Advertisement

அத்தியாயம் – 4

காலை சூரியன் தன் கதிர்களை கொண்டு பூமியை வெளிச்சமாக்கிக்கொண்டு இருக்க. இங்கே  தன் உறக்கும் கலைந்து திரும்பி படுத்தவன், தன் படுக்கையில் படுத்த படி சேம்பல் முறித்தான். பின் எழுந்தவன் அந்த அறையின் ஜன்னல் அருகில் சென்று திரை சீலையை வில்கியவன், கண்ணாடி ஜன்னல்களையும் திறந்துவிட்டு இருந்தான். காலை 5 மணி தற்போது பஞ்சாப்பில் வாகா எல்லையில் இருக்கும் ஆர்மி கேம்புக்கு, இவர்கள் மருத்துவ குழு வந்து இருந்து. இன்னும் இரண்டு நாட்களில் இங்கு இருந்து கிளம்பிவிடுவார்கள்

சற்று நேரம் ஜன்னல் அருகில் நின்று இருந்தவன் பின் குளியல் அறைக்கு சென்று தன் காலை கடன்களை முடித்துக்கொண்டு, தன் கைபேசியுடன் ஷேபாவில் அமர்ந்தான். நேரம் 6  மணி ஆகி இருந்து, நேற்று வந்த தவறிய அழைப்புகளை பார்த்தவன், எண் புதியதாக இருக்குவும், அழைத்து யார் என்று யேசித்தான். கண்டிப்பாக அழைப்பு ஊரில்  இருந்து தான், ஆனால் யார்???

என்று யேசனையில் இருந்தவன், ஒரு வேளை அம்மா, அப்பாவிற்க்கு ஏதும் என்று யேசித்தவன், அவர்களுக்கு தான் முதலில் அழைத்தான். மணிமேகலை போன் அழைப்பு எடுக்கபடாமல் இருக்க, அப்பாவின் போன் அனைத்து வைக்கபட்டு இருந்து. அதில் மேலும் கலவரமானவன், அடுத்து யாருக்கு அழைக்க என்று தெரியிவில்லை. அவன் படிக்கவென இரானுவ மருத்துவ கல்லூரியில் சேர்ந்த பின் சென்னை சென்று வந்த பொழுதுகள் வெகு  செற்பம் தான். அதனால் அக்கம் பக்கம் யாரும் அதிகம் பழக்கம் இல்லை. யாரின் அலைபேசி எண்ணும் அவனிடம் இல்லை

ஒரு வேளை அம்மா தான் அந்த எண்ணில் இருந்து இரவில் அழைத்து இருப்பாறோ என்று அந்த எண்ணுக்கு முயற்சி செய்ய, அப்போது தான் மருத்துவமனையில் இருந்து வீடு வந்து இருந்தவள், மகளை படுக்க வைத்துவிட்டு, குளிக்க சென்று இருந்தாள். இவளுக்கு அழைப்பு கேட்கவில்லை. ஆனால் மகளின் அருகில் வைத்து இருந்த அலைபேசியின் சத்தத்தில் விழித்துக்கொண்ட மதி, அதை எடுத்து காதில் வைத்தவள் ஹலோ……………… யாரு…………. என்று அந்த மழலை குரலில் கேட்க, அந்த பக்கம் அவனுக்கு மனதில் என்ன உணர்வு என்று தெரியவில்லை. அவனும்  வாழ்க்கை ஒட்டத்தில் இப்படியான பொழுதுகள் மிகவும் அரிது. இதழில் புன்னகை அரும்பியது

அதற்குள் அவள் நாலு ஹாலே சொல்லி இருக்க, அவன் ஹலோ குட்டி செல்லம் யார் பேசுறிங்க என்றான் குரலில் மென்மையை வரவழைத்து. முதல் முதலில் அம்மாவின் அலைபேசியில் புதிய குரல் கேட்கவும், நீங்க யாரு என்று குழந்தை.

அவனுக்கு என்ன செல்வது………… கேட்பது என்று தெரியவில்லை…………. குழந்தை பேசும் என்று அவன் எதிர்பார்கவில்லை. ஓரு வேளை குழந்தை தான் தவறுதளாக அழைத்துவிட்டதோ என்று என்னியவன், பெரியவர்கள் யாரும் இருந்தால் அழைக்க சொல்லாம் என்று எண்ணியவன், குட்டி தங்கம், வீட்டில் அம்மா இல்லையா? என்றான்…………..

என் பேர் குட்டி தங்கம் இல்லை. மதியளகி……………………. என்றாள் தன் மழலையில்…………….. அதில் அவன் என்ன என்று மீண்டும் கேட்க. அவள் மதியளகி என்றாள்………………..

அதில் அவனுக்கு மதி மட்டும் புரிய…………… சரி மதிமா அம்மா இருக்காங்களா என்றான். நீங்க யார் என்றாள் குழந்தை. அதில் அவன் என் சொல்வது என்று தெரியாமல்……………. சிறிது நேரம் அமைதியானவன்………….

தான் பரிதி என்றான். பரிடீ என்றாள் அவள், அப்படினா?

அப்படினா……….. அது என் பேர் என்றவன், அம்மா எங்கே வீட்டில் யாரு இருக்க? என்றான்.

அம்மா குளிக்காறாங்க………………. 

ஓஓஓஓ…………….. நீங்க எங்க இருக்கீங்க என்றான் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாது…………….

அது வீட்ல என்றவள். உங்களுக்கு என்ன வேணும் என்றாள்……….. அது என்றவன்…………… அடுத்து பேசும் முன், கதிரழகி வந்துவிட்டாள், மதி குட்டி எழுந்துடீங்களாஎன்றவள் குரல் கேட்டு குழந்தை போனை கீழே வைத்துவிட, சிறிது நேரம் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தவன் இதழ்களில் புன்னகை, இனி கன்டிப்பாக யாரும் அலை பேசியை எடுத்து பேச வாய்ப்பில்லை என்று உணர்ந்தவன். அழைப்பை துண்டித்து இருந்தான்.

ஆனால் இது யார் எதற்கு தன்னை இத்தனை முறை அழைத்து இருக்கிறார்கள் அதுவும் இரவில்? என்று அவனுள் பல கேள்விகள் இருந்தாலும். ஒரு வேலை குழந்தை தெரியாமல் அழைத்து இருக்கும்மோ என்று தோன்ற மீண்டும் அந்த எண்ணிக்கு அழைக்காமல் விட்டான்.

அதற்குள் இன்னும் ஒரு அழைப்பு வர அதை எடுத்து பேச ஆரம்பித்து இருந்தான்.

……………………………

தன் வேலைகளை அவரசரமாக முடித்துக்கொண்டு, மதியையும், குழந்தைகளையும் பள்ளியில் விட்டவள், வேண்டிய பெருட்களை எடுத்துக்கொண்டு, அத்துடன் பக்கியலட்சுமி, மற்றும் அண்ணாமலையின் அலைபேசிகளையும் எடுத்துக்கொண்டு ஆட்டோ பிடித்து மருத்துவமனை வந்து சேர்ந்து இருந்தாள். இரவு இவர்கள் இருந்த அறைக்கு வர, அங்கு அமர்ந்து இருந்த மணிமேகலையிடம் எப்படி இருக்கிறார் என்று கேட்டுக்கொண்டு இருந்தாள். அப்போது தான், மணிமேகலையின் தொலைபேசியில் தன் மகனுக்கு அழைத்து பேசிக்கொண்டு இருந்தார் பாக்கியலட்சுமி, மகனிடம் பேசி முடித்தவர் அவனை வருமாறு அழைத்தார். அவனும் புறபட்டு வருவதாக கூறிக்கொண்டு இருக்க, அப்போது கதிரழகியின் குரல் அவனுக்கு கேட்டது. இவள்………………….. என்று யோசித்தவன், அம்மா கூட யார் இருக்க என்றான். நம்ம மணிமேகலை தான் என்றவர், அவளிடம் பேசுகிறாய்யா? என்று கேட்டவர் மனதில் தான் நிமிடத்தில் எத்தனை எத்தனை எண்ணங்கள்…………

ஆனால் அவனோ என்ன அவளுக்கு குழந்தை இருக்கிறதா? காலையில் கேட்டது அவள் குரலா? என்ற சிந்தனையில் இருந்தான். இல்லை மா வந்து பார்க்கலாம் என்றவன், கிளம்புவதற்கான  ஆயத்தம் செய்தான்.

அடுத்து விமானத்தில் சென்னை செல்ல பதிவு  செய்துவிட, இரவுக்குள் எப்படியும் சென்னை சென்றுவிடலாம் என்று நினைத்தவன், 1 மாதகாலம் விடுமுறைக்கு எழுதிக்கொடுத்து இருந்தான்.

……………………………..

காலையில் வந்த மருத்துவர், இப்போது நிலைமை பரவாயில்லை என்றும், இன்று சில பரிசோதனைகளை முடித்துவிட்டு சொல்வதாகவும் சொல்ல அனைவரும் சென்று அவரை பார்த்துவந்தனர்.

மணிமேகலை மற்றும் பாக்கியலட்சுமியை வீட்டுக்கு செல்ல சொன்ன கதிரழகி, தான் இங்கு இருப்பதாகவும், அவர்களை குளித்து சிறிது ஒய்வு எடுத்து வரவும் சொன்னால். சரி என்ற இருவரும், அவளை அங்கு விட்டு, ஒர் ஆட்டோபிடித்து, வீட்டுக்கு வந்தனர். பாக்கியலட்சுமி, வீட்டை அடைந்தும். பரிதி வரேன் சொல்லி இருக்கான்மா…….. என்றார் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே…………. அவள் முகத்தில் ஏதும் மாற்றம் ஏறபடுகிறாதா என்று பார்த்துக்கொண்டே, ஒ அப்பாடியா மா………..

நான் பார்த்து ஒரு 7 வருஷம் இருக்கும், இப்ப எப்படி இருங்காங்க என்றாள். ம்மம்மம்மம்மம பார்க்க தானே போறா என்றவர், அவளை ஒய்வு எடுக்க சொல்லிவிட்டு, வீட்டுக்குள் வந்து குளித்து, சிறிது நேரம் உறங்கி இருந்தார்.

மணி 2 இருக்கும் போது, அழைப்பு மணி கேட்க, வெளியில் மணி மேகலை தான்  நின்று இருந்தாள், மா கிளம்பலாமா…. கதிருக்கு ஸ்கூல் சவாரி இருக்கு 3 மணிக்கு, உங்களால முடியாமா, இல்லைனா, நான் போறேன், நீங்க அப்புறம் வாங்க என்றாள். இல்லை மா போகலாம் என்றவள், கிளம்பி வர, அவள் சமைத்து கொண்டு வந்த உணவினை உண்டு விட்டு, 2.30 மருத்துவமனை அடைந்து இருந்தனர்

………………………………..

மத்தியம் 12.30 மணிக்கு விமானநிலையம் வந்தவன், 1.30 மணிவிமானத்திற்காக காத்து இருந்தான். அப்போது விமானநிலையத்தில், குழந்தைகள் அங்கும் இங்கும் ஒடிவிளையாடிக்கொண்டு இருக்க, அவனுக்கு காலையில் பேசிய குழந்தையின் நினைவில் அவன் இதழ்கள் தானாக புன்னகை அரும்பியது. பள்ளி படிப்பு முடித்துவுடன் இந்த கல்லூரியில் இடம் கிடைக்க வந்தவன் தான். வருடம் ஒரு முறை ஊருக்கு செல்லுவான், அவன் கடைசிவருடம், படிக்கும் போது வந்தவள் தான் ஆக்யா பஞ்சாபை நேர்ந்தவள், முதல் வருட மானவி, அவள் வந்து முதல் அவன் வாழ்வில் சுவாரசியங்களுக்கு குறைவிருக்காது. இவனையே சுற்றி வந்தவள். அவளிடம் கொஞ்சம் கூட சினியர் என்ற மரியாதையை எதிர்பார்க்க முடியாது. அதுவும் இவனுக்கு நிச்சயம் கிடைக்காது. அவளை நினைத்தாலே மனதில் மத்தாப்பு தான்…………………………..  அவளோடு போன அந்த சிரிப்பு இப்போது தான் இவன் இதழ்களில், நினைவுகளில் இருந்தவன் கவனத்தை விமான அறிவிப்பு கலைத்து, தனக்கான விமானம் நேக்கி சென்றான்.

அவன் சென்னையை அடையும் போது மணி 4.30 ஆகி இருந்து, எல்லா சம்பிரதாயங்களையும் முடித்துக்கொண்டு அன்னைக்கு அழைத்தவன், அவர்கள் இருக்கும் மருத்துவமனை கேட்டு அறிந்து, ஒரு டாக்சி எடுத்து அங்கு சென்றான், ஒரே ஒரு travel bag மட்டுமே கொண்டு வந்து இருந்தான், அதனால் மருத்துவ மனைக்கே வந்துவிட்டு இருந்தான். அங்கு வரவேற்ப்பில் விசாரித்தவன், அவர்கள் இருக்கும் அறைக்குள் சொல்ல, நேர அங்கே வந்துவிட்டு இருந்தான், அங்கு மணிமேகலை மட்டுமே இருந்தாள், அவளை பார்த்தும், ஏய் மணி எப்படி இருக்க, திடீர்  என்று அறையில் ஒரு ஆண் குரல் கேட்கவும், திடுக்கிட்டவள், வந்தவனை பார்த்து மகிழ்ந்து போனாள். வந்தது அவள் சிறு வயது விளையாட்டு தோழன் பரிதி அல்லவா.

ஏய் திரி என்றாள் அவளும் உற்சாகத்துடன், அந்த நேரத்தில் அறைக்கு வந்த பாக்கியலட்சுமிக்கு, அவர்கள் மகிழ்ச்சியான முகத்தை பார்த்து மனம் நிறைந்து போனது. இருக்கும் இடம் கூட மறந்து அவர் அதை இரசித்து பார்த்து இருந்தார்.

அவரை முதலில் பார்த்து மணிமேகலை தான், இங்க பாருங்க ஆன்டி யார் வந்து இருக்கா என்று ஆர்பரித்து இருந்தாள். அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்தவருக்கு, இந்த மகிழ்வு அவள் முகத்தில் நிரந்திரமாக இருந்திட வேண்டும் என்று மனது நினைத்து

அதற்குள் பரிதியின் குரல் அவரை களைத்து, என்னமா அப்பா எப்படி இருக்கறார் என்றான். இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லைனு டாக்டர் சொன்னார் பா. என்றவர் மருத்துவர் சொன்ன தகவல்களை சொன்னார். எல்லாவற்றையும் கேட்டவன், மருத்துவரை பார்த்து வருவதாக சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறி இருந்தான். சொல்லும் அவனையே பார்த்து இருந்தவர், இந்த முறை எப்படியும் இவன் திருமனத்தை முடித்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டார். மருத்துவரை சந்திக்க சென்றவன் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு, தந்தையி்ன் உடல் நிலை பற்றி கேட்டுக்கொண்டான். அவர்களும் அவன் மருத்துவன் என்பதால், அவனிடம் அவன் தந்தையை பற்றி எல்லாம் கூறியவர்கள், தற்போது கவலைபட வேண்டாம் என்றும். ஆனால் அன்ஜீயோ செய்யவேண்டி வரலாம் என்றும் கூறினர். அதை கேட்டுக்கொண்டவன். அப்பாவை எப்போது வீட்டிக்கு அழைத்து சொல்லாம் என்று கேட்டுக்கொண்டு, தந்தை இருக்கும் அறையே நோக்கி வந்துக்கொண்டு இருந்தான்.

அறையை நெருங்கும் போது அவனுக்கு கேட்டது அந்த குரல், நீண்ட காலம் அவனிடம் இல்லாமல் இருந்து புன்னகையை மீட்டு இருந்த குரல். அதை கேட்டதும், அதுவரை இருந்த களைப்பு, இறுக்கம், தளர்ந்து புன்னகை முகமாகவே அறைக்குள் நுழைந்து இருந்தான். அங்கு அவன் கண்ட காட்சியில் அந்த புன்னகை இன்னுமோ விரிந்து இருந்து

தன் அப்பாவின் அருகில் அமர்ந்து இருந்த, மதியழகி, அவரிடம் உங்களுக்கு ஒன்னும் இல்லை தாத்தா, நீங்க அன்னிக்கு மாடில வந்து பாட்டி தெரியாம ஸ்வீட் சாப்டிங்களே, அதனாலே உங்குளுக்கு ஜூரம் வந்துடா………. டாக்டர் உங்குளுக்கு ஊசி போட்டாரா, வலிக்குதா……. என்று கேட்டுக்கொண்டு இருந்தவள். கவலை படாதிங்க எனக்கு கூட இப்படி தான் ஊசி போட்டாங்க, அப்புறம் எல்லாம் சரியா போச்சி, உங்களுகும் எல்லாம் சரியாகிடும். என்று தனக்கு தெரிந்த வகையில் கையாட்டிக்கொண்டு கதை பேசிக்கொண்டு இருந்தாள்.

குட்டியாக கை கால் முளைத்த முல்லை செடி போல் அவள் தலை அசைத்து பேசும் வீதம் யாரை கவர்ந்துவிடும். சிறிது நேரம் கதவு அருகே நன்று பார்த்துக்கொண்டு இருந்தவன். சின்னவள் திரும்பி அவனை பார்க்கவும் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டாள். அதில் எல்லோரும் திரும்ப, இவனை பார்த்த பாக்கியா வா பரிதி என்று அழைத்தார்.

அவனுப் உள்ளே வர, அது வரை பேச்சை நிறுத்தி இருந்த குழந்தை அவனை பார்த்தது. அவனும் அவளை தான் பார்த்து இருந்தான். வா பா பரிதி இவதான் மதிகுட்டி நம்ம வீட்டு மாடியில் குடியிருக்காங்க. என்று பாக்கிய சொல்ல, அவனை பார்த்துக்கொண்டு இருந்த சின்னவள்…………………..

சட்டென்று பரிடீ என்றாள் அவனை பார்த்து, அதை கேட்ட அனைவரும் சிரித்து விட, அவனும் ஆம் என்று தலை அசைத்தான்மதியளகி என்றான் அவனும் அவளை போல் விரல் நீட்டி, அதில் அந்த குட்டி அழகாக தலை அசைக்க, அனைவரும் அதன் பின் அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்து  விட அவர்கள் இருவரையும் பார்த்த படி இருந்தனர் அனைவரும்

மனி இரவு 8 ஆகி இருந்து. எல்லோரையும் வீட்டுக்கு கிளம்ப சொன்னவன் தானே அப்பாவுடன் இருப்பதாக சொல்ல முதலில் அதை பாக்கிய மறுத்தாலும் பின் மணிமேலையுடனும், கதிரழிகியுடனும் கிளம்பிவிட்டார்.

இரவு உணவை வரும் போதே கதிரழகி கொண்டு வந்து இருந்தாள், அதை உண்டு விட்டு தந்தைக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை கொடுத்தவன். ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அங்கு தவியாளர்களுக்கும் என இருக்கும் படுக்கையில் படுத்தவன், சிறிது நேரம் படித்துக்கொண்டு இருந்தான். பின் தூக்கம் கண்களை சுழற்ற அதை முடிவைத்துவிட்டு படுத்துக்கொண்டவன். மொதுவாக ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்று கொண்டு இருக்க, அங்கு அவனுக்கு வரும் வழக்கமான கனவு, அவன் தூக்கத்தை காவு வாங்கும் கனவு, பணி பொழியும் மலைகளின் நடுவில், ஓரு மத்தின் அடியில் பெண் ஒருத்தி நின்று கொண்டு அந்த அழகை எல்லாம் இரசித்துக்கொண்டு இருக்கிறாள். அவள் அருகில் இவன் செல்ல அவள் தோள் மீது கைவைக்கும் நொடி அவள் திரும்பி இவன் முகம் பார்த்து, உன்னை என்று ஏதோ சொல்லும் போது அந்த அசம்பாவிதம் நடந்துவிடும்…………………… அதன் பின் அவன் துக்கம் தூரம் தான்…………… ஆனால் இன்று அந்த முகம் மதியின் புன்னகை முகமாக அவனிடம் பரிடீ என்று அழைக்க ………………… அதில் அடித்து பிடித்து எழுந்தவன் நேரம் பார்க்க அதிகாலை 4 மணி என்று ஆகி இருந்து

எழுந்து அமர்ந்தவன் மீண்டும் அந்த கனவை நினைத்து பார்த்தான், இத்தனை வருடம் அவன் தூக்கத்தை கேடுக்கும் அந்த கனவு, ஆனால் இன்று அவன் பார்த்த மதியின் முகமும், அவள் அழைப்பும் மட்டுமே அவன் நினைவில். பின் எழுந்தவன் தன் காலை கடன்களை முடித்துக்கொண்டு, தந்தையை பார்க்க அவர் இன்னும் நன்றாக உறங்கிகொண்டு இருந்தார். அப்படியே வெளியில் வந்தவன், அங்கு இருக்கும் கேண்டீனில் ஒரு காபியை வாங்கிகொண்டு அமர்ந்து இருந்தான். வெகு நாட்களில் கழித்து ஒரு அழகிய காலை. அவனுக்கு அதில் அவன் முகமும் அகமும் மலர்ந்து இருந்து அவன்  மதியளகி யால்………………. 

இப்போது இவன் முகத்தில் இருக்கும் இந்த புன்னகையின் ஆயுள் எவ்வளவு என்று யாருக்கு தெரியும்………………. 

தொடரும்………………

Advertisement