Advertisement

அத்தியாயம் – 3

வீட்டுக்கு வந்தவர்கள் தங்கள் அறைக்குள் சென்றுவிட, என்ன செய்துவது  என்று தெரியாமல் ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்துவிட்டாள் நந்தினி, அவள் மனது அமைதி இல்லாமல் தவித்து. தன் கடந்த காலத்தில் செய்தவை எல்லாம் மனதில் படமாக வந்து போனது. 

இந்த வாழ்க்கை்கு தான் எல்லாம் செய்தாள், ஆனால் அவள் சந்தோஷமாக வாழ்கிறாளா என்றாள் அது கேள்விகுறி தான். அன்று அவள் செய்து ஏதும் அவளுக்கு தவறாக தெரியவில்லை……………. என் வாழ்க்கை அதை நான் தான் முடிவு செய் வேண்டும். அதன் நன்மையும், தீமையும் என்னையே சாறும் என்று அவள் அம்மாவிடம் சென்னாள் தான். ஆனால் இன்று அதை அனுபவிக்கும் போது தான் அதன் வலி தெரிகிறது.

இங்கு இருக்கும் எல்லாம் அவளுடையதே, அவள் கனவன் உள்பட ஆனால், ஏதையும் உரிமையாக கேட்கவே, செய்யவோ அவளால் முடியவில்லை. அந்த அளவிற்க்கு குற்ற உணர்வில் இருந்தாள். செய்யும் போது ஏதும் தெரியவில்லை, ஆனால் இன்று மனதின் இரைச்சல் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். அறைக்குள் அன்பழகனின் நிலை அதைவிட மோசம். அதுவும் இன்று முதல் நாள் அவன் குழந்தை பள்ளிக்கு செல்கிறாள். 

அவள் பிறந்த முதல் இன்று வரை, அவளை எட்ட நின்று பார்ப்பான், அருகில் செல்ல மாட்டான், செல்லமாட்டான் என்பதை வட சொல்ல அவனுக்கு மனதில் தைரியம் வரவில்லை. மகளும் அப்படி தான் இவனை பார்ப்பாளே தவிர இவன் அருகில் வரமாட்டாள். 

அதில், இப்போது தான் தாத்தா பாட்டியிடம் கூட வருகிறாள், அதிலும் கடைசி இரண்டு முறை பார்க்க சென்ற போது அவள் மழலை பேச்சு அவளில் இருந்து பார்வையை வேறு புறம் திரும்பவிடவில்லை அவனை. அப்படியான பேச்சு.

கண்களை உருட்டி கைகளை ஆட்டி, பேசும் போது பூக்கும் புன்னகை, கண்சிட்டல், அவள் அம்மாவிற்க்கு தெரியாமல் அவள் இரசியம் பேசுவது என்று எல்லாம் அவன் கண்முன்னால் வலம் வந்து. இப்போது இதை பற்றி எல்லாம் பேசி என்ன பயன், அன்று நிதானமாக இருந்து இருக்கலாம். அவள் சொல்வதை காது கொடுத்து கேட்டு இருக்கலாம். அந்த வயதில் அவள் மீதும் அவள் தந்தை மீதும் படிந்த வெறுப்பு அன்று வெளிபட்டு விட்டதோ?

அவள் இடத்தில் வேறு பெண் இருந்து இருந்தால் நான் அன்று என்னமுடிவு எடுத்து இருப்பேன். இந்த குழந்தையை விட்டு எப்படி……………………. என்று எண்ணிய அதே நேரம், இந்த குழந்தையை தான் கருவிலேயே அழக்க சொன்னோம் என்று அவன் மனம் இடித்து உரைத்து. அவன் இப்போதும் கூட குழந்தையை நெருங்காமல் இருக்க அதுவும் ஒர் காரணம். அவளுக்கு அது எல்லாம் என்றாவது ஒரு நாள் தெரியவரும். அன்று அவள் ஏதும் கேட்டுவிட்டாள் என்ன பதில் சொல்வது அவளுக்கு, என்பது அவன் மனதை அழுத்திக்கொண்டு இருக்கும் கேள்வி. 

எவ்வளவு பெரிய பாவத்தை அவளுக்கு நான் அன்று செய்துவிட்டேன். அவள் விரும்பியவனை மனந்து இருந்தாள் கூட அவள் இப்படி தனியாக வாழ வேண்டி இல்லாமல் அவளுக்கான குடும்பத்துடன் இருந்து இருப்பாள். இன்று அவள் நிலைக்கு நான் காரணமாகி விட்டேன் என்ற குற்ற உணர்வு அவனை கொன்றுக்கொண்டு இருந்து. நேற்று சென்னை செல்ல வேண்டும் என்று அக்கா வந்து சொன்ன போதிலிருந்து, ஏதும் சாப்பிடவில்லை, சாப்பிட முடியவில்லை, இதோ இன்று மத்தியம் வரை பசி என்ற உணர்வே வரவில்லை அவனுக்கு………………………. பசி மட்டும் அல்ல வேறு சிந்தனையே இல்லை அவனிடத்தில்!!!!!!!!!!!

…………………………………………..

கனேஷன் கண் முடி படுத்து இருந்தார், அவர் அருகில் அமர்ந்து இருந்தார் ரத்தினம் அவரின் மனைவி, அவர் முகத்தை பார்த்த படியே, சென்னை செல்லும் போது இருந்த சந்தோஷம் இப்போது அவர் முகத்தில் இல்லை, கண்கள் முடி இருந்தாலும் அவர் உறங்கவில்லை என்று கருவிழி அசைவு காட்டி கொடுத்து. இருவரும் சரியாக பேசி வருடம் 2 ஆகிறது………………. ரத்தினத்திற்க்கு கனேஷனிடம் பேசும் துணிவு இல்லை, நடந்துவிட்ட தவறில் பெரும் பங்கு அவருடையது தானே, அந்த உணர்வே அவரை எட்ட நிறுத்தி இருந்து. அப்படி ஒன்றும் அவர்கள் மனம் ஒத்த தம்பதிகள் என்று சொல்ல முடியாது, ஆனால் இருவருக்கும் ஒரு இனக்கம் இருக்கும். ஆனால் இப்போ அதுவும் கிடையாது, அவரிடம் மட்டும் அல்ல, வீட்டில் யாரிடமும் கனேசன் பேசுவது கிடையாது. தேவைக்கு ஒன்று இரண்டு வார்த்தைகள். இது அவர்களுக்கு கொடுக்கும் தன்டனையா இல்லை தனக்கு தானே கொடுத்துக்கொள்ளும் தண்டனையா என்பது அவருக்கே வெளிச்சம்.

அதற்கு விதிவிலக்கு அந்த வீட்டில் இருவர் மட்டுமே, அகிலன், முகிலன் இரட்டையர்கள், கனேசன், ரத்தினத்தின் மகன்கள். அவர் அந்த வீட்டில் கொஞ்சமாவது பேசுவது சிரிப்பது இவர்களிடம் மட்டும் தான். 12 ஆம் வகுப்பு படிக்கிறார்கள். இன்னும் இந்த வீட்டில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை இந்த வீட்டில் இருப்பவர்களிடம் விதைத்து இருப்பவர்கள்.

இவர்கள் மட்டும் இந்த வீ்ட்டில் இல்லை என்றால் என்றோ இந்த வீடு மையானத்தின் அமைதியை பெற்று இருக்கும். இந்த வீட்டில் நந்தினி நன்றாக பேசுபவர்களும் இவர்கள் மட்டும் தான்.

மாலை வரை அவரவர் எண்ணத்தில் இருந்தவர்கள், பள்ளியில் இருந்து வந்த அகிலன் மற்றும் முகிலன் குரல் கேட்டு நடப்புக்கு வந்து இருந்தார்கள். வந்தவர்கள் நேராக நந்தினியிடம் தான் வந்தார்கள், நந்தினி கா எல்லோரும் வந்துடிங்களா? குட்டிமா எப்படி இருக்கா?

நல்ல பேசுறா இல்ல?

நேத்து போன்ல பேசும் போது அவ்வளவு வாய், எவ்வளவு அழகா பேசுறா!!!!!!!!!!  நாங்க வாங்கி கொடுத்த எல்லாத்தையும் அவளுக்கு கொடுத்திங்களா?

அழகிகா எப்படி இருக்கா?

என்று இருவரும் பதிலுக்கு காத்து இருக்காமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, நந்தினிக்கு தான் என்ன சொல்லவது என்று தெரியவில்லை. அவள் வாய் திறக்கும் முன் ரத்தினம் அறைக்குள் இருந்து வந்து இருந்தார். வந்தும் கைகால கழுவாம அங்க என்ன வெட்டி பேச்சு என்றவர், அவளின் பக்கம் கூட திரும்பவில்லை.

சிறியவர்கள் இருவரையும் விரட்டியவர், சமையல் அறைக்கு சென்று என்ன இருக்கிறது என்று பார்த்தார். யாரும் காலையில்  இருந்து ஏதும் உண்ணவில்லை. வந்த உடன் ஆளுக்கு ஒரு மூலையில் முடங்கிவிட ஏதும் சமைக்க வில்லை. அவர் சமையல் அறைக்கு சென்றவுடன் தான் இன்னும் சமைக்க வில்லை என்ற எண்ணம்  தோன்ற, நந்தினி விரைந்து சென்றாள் அங்கு, அதற்குள் ரத்தினம் தோசை ஊற்ற மாவு கரைத்து வைத்துவிட்டு, சட்னி செய் தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார்.

தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்து பற்ற வைத்தவள், தோசை வார்க்க ஆரம்பித்தாள், ரத்தினம் தன் போக்கில் சட்னி செய்து முடித்தவர், அதை எடுத்து சுட்டு வைத்த தோசைகளை எடுத்துக்கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தவர், மகன்கள் வந்து அமர்ந்தும் அவர்களுக்கு பரிமாரினார். மேலும் தோசைகளை எடுத்து வந்து வைத்துவிட்டு போனாள் நந்தினி, அவர்கள் சாப்பிக்கொண்டு இருக்கும் போதே தம்பியை அழைக்க அறைக்கு சென்றார்.

கையை தலைக்கு வைத்து படுத்து இருந்த படுத்து இருந்தான், அன்பு எழுந்து வா காலையில் இருந்து ஏதும் சாப்பிடல, வந்து 2 தோசை சாப்படு பா என்றார் அவன் அருகில் அமர்ந்து. எழுந்தவன் ஏதும் சொல்லாமல், வெளியில் வந்து அமர்ந்து சாப்பிட்டான். இன்று மட்டும் அல்ல என்றுமே அக்கா சொல்லிவிட்டாள், அதை தட்ட மாட்டான். அவர் பேச்சுக்கு மறு பேசும் அவனிடம் இருக்காது.

இரண்டு போதும் என்று எழுந்துக்கொண்டவன், சமையல் அறையை எட்டி பார்த்தான், மனைவி அங்கு தான் இருந்தாள், நீ சாப்டியா? என்றான்…………

அவள் பதில் சொல்லும் முன், சாப்பிடு நான் கொஞ்சம் வெளியில் போய்விட்டு வருகிறேன் என்றவன், அக்காவிடம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான். மேலும் சில தோசைகளை சுட்டவள், அதை எடுத்துக்கொண்டு சாப்பாடு மேஜை வர, ரத்தினமும் எழுந்து சென்று கனவனை அழைத்துவந்தார்.

மூவரும் அமர்ந்து உண்டனர், யாரிடமும் எந்த பேச்சும் இல்லை. இனி அந்த வீட்டின் பேச்சு சத்தம் மகன்கள் வந்த பிறகு தான்.

வெளியே வந்த அன்பழகனுக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. கால் போன போக்கில் நடந்துக்கொண்டு இருந்தான். கோயில் குளத்துக்கு வந்து இருந்தான். இருட்டும் நேரம் என்பதால் அந்த பக்கம் யாரும் வர மாட்டார்கள்.

இவர்கள் இருப்பது சென்னையில் இருந்து 70 கீ.மீ தள்ளியிருக்கும் தளவாடம் என்றும் ஊரில் கிராமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் இருக்கும் ஊர். ஊரில் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிக்கூடம், நாளைக்கு 3 முறை வரும் பேருந்து.  இன்றும் இந்த ஊரில் பெரும்பாலும் மக்கள் செய்வது விவசாயம் தான், சிலர் தறிவைத்து இருந்தனர். தற்போது தான் சில இளவட்டகள் வெளி ஊர்களில் கல்லூரி மற்றும் வேலைக்கு என்று செல்வதால் அவர்கள் கையில் இருக்கும் தெடுதிரை கைபேசி என்று அந்த ஊர் பழமைக்கும் புதுமைக்கும் இடையில்.

வந்து அமர்ந்தவன் நெஞ்சம் எல்லாம் பாரம் அழுத்தியது. என்ன செய்து அவன் தவறுகளை திருத்த முடியும்(மா)? என்று அவனுக்கு தெரியவில்லை. அன்று அத்தனை அவசரம் காட்டி இருக்க வேண்டாமோ???? 

ஆனால் இன்று என்ன செய் முடியும்…………………..

அவனுக்கு ஒஒஒஒஒ என்று கத்த வேண்டும் போல் இருந்து. அப்படியே எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தானோ………… 

அகிலன் குரல் கேட்டு தான் தன் நிலை அடைந்தான். மாமா வா அம்மா உன்னைய தேடிகிட்டு இருக்கு………… என்றவன் உடன் எழுந்துக்கொண்டவன் விடு நேக்கி புறப்பட்டான்.

வீட்டில் அவனுக்காக காத்து இருக்கும் புயல் பற்றி அறியாமல் வீடு வந்து சேர்ந்தவன், உணவு வேண்டாம் என்று மறுத்துவிட்டு, தன் அறைக்கு வந்து இருந்தான்.

அவன் மனைவி கட்டில் அமர்ந்து இருந்தாள், இவன் ஏதும் பேசாமல் தன் உடைகளை மாற்றிவிட்டு வந்து படுக்க போக, மாமா என்றாள் நந்தினி இவன் அமைதியாக படுத்து இருக்க………………

மறுபடியும் அழைத்தாள், அவனிடம் அசைவு இல்லை, அவன் அருகில் வந்தவள், அவன் தோள் தெட்டு அவனை எழுப்பினாள். அவன் கண் திறந்து என்ன என்று பார்க்க………. இன்னிக்கு டாக்டர் சென்ன நாள் என்றாள். அவன் கண்களை திறந்து முடி எழுந்து அமர்ந்தான்.

இங்க பார் நந்தினி இன்னிக்கு எனக்கு மனசு சரியா இல்ல, படு என்றான் அமைதியாக அவள் ஏதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்து இருக்க, இவன் படுத்துவிட்டான்.

அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து, திருமணம் ஆன நாள் முதல் இவர்கள் சேர்ந்து வாழ்ந்து முதல் 6 மாதம் மட்டுமே, அதன் பின் எல்லாம் மாறிவிட்டது. இருவருக்கும் இந்த நிலை தான். இதில் இவள் இன்னும் தாய்மை அடையவில்லை என்று வேறு கேட்கும் உறவுகள், 3 மாதம் முன் இவள் ஒரு மருத்துவரை சென்று பார்க்க, அவர் கர்ப்பையில் நீர் கட்டி இருப்பதாக கூறியவர், அதற்கு உன்டான சிகிச்சை அளித்தவர், அவள் கனவனையும் அழைத்து வர சென்னார். இவன் சென்று வர எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியவர், இருவரும் கர்பம் தறிக்க தேவையான வழிமுறைகளையும் விளக்கினார். அதன் படி இன்று அவர் இருவரும் சேர வேண்டிய நாள், ஆனால் கணவன் இப்படி சொல்லவும் அவளுக்கு கண்களில் கண்ணீர் வந்து.

இவனுக்கே எரிச்சல், காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் மனதில் ஏற்கனவே அழுத்ததை உண்டாக்கி இருக்க, இப்போது இவளின் கண்ணீரும், ஏதும் நீ அழற, அழவேண்டிய எல்லோரும் அமைதியா இருக்கும் போது. நீ நினைத்து தான் நடந்துவிட்டது இல்ல அப்புறம் என்ன.

பெறந்த பிள்ளைக்கே இங்க சொந்தம் கொண்டாட முடியல இதில் இன்னும் ஒரு புள்ள………………….. என்று காய்ந்தவன் எழுந்து மாடிக்கு சென்று விட்டான். போகும் அவனையே பார்த்து இருந்தாள், அவன் சென்ன வார்த்தைகள் அவள் காதில் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டு இருந்து. பெறந்த பிள்ளைக்கே என்று அவன் சொன்னது அவளுக்கு சுருக்கு என்று இருந்து.

அதற்காக தானே அவள் இத்தனை பாடுபடுவது. கணவன் கவனம் எங்கே அந்த குழ்ந்தை மேல் திரும்பி விடுமோ என்று தான் அவள் தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் இன்று கணவன் வாயில் அந்த வார்த்தை வந்தும் அவளுக்கு தலையில் இடி விழுந்த நிலை தான்.

அப்படியே அமர்ந்து விட்டாள். அப்படி என்றாள் இந்த வாழ்க்கை எனக்கு நிலைக்காத, அவன் பின்னே சென்றுவிடுவானோ? கண்டிப்பாக யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். அப்போது தன் நிலை…………

தொடரும்…………………….

Advertisement