Advertisement

அத்தியாயம் – 2

வேனை கிளப்பியவள் மனதில் ஆயிரம் போராட்டம், என்ன தான் 4 வருடம் முன்பு எல்லாம் நடந்து முடிந்து இருந்த போதிலும், இன்னும் அதன் வலிகள் மட்டும் மாறாமல். காலத்தால் கூட அவள் காயங்களை மாற்ற முடியவில்லை போல். இப்போது நினைத்தாலும் மனதில் பாரமே!!!!!!!!!!

மதி ஏதோ சொல்ல அப்போதே தன் நினைவில் இருந்து வெளிவந்தவள், மகள் செல்வதை கவணித்து வண்டியை நிறுத்தினாள், அவள் வாடிக்கையாக வண்டியை நிறுத்தும் இடம் தாண்டி இருந்தாள், பின் மீண்டும் ரிவர்ஸ் வந்தவள். அங்கு வண்டியை நிறுத்தி, காத்து இருந்த பிள்ளைகளை வண்டியில் ஏற்றினாள். மீண்டும் ஒட்டுனர் இருக்கைக்கு வந்தவள். ச்சே என்ன இது முடிந்ததை நினைத்து என்ன காரியம் செய்துவிட்டேன், என்று தன்னையே நிதானித்துக்கொண்வள், அதன் பின் எதை பற்றியும் நினைக்காமல் தன் வேலைகளில் கவனம் வைத்தாள்.

தன் மகளை வகுப்பில் விட்டவள், அவளுக்கு தேவையானவற்றை கொடுத்துவிட்டு, டாடா காட்டி வெளிவந்தவள், அடுத்து பிள்ளைகளை பிக்கப் செய்துவிட்டு காலை 10 மணி போல் மீண்டும் வண்டியை மெக்கானிக் ஷேட்டில் விட்டவள், அந்த ஷேட்டின் உரிமையாளர் அமிரிடம் அந்த மாத வண்டியின் வாடகையை கொடுத்தாள்.

வா மா கதிர், இந்த மாதம் வண்டி சர்வீஸ் பன்னும் மா, இந்த சனிக்கிழமை ஸ்கூல்  லீவா என்றார்? தெரியலை அண்ணா நாளைக்கு டீச்சர் கிட்ட கேட்டு சொல்றேன் என்றவள், அவரிடம் இருந்து விடைபெற்றாள். இனி மத்தியம் 2 மணிக்கு வந்து மீண்டும் வண்டியை எடுத்துச்செல்வாள், பிள்ளைகளை பிக்கப் செய். 

நேரே தன் வீட்டுக்கு வந்தவள், காலை உணவு உண்டுவிட்டு, தன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள், படிக்க, ஆம் அவளும் அஞ்சல் வழியில், சென்னை பல்கலைகழகத்தில் கணினி அறிவியல் இளநிலை மூன்றாம் ஆண்டு படிக்கிறாள்.

நேற்று மணிமேகலை சொல்லி தந்தவை எல்லாவற்றையும், மீண்டும் படித்து பார்த்தவள், தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் குறித்து வைத்தாள். இப்படியே மணி 12 ஆக, 

சிறிது நேரம் படுத்துவிட்டாள், சரியாக 1.30க்கு எழுந்தவள், தன்னை திருத்திக்கொண்டு, மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று இருந்தாள், பிள்ளைகளை கூட்டி வர, மறுபடியும் எல்லாரையும் வீட்டில் விட 4 மணி ஆகி இருந்து. இதன் நடுவில் வண்டியில் பயனித்த படி, முதல் நாள் பள்ளி எப்படி இருந்து என்று மகளிடம் பேசியபடி வந்தாள்.

அவள் சொன்னவற்றை கேட்டு சிரித்துக்கொண்டே வந்தவள், நினைவுகள், அவள் பள்ளி நாட்களில் இருந்து. அவளும் இப்படி தான் பள்ளியில் இருந்து வரும் போது தன் தந்தையுடன், அன்று நடந்தவைகளை பேசியபடி வருவாள். இடையில் அவள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அவர் பெறுமையாக பதில் கூறிக்கொண்டு வருவார். அந்த நினைவில் இருந்து மீண்டவள், மீண்டும் சாலையில் கவனம் வைத்தாள்.

இரவு இவர்களுக்கு மட்டுமே உணவு தயாரிக்க வேண்டும், தோசை மாவு இருக்கிறது. மகள் இன்று தான் பள்ளியில் சேர்ந்து இருப்பதால், அவளுக்கு வீட்டு பாடம் ஏதும் இல்லை. கையில் தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டு, சிறிய டப்பாவில் சில திண்பன்டங்களுடன் தாய்யும் மகளும் கீழே இறங்கி வர, அந்த நேரத்தில் சரியாக கீழே வந்த மணிமேகலையும், இவர்களுடன் இனைந்துக்கொண்டாள்.

மூவரும் கடற்கரை நேக்கி நடக்க ஆரம்பித்து இருந்தனர். இது இவர்களின் தினசரி வாடிக்கை., பெரும்பாலும் மாலை வேளையில் அம்மா, மகள் இருவரும் தங்கள் நேரத்தை கடற்கரையில் தான் கழிப்பார்கள், பல நேங்களில் இவர்களுடன் மணிமேகலையும் சேர்ந்துக்கொள்ளுவாள்.

இன்று காலையில் வந்தவர்களை பார்த்த பின் கண்டிப்பாக கதிர் கடற்கரை செல்லுவாள் என்று தெரியும், அவளை தனியேவிட மனம் இல்லாமல் தான் இன்று மணிமேகலையும் அவர்களுடன் இனைந்துக்கொண்டாள்.

நன்றாக பழகிய இடம் என்பதால் அவர்களுக்கு பயம் இல்லை, மூவரும் சுரங்கபாதை கடந்து கடற்கரை மணலில் கால் வைத்தனர். சிறிது தூரம் நடந்தவர்கள், கடல் அலைகள் தெரியும் தூரத்தில் அமர்ந்துவிட. மதி அவர்கள் அருகில் மணல் விட்டை கட்ட ஆரம்பித்துவிட்டாள். மணிமேகலையும், கயலும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை, கடலை பார்த்த படி அமர்த்து இருந்தனர். 

வெளியில் முகம் அமைதியாக இருந்தாலும், மனம் அந்த கடல் அலையை போல் ஆர்பரித்துக்கொண்டு தான் இருந்து இருவருக்கும். தங்களுக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கீழ்விரக்கம் இருவர் மனதிலும். கடந்த காலங்களை இப்படி அடிகடி வந்து நினைவுட்டும் இவர்களை நினைத்து மனது கொதிக்கவே செய்தது.

மெல்ல இருட்ட ஆரம்பித்து இருந்து. மதி விளையாடி முடித்துத, அம்மா கொண்டு வந்து இருந்த தண்ணீர் கொண்டு கைகழுவியவள், டப்பாவில் இருந்த தீண்பன்டங்களை சாப்பிடபடி வேடிக்கை பார்த்து இருந்தாள். என் தான் இருவரும் அமைதியாக இருந்தாலும், இருவர் கவனமும் அவளிடத்தில் தான்.

அப்படியே மணிமேகலையை பார்த்தாள் கதிர், அவளை விட 4 வயது பெரியவள். தான் இங்கு வந்த போது, தன் நிலையை கண்டு என்ன ஏது என்று விசாரிக்காமல், தனக்கு பக்கபலமாய் இருந்தவள், மதி பிறந்த போது இவள் தான் அவளுடன் மருத்துவமனையில் இருந்தாள்.

அதன் பின் கூட அவளுக்கு சமைத்து தருவது, குழந்தையை பார்த்துக்கொள்வது என்று, அவள் அவளுக்கு ஒரு தாய் போல் தான். இன்று கூட காலையில் நடந்தவற்றை மனதில் கொண்டு தன்னை தனியே விடாமல் என்னுடன் வந்து இருக்கிறாள்.

இவளுக்கு தன் வாழ்வில் நடந்து எல்லாம் தெரியும், பாக்கியலட்சுமி சொல்லி இருந்தார் அவளிடம். ஆனால் இன்று வரை அதை பற்றி ஒரு கேள்வி கூட கேட்டது இல்லை அவள். அவள் வீட்டினர் இங்கு வந்தால். கதிரைவிட மணிமேகலைக்கு தான் பற்றிக்கொண்டு வரும். அவர்களிடம் வெளிபடையாகவே கோவத்தை காண்பித்துவிடுவாள், அடுத்த இரு நாட்களுக்கு இவளை கவனித்த படியே இருப்பாள். இவள் முகம் தெளியும் வரை மதியை கூட மணிமேகலை தான் பெரும்பாலும் வைத்துக்கொள்ளவாள். இவள் மட்டும் இல்லை பக்கியலட்சுமி, அவர் கணவர், அமீர் அண்ணா என்று அவள் இந்த ஊருக்கு வந்த புதியதில் அவளுக்கு பக்கபலமாக இருந்தவர்கள், அவள் இன்று இந்த நிலையில் இருக்க அவளுக்கு எல்லாவகையிலும் உதவியவர்கள்.

இவளுக்கு செந்தமோ, பந்தமோ இல்லாமல், யாரோ எவரோ, தன் சொந்தங்கள் கைவிட்ட போதும், தன்னை ஒதுக்கிவைத்த போதும். தன்னை தனியேவிடாமல் இவளை தாங்கி கொண்டவர்கள்…………. என்று சென்று கொண்டு இருந்தவள் நினைவை கலைத்தாள், மணிமேகலை வீட்டு போகலாம் கதிர் மணி ஆச்சு, என்றாள். உண்மையில் இவர்கள் இன்னும் நேரம் சென்று கூட இங்க செவிட்டு இருக்கிறார்கள் தான்.

ஆனால் இப்போது மணிமேகலை கிளம்பலாம் என்றதற்கு வேறு காரணம் இருந்து. இவர்கள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி கதிர்வேலன் அமர்ந்து இருந்தான். முதலில் அதை மணிமேகலை பார்க்கவில்லை, மதியை பார்த்துக்கொண்டே திரும்பியவள் அவனை அங்கு பார்த்த பிறகு அங்கு இருக்க விருப்படாமல், கதிரிடம் கிளம்பலாம் என்று இருந்தாள்.

இதை எல்லாம் கதர்வேலனும் கவனித்துக்கொண்டு இருந்தாலும், கிளம்பும் அவர்களை பார்த்த படியே அமர்ந்து இருந்தான். போகும் போது அவனை திரும்பி முறைக்கவும் மணிமேகலை மறக்கவில்லை. அதை பார்த்து அவனுக்கு புன்னகை தான் வந்து.

கதிரழகி சென்னை வந்த நாட்களில் இருந்து அவனும் இங்கு தான் இருக்கிறான், தினமும் அவர்களை பார்க்காமல் இருக்க மாட்டான், அவனுக்கு மணிமேகலை மேல் எப்போதும் வருத்தம் இருந்து இல்லை, அவனை போலவே அவனுடைய கதிரழகியை பார்த்துக்கொள்கிறாளே!!

அவள் மேல் கொண்ட அக்கரையும். அவன் மேல் அவள் கொண்ட வெறுப்பும்!!!!!! இது எல்லாம் நியாயமானவை தான் என்பதால் அவன் அதை கண்டு கொள்வது இல்லை. சில சமயங்கிளில் அவள் செய்வது சிறுபிள்ளை தனமாக இருந்தாலும், அவனுக்கு அவள் மேல் கோவம் எல்லாம் எப்போதும் இருந்து இல்லை.

இன்றும் அதே போல் ஒரு புன்னகையுடன் அவர்கள் போவதை பார்த்து இருந்தான். அவர்கள் வீடு வந்து சேர 7 மணி போல் ஆகி இருந்து. மணிமேகலை அவள் வீட்டுக்கு செல்லாமல், மதியுடன் பேசியபடி இவர்கள் வீட்டுக்கு தான் வந்து இருந்தாள். அவள் வருவாள் என்று கதிரழகிக்கும் தெரியும். இன்று இரவு 9 மணிவரை இவர்களுடன் இருப்பாள். 

ஊரில் இருந்து இது போல் யாராவது வந்து சென்றால் அன்று முழுவதும் இவர்களை தனியாக விடமாட்டாள், இது போல் புரிந்துக்கொள்ளும் நட்புகள் வாய்ப்பது கூட வரம் தான். அவளையே பார்த்து இருந்தவளை, என்ன பார்த்துட்டு இருக்க, எனக்கும் இங்க தான் சாப்பாடு போய் சீக்கரம் ஏதாவது செய் பசி வயிற்றை கிள்ளுது என்றாள், மதியிடம் விளையாடியபடி அவளை லேசாக குளிக்க வைத்து உடைமாற்றி விட்டாள் மணிமேகலை.

 சரி என்று சமையல் அறை சென்றவள், இட்லி வைத்து, தக்காளி சட்னி அரைத்தாள், முதலில் மதிக்கு உட்டிவிட்டு பின் இருவரும் பேசியபடியே உண்டனர். இன்று முதல் நாள் பள்ளி சென்றது, மாலை கடற்கரையில் விளையாடியது என்று மதி இவள் மடியிலே தூங்கிவிட மணி 8.30 ஆகி இருந்து. மதி தூங்கிட்டா பார், அவளை படுக்க போட்டுவிட்டு நீயும் தூங்கு, என்றவள், எழுந்துக்கொண்டாள்.

அவளுடன் சென்றவள், மணிமேகலை தன் வீட்டுக்கு சென்று மேலே வந்து விளக்கு போடும் வரை பார்த்து இருந்தவள், பின் தன் வீட்டின் கதவை சாற்றிவிட்டு, முன் அறையின் விளக்குகளை அனைத்தவள், சமையல் அறை சென்று எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்தவள். கையில் புத்தகத்துடன் அமர்ந்துக்கொண்டாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை, அதுவரை ஏதும் படிக்கலாம் என்று புத்தகத்தை புரட்டினாள். 

படித்துக்கொண்டு இருந்தவள் மனதில் வேறு எண்ணங்கள் இல்லை, நேரம் செல்ல, தூக்கம் கண்களை சுழற்றியது, மணியை பார்த்தாள் 9.30 ஆகி இருந்து. எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள், விளக்கை அனைத்துவிட்டு மதியை அனைத்தபடி படுத்துக்கொண்டாள். உறங்குவதற்கு முன் காலை முதல் நடந்தவை எல்லாம் மனதில் ஒட, மனதில் தோன்றிய எண்ணம் ஒன்று தான், இந்த வாழ்க்கை இவள், மதி என்று இப்படியே நிம்மதியாக போய்விட்டால் நன்றாக இருக்கும்.

உறக்கம் மெல்ல கண்களை தழுவி இருக்க, எங்கோ குரல் கேட்பது போல் 

இருந்து யார் என்னை அழைப்பது, மணி ஒலிக்கும் ஒசை, இல்லை யாரே என்னை கூப்பிடுகிறார்கள். யார்? என்னையா? என்று எண்ணும் போதே. அந்த குரல்……………

டீச்சர்!!!!!!!!!!! சட்டு என்று கண்களை திறந்தவள், அப்போது தான் கீழே பாக்கியலட்சுமி பேசும் குரல் ஜன்னல் வழி கேட்க, உடனே எழுந்து விளக்கை போட்டவள், மதியை பார்த்தாள், அவள் ஆழ்ந்து உறங்கி இருந்தாள்.

தன் கைபேசியை எடுத்துக்கொண்டவள், பின் பக்கம் இருக்கும் படிகட்டு வழியாக கீழே இறங்கினாள். இப்போது அவர் குரல் தெளிவாக கேட்க, விரைந்தவள் அவர்கள் அருகில் சென்ற போது, நெஞ்சைபிடித்துக்கொண்டு வலியில் துடித்துக்கொண்டு ராகவனை தான் முதலில் பார்த்து அதிர்ந்தவள், உடனே மணிமேகலைக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, அவள் ஆம்புலன்ஸ்க்கு அழைத்துவிட்டு பாக்கியலட்சுமி வீட்டு வர, இவள் சென்று கதவை திறந்தாள். 

அதற்குள் தன் வீட்டுக்கு சென்றவள், வீட்டில் வைத்து இருந்து ஏடியம் கார்டு, மற்றும் பனத்தை எடுத்துக்கொண்டவள், மதியை தூக்கிக்கொண்டு கீழே வர, ஆம்புலன்ஸ் வந்து இருந்து. வந்து இருந்தவர்கள் ராகவனை வாகனத்தில் ஏற்றிவிட, உடன் பாக்கியலட்சுமி ஏறிக்கொள்ள, வீட்டை பூட்டிய இருவரும் பக்கத்தில் இருந்து ஆட்டோவை பிடித்து அவர்கள் சென்று மருத்துவமனைக்கு விரைந்தனர். இவர்கள் வந்து வரவேற்ப்பில் விசாரித்து வந்து சேர்ந்த நேரம் முதல் உதவி செய்துக்கொண்டு இருந்த மருத்துவர், ராகவனை உடனடியாக ஐ சி யூக்குள் அழைத்து சென்றனர் மருத்துவ சிகிச்சைக்கு.  பாக்கியலட்சுமி அருகில் சென்று அமர்ந்து கொண்டனர் இருவரும். ஒய்ந்து போய் இருந்தார். வயது 50 இருந்தாலும் பார்க்க 10 வயது இளமையாகவே இருப்பார். எப்போதும் சுறுசுறுப்பாக, தன் வேலைகளை பார்த்துக்கொண்டு எதற்கும் கலங்காமல் இருப்பவர், தங்கள் வாழ்கையில் பிரச்சனைகள் வந்த போது உடன் நின்று ஆதரவளித்தவர்கள் கனவன் மனைவி இருவரும்.  இன்று இப்படி இருப்பதை பார்க்க அவர்களால் முடியாவில்லை. 

அடுத்த அரை மணி நேரம் இப்படியே கடந்துவிட, வெளியில் வந்த மருத்துவர், மைல்டு ஹட்டாக் தான், சரியான நேரத்தில் வந்துடிங்க. இப்போதைக்கு ஐ சி யுவில் இருக்கடும் காலையில் பார்த்துவிட்டு வார்டுக்கு மாத்திக்கலாம். என்றவர், இப்போ பார்க்க முடியாது, காலையில் பார்க்கலாம் என்றார். அவர் நகர்ந்துவிட, அப்போது தான் மூச்சே இயல்பானது மூவருக்கும். 

அப்போதே கதிரழகியை பார்த்தவர், இந்த நேரத்தில் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்த இருக்க. என்று அவளை கடிந்தவர். அதான் டாக்டர் ஒன்னும் இல்லைனு சொல்லிடாங்களே நீங்க வீட்டு போங்க என்றார்.

அதுவரை இருந்த கலக்கம் மறந்து அவர் பேசியது அவர் இயல்புக்கு திரும்பிவிட்டார் என்று இருவருக்கும் தெரிந்து. ஆனாலும் அவர்களால் அவரை அப்படி அவரை தனியே விட முடியாது.

முதலில் மணிமேகலை தான் வாய்திறந்தாள், சொல்லுவிங்க இப்போ இவ்வளவு பேசிறவங்க கொஞ்ச நேரம் முன்னால் எப்படி இருந்திங்க தெரியுமா. என்றவள், நீங்க நினைச்ச நேரம் போக வண்டி கிடைக்கனும் இப்போ மணி 2, காலையில் டாக்டர் வந்து பார்த்த பிறகு அதை பற்றி பேசலாம் என்றாள்.

ஆனா குழந்தைய வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் இங்க இருக்க முடியும், என்றார் அவரும் விடாமல். சிறிது யோசித்தவள், வருவதாக கூறிவிட்டு சென்றாள், அங்கு இருந்த பி ஆர் ஒவை பார்த்தவள், நேயாளியின் பெயரை கூறிபிட்டு, தங்கள் நிலையை விளக்கி, தங்குவதற்க்கு ஒரு அறையை பெற்றுக்கொண்டாள். 

திரும்பி வந்தவள், இருவரையும் அறைக்கு அழைத்து சென்று சிறிது நேரம் உறங்கும் படி கூறினாள், இருவரும் மறுக்க. இங்க பார் கதிர் நாளைக்கு வண்டி ஒட்டனும், அதுகாகவாது கொஞ்சம் தூங்கு. அப்புறம் நீங்க இப்போது தூங்கவில்லை என்றால் அப்புறம் உங்களுக்கு பக்கத்துல ஒரு பெட் போட வேண்டி வரும் காலையில் அங்கிளை பார்க்கும் போது நீங்க தெம்பா இருந்தா தான் அவர் சரியாவார்.

என்றவள் தான் அங்கு இருப்பதாகவும், இருவரையும் உறங்கும் படியும் அதட்டிவிட்டு போகின்றவளை தான் பார்த்த படி இருந்தார். என்ன இல்லை இந்த பெண்ணிடம், இந்த வயதில் இவளுக்கு நடந்து எல்லாம்…………………… நினைக்க அவருக்கு மனம் கனத்து. 

அவளின் செயல்கள் எல்லாம் ஒரு மகள் போல் இருக்கும், என்ன தான் அவர் கதிரழகியும், மணிமேகலையும் ஒன்று போல் நினைத்தாலும். மணிமேகலை மேல் அவருக்கும் சற்று கூடுதல் வாஞ்சை தான். அது எந்த அளவிற்க்கு என்றாள். அவளை தன் மகன் பரிதிக்கும் மனம் முடிக்க வேண்டும் என்ற அளவுக்கு!!!!!!

ஆனால் அவரின் இந்த ஆசை அவர் மனதிற்க்கு மட்டுமே தெரியும், கனவனிடம் கூட சொன்னதில்லை அவர். அவளை பார்த்து இருந்தவர் அப்பொது தான் மகனுக்கு தகவல் சொல்லவில்லை என்பதை உனர்ந்தவர். திரும்பி கதிரழகியை பார்த்தார். குழந்தை அவள் மடியில் உறங்கிக்கொண்டு இருந்து. அவளும் அமர்ந்து படியே சாய்ந்து கண்முடி இருந்தாள். அவர் கிளம்பும் போது தன் தொலைபேசியை எடுத்து வரவில்லை. என் செய்வது என்று யோசித்தவர், கதிரழகியிடம் இருந்த கைபேசியை எடுத்தவர் மகனுக்கு அழைத்தார். அதன் பின் தான் மணியை பார்த்தவர் சட்டென்று அழைப்பை துண்டித்துவிட. காலையில் அழைக்கலாம் என்று விட்டுவிட்டார்.

அவர் மகனோ அப்போது தான் தன் வேலை முடிந்து வந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

மகன் வந்தாதும் அவனுக்கு திருமணம் முடித்து தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மனம் எண்ணிக்கொண்டு இருக்க. இங்க வருவபனோ இந்த இரு பெண்களின் வாழ்க்கையும் புரட்டு போட போகிறான் என்று யார் சொல்லவது அவருக்கு………………

 

தொடரும்………………

Advertisement