அத்தியாயம் – 20

பரிதி சொன்ன பதிலை கேட்டு திகைப்பதா? இல்லை அவன் காட்டிய பெண்னை காட்டி அதிர்வதா? என்று அவருக்கு தெரியவில்லை……………….  அவருக்கு மட்டும் அல்ல, அவரின் கணவன் ராகவனுக்கும், அங்கு நின்று இருந்த மணிமேகலைக்கும் தான். இவன் என் சொல்கிறான் கதிரழகியை மணம் செய்யவா  சரி என்று  சொல்லுகிறான். அப்படி என்றால் இவன் அழகியை காதலிக்கிறான்னா? என்ன இது எப்போதில் இருந்து? என்ற கேள்வி மணிமேகலையினுள். கதிரழகிக்கே இங்கு என் நடக்கிறது என்று புரியாத நிலை. தன் தந்தை வந்து சென்றதும் சிறிது நேரம் அமர்ந்து இருந்தவள் மகள் விழித்து பரிடீ………….. என்று கேட்கவும் அவளுக்கு பல்விளக்கி , முகம் கழுவி விட்டவள் அவளை தூக்கிக்கொண்டு பின் படிகட்டு வழியாக கீழே வந்து இருந்தாள். வந்தவள் காதில் கேட்ட செய்தியில் அப்படியே நின்றுவிட்டு இருந்தாள்.

இவன் இப்போது என்ன சொல்கிறான், என்னை திருமணம் செய்யவா? சரி என்றான் இவனுக்கு…………. இவனுக்கு எப்படி தெரிந்தது………… இவனிடம் யார் இதை பற்றி சொன்னது. இல்லை இவனுக்கும் அதுபோல் எண்ணம் இருந்தா? எப்படி எப்போதிலிருந்து? இவன் வீட்டில் தெரியுமா? என்று அவளுக்கு மனதின் எண்ணங்கள் பல வழிகிளில் பயனித்து இருந்தது. இது பற்றி பாக்கியா மேம் என்ன நினைப்பார்……………….. என்று அவர் முகத்தை தான் பார்த்தாள். அவர் முகத்தில் இருந்த அதிர்வே அவருக்கும் இது பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறியாது……………….

அடுத்து என்ன என்று மனம் யோசிக்க முடியாமல் ஸ்தம்பித்து இருந்தது. அங்கு இருந்து போவதா? இல்லை இருப்பதா? என்று ஏதும் தோன்றவில்லை அவளுக்கு.

ஆனால் அங்கு இருப்பவர்கள் அதிர்விக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் கதிரழகி அருகில் சென்றவன் அவள் தோள் மேல் இருந்த குழந்தையை வாங்கி கொண்டான். 

மதி குட்டி இப்போதான் எழுந்திங்களா…………………. நீ இல்லாமா எனக்கு செம போர்……………. காலையில் இருந்து உங்க பார்க்கமா இருந்தேன்னா………………….. அது தான் காலையில் உங்களா தூக்கிட்டு வரலாமனு உங்க வீட்டுக்கு வந்தேன்……………………. நீங்க அப்பவும் எழும்பாம தூங்கிட்டு இருந்திங்க……………………… உங்க அம்மா உங்க தாத்தா கூட பேசிட்டு இருந்தாங்க என்று குழந்தைக்கு கதை சொல்லவது போல் அங்கு இருந்தவர்களுக்கு சொல்லிக்கொண்டு இருந்தானோ?

அழகிக்கு இப்போது புரிந்து, இவன் காலையில் தன் தந்தையுடன் பேசியது எல்லாவற்றையும் கேட்டு இருக்கிறான் என்று புரிந்தது. அவள் தந்தையுடன் பேசிய போது பெரியதாக தெரியாத விஷயம் இப்போது தவறாக பட்டது நான் என்ன செய்து வைத்து இருக்கிறேன், இப்போது இவர்கள் தன்னை எப்படி எடுத்துக்கொள்ளுவார்கள், என்ன நினைப்பார்கள் என்று இருந்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இல்லை அவளிடம்.

ஆம்,காலையில் எப்போதும் தன்னிடம் வந்து விடும் குழந்தை இல்லாமல் அவன் நாளின் ஆரம்பம் அலுப்பாக இருக்க, சற்று நேரம் பெருத்து பா்த்தவன், குழந்தையை தூக்கி வரலாம் என்று அவன் வீட்டின் பின் படிகட்டு வழியாக மேல வந்து இருந்தான். அப்போது தான் அழகி தன் தந்தையுடன பேசிய எல்லாவற்றையும் கேட்டு இருந்தான். சறிது நேரம் அங்கே நின்றவன் அவர்கள் பேசுவதை முழுமையாக கேட்டு இருந்தான். 

கிழே இறங்கி தன் அறைக்கு வந்தவன், மனம் யோசனையில். எந்த இடத்தில் நான் அப்படி அவள் மனதில் பதிந்து இருப்பேன்…………. என்னை இந்த 20 நாட்களாக தான் அவளுக்கு தெரியும், அதுவும் அவளிடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி இருக்கையில் அவளுக்கு என் மீது எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது. 

அவளுக்கு என் மீது இருக்கும் எண்ணம் இருக்கட்டும் எனக்கு அப்படி ஒரு எண்ணம் அவள் மீது இருக்கிறதா? என்ற கேள்வியை அவனே அவனுக்கு கேட்டுக்கொண்டான். பதில் இல்லை என்பது தான். குழந்தையை தாண்டி அவன் எண்ணம் அவள் மீது எப்போதும் சென்றது இல்லை. அவளை ஆர்வமாக கூட தான் பார்த்து இல்லை. ஆனால் மதி அப்படி இல்லை, அவன் இருந்த மனநிலைக்கு அவள் மருந்தாக இருந்தாள். இந்த இருபது நாட்களில் அவன் வாழ்வை வண்ணமயமாக்கி இருந்தாள். அவனுக்குள் இருந்த வெறுமையை போக்கி, அவனை வேறு எதை பற்றியும் சிந்திக்கவிடாது, அவன் இதழ்களில் புன்னகையை திருப்பி தந்து இருந்தாள். அவன் எந்த அளவிக்கு யோசித்தான் என்றால், இவளைவிட்டு தன்னால் திரும்ப முடியாம? இங்கேயே வேறு இடத்தில் வேலைக்கு சேர்ந்துவிடாலம்மா? என்ற அளவிற்க்கு அவன் யோசனை இருந்தது, அவன் சிந்தனை முழுவதும் அவளே, அவளுக்காக அவன் ஏதும் செய்வான் தான். அதை எல்லாம் யோசித்தபடி இருந்தவன், எடுத்த முடிவு தான் அழகியை திருமணம் செய்வதாக சொன்னது.

அவனுக்கு தெரியும் இந்த முறை அம்மா கண்டிப்பாக தன் திருமணம் பற்றி பேசி முடிக்காமல் விடமாட்டார்   என்று தெரியும் அவனுக்கு, மணிமேகலை தான் பெண் என்று அவர் சொன்ன போது கூட அவனுக்கு அது பெரிய தாக்கத்தை அவனுள் ஏற்படுத்தவில்லை, எப்படியும் யாரே ஒருவரை திருமணம் செய்ய வேண்டும்,அது மணிமேகலையாக இருந்தால் என்ன என்று தான் நினைத்தான். காலையில் அவன் கதிரழகி பேசியதை கேட்டும் வரை அவனுள் அப்படி ஒரு எண்ணம் இல்லை தான். ஆனால் அதன் பின் அவனுக்கு ஏன் அழகியை மணம்முடிக்க கூடாது என்று தான் தோன்றியது………………….. அதுவும் அவள் சென்ன விஷயங்கள். எனக்கு அவரை பிடித்து இருக்கு ஆனா இப்போ எனக்கு அதுக்கான தகுதி இருக்கா தெரியலை என்று அவள் கூறியது அவனுக்கு மனதில் தைத்தது. ஏற்கனவே அவன் அம்மா மூலம் அவள் வாழ்வில் நடந்தது எல்லாம் மேலாட்டமாக தெரியும் தான். அவனுக்கு தெரிந்த வரையில் அவள் வாழ்வில் நடந்த எதுவும்,எதற்கும் அவள் காரணம் இல்லை என்னும் போது, தண்டனை மட்டும் அவளுக்கு ஏன்?  குழந்தை மேல் அவளுக்கு எவ்வளவு அன்பு இருந்து இருந்தால் இத்தனையும் தாண்டி வந்து இருப்பாள்…………………………

விவாகரத்து ஆன ஒரு பெண்ணுக்கு மறுமணம் என்பது எந்த அளவுக்கு கடினமானது, அப்படியே அவள் ஒரு வாழ்க்கை அமைந்தாலும் அது அவளுக்கு பிடித்த வகையில் தான் அமைகிறதா? அவளுக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்ய அவளுக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்க தானே செய்கிறது……………. ஆனால் இங்கு வாய்ப்பு என்பது ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கு கொடுக்க படுகிறதா? என்று எல்லாம் அவன் எண்ணம் எங்கெங்கோ பயணித்தாலும், முடிவில் அவன் எண்ணம் சேர்ந்த இடம் மதியழகி தான்……………………….. அவளை தன் வாழ்வில் இழக்க முடியுமா? முடியாது…………..  எல்லாவற்றையும் யோசித்தவன் எடுத்த முடிவு தான் கதிரழகியை திருமணம் செய்வது. இப்போது அவள் மேல் எந்த எண்ணமும் இல்லை. அவள் என் மதிகுட்டியின் அம்மா மட்டும் தான்…………….. ஆனால் காலம் எல்லாவற்றயும் மாற்றும், இப்போது எனக்கு ஏற்படவில்லையா? என்னை எல்லாவற்றிலும் இருந்து விடுவித்த தேவதை அவள்……….. அவள் எனக்கு கிடைப்பாள் என்றாள்  என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்………. யாருக்கு தெரியும் பின் நாட்களில் அவள் மேல் எனக்கும் காதல் வரலாம். அப்படி இல்லை என்றாலும், அவள் மனதுக்கு பிடித்த என்னுடன் இருந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் அவளுக்கு கிடைக்கட்டுமே!!!!!!!!!!!!!! என்று நினைத்தவன் எடுத்த முடிவு தான் கதிரழகியை மனக்க சம்மதம் சொன்னது.

…………………….

மகளிடம் பேசிவிட்டு ஊருக்கு வந்து சேர்ந்து இருந்தார் கனேசன். மகள் பேசிவற்றை எல்லாம் அசைபோட்ட படி தான் வீடு வந்து சேர்ந்து இருந்தார். அவள் கேட்பது 100% சரி இப்போதாவது மனதுக்கு பிடித்த வாழ்வை எனக்கு அமைத்துக்கொடுங்கள் என்று கேட்கிறாள். ஆனால் இது அவர் மட்டுமே முடிவு எடுக்கும் விஷயம் அல்லவே, அந்த பையன் மனதில் என்ன இருக்கிறதோ, அவன் பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள், இதற்கு சம்மதிப்பார்களா? என்று தான் அவருக்கு பெரும் கவலையாக இருந்தது. முன்பு என்றால் தன் எண்ணம் தன் முடிவு என்று யாரை பற்றியும் கவலைபட்டு இருக்க மாட்டார், ஆனால் அவருக்கு எல்லார் மனதும் தெரியவேண்டி இருந்தது. அடுத்து இதில் என்ன செய்வது என்று யோசித்தபடி வீடு வந்து இருந்தார். 

ரத்தினம் அவர் வீட்டினுள் நுழைந்தில் இருந்து அவரை தான் பார்த்து இருந்தார், வந்தவர் ஏதும் பேசாமல் யோசனையில் இருப்பதும், முகத்தில் வந்து போகும் பாவங்களும்  தான் பார்த்துக்கொண்டு இருந்தார். அவரிடம் இருந்து எந்த பேச்சும் இல்லாமல் போக, என்ன ஆச்சுங்க, அழகி என்ன சொன்னா? கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாளா? இன்னும் கோவமா இருக்காளா? என்று கேட்டார். ஒரு பெருமூச்சை வெளியிட்டவர், ம்மம்மம்மம்மம………………………………. சம்மதம் சொல்லிட்டா……. ஆனா மாப்பிள்ளை கதிர் இல்ல என்றார்.

அவருக்கு புரியவில்லை……. என்ன சொல்லுறிங்க கதிர் இல்லனா யார்……. ஒருவேளை அன்புடன் திரும்பவும் இனையவிரும்புகிறளா? அவர் எண்ணம் விபரிதமாக போக……… கனேசன் அவ பாக்கியலட்சுமி அம்மாவோட பையன் பரிதியை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்றா!!! என்று சொன்னவர் காலையில் நடந்த எல்லாவற்றையும் கூறியிருந்தார். கேட்ட ரத்தினத்துக்கு என்ன சொல்லவது என்று தெரியவில்லை. என் மகள் மனம் போல் அவளுக்கு வாழ்வு அமைத்துக்கொடு கடவுளே என்று மனதில் வேண்டுதல் வைத்தார்.

அதை தவிர அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை…….. கனேசன் அன்று முழுவதும் யோசித்தவர் ஒரு முடிவு எடுத்தவராக இரவு மனைவிடம் நாளை காலை அவர்கள் வீட்டுக்கு சென்று பேசுவது என்று முடிவு எடுத்து இருந்தார். அப்போதே கதிருக்கு அழைத்து அதை பற்றி கூறி நாளை அவனையும் உடன் வருமாறு அழைத்தார். இந்த விஷயத்தை எப்படி பேசுவது என்று நினைத்து இருந்தவன். பரிதி இப்படி பேசியது ஆச்சிரியத்தை கொடுத்து இருந்தது. எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி விடவேண்டும் என்று அவனும் முடிவு எடுத்து இருந்தான்.

…………………………….