Advertisement

அத்தியாயம் – 5

கையில் காபியுடன் அவன் அமர்ந்து இருக்க, அவன் நினைவுகள் பின் நேக்கி சென்று இருந்தது. அம்மாவும், அப்பாவும் ஆசிரியர்கள் என்றாலும் அவனுனின் விருப்பம் என்னவோ மருத்துவமாக தான் இருந்து. பெரும்பாலும் அவர்கள் பனியிடங்கள் வேறு வேறாக இருக்கும். 6 ஆம் வகுப்பு வரையிலும் தாத்தா பாட்டி வீட்டில் இருந்து படித்தவன். அதன் பின் விடுதி வசதியுடன் இருக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டான், 12 ஆம் வகுப்பு வரை அங்கு தான் பள்ளி விடுமுறையில் சென்னையில் இருக்கும் வீட்டுக்கு வருபவன் அம்மா, அப்பாவோடு விடுமுறை முடியும் மட்டும் இருப்பான் பின் அவரவர் பணிக்கு திரும்புவர்.

அவன் மருத்துவம் தேர்ந்து எடுத்தது, பெற்றோருக்கு மகிழ்ச்சி தான், ஆனால் அதை அவன் இரானுவ கல்லூரியில் தான்  படிக்கப்போவதாக சென்னதும், அவர்களுக்கு அதிர்ச்சி தான் ஆனாலும், முடிவில் அவன் பிடிவாதமே வென்றது. அதன் படி அவன் கல்லூரில் சேர்ந்தான். அவனுக்கு விருப்பமான துறை அதனால்  அதை விரும்பியே படித்தான்.

வருடத்தில் ஒரு முறை சென்னை வந்து பெற்றோர் உடன் இருந்து செல்வான். அப்படியாக அவன் வருடம் ஒரு முறை விடுமுறைக்கு வரும் போதும் அவனுக்கு அங்கு பெரும் தலைவலியாக இருப்பது என்னவே எதிர்வீட்டில் இருக்கும் மணிமேகலை, இவள் இவனின் சிறு வயது தோழி தான் என்றாலும், அவன் வீட்டில் எப்போதும் இவள் ராஜ்ஜூயம் தான், இரட்டை பின்னல் இட்டு, பாவாடை தாவனியில் துறு துறு வென பறக்கும் பட்டாம் பூச்சி அவள். அவளுடன் அவனுக்கு எப்பொதும் ஒரு அழகான நட்பும், புரிதலும் இருக்கும். அதே சமயம் இவர்களுக்குள் அடிதடிக்கும் பஞ்சம் இருக்காது.

இப்படி இவன் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த போது தான் இவன் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்து இருந்தான். அப்போது முதலாம் ஆண்டில் சேர்ந்தவள் தான் ஆக்யா பஞ்சாபை சேர்ந்தவள், கொழு கொழு வென பஞ்சாப் குறிய வனப்பும் அவளிடம் கொட்டி கிடக்கும். அது எல்லாவற்றையும் விட மிகவும் சேட்டை செய்பவள், அவள் இருக்கும் இடம் எப்போதும் சிரிப்பும், கும்மாளமாக இருக்கும். அவள் இந்த கல்லூரிக்கு வந்த ஒரு மாததில்லேயே அவளை தெரியாதவர்கள் யாரும் இல்லை எனலாம். இரானுவ கல்லூரி மிகவும் கண்டிப்பானது என்றாலும், அவள் சேட்டைகள் அங்கு பிரபலம், அவள் தந்தை முன்னால் இரானுவ அதிகாரியாக பணி ஒய்வு பெற்றவர் என்பதால், அவள் பள்ளி காலம் முதல் இப்போது வரை அவள் இருப்பிடம் இரானு தளங்கள் தான். அதில் அவள் எல்லோரையும் சமாளிக்கும் வித்தை கற்று இருந்தாள்.

அவள் கண்களில் ஒரு நாள் மாட்டியவன் தான் பரிதி, வட இந்தியர்களையே பார்த்து இருந்தவள், இவனின் நடை உடை பாவனைகளை வித்தியாசம் மாக கண்டாள். மற்றவர்களை போல் இல்லாமல், எல்லாவற்றிலும் தனித்து தெரியும் இவனை சீண்டுவதில் அவளுக்கு ஒரு தனி இன்பம். முதலில் அதில் முகம் சுளித்து ஒதுங்கி போகிறவன், பின் நாட்களில் அதில் இருக்கும் குழந்தை தனங்களை ரசிக்க கற்றுக்கொண்டான். அவனுக்கு அங்கு நன்பர்கள் என்று பெரிய அளவில் யாரும் இல்லை. பெரும்பாலும் அவன் பொழுதுகள் படிப்பில் தான் கழியும்.

சில நேரங்களில் இவன் தாயுடன் அலைபேசியில் பேசுவதை கண்டு விட்டு இவளும், அவனிடம் வம்பு வளர்பாள். தனக்கும் தமிழ் கற்று தருமாறு இவன் பின்னால் சுற்றுவாள், இவள் தொலை தாங்காமல் அவன் ஏதாவது கற்று தந்தால், அந்த வார்த்தை கொலை செய்துவிடுவாள், இவனுக்கு தான் முழி பிதுங்கும். அவள் பிள்ளை முகம் பார்த்தால்  இவனுக்கு வரும் கோவம் கூட புன்னகையாகிவிடும்.

இப்படி இவன் நாட்கள் சென்றுக்கொண்டு இருக்க, ஒரு நாள் இவன் லேபிள் இருக்கும் போது, அவசரமாக இவன் அருகில் வந்தவள், இவனின் காதில் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி இருந்தாள். முக்கியமாக இருதயத்தின் இயக்கம் பற்றிய குறிப்புகளை எடுத்து கொண்டு இருந்தவன், இவளை அதிர்ந்து பார்த்தான்.

அருகில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது தான் இவனுக்கு முதலில் தோன்றியது. ஆனால் அப்படி ஏதும் நடக்கமால் எல்லோரும் அவரவர் வேலையில் இருக்க, அப்போது தான் அவள் தமிழில் பேசியது அவனுக்கு புரிந்து. அதில் அவளை அதிர்ந்து பார்த்தவன், கோவத்தில் போடி என்று விட்டான். அவன் சொன்னதை கேட்டவள், அலை பேசியில் ஏதோ செய்துக்கொண்டு இருக்க, அதில் அவன் புருவம் நெரித்து பார்த்தான். அவன் சொன்ன வார்த்தையை அவளுக்குள் புரிந்த வகையில் கூகுளில் மொழிபெயர்த்துக்கொண்டு இருந்தாள். அதை பார்த்து அவனுக்கு இது வரை இருந்த நிலை மாறி புன்னகை அரும்பி இருந்து.

ஆனாலும் அதை முகத்தில் காட்டாமல், அடுத்து அவள் என்ன செய்வாள் என்று பார்த்து இருந்தான், அவள் எவ்வளவு முயன்றும் அதற்கான சரியான விளக்கம் அவளுக்கு கிடைக்காமல் போக அவன் முகத்தை பார்த்தாள் அவனு சிரிப்பை கண்டு கொண்டவள் ஏய் என்னை பத்தி என்ன சொன்ன என்றாள்,  அவள் விரலை நீட்டி அதில் சிறு பிள்ளை செய்கையை கண்டவன் புன்னகை மேலும் விரிந்து கொள்ள, அவன் மீண்டும் போடி என்று விட்டு சென்று விட அவளே எப்படியும் அர்த்தம் கண்டுபிடிக்காம விடமாட்டேன் என்று போகும் அவனை பார்த்து கத்திக்கொண்டு இருந்தாள். திரும்பி நடந்துக்கொண்டு இருந்தவனு முகத்திலோ புன்னகையின் சாயல், சில வருடங்கள் கிழித்து மனமாற புன்னகைக்கிறான், இங்கு வந்த புதிதில் இங்கு அவனுக்கு எல்லாம் ஒத்துக்கொள்ளவே சிலமாதங்கள் அகி இருந்து.அடுத்து மொழி பிரச்சனை, எல்லாவற்றையும் சமாளித்து அவன் அங்கு பெருந்து வதற்க்கு 2 ஆண்டுகள் ஆகி இருந்து. நன்பர்கள் என்று பெரியவட்டம் ஒன்றும் அவனிடம் இல்லை. ஆனால் இன்று இவள் செய்த சேட்டைகள் அவனின் இத்தனை வருட மௌனத்தை கலைத்து இருந்து. அன்றில் இருந்து ஆரம்பித்து இருவருக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம்.

இவனை பார்க்கும் போது எல்லாம் அவள் காதல் சொல்வாள் அதுவும் தமிழில், அவள் தமிழ் பேசும் அழகை கானவே அவன்  அவளை வெளியில் முறைத்தாலும், அவள் சேட்டைகள் இவனுக்கு இரசனையே, இருவருக்கும் காதல் இருந்தா என்றால்……………………. இல்லை!!! தான், ஆனால் அழகான நட்பு கண்ணுக்கு தெரியாமல் இருந்து என்னவே உண்மை, இப்படியே இவர்கள் காலம் சென்று இருந்தாள், நன்றாக இருந்து இருக்கும். ஆனால் இவன் கடைசி வருடம் என்பதால்  இவர்கள் லடாக்  கேம்பு சென்று இருக்க, இவர்களின் ஜுனியர்களும் இவர்கள் உடன் கலந்துக்கொள்ள, அந்த பகுதிக்கு இரண்டு நாள் முடிந்த நிலையில், அங்கு தீடீர் என்று ஏற்பட்ட பணி சரிவில் இவர்களுடன் வந்து ஒரு பகுதிமாணவர்கள் அதில் மாட்டிக்கொள்ள, கடைசியில் 3 நாட்களுக்கு பிறகு இவளையும் சேர்த்து 3 பேரையும்  பினமாகதான் மீட்க முடிந்து. அதில் முற்றிலும் உடைந்துபோனான் இவன். ஏன் என்றால் முதல் வருடமாணவர்கள் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள், இவனுக்காக தான் அவள் இந்த கேம்புக்கு வந்தது. வந்த இடத்தில் இப்படி ஆகி இருந்து தன்னால் தான் என்ற குற்ற உணர்வே அவனை ஆட்டிபடைத்து. அன்றில் இருந்து  முற்றிலும் தன்னை தனிமை படுத்திக்கொண்டான். எப்போதும் ஒரு பட்டாம் பூச்சி போல் தன்னை சுற்றி வந்தவள் இப்போது இந்த உலகில் இல்லை என்பதை அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

இவன் படிப்பை முடித்த பின், அங்கு உள்ள விதிமுறைபடி  இங்கு 2 வருடம் வேலை செய்தாக வேண்டும். அவன் அம்மா அவனின் திருமண பேச்சை எடுக்க, அதன் பின் ஊர்பக்கம் செல்லவதை தவிர்த்து இங்கேயே இருந்து கொண்டான்இப்படி இவன் எண்ண அலைகள் பின்னோக்கிய பயணத்தில் இருக்க, அவன் தந்தையின் அசைவை உணர்ந்து திரும்பியவன், அவருக்கு உதவி செய்து காலை கடன்களை முடிக்க வைத்தான், தன் மகனை பார்த்த சந்தோஷத்தில் அவருக்கும் தெம்பாக இருந்து, அவனிடம் பேசிபடியே எல்லாவற்றையும் செய்தவன், பின் மருத்துவர் சென்ன தகவல்களை அவருடன் பகிர்ந்துக்கொண்டான். கண்டிப்பாக அறுவை சீசிக்சை செய்ய வேண்டும் என்று கூறியவன், தந்தைக்கு மருத்துவனாக தைரியத்தையும் கொடுத்த இருந்தான்.

………………

இவர்கள்  இப்படி பேசிக்கொண்டு இருக்க வீட்டில் மருத்துமனை கிளம்ப தன் போல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார் பாக்கியா, ஆனால் அவரின்  எண்ணங்கள் எல்லாம் மகனை சுற்றியே இருந்து. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி எப்படியாவது மகனது திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு இருந்தார். கணவருக்கு இப்படி ஆனதில் முதல் கட்ட அதிர்வில் இருந்தவர், பின் தன்னை தேற்றிக்கொண்டார். தற்போது அவரின் உடல் நிலையை அறிந்தவர், மகன் வந்தும் இன்னும் தெளிந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்

மகன் எப்படியும் கணவனை அந்த ஆபத்தில் இருந்து காபாற்றி விடுவான் என்று அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து,  அதனால் தான் அவர் சிந்தனை முழுவதும் இப்போது மகனின் திருமணத்தில் இருந்து, இத்தனை நாள் இங்கு வராமல் சாக்கு சொல்லிக்கொண்டு இருந்தவன். இப்போது வந்து இருக்க அதை சரியாக பயன்படுத்த முடிவு செயத்து இருந்தார்.

அவர் எண்ணம் முழுவதும்    மணிமேகலை தான், அவளை சிறுபிள்ளையில் இருந்து தெரியும் அவருக்கு, அம்மா அப்பாவிற்க்கு ஓரே மகள், முதுகலை  படித்து முடித்து  இருந்தவள் வேலைக்கு  முயன்றுக்கொண்டு இருக்கும் போது தான் திருமணம் கூடி வந்தது, 5 வருடத்திற்க்கு முன் அவளுக்கு திருமணம் நடந்து முடிந்து ஊர் திரும்பிக்கொண்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தில் இவளை தவிர, அனைவரும் இறந்து இருக்க, அவள் கணவனும் அந்து விபத்தில் இறந்து இருந்தான். வழக்கம் போது உறவுகள் ஒதுங்கி கொள் இவளுக்கு என்று யாரும் இல்லை. மாமியார் வீடு பெயர் அளவில் கூட வந்து பார்க்கவில்லை

அதன் பின் அதில் இருந்து இவள் மீண்டு வரவே 2 வருடம் ஆகி இருந்து, அந்த நேரத்தில் மகன் இறுதி வருடபடிப்பில் இருந்தான். இவளுக்கு ஆதரவாக ராகவனும் பாக்கியாவும் தான் இருந்தனர். மெல்ல இயல்புக்கு திரும்பி இருந்தவள். முழுமையாக மாற காரணம் கதிரழகி தான் அதிலும் மதி வந்த பின் அவள் அவளை முழுமையாக மீட்டுக்கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அதுவரை தன் கவலை தான் பெரிது என்று இருந்தவள், கதிரழகியை பார்த்து  தன்னை தேற்றிக்கொண்டாள். அவளுக்கும் பக்க பலமாக இருந்தாள்.

ஆனால் இவர்கள் வாழ்கையில்  மேலும் வண்ணங்கள் சேர்த்து என்னவோ மதி தான் அவள் வந்த பின் இவர்களுக்கு கானா  நேரம் எல்லாம் அவள் எடுத்துக்கொண்டாள்.

அதனால் மணிமேகலை மேல் எப்போதும் அவருக்கு ஒரு பாசம் உண்டு, அவளை தன் மகனுக்கு திருமணம் முடித்து வைத்து அவளை தன் மருமகளாக கொண்டு வர வேண்டும் என்று அவருக்கு நீண்ட நாள் ஆசை அதை செயல் படுத்த முனைந்தார்.

எல்லாவற்றையும் நினைத்த படி பெருட்களை எடுத்து வைத்தவர். மருத்துவமனை கிளம்ப தயார் ஆனார்.

………………………….

அன்று இரவில் யாரும் சரியாக உறங்கவில்லை உண்ணவும் இல்லை. எல்லோர் மனதிலும் பல எண்ணங்கள், அதில் காலை எழுந்த உடன் வீட்டின் தினையில் அமர்ந்து இருந்தார் கனேசன். வாசல் தெளிக்க வெளியில் வந்த ரத்தினம் இவர் பார்த்து என்ன இந்த நேரத்தில் இங்கு அமர்ந்து இருக்கிறா் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. இந்த நேரத்தில் இவர் வயலுக்கு போகாமல் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் என்று எண்ணியபடியே அவர் முகத்தை திரும்பி திரும்பி பார்த்த படி தன் வேலைகளை செய்துக்கொண்டு இருந்தார்.

கனேசன் தன் யோசனைகளில் இருந்தவர், ரத்தினத்தை கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து தன் அருகில் ரத்தினம் ஏதோ கேட்டுக்கொண்டு  இருப்பதை பார்தவர், இப்போது தான் அவரை பார்த்தார். என்ன என்பதை போல் ரத்தினத்தை பார்த்தார்.

இல்ல………. இவ்வளோ காலையில் இங்க ஏதும் உடம்புக்கு முடிலையா என்றார் அவர் முகம் பார்த்தபடியே. அதில் தன்னநிலை அடைந்தவர் இல்லை என்று தலையாட்டிவிட்டு. எழுந்தார். இரண்டு அடி எடுத்து வைத்தவர், பின் திரும்பி மனைவியை பார்த்தார். அவர் ஏதோ சொல்ல வருவது புரிந்து ரத்தினம் அவர் முகத்தையே பார்க்க, சிறிது தயங்கிவிட்டு, பின் ரத்தினத்திடம் நம்ப கதிருக்கும், அழகிக்கும் கல்யாணம் செய்யலாம்னு இருக்கேன் என்றார், அதுவரை என்வோ ஏதோ என்று நினைத்து இருந்தவர், கணவனின் இந்த பேச்சில் முகம் மலந்தவர். சந்தோஷமுங்க என்றவர், அவர் முகம் பார்த்து மலர்ந்து சிரித்து இருந்தார், அதில் முழு சந்தோஷம் மட்டுமே வேறு  ஏதும் இல்லை

தன் மகளின் வாழ்க்கை இனி சரியாக விடும் என்று அவர் மனமும் சந்நோஷத்தில் இருந்து. நான் ஒன்று சொல்லாம்மா? என்றார் ரத்தினம் தயக்கத்துடன்……….. என்ன என்று அவரை பார்தார் கனேசன், இது பத்தி நாம முடிவு எடுக்க முன்னாடி புள்ளைங்க இரண்டு பேர்கிட்டயும் பேசிடுங்க என்றார் சற்று தயக்கதுடன். அதில் அவர் முகம் கலையிழந்தாலும். மனைவி சொல்லுவதும் சரிதான் என்று உணர்ந்தவர், சரி என்று தலையத்தார்.

திரும்ப உன் தம்பி இதில் ஏதும் பன்ன கூடாது என்று அவரை பார்த்து எச்சரிக்கும் குரலில் சொல்லி இருந்தார்.

அதில் ரத்தினத்தின் முகம் வாடினாலும், அதை காட்டிக்கொள்ளாதவர், சரிங்க நான் பார்த்துக்கொள்ளிறேன், அவன் இதில் வர மாட்டான் என்றார்.

அவரும் தலையாட்டியபடி நடக்க, இது அனைத்தும் கேட்டு இருந்த அன்பழகனுக்கு கோவம் தலைக்கு ஏறிது என்றால், அவன் மனைவி நந்தினிக்கோ மனம் குளிர்ந்து போய் இருந்து. ஆம் நேற்று வரை கதிரழகி எங்கே தனக்கும் கணவணுக்கும் இடையில் மீண்டும் வந்துவிடுவாளோ என்று எண்ணி பயந்துக்கொண்டு இருந்வள், இன்று அவளுக்கு கதிர்வேலனுடன் திருமணம் நடந்துவிட்டால், அவள் இனி தன் வாழ்வில் வரமாட்டாள் என்ற நினைவே மனதை மகிழ்ச்சியுற செய்து இருந்து.

எல்லோர் மனதில் ஒரு கணக்குதள் இருக்க, காலம் யாருக்கு என்ன கணக்கை போட்டு வைத்து இருக்கிறது என்று யாருக்கு தெரியும்………………….

 

எதிர் காலம் எல்லோருக்கும் என்ன வைத்து இருக்கிறதே!!!!!!!!!!!!!!!!!!!!!

இரு பெண்களின் வாழ்க்கையில் வண்ணங்களை கொண்டு வந்து மதி, பரிதியின் வாழ்வில் என்ன செய்வாள். அவன் இழந்த சந்தோஷத்தை அவனுக்கு மீட்டு தருவாளா?

அன்பழகன் அடுத்து என்ன செய்ய போகிறான், அவன் மனைவி சந்தோஷம் நிலைத்து இருக்கும்மா????

தொடரும்…………….

Advertisement