Advertisement

அத்தியாயம் – 7

சென்னையில் இருந்து 70 கீ.மீ தள்ளியிருக்கும் ஊர்  தளவாடம்.  கிராமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் இருக்கும் ஊர். ஊரில் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிக்கூடம், நாளைக்கு 3 முறை வரும் பேருந்து.  இன்றும் இந்த ஊரில் பெரும்பாலும் மக்கள் செய்வது விவசாயம் தான், சிலர் தறிவைத்து இருந்தனர். தற்போது தான் சில இளவட்டகள் வெளி ஊர்களில் கல்லூரி மற்றும் வேலைக்கு என்று செல்வதால் அவர்கள் கையில் இருக்கும் தெடுதிரை கைபேசி என்று அந்த ஊர் பழமைக்கும் புதுமைக்கும் இடையில். 

இங்கு அவருக்கு 30 ஏக்கர் விளை நிலங்கள் இருந்தன,  தென்னம்  தோப்பு, காய்கறிகள், நெல், என்று பயிர் இட்டு இருந்தார் கனேசன், சொந்த விடு, பால் வியாபாரம், என்று அவர்கள் வாழ்க்கை முறை வளமானதே, அவர் விரும்பி மனந்து கொண்டவர் தான் செந்தாமரை, இருவரின் மகிழ்ச்சியான மனவாழ்க்கைக்கு பிறந்தவள் தான் கதிரழகி. செந்தாமரைக்கு கதிர்வேலன் என்ற தம்பி உண்டு, இவர்கள் திருமணத்தின் போது அவனுக்கு 8 வயது. இவர்கள் திருமணம் முடிந்து சில மாதங்களில் இவர்களின் தந்தை இறந்துவிட, அக்கா மாமா வீட்டில் தான் அவன் வாசம் அதிகம். தம்பி மீது ஏற்கனவே  அளவில்லாத பாசம் கொண்டவள் செந்தாமரை, தந்தையின் மறைவுக்கு பின் இருவரும் அவனுக்கு தாய், தந்தை என்று மாறி போயினர். அதன் பெருட்டே தன் மகளுக்கு கூட கதிரழகி என்று பெயர் வைத்தார் செந்தாமரை,  இவர்களுக்கும் கனிசமான விளை நிலங்கள் இருந்தன, அவற்றை அவன் அம்மா பார்வதி கனவன் மறைக்கு பின் பார்த்துக்கொண்டாலும். கனேசன் எல்லாவற்றையும் தன் பெறுப்பில் எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சியான இவர்கள் மனவாழ்க்கை 3 ஆண்டுகள் கடந்து இருந்த நிலையில்

செந்தாமரை மீண்டும் கருவுற்றார். அவர் 3 மாதம் இருந்த போது வீட்டில் தவறி விழுந்தவர், அந்த நேரத்தில் வீட்டில் குழந்தை கதிரழகி மட்டுமே இருந்தாள் அவளுக்கு அப்பொது 2 வயது. முன்பகல் அவளும் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தாள். யாரும் இதை கவணிக்கவில்லை. கனேசன் ஒரு வேலை விஷயமாக சென்னை சென்று இருக்க, கதிர் பள்ளிக்கு சென்று இருந்தான். கனேசனின் அம்மாவும் வயலில் இருக்க  இவரை யாருக்கும் கவணிக்கவில்லை.     

உணவுக்காக வீட்டுக்கு வந்த கனேசனின் அம்மா செந்தாமரை கீழே விழுந்நு கிடக்கும் நிலையை பார்த்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தவர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவ மனையில் சேர்த்தார். ஆனால் அவரை சேதித்து பார்த்த மருத்தவர், அதிக ரத்த போக்கு ஏற்பட்டு உள்ளது என்றும்,  மேலும் விழுந்த வேகத்தில் தலையில் பலமான அடி பட்டு இருப்பதால்  பிழைப்பது கடினம் என்றும் கூறியவர், அவரை உடனடியாக சென்னை ஜி எச் க்கு அனுப்பி வைத்தார். அங்கும் எந்த முன்னோற்றமும் இல்லாமல் 3 நாட்கள் கோமாவில் இருந்தவர், நினை திரும்பாமலே இறந்து போனாள்.

வீட்டினர் எல்லரும் இடிந்து போய் இருந்தனர்.

தந்தையும் இல்லாமல், அக்காவும் இல்லாமல் கதிர்வேலன் மிகவும் வருந்தினான். எல்லாவற்றையும் விட குழந்தை தாய்யை தேடும் போது எல்லாம் அவளை சமாளிப்பது பெரிய விஷயமாக இருந்து எல்லோருக்கும்.

அப்போது எல்லாம் கதிர் தான் அவளை எப்போதும் கையில் வைத்து பார்த்துக்கொள்ளவான். அவனுக்கு அவன் அக்காவே அவனுடன் இருப்பதாக நினைத்துக்கொள்ளவான்.

கனேசன் முற்றிலும் ஓய்ந்து போனார், எதிலும் நாட்டம் இல்லாமல், இருந்தார். 1 வருடம் கடந்து இருந்த. மகனின் நிலையை பார்த்த கனேசனின் அம்மா அவனுக்கு இன்னோறு திருமணம் செய்து வைக்கு முடிவு  செய்தார்.

அதில் அவருக்கு விருப்பம் இல்லை, தாயிடம் சன்டையிட்டார். தனக்கு வயது ஆகிவிட்டது இனி தன்னால் பிள்ளையை பார்க்க முடியாது என்று கூறியவர், அதை செயல் படுத்தவும் செய்தார். அந்த நேரத்தில் சற்று ஆறுதலாக இருந்தவர், கதிரின் அம்மா தான், அவருக்கும் நடக்கும் எல்லா விஷயமும் தெரிந்தாலும், எதையும் உரிமையாக கேட்க முடியவில்லை. 

கனேசனின் அம்மா அவன் இந்த சின்ன வயதில் இப்படி தனியாக இருப்பதை பற்றி புலம்பிக்கொண்டே இருப்பார், அதில் அவர் ஆதங்கம் மட்டுமே வெளிப்படும்,  அதை நன்கு உணர்ந்த செந்தாமரையின் அம்மா சீதா ஏதும் சொல்ல மாட்டார். மேலும் இவர் சொல்வதும் நியாயம் தானே என்று எண்ணிக்கொள்ளுவார். ஆனால் அதே சமயத்தில் மகள் இடத்தில் இன்னும் ஒரு பெண்ணை அவரால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. 

பார்வதின் மனத்தாங்களை புரிந்துக்கொண்டவர், கனேசனிடம் ஒரு நாள் வந்து போசினார், பிள்ளையை நான் வளர்த்துக்கொள்கிறேன், என்று கேட்டுவிட அதில் அவர் மிகவும் நொந்து தான் போனார். தாயின் தொடர் வற்புறத்தலால் திருமணத்திற்க்கு சம்மதித்தார்.. 

அவர் அம்மா பார்த்த பெண் தான் ரத்தினம் அவரின் செந்தத்தில் ஒன்றுவிட்ட தம்பி மகள், அவருக்கும் தாய் மட்டுமே அவளின் தந்தை அவள் தம்பி பிறந்து 2 வயது இருக்கும் போதே குடி பழக்கத்தினால் இறந்து போய் இருந்தார். அதனால் இரு குடும்பத்துக்கும் நல்ல நெருக்கம் உண்டு, அந்த வீட்டில் ஆண் துனை இல்லாதால், பெரும்பாலும் கனேசன் தான் எல்லாவற்றையும் முன் நின்று செய்வார். ஆனால் இதில் யாரும் அறியாத ஒரு விஷயம் உண்டு அது ரத்தினம் சிறு வயது முதல், கனேசனை திருமணம் செய்ய விரும்பியது தான். 

ஊரில் வழக்கமாக உறவுக்குள் பேசப்படும் திருமண பேச்சுகளை சிறு வயது முதல் மனதில் பதித்துக்கொண்டு, அவரை திருமணம் செய்யும் ஆசையை வளர்த்துக்கொண்டார். அவர் திருமணம் செந்தாமரையுடன் நிச்சயம் ஆனதில் அவருக்கும் மனதில் ஏக வருத்தம். தன் விருப்பத்தை யாரிடமும் சொல்ல முடியாமல், மனதில் வைத்து தனிமையில் அழுது கரைவார். விவரம் அறியாத வயதில் அக்கா அழுவதை, அதிலும் அவள் சில சமயம் கனேசன் பெயர் சொல்லி அழுவதை பார்த்த அன்பழகனுக்கு, அது மனதில் வேறு விதமாக பதிந்து போனது. 

சிறுவயதில் தந்தை இல்லாமல், அக்காவின் அரவனைப்பில் வளர்ந்தவன், அம்மா பெரும்பாலும் வேலைக்கு சென்று விட தனக்காக எப்போதும் தன்னுடன் வீட்டில் இருக்கும் அக்காவின் மேல் அவனுக்கு கொள்ளை பிரியம். 

அவனுக்கு விவரம் தெரிந்து, அக்காவின் விருப்பம், அது நிறைவேறாமல் போனது, என்று கனேசன் மேல் அவனுக்கு மனகசப்பு உண்டு. கனேசன் திருமணத்திற்க்கு பின் இவர்களும் அவர்களுடன் ஆன நெருக்கத்தை கொஞ்ச கொஞ்சமாக குறைத்து இருந்தனர். 

மகன் திருமனத்திற்க்கு சம்மதம் சொன்னதும்,  அவர் சில வரன்களை பார்த்தார் தான், ஆனால் அவர்கள் யாரும் கதிரழகி பற்றி அந்த அளவு அக்கறை கொண்டதாக தெரியவில்லை. என்ன தான் அவர் மகன் திருமனத்திற்காக அவ்வாறு நடந்துக்கொண்டாலும், குழந்தையை ஒதுக்கும் எண்ணம் அவருக்கு இல்லை, அதனால்  வந்த எந்த வரனிலும் அவருக்கு திருப்பதி இல்லை. இந்த நிலையில் தான் ரத்தினம் மற்றும் அன்பழகனின் தாய் உடல் நிலை குன்ற அவர்களை  பார்க்க சென்றவர், ரத்தினத்தை தன் மகனுக்கு மனமுடித்து தருமாறு கேட்டு இருந்தார். அதில் ரத்தினத்தின் தாய்க்கு தன் மகள் இரண்டாம் தாரமா போவத வருத்தம் தான் என்றாலும், தன் உடலநிலையை கருத்தில் க்கொண்டு, தனக்கு பிறகு தன் மகள் வாழ்க்கை மற்றும் இப்போது தான் பள்ளியில் படித்து வரும் மகனின் வாழ்க்கை, எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அதற்கு சம்மதித்தார்.

ஆனால் சொந்தம் இருந்தும் அவர் மகனுக்கு முன்பே கேட்காமல், இப்போது இரண்டாம் தாரமாய் கேட்கிறே என்று மனக்குமுறல் அவருக்கு உண்டு, அதை தன் மகனிடம் அடிக்கடி சொல்லி புலம்புவர். என்ன தான் சொந்தம் இருந்தாலும், நம்ம கிட்ட நாலு காசு இல்லைனா யாரும் நம்மை மதிக்க மாடாங்க கன்னு. இப்போ எம்மவள கேட்க தெரிஞ்சவகளுக்கு முன்ன என் மக கண்ணுக்கு தெரியலையா? எல்லாம் பணம் படுத்தும் பாடு……………. என்ற வகையில் நீடிக்கும் அவர் புலம்பல்கள்…..

நீ படித்து நல்ல உத்தியோகத்துக்கு போகனும், எண்ணிக்கும் அக்காக்கு பக்க பலமா இருக்கனும், அக்காக்கு உண்னைவிட்டா யாரும் இல்லை, அவள எப்பவும் விட்டுடாதே அப்பு, என்று அவர் அடிக்கடி கூறுவது அவன் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்து போனது. அதை கொண்டே அவன் கனேசனிடம் பிற்காலத்தில் நடந்துக்கொண்டது. 

ஆனால் இவர்களின் மனநிலைக்கு முற்றிலும் மாறாக இருந்து ரத்தினத்தின் மனநிலை, தான் நினைத்த வாழ்வு தன் கைவந்து சேர்ந்தை அவரால் நம்ப முடியவில்லை. எப்படியே தான் விரும்பியவனையே தன் துனையாக பெற்றதில் அவர் மகிழ்ந்து போய் இருந்தார். ஆனால் அவரின் இந்த மகிழ்ச்சி அம்மா, மகன் கருத்தில் பதியவில்லை. அவர்கள் அவர்களின் மனநிலையில் இருந்தார்கள்.

நாட்கள் இப்படியே சென்றுக்கொண்டு இருக்க அன்று அவர்களின் குல தெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக கனேசன்,ரத்தினம் திருமணம் நடந்து முடிந்து இருந்து. அன்று காலை வரை அவருக்கும் பெண் யார் என்று கூட தெரியாது. தன்னை எல்லோரும் சேர்ந்து ஒரு இக்கட்டிலில் வைத்து விட்டனரே என்ற மனதால் மிகவும் வெறுத்து போய் இருந்தார். 

மகளை தன்னுடனே வைத்து இருந்தார். கதிரும் அவரை ஒட்டியே இருந்தான். அதை பார்த்த இரத்தினத்தின் அம்மாவிற்க்கு மேலும் கலக்கமாய் இருந்து. எங்கு மகள் இப்படியே இருந்துவிடுவாளே என்று. அதே கலக்கம் செந்தாமரையின் தாய்க்கும் இருந்து. அவர் வந்ததில் இருந்து ரத்தினத்தையே பார்த்து இருந்தார். தன் காதல் கைகூடிய சந்தோஷத்தில் அவள் முகம் மலர்ச்சியா காட்டியது. அவள் கவனம் முழுவதும் கனேசன் மேல் தான், இத்தனை நாள் அருகில் கூட அவர் முகத்தை பார்த்து இல்லை ரத்தினம், இன்று அவரே தன் அருகே கணவனாக என்னி என்னி மகிழ்ந்து போய் இருந்தாள் அவள். அதை பார்த்த அவர் தன் பேத்தியை இவள் வந்ததில் இருந்து பார்க்க கூட இல்லை, இவள் எப்படி தன் பேத்தியை நன்றாக பார்த்துக்கொள்ளுவாள். என்று அவர் மனம் சுனக்கம்  கொள்ள துவங்கியது. மகன் மீண்டும்  நன்றாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் அவனின் அன்னை. 

இப்படி கலவையான மனநிலையில் ஒவ்வெரும் இருக்க திருமணம் முடிந்து வீட்டு வந்தவர்கள், மகளை  அழைத்துக்கொண்டு, தோட்ட வீட்டுக்கு வந்து விட்டார் கனேசன். அவரின் அன்னை எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. திருமணம் முடிந்த அன்றே தன் மகளை தனியாக விட்டு சென்ற கனேசன் மேல் மனதாங்கல் தான் ரத்தினத்தின் அன்னைக்கும், அவள் தம்பிக்கும், இருந்தும் ஏதும் செய்ய முடியாத நிலை. 

அன்று மட்டும் அல்ல அடுத்து வந்த நாட்களிலும் அவரின் இந்த புறகனிப்பு தொடர் கதையாகி போனது, நீ சொன்னாய் திருமனம் செய்து க்கொண்டேன். அவ்வளவே என்று இருந்தது அவரின் செயல்கள். அவர் ரத்தினத்தை ஏற்எடுத்தும் பார்க்கவில்லை. ஆரம்பத்தில் கதிரழகியும் கூட ரத்தினத்திடம் ஒதுக்கம் கான்பித்தாள் தான், ஆனால் மெல்ல மெல்ல அவர் பழகும் விதம் கண்டு அவளுடன் பேச தெடங்கினாள். சில நாட்களில் அவர்கள் இடத்தில் நல்ல புரிதல் வந்து இருந்து. இது இருவருக்கு கடுப்பாக இருந்து,ஒன்று அன்பழகன் இது நாள் வரை தன்னிடம் மட்டும் பாசமாக இருக்கும் அக்கா தன்னை விட்டு விலகுவதாக உணர்ந்தான். மற்றோன்று அவள் அம்மா புருஷன் பாரா முகமாக இருக்க இவ இந்த புள்ளைக்கு பின்னால் திரிகிறாளே என்று குமைந்து போனார். மகள் கடைசி வரை வாழமால் இப்படியே இருந்துவிடுவாளோ என்ற எண்ணம் அவரை வதைத்து. இந்த நிலை இப்படியே மேலும் 3 வருடங்கள் நீடிக்க. யாராலும் ஏதும் செய்ய முடியவில்லை. என்ன செய்தும் மகனின் மனதை கரைக்க முடியவில்லை.

திருமனம் செய்து வைத்து தவறு செய்துவிட்டோம்மோ? என்று அவருக்கு குற்ற உணர்வாக இருந்து. மகனை சிறிது விட்டு பிடித்து இருக்கலாம். தன் பிடிவாத்தால் இப்படி சிறு பெண்னின் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கிவிட்டோம்மே? என்று மனம் வருந்தினார் பார்வதி.

அதில் அவர் உடல் நிலை குன்ற தெடங்கியது, ஆரம்பத்தில் ரத்தினத்தை என்னி பயந்தாலும் அவளின் நல்ல குணம் கண்டு அதன் பின் கதிரின் தாயும் கூட  அவளை ஏற்றுக்கொண்டார். பேத்தியை கூட அவர் தன் பெறுப்பில் எடுத்துக்கொண்டார். மகள் போல தான் அவளும் அவள் வாழ்க்கையும் சிறக்க வேண்டும் என்று எண்ணினார். தன் மகன் கதிரிடம் அவள் அக்காவின் மகளை பார்த்துக்கொள்ளும் பெறுப்பை ஒப்படைத்தார். அவளை எப்போதும் நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அவளுக்கு எல்லாமாகவும் நீ இருக்க வேண்டும். அவள் உன் பெறுப்பு என்று அவன் மனதில் பதிய வைத்து இருந்தார்.

அவனும் தன் அக்காவின் சாயலில் இருக்கும் கதிரழகிக்கு எப்போதும் எல்லாமும் ஆகி போனான்.

அழகான குண்டு கண்ணமும், கொழு கொழுவெ இருக்கும் அவளை எல்லோருக்கும் பிடிக்கும், அன்பழகனுக்கும், ஆனால் அவள் அவனை விட கதிரையே அதிகம் தேடுவாள், அவனிடமே ஒட்டுதல் அதிகம். அதற்க்கு அந்த குடும்ப சூழ்நிலை கூட காரணம். எப்போதாவது வரும் அன்பழகனைவிட, எப்போதும் அவளுடன் இருக்கும் கதிர் இடம் தான் அவளின் ஒட்டுதல் அதிகம், அதற்க்கு காரணம் அவன் அவளின்  அம்மாவின்  சாயலில் இருப்பதாக கூட இருக்கலாம். ஆனால் இதை எல்லாம் புரிந்துக்கொள்ள முடியாத அன்பழகன், பனத்தை வைத்து அவர்கள் தன்னை ஒதுக்குவதாக என்னிக்கொண்டான். அதன் பின் அவனும் ஒதுங்கி கொண்டான்.

கனேசன் என்ன தான் மனைவியுடன் பேசுவது இல்லை என்றாலும், அவள் தன் மகளை நல்படியாக பார்கிறாள் என்ற நிம்மதி மீண்டும், அவரை தன் வேலைகளில் கவணம் செலுத்த தொடங்கினார். அதன் பலனாக சரிவில் இருந்த தொழிகள் மீண்டும் நல்ல லாபம் கொடுக்க தொடங்கியது. 

மருமகள் வந்த நேரம் மீண்டும் எல்லாம் சரியாக மாறுவது வீட்டில் இருந்து அனைவருக்கும் ஒரு நிறைவை தந்து இருந்து. இதில் வீட்டுக்கு வந்த உறவு பெண் ஒருவர் எண்ண கல்யாணம் முடிஞ்சு  வருஷம் ஆகுது இன்னும் ஏதும் விஷேசம் இல்லையா, என்று கேட்டு வைக்க, யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. ஏன் எனில் இவர்களின் இந்த விலகல் வீட்டில் இருப்பவருக்கு மட்டும் தான் தெரியும், வெளியில் இவர்கள் மனமொத்த தம்பதிகள் தான். எதுக்கும் ஒருவாட்டி ஆஸ்பத்திரி கூட்டி போ ஆத்தா, என்று வந்தவர் கிளம்பிவிட, இது எல்லாவற்றையும் அந்த நேரம் வீட்டுக்கு வந்து இருந்த கனேசனும் கேட்டார்.

அடுத்து வந்த நாட்களில் அவர் மனைவியை கண்காணிக்க தொடங்கி  இருந்தார், அவள் இந்த வீட்டில் சுக போகமாக இருக்கவில்லை, எல்லா வேலைகளையும் செ்கிறாள், குழந்தையை பார்ப்பது, அம்மாவை பார்ப்பது என எல்லாம். அவள் முகத்திலே, மனதிலே கவலை இருப்பதாக அவருக்கு தெரியவில்லை. 

இரண்டு நாட்கள் கழித்து ரத்தினத்திடம், அவள் ஏன் தன்னை திருமணம் செய்ய சம்மதித்தாள் என்று கேட்டார். முதலில் அவர் கேள்வியில் ரத்தினம் திகைத்தாலும், இவ்வளவு நாள் பேசாதவர் இன்று பேசும் போது, சற்று தயங்கினாலும் தன் மனதில் இருப்பதை எல்லாம் கூறிவிட்டாள். அதை எல்லாம் கேட்ட பிறகு அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

அதன் பின் ஒருவாரம் கழித்து, அவர் ரத்தினத்துடன் மனம் விட்டு பேசினார், இப்படி அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையும் தெடங்கிவிட, வாழ்வில் எல்லாம் இன்ப மயம் தான் அவருக்கு.

அடுத்த மாதில் அவள் கருவுற இன்னும் மகிழ்ச்சி பெருகியது அந்த வீட்டில். ஆனால் அது எல்லாம் கதிரழகி அந்த கேள்வியை கேட்கும் வரை மட்டுமே?????

   

 

தொடரும்……………. 

Advertisement