதிர் அளவுக்கு அவனால் அந்த வீட்டில் உரிமை எடுத்துக்கொள்ளவும் முடியவில்லை. அதிலும் கனேசன் கதிர் இருவரின் பினைப்பும் அவனுக்குள் ஒரு பொறாமை தீயை சத்தம் இல்லாமல் கொளுத்துவிட்டு இருந்து. சிறு வயது முதல் தந்தை என்ற உறவை அவன் அறிந்து இல்லை, அதை ஈடு செய்யும் வகையில் அவனுக்கு யாரும் இல்லை. ஆரம்பத்தில் அக்காவின் வாழ்க்கை பெருட்டு அவன் அந்து குடும்பத்தில் பாராமுகமாக இருந்த போதிலும், கனேசன் மற்றும் கதிர் இருவரின் நெருக்கத்தில் அவனுக்கு எப்போதும் ஒரு ஏக்கம் இருக்கும். ரத்தினத்தை திருமனம் செய்தது முதல் அவர் அவள் வீட்டிற்க்கு எல்லா உதவிகளையும் செய்தாலும், அவர்களிடம் நெருங்கியது இல்லை. அவருக்கும் அது வரவில்லையோ என்னவோ? கதிரிடம் எப்பொதும் ஒரு குழந்தை தனம் இருக்கும், அவனை பார்க்கும் யாருக்கும் அவனுடன் பேச தோன்றும், ஆனால் அன்பழகனிடம் ஒரு முதிர்ச்சி தெரியும், பார்க்க, அவன் செயல்கள் எல்லாம் ஒரு பெரிய மனித தோரனை இருக்கும். சட்டென்று அவனிடம் பேசிவிட முடியாது என்பது போல் ஒரு பாவனை எப்போதும் அவன் முகத்தில். இதை மாற்றிக்கொள்ளவோ, இதை விட்டு வெளிவரவோ அவன் எப்போதும் முயன்றது இல்லை. 

இது எல்லாம் கனேசன், அன்பழகனுக்கும் இருக்கும் இடைவெளியை இன்னும் அதிகமாக தான் மாற்றியது. அது இன்னும் பெரியதாகியது அவர்கள் இந்த வீட்டில் தங்க நேர்த்த போது. 

இப்படி நாட்கள் சென்றது, இருவரும் செங்கல்பட்டில் இருக்கும் கல்லூரியில் சேர்ந்தார்கள் தங்கள் படிப்புகாக, கதிர் வீட்டினரை பிரிய முடியாமல் வந்து செல்ல, அன்பழகன் அங்கேயே விடுதியில் தங்கி கொண்டான். கதிர் இரண்டாவது வருடம் படித்துக்கொண்டு இருக்கும் போது கதிரின் அம்மா உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட, தனக்கு என்று யாரும் இல்லை என்று அழுதவனை தாங்கியது கனேசன் தான்.  அதன் பிறகு எல்லாமே கனேசன் என்று ஆனது அவனுக்கு. 

படிப்பை முடித்துவிட்டு தன் மாமனோடு சேர்ந்து அவர்கள் நிலத்தில்  விவசாயம் செய்தான். வேலைக்கு போக சொல்லி கனேசன் சொன்ன பொது கூட அது மறுத்து அவர்களின் தொழில்களை கவனித்துக்கொண்டான்.

ஆனால் அன்பழகன் படித்து முடித்ததும், தேர்வு எழுதி அதே ஊரில் கிராம வங்கி ஒன்றி கிளர்க்காக சேர்ந்து இருந்தான். கதிரழகி  10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். அன்று தான் அந்த வீட்டில் அடுத்த பிரச்சனை ஆரம்பித்து. மாடுகள் வாங்குவது தெடர்பாக கதிர் வெளியூர் சென்று இருக்க. அன்று பள்ளிக்கு கிளம்பிக்கொண்டு இருந்தவள் தனக்கு ஏற்றபட்ட மாற்றத்தை அறிந்தவள் நேரே சென்றது பார்வதியிடம் தான். 

தனக்கு ஏற்பட்ட மாற்றத்தை அவள் கூற, மகிழ்ந்து போனவர் மகனுக்கு சேதி சொல்லிவிட்டார், அதே ஊரில் இருக்கும் அவர் சொந்தங்களுக்கு சொல்லிவிட்டவர், எல்லோருக்கும் மகிழச்சி, கோவில் பூசாரி இன்றே நல்ல நாள் இன்றே தலைக்கு தண்ணீர் உற்றிவிடலாம், இல்லை என்றால் இன்னும் 3 நாட்கள் கழித்து தான் நல்ல நாள் என்றுவிட்டார்.

கதர் ஊரில் இல்லை, அவன் நாளை மாலை நான் வருவான். அது வரை பிள்ளையை வெளியே இருத்தி வைக்க முடியாது. என்ன செய்யலாம் என்று யோசித்தனர் பார்வதியும், கனேசனும். 

ரத்தினம், தான் சற்று தயங்கி நான் ஒரு யோசனை சொல்லவா என்று கேட்க, இப்போ தலைக்கு தண்ணீர் தானே ஊற்றனும், அன்பு இங்கு தான் இருக்கான், அவனை வைத்து செய்துவிடலாம். சடங்கு அன்று கதிர் செய்யட்டும் என்று கூறினாள். இப்போதைக்கு கதிரை தொடரப்புக்கொள்ள முடியவில்லை. இது போல் பிள்ளையும் காக்க வைக்க முடியாது. அதனால் அப்படியே செய்துவிடலாம் என்ற முடிவு செய்தனர்.

அன்று மாலையே எல்லோருக்கும் சொல்லிவிட்டு, எல்லா ஏற்பாடுகளும் நட்ந்துக்கொண்டு இருந்து, அன்பழகனிடமும் விஷயம் தெரிவிக்கப்பட்டு அவனை வர சொல்ல, அவனுக்குள் மகிழ்ச்சியே, அந்த வீட்டில் நடக்கும் விஷேசத்தில் தன்னை முதன்மை படுத்தவது அவனுக்கு பிடித்து இருந்து. அதனால் அக்காவிடம் கேட்டு, அவளுக்கு ஒரு புடவையும், தங்க சங்கலியும் அவன் பனத்தில் வாங்கி இருந்தான். 

மாலை விழா ஆரம்பிக்க அங்கு இருந்த செந்தாமரை வழி உறவினர் ஒருவர், கதிர் எங்க என்று கேட்க, அவன் தற்போதுவிட்டில்  ஊரில் இல்லை  என்றும் அவனுக்கு பதில் அன்பழகன் முறை செய்வான் என்று சொல்ல பிரச்சனை ஆரம்பித்து அங்கு தான், அது எப்படி தாய்மாமன் இல்லாமல் இதை செய்யலாம் என்றும், கேட்க யாரும் இல்லை என்பதால் அவனுக்கான உரிமை கிடைக்கவில்லை என்றும், அவன் சொத்துக்களை தன் வசம் வைத்துக்கொண்டு, அவனை ஒதுக்கிவிட்டதாகவும் என்று ஆளுக்கு ஒன்று பேச பெரும் பிரச்சனை வெடித்து, இதில் ரத்தினம் மற்றும் குடும்பத்து ஆட்கள் எல்லோரையும் தாக்கி பேச,  அதில் ஒருவர் ஒரு படி மேல சென்று, இவன் படித்து முடித்து டிப்டாப்பா பேங் உத்தியோகம் பார்க்க, அவன ஒன்னுத்துக்கும் உதவாம உன் கூடவே வைச்சு இருக்க என்று பேசி இருக்க, அதுவரை ஏதோ கோவத்தில் போசுவதாக நினைத்து இருந்தவர். இவர்கள் இப்படி பேசவும் அதிர்ந்துவிட்டார்.

எந்த வீட்டில் வந்து யாரை பத்தி பேசறீங்க, முதலில் எல்லோரும் வெளியில் போங்கள் என்ற குரலில் எல்லோரும் திரும்பி பார்க்க, அங்கே கதிர் நின்று இருந்தான். பல தடவை முயன்று அவனை பிடிக்க முடியாமல் தான் இன்று வேறு வழி இல்லாமல் இந்த விஷேசத்தை வைத்து இருந்தார் கனேசன். ஆனால் எதிர் பாராத விதமாக அவனே அந்த ஊரில் இருக்கும் அவன் நன்பனுக்கு காலையில் அழைத்து இருக்க, அவன் விஷயத்தை கூறவும், பாதியில் ஊர் திரும்பிவிட்டான் கதிர்.

எனக்கு என் மாமாவை பற்றி தெரியும், அவரை நாக்கின் மேல் பல் போட்டு பேச இங்க ஒருத்தருக்கும் அறிகதை கிடையாது. நான் என்னவா இருக்கனே அது என் இஷ்டம், அதுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்று அனைவரின் வாயையும் அடைத்துவிட்டான்.

ஆனால் அவனின் செந்தங்கள் அவனையும், ரத்தினத்தையும் அவமானபடுத்தியதாக நினைத்தவன். அந்த கோபத்தை மனதில் வைத்து இருந்தான்………

இந்த இவனின் கோபம் தான் பின்னாளில் ஏற்படபோகும் அனர்த்தங்கள் அனைத்துக்கும் காரணம் என்று எப்போது உணர்வான். 

தொடரும்……………. 

Advertisement