Advertisement

அத்தியாயம் – 6

மருத்துவ முடிவுகள் எல்லாம் வந்த பின் பரிதி மருத்துவரை சந்தித்து  அப்பாவின்  உடல் நிலை பற்றி கேட்டு அறி்ந்து இருந்தான். தற்போது பயபடும் படி ஏதும் இல்லை என்றாலும் அடுத்த 6 மாதம் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளும் படி மருத்தவர் கூறியிருந்தார். அன்றே மருந்துவனையில் இருந்து வீடு  வந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து சென்றனர்.

மாலையில் பள்ளி விட்டு வந்து மதி அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து விளையடிக்கொண்டு இருந்தாள்.

இரவு உணவு கதிரழகி சமைத்து கொண்டு வந்து கொடுத்துவிட்டு போனால். மூவருக்கும் இருந்த அலைச்சலில், சாப்பிட்டு விட்டு விரைவில் உறங்க சென்றுவிட்டனர். 

ஆனால் பரிதிக்கு தான் உறக்கம் வருவேனா என்று கண்ணாமூச்சி ஆடியது. சென்னையில் இருக்கும் காலநிலை அவனுக்கு அதிக புழுக்கத்தை கொடுத்து, எழுந்து வந்து ஹாலில் பார்த்தான் யாரும் இல்லை. அம்மா அப்பாவின் அறையில் சத்தங்கள் ஒய்ந்து இருவரும் உறங்கி இருந்தனர்.

சற்று நேரம் வெளியில் சென்றால் நன்றாக இருக்கும்  என்று யோசித்தான் மணி 1.30 என்று காட்டியது. அந்த எண்ணத்தை விடுத்து அறைக்கு திரும்பியவன் கண்ணில் பட்டது மாடிக்கு சொல்லும் படிகட்டுகள். அடுத்த நிமிடம் எதை பற்றியும் யோசிக்காமல் படிகளில் ஏறிவிட்டான். 

அவர்களின் வீட்டில் உள்ள புறம் இருந்தும் மாடிக்கு செல்ல படிகட்டுகள் இருப்பதால், ஏறிவிட்டான் மேலே வந்தவன் முகத்தில் சில் என்ற காற்று தழுவிச்சொல்ல அந்ந குளுமையை அனுபவித்தபடி கைபிடி சுவற்றில் அமர்ந்துவிட்டான். வானத்தில் முழு நிலவு இல்லை, 6 அல்லது 7 ஆம் நாள் பிறையாக இருக்கலாம். அத்தோடு மின்னிக்கொண்டு இருக்கும் நட்சத்திரங்கள். அந்த இரவை இன்னும் அழகாக்கியது. சற்று ஊன்றிக்கேட்டால் அலைகளின்  சத்தம் கூட கேட்குமோ? அந்த அமைதி அவனுக்கு தேவையாக இருந்து.

அந்த அமைதியை கிழிக்கும் வண்ணம், அலைபேசி இசைக்கும் ஒசை……… தன் சட்டையை தடவி பார்த்தான். இல்லை அது கிழே அறையில் இருக்கிறது. எங்கே கேட்கிறது? இந்த நேரத்தில்……………….. அதுவும் இவ்வளவு பக்கத்தில்……….

இந்த முறை அழைப்பு ஏற்கப்பட்டது, மணிக்கா என்ற பெண் குரல், மதிக்கு காயச்சல் குறையேவே இல்லை கா எனக்கு என்னவோ பயமா இருக்கு கா….. இப்போ ஆஸ்பிட்டல் போலாமா கா………….. என்றவள் அந்த பக்கம் என்ன சொல்லபட்டதோ…………….. சற்று நேர அமைதிக்கு பிறகு  எதிர் விட்டு இருந்து மணிமேகலை தன் வீட்டுகுள் நுழைவது தெரிந்து. 

அதுவரை என்ன என்று புரியாமல் பார்த்துக்கொண்டு  இருந்தவனுக்கு சட்டென்று சூழ்நிலையை புரிந்துக்கொண்டான். மதிக்கு உடம்பு சரியில்லை என்றால், குழந்தைக்கா? அடுத்து விரைவாக கீழே சென்றவன் தன் மெடிக்கல் கிட்டை எடுத்துக்கொண்டவன் மீண்டும் மேல வந்தவன், கதிரழகியின் விட்டிக்குள் நுழைந்து இருந்தான்.   

கதிரழகி மணிமேகலை அழைக்க கீழே சென்றவள் வந்து பார்த்த போது பரிதி குழந்தையின் அருகில் அமர்ந்து, அவள் உடல் நிலையை ஆராய்ந்து கொண்டு இருந்தன். முதலில் இருவருக்கும் இவன் எப்படி இங்கு என்ற எண்ணம் தோன்றியிருந்தாலும். முதலில் சுதாரித்த மணிமேகலை தான், என்ன ஆச்சு பரிதி என்றாள். குழந்தையை ஆராய்ந்து முடித்தவன். காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்கு மணி, கடைசியா எப்போ மருந்து கொடுத்தாங்க என்றான் கேள்வி அவளிடம் இருந்தாலும், பார்வை என்னவோ கதிரழகி மேல் தான் இருந்து. 

அது வரை என்ன என்பது போல் பார்த்து இருந்தவள், அவன் கேள்வியில் சுயம் பெற்றாள்,  அது 10 மணிக்கு என்றாள். என்ன மருந்து என்று அதன் விவரங்களை கேட்டு அறிந்தவன். சரி இன்னும் 1 மணி நேரம் கழித்து இன்னோறு டோஸ் கொடுக்கலாம், இப்போ நல்லா தண்ணியில் துணியை நினைத்து உடம்பு முழுவதும் துடைத்துவிடுங்கள் என்றான். சரி என்றவள் உடனே அதை செய்ய. அடுத்த 15 நிமடத்தில் குழந்தையின் காய்சல் அளவு  குறைந்து இருந்து . மீண்டும் 1 மணி நேரம் கழித்து மருந்து கொடுத்தவன் காய்சல் அளவை மீண்டும் சரி பார்த்தான். இப்போது குழந்தை ஜூர வேகம் குறைந்து தூங்க தொடங்கி இருந்தாள். 

அது  வரை அவள் அருகில் இருந்து அவள் கையை பற்றியபடி இருந்தவன், குழைந்தையின் தலையை தடவிக்கொடுத்துக்கொண்டு இருந்தான். குழந்தையும் அவன் கையை இருக்கமாக பற்றிபடி மெல்ல உறக்கத்துக்கு சென்று இருந்தாள். அது வரை அவன் செய்தவற்றை எல்லாம் பார்த்து இருந்த கதிரழகிக்கு எண்ணம் எல்லாம் அவள் தந்தையிடத்தில். அவளின் சிறு வயதில் அவளுக்கு உடல் நிலை சரி யில்லை என்றாள் இப்படி தான் அவள் அருகிலேயே இருப்பார். அந்த நினைவுகள் அவள் மனதில் வந்து போக கண்கள் மெல்லியதாக கண்ணீர் சிந்தியதோ………. என்று உணரும் முன் அதை தடுத்து இருந்தவள், ஆனால் மதி பிறந்ததில் இருந்து இப்படி யாரும் அவளுக்கு செய்தது இல்லை, அவளும் உடல் நிலை சரியில்லை என்றால் இவள் மடியில் தான் கிடப்பாள், இப்போது இந்த புதிய செய்கை குழந்தை எப்படி ஏற்றுக்கொண்டது, அதுவும் சில நாள் பழகத்தில்…………  

இருவரிலும் பார்வையை பதித்து இருந்தாள்.

மணிமேகலை அங்கேயே அருகில் படுத்து உறங்கி இருந்தாள். குழந்தை நல்ல உறக்கத்தில் இருப்பதை உணர்ந்தவன்  இருக்கும் இடம் உணர்ந்தான், இந்த நேரத்தில் தான் இங்கு இருப்பது சரியாக இருக்காது என்று உணர்ந்தவன். மெல்ல தன் கைகளை அவளிடம் இருந்து உறுவ நினைத்தான். குழந்தை தூக்கத்தில் இருந்தாலும், அவன் கையை விடாமல் இருக்க பற்றி இருந்தாள், மேலும் மிக மெல்லியதாக பரிடீ என்றாள் குழந்தை!!! அந்த இரவின் அமைதியில் அவள் குரல் அவன் செவி சேர்ந்தது, அதில் அவன் உதடுகள் மென்னகை புரிந்து. 

மெல்ல அவள் தலையை வருடியபடி அவள் முகத்தை பார்த்து இருந்தான் அவன்.

………………………..

இங்கு அன்பழகன் நேற்று முழுவதும் யோசனையில் இருந்தவன் தனக்குள் சில முடிவுகளை எடுத்து இருந்தான் அதுவும் நேற்று காலை அவன் மாமா கனேசன், ரத்தினத்திடம் கதிரழகி திருமணத்தை பற்றி பேசியபின், அவன் முடிவில் உறுதியாக இருந்தான்.

அதன் படி அவன் ஒரு வக்கீல் முன் அமர்ந்து இருந்தான். இவர் தான் அவனுக்கும், கதிரழகிக்கும் விவாகரத்து வழக்கில் வாதாடியவர். இன்று அவர் முன்னால் இருந்தவன், எல்லாவற்றையும் கூறி முடித்தான். அதை கேட்டவரோ சற்று நேரம் அமைதியாக இருந்தவர். நீங்க உங்க முடிவில் உறுதியாக இருக்கிங்களா என்றார். அவன் ஆம் என்று தலை அசைக்க. 

சரி நான் கோட்டில் வழக்கை பதிவு செய்து விடுகிறேன் அதற்கு முன் நீங்கள் உங்கள் வீட்டில் இதை பற்றி பேசிவிடுவது நல்லது. ஏன் என்றால் இந்த குழந்தையை காரணம் காட்டி தான் நீங்கள் உங்கள் மனைவியை   விவாகரத்து செய்தது, இன்னிக்கு வந்து அந்த குழந்தை உங்ககிட்ட ஒப்படைக்க வேண்டும் கேட்கிறீங்க. சட்டபடி, குழந்தை அதிலும் பெண் குழந்தை 18 வயது முடியும் வரை அம்மாவிடம் தான் இருக்க வேண்டும். அதை ஆட்சேபிக்க நம்ம கிட்ட ரொம்ப வலுவான காரணம் இருக்கனும், இப்ப வரைக்கும் நம்மகிட்ட அப்படி ஏதும் இல்லை.

இப்போ இருக்க நிலையை வைத்து இந்த கேஸ் கோட்டில் நிக்காது. அதை விட நீங்க உங்க வீட்டில் பேசி பார்த்தால்  நல்லது என்றார் அவர், சொன்ன எல்லாவற்றை கேட்டவன். அங்கு இருந்து கிளம்பி வீட்டிற்க்கு வந்து இருந்தான்.

கணவனின் யோசனை முகம் பார்த்து நந்தினிக்கு, வயிற்றில் பயபந்து உருண்டாலும், ஏதும் கேட்கும் நிலையில் அவள் இல்லை. அதனால் அவனையே கவணித்த படி தன் வேலைகளை பார்த்து இருந்தாள்.

எல்லரும் அவரவர் யோசனையில் இருந்தனர், அகிலன் முகிலன் இருவரும் பள்ளிவிட்டு வந்தவர்கள், தங்களுக்குள் கலகலத்தபடி இருந்தனர். 

அந்த நேரம் வீட்டிற்க்கு வந்த கனேசன் மற்றும் அவரின் பின்னால்  வந்த கதிர் இருவரையும் பார்த்து இருந்தான் அன்பழகன். வாபா என்று அவனை அழைத்தார் ரத்தினம், அவருக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தவன், அங்கு இருந்த சின்னவர்களை பார்த்து புன்னகைத்தான், கதிரழகியை போல் தான் அவர்களும் அவனுக்கு, 

இருவரும் அவனிடம் புன்னகை முகமாக பேசிக்கொண்டு இருந்தனர். சிறிது நேரம் இப்படியே சென்று இருக்க. பேச வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது  என்று கனேசன் அவன் முகம் பார்த்து தயங்கி இருக்க. சற்று நேரம் அமைதியாக இருந்தவன். என்னை எதுக்கு கூட்டி வந்திக என்றான். அதில் அவன் முகம் பார்த்தவர், அது வந்து……….. என்று அவர் ஏதோ செல்ல வர…… அந்த கூடத்தில் தான் அத்தனை பேரும் இருந்தனர். எல்லரும் ஏதோ வேலையில் இருப்பது போல் இருந்தாலும். கவனம் எல்லாம் இங்கு தான் இருந்தது. 

உனக்கு அழகிய கல்யாணம் பன்னிக்க சம்மதமா பா? என்றார் ரத்தினம் அவரின் பேச்சில் அவர் முகம் பார்த்தவன் ஏதும் பேசாமல், கனேசனிடம் திரும்பி முதல அழகிட்ட கேளுங்க என்றான்.

கனேசன் ஏதோ பேச வாய் எடுக்க. இப்போ அவ சம்மதம் தான் முக்கியம், இங்க யாரோட குற்ற உணர்ச்சிக்காகவும், பாவம் பார்த்தோ அவளுக்கு ஏதும் செய்ய வேண்டாம்………….

எதுனாலும் அது அவளோ முழு சம்மத்தோட தான் நடக்கனும். அவளுக்கு கல்யாணம் வேணும்மா வேண்டாமா அப்படினு அவதான் முடிவு பன்னனும். என்றவன். சென்றுவிட்டான். முன்னாடி தான் அவள் வாழ்கையில் ஏதும் அவள் இஷ்டத்துக்கு நடக்கல இப்பவாசும் அவளை கேட்டு செய்யுங்க, என்று   எழுந்து நின்றவன்  நான் இன்னிக்கு நைட்டு ஊருக்கு போறேன் என்று சொல்லிவிட்டு     கிளம்பி இருந்தான்.

அவன் சென்னதில் இருந்த உண்மை அவருக்கு சுருக்கு என்று இருந்தாலும், அதை மகளிடம் எப்படி பேசுவது என்று நினைக்கையில் அவருக்கும், அது பெரும் கவலையாக இருந்து.

……………………..

காலையில் கண்விழித்த பாக்கிய அறையில் இருந்து எழுந்து வெளியில் வந்தவர். மகன் மேல் மாடியில் இருந்து வருவதை பார்த்து. என்ன பரிதி மாடிக்கு யோய் இருந்தயா? என்றார். தண்ணீர் அடித்து முகத்தை கழுவியபடி…….. இல்லை மா மதிவீட்டில் இருந்தேன்…………… என்று சென்ன நொடி அதிர்ந்தவர்!!!!!

என்ன ஆச்சு மதிக்கு என்றார் பதட்டத்துடன், ஒன்னும் இல்லை மா. என்று நேற்று நடந்தைவற்றை சென்னவன் இப்போது பரவாயில்லை என்றும் கூறியவன். தன் அறைக்கு சென்றான். தன்னை சுத்தபடுத்திக்கொண்டவர், மேலே சென்று குழந்தையும் பார்த்து விட்டு வந்தார்.

அன்று விடுமுறை தினம் என்பதால் இரவு முழுவதும் கண்விழித்தவள் இப்போது மகளின் அருகில் படுத்து உறங்கி இருந்தாள்.

………………….

கதிர் சென்னை வந்து சேர்ந்தவன், கதிரழகிக்கு அழைக்க அழைப்பு சென்றுக்கொண்டே இருந்து . மீண்டும் மீண்டும் அழைப்பு வந்த வண்ணம் இருக்கு அதில் உறக்கம் கலைந்த மணிமேகலை அலை பேசியை எடுத்து காதில் வைத்தவள், பேசும் முன் அழகி என்னடா? ஏன் இவ்வளவு நேரம் போன் எடுக்கல என்றான். அதில் உறக்கம் முற்றிலும் கலைந்தவள், பேசுவது யார் என்று அறிந்துக்கொண்டு, மேலும் அவன் கேள்வி கேட்கும் முன், அதுக்கு முன்னாடி நேத்து நீ எங்க போய் இருந்த, உனக்கு எத்தனை வாட்டி நைட்டு போன் பன்னா  தெரியும்மா உன்னோட லைன் கிடைக்கவே இல்லை. என்று அவனுக்கு மேல் கோவத்தில் பெரிந்தாள்.

முதலில் யார் பேசுவது என்று அதிர்ந்தவன் பின் அது மணிமேகலை என்று அறிந்துக்கொண்டவன், நான் ஊரில் இல்லை. என்ன ஆச்சு என்றான் இறங்கி போன குரலில். அது எப்படியா அவளுக்கு தேவை படும் போது எல்லாம் அவ பக்கதில் யாரும் இருக்க மாட்டிங்க என்றவள் நேற்று குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றும், பின் பரிதி வந்து பார்த்துக்கொண்டதையும் சென்னவள். வேறு ஏதும் பேசாமல் இனைப்பை துண்டித்து இருந்தாள்.

எல்லாவற்றையும்  கேட்டவன், எப்பா மழை பெய்து ஒய்ந்து போல் இருக்கு இவளை வச்சு எப்படி தான் சமாளிக்கிறாங்களோ என்று நினைத்தவன். அடுத்த அரை  மணிநேரத்தில் கதிழரகி வீட்டில் இருந்தான்.

அதற்குள் குழந்தை சற்று தெளிந்து இருந்தாள். கதிர் வந்தை பார்த்து புன்கைத்தவள் அவன் மடி மீது அமர்ந்துக்கொண்டாள். அவனோடு ஏதோ கதை பேசிக்கொண்டு இருந்தாள். 

அப்போது பரிதி வீட்டின் உள் இருந்த வந்தான். மதி குட்டி என்று அவளை பார்த்து புன்னகைத்தான்.  குழந்தையும்  அவனை கண்டவுடன்  கதிரிடம் இருந்து அவனிடம் தாவி சென்று இருந்தாள். இது அங்கு இருந்த மூவருக்கும் அடுத்த ஆச்சரியம். மதியை பெருத்தவரையில் கலகலபான குழந்தை   என்றாலும், எல்லோர் இடமும் செல்ல மாட்டாள், அப்படி இருக்க, இது எப்படி இவனிடம் குழந்தை இப்படி ஒட்டிக்கொண்டாள் என்று மூவரும் பார்த்து இருந்தனர்.

ஆனால் இதை பற்றி எல்லாம் எந்த எண்ணமும் இல்லாமல் அவர்கள் இருவரும் அவர்களின் உலகில் இருந்தனர்.

இவன் யார் அதுவும் நம்ம கதிரு வீட்டில் இருந்து வரான்………. அதுவும் குழந்தை கூட இப்படி பாசமா இருக்கான்……….. என்ற கேள்விகள் அவன் மனதில் இருந்தாலும். பார்வை அவர்களையே வட்டமடித்துக்கொண்டு இருந்து.

மணிமேகலையே ஒருத்தரையும் விடாத இவளையும் மயக்கி வைச்சிட்ட என்று பரிதி இடம் நேரடியாகவே கூறினாள்.

கதிரழகியோ பார்வை அவர்கள் இடத்தில் தான் பதித்து இருந்தாள். மனதில் என்ன உணர்வுகள் என்று அவளாள் அனுமானிக்க முடியாமல், இது எதில் போய் முடியுமோ என்ற எண்ணத்தில் அமர்ந்து இருந்தாள்.

மதிகுட்டிக்கு இப்போ எப்படி இருக்கு என்று குழந்தையின் உடல் நிலையை ஆராய்ந்தான். மறுபடியும் காய்சல் வந்ததா? 

என்ன சாப்பிட்டா? 

மறுபடியும் மருந்து எப்போ கொடுத்த என்று அவன் கேள்விகள் எதற்கும் அவளிடம் பதில் இல்லை…………. பார்வை அவனையே வெறித்து இருந்து..

பின் இப்படி வீட்டிக்குள் வராதீங்க என்றாள் சட்டென்று………….

அது வரை அங்கு இருந்த சூழ்நிலை மாறி இவள் என்ன சொல்லவருகிறாள் என்று  மணிமேகலை அவள் முகம் பார்க்க, பரிதியின்  முகமோ இறுகியது.

அவள் அப்படி சொன்னதில்…….

என் வீட்டில் இருந்து கொண்டு எண்ணையே வராதே என்பாளா இவள். என்ற எண்ணம் தான் முதலில். இதையே நேற்று சொல்லி இருக்கு வேண்டியது தானே என்று தோன்றினாலும். ஏதும் பேசவில்லை அவன்.

மணிமேகலை தான் என்ன பேசுற கதிர் என்றாள் அவளிடம், நேற்று அவர் மட்டும் இல்லைனா குழந்தைக்கு முடியாம நாம அந்த நேரத்தில் என்ன பன்னியிருக்க முடியும்……….

கதிரழகி ஏதோ சொல்ல வரவும், என்ன நினைத்து  இப்படி சொன்ன எனக்கு புரியிது. ஆனா நாம எப்பவும் அடுத்தவங்களுக்காக வாழ முடியாது ……….. இத நான் உன்கிட்ட எதிர் பாரக்கல என்றவள்……… கதிரை முறைத்த வண்ணம் எழுந்து சென்றுவிட்டாள்.

இங்கு நடப்பவை புரிந்தும் புரியாமலும் அமர்ந்து இருந்தான் கதிர் வேலன். 

அவனுக்கு என்ன நடந்து இருக்கும் என்ற யூகம் இருந்தாலும் இவன் யார் என்று தெரியவில்லை.

அதற்குள் மதி பரிடீ வா என்று கையை பிடித்து இழுத்து அவனை எழுப்பிக்கொண்டு இருந்தாள்.

அவனும் எங்கே என்று அவளிடம் பார்வையால் கேட்க அவளும் அவனுக்கு தன் கோலி குண்டு கண்களை உருட்டி பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள். அவன் அவள் காதில் ஏதோ சொல்லிவிட்டு……. அதற்கு அவள் தலையை இல்லை என்னும் படியாக ஆட்ட என்று அவர்கள் உலகம் தனியாக இயங்கி கொண்டு இருந்து. 

அதை பார்க்கவே அத்தனை அழகாக இருந்து. 

இப்படி முகத்துக்கு நேராக சொல்லியும் சட்டமாய் அமர்ந்து இருப்பவனை பார்த்து அடுத்து என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை. குழந்தை உடன் அவனது இனக்கம் அவளுக்கு பிடிக்கவில்லை,தங்கள் இருவர் உலகில் அவள் யாரையும் அனுமதிக்க வரும்பவில்லை. அவர்களையே தவிப்புடன் பார்த்து இருந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் நெற்றியில் முத்தம் இட்டவன், வேறு யாரையும் பார்க்காமல் கிளம்பி விட, அது வரை அங்கு நடப்பவற்றை பார்வையாளராக இருந்து பார்த்துக்கொண்டு இரு்தவன்.

என்ன அழகி இது நமக்கு உதவி செய்தவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா? என்றான் குரலில் கண்டிப்புடன். அதற்கு ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தவள். நம்ம கிட்ட அன்பா, அனுசரனையா இருக்க, நம்ம சுத்தி ஆள் இருக்குனு பொய்யா என் பெணுக்கு நம்பிக்கை யாரும் கொடுக்க வேண்டாம். நான் பிறந்தில் இருந்து என்னை பார்த்தவங்களே என்னை கைவிட்டப்போ, யார் என்று தெரியாத ஒருத்தர் என்று மகளுக்கு  எந்த நம்பிக்கையும் கொடுக்க வேண்டாம்…………………..

…………………..

இங்கு திருமனம் பற்றி கேட்க கனேசன் மற்றும் ரத்தினம் இருவரும் சென்னை கிளம்பிக்கொண்டு இருக்க அவர்கள் முன் வந்து நின்றான் அன்பழகன். நின்றவனை என்ன என்பது போல் பார்த்தனர் இருவரும்.

நீங்க சென்னைக்கு  தான் போறிங்க, இதையும் கேட்டுவிட்டு போங்க என்றவன். கதிரழகி கல்யாணம் பன்னிகிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என் குழந்தை எனக்கு வேனும், இல்லை அவளை எனக்கு கட்டி வைங்க என்றான்.

அவனின் இந்த பேசில் அந்த வீட்டில் இருந்த யார் அதிகம் அதிர்ந்தார்கள் என்று  அங்கு இருந்த மூவருக்கும் தான் வெளிச்சம். 

தொடரும்…………….

Advertisement