Advertisement

அத்தியாயம் – 16

கல்லூரியில் இருந்து வந்த செய்தியில், எல்லோரும் அடித்து பிடித்து மருத்துவமனை வந்து இருந்தனர், கனேசனும்,ரத்தினமும் அவள் இருக்கும் அறைக்கு வெளியில் நின்று இருக்க, கதிரும் அப்போது தான் வந்தான், அவன் பின்னால் அன்பழகனும்,நந்தினியும் வந்தனர். அப்போது அங்கு வந்த மருத்துவர், நீங்க? என்றார் கேள்வியாக, கனேசனை பார்த்து, நான் அழகியோட அப்பா என்றவர் மருத்துவரை பார்த்து இருக்க, ஒன்னும் இல்லை உங்க பெண்ணு கர்பமாக இருக்காங்க, ரொம்ப பலகீனமாக இருக்காங்க, நான் தர மருந்துகளை ஒழுங்க கொடுங்க, நல்ல சத்துள்ள சாப்பாடு கொடுக்கனும், இன்னும் 2 வாரம் கழித்து வாங்க ஸ்கேன் எடுக்கனும் என்று சொன்னவர் அடுத்த வரை பார்க்க போய்விட இவர்கள் ஆனாந்த அதிர்ச்சியில் மகள் இருக்கும் அறைக்கு நுழைந்தார்கள், ரத்தினமும், கனேசனும்.

கதிருக்கு மனது எல்லாம் மகிழ்ச்சி பூக்கள், தன் அக்கா இப்படி இருக்கும் போது இவனுக்கு 8 வயது இருக்கும், அப்போது அவனிடம் அக்காவும், அம்மாவும் வயிற்றில் குட்டி பாப்பா இருக்கு.   நீ தான் அதை நல்லா பாத்துக்கனும், என்று சொன்னது, அதை தெடர்ந்து அந்த பருவத்துக்கு  உண்டான எதிர்பார்ப்புடன் அவன் விளையாட்டு தனமாகநடந்துக்கொண்டது. முதலில் அழகி அக்காவின் வயிற்றில் அசையும் போது அதை தொட்டு பார்த்தது, அவள் பிறந்த உடன் தன் கையில் வாங்கியது இன்றளவும் அவனுக்கு எல்லாம் பசுமையாக நினைவில், அந்த குட்டி பெண் இன்று அம்மாவாக போகிறாள். அவன் எப்படி உனர்ந்தான் என்றால்? ஒரு அம்மா எப்படி இந்த மாதிரி விஷயத்தை சந்தோஷமாக எதிர்கொள்வாளோ! அப்படி பட்டது  இருந்தது அவனுடையது சந்தோஷம், தான் வளர்த்த குழந்தை தன் மகள், தன் மகள் தாயாகிவிட்டாள்.ஆம் அவன் அந்த நிமிடம் அப்படி தான் உனர்ந்தான். இதை தவிர அவன் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை அப்போது அவனுக்கு.

ரத்தினமும் கனேசனும் கூட மகிழ்ச்சியில் இருந்தனர். இதுவரை வந்த கஷ்டங்கள் எல்லாம் போய் இனி மகள் வாழ்வில் சந்தோஷமாக இருப்பாள் என்று எண்ணம் அவர்கள் மனதில், ஆனால் இவர்கள் மனநிலைக்கு முற்றிலும் மாறாக ஒருவன் இருக்கிறான் என்று அங்கு யாருக்கும் தெரியவில்லை. 

அதே போல் தான் நந்தினியும், இத்தனை நாள் அன்பு அவளிடம் நடந்துக்கொண்டது, அழகி அவனிடம் நடந்துக்கொள்ளவது என எல்லாவற்றையும் பார்த்தவள், எப்படியும் தன் காதல் வாழ்க்கை கைசேரும் என்று எண்ணி இருந்தவள். இந்த செய்தி இடி என் இறங்கியது அவள் தலையில் அப்படி என்றால் இவர்கள் இருவரும் வாழ்கையை வாழ ஆரம்பித்துவிட்டார்களா? அப்படி என்றால் தன் நிலை? அன்பு ஏன் என்னிடம் இந்த இடைபட்ட நாட்களில் இப்படி நடந்துக்கொண்டார்? என்று அவளுக்கு பெரும் தலையிடியாக இருந்தது. இப்போதும் அவள் மேல் இருக்கும் தவறை அவள் உணரவில்லை. அடுத்தவர் வாழ்க்கையில் நூழைந்து அதை சலனபடுத்திக்கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணம் அவளுக்கு துளியும் இல்லை.  எங்கே இந்த வாழ்வு கைவிட்டு போய்விடுமோ என்று தான் அவள் நினைப்பு இருந்தது.

எல்லோரும், இப்படி இருக்கையில், அன்புவின் முகத்தை தான் பார்த்து இருந்தாள் அழகி, அறைக்குள் அனைவரும் வந்த சிறிது நேரத்தில் அவள் விழித்து இருக்க, எல்லோர் முகத்திலும் மகிழ்வை பார்த்தவள், அன்புவின் முகத்தில் அப்படி ஏதும் இல்லை என்றதும், அவனை தான் பார்த்து இருந்தாள். இத்தனை நாட்களில் அவள் எதிலும் கலந்துக்கொள்ளவில்லை என்றாலும், அவனின் நடவடிக்கைகளை கொண்டு அவன் குணத்தை கணித்து இருந்தாள். நிச்சயம் ஏதோ ஒன்று பெரியதாக வர போகிறது, என்று அவள் மனது அடித்துக்கொண்டது.

அது எப்படி? இப்படி நடக்க வாய்ப்பு இருக்கு?! என்று அன்பு வாய்திறந்தான். அவன் என்ன சொல்லுகிறான் என்று மற்றவர் உணரும் முன் அழகி உணர்ந்துக்கொண்டாள். அவள் முகம் ரௌத்திரம்மானது, என்ன………….  என்ன…………… சொல்லுர அன்பு என்று ரத்தினமும், என்ன மாப்பிள்ளை என்று கனேசனும் ஒரே நேரத்தில் கேட்க. கதிர் அதற்குள் அவன் சட்டையை பிடித்து இருந்தான். என்ன டா சொன்ன? என் வீட்டு பெண்ணை பார்த்து என்ன வார்த்தை சொன்ன? நாக்க வெட்டுவேன் ஜாக்கிரதை, எவ்வளவு தைரியம் உனக்கு இதை சொல்ல, எல்லோரையும் உன்னை மாதிரி பெறுக்கினு நினைச்சியா? என்றான் அருகில் இருக்கும் நந்தினியை பார்த்தபடி ……………… அதில் அவள் தலை குனிந்துக்கொள்ள………………. அன்புவோ என்ன என்னை மாதிரியா……………………… கல்யாணம் ஆனா அடுத்த நாள் நீ அவளை தூக்கிட்டு போன……………………………. அவ அதுக்கு அடுத்த நாள் சாயந்திரம் தான் வீட்டுக்கு வந்தா……………………………………….

வந்தவ இப்பவரை என்கிட்ட முகத்தை திருப்பிட்டு இருக்கா? கட்டின புருஷன்கிட்ட இப்படி இருக்கவ………………………………….. முழுகாம இருக்கானு வந்து சொன்னா வேற எப்படி கேட்க……………………. என்று அவனும் எகிறினான்……………………..

அவன் சொன்ன வார்த்தையில் கதிரின் கைகள் அவன் சட்டையை விட்டு இருந்தது, இதற்கு காரணம் நான் தானே…………….. இப்படி இவள் ஒரு சொல்லுக்கு ஆளாக நானே காரணமாகி போனேன், நான் யோசிக்காமல் செய்த செயல் அழகியின் வாழ்கையை எங்கு கொண்டு வந்துவிட்டு இருக்கு என்று நினைத்தவன் நொருங்கி போனான்.

இங்கே பார் அன்பு உனக்கு என்மேல கோவம் அதுக்காக வாய்க்கு வந்து எல்லாம் போசாதே. அவள் அப்படி இல்லை என்று உனக்கு நல்லாவே தெரியும். என்று ஏதோ பேசபோனவனை தடுத்த அன்பு, இங்கே பார், இங்க எல்லோருக்கும் எல்லோரும் யாருனு தெரியும். ஏன் நீயும், உங்க மாமாவும் கூட தான் நகமும் சதையும்மாக இருந்திங்க, ஆனா என்ன பன்னார் உன் மாமா, தன் மக கல்யாணத்தில் உன்னால் பிரச்சனை வரும் என்று தெரிந்ததும், உன்னை தோட்டத்து வீட்டில் 2 நாள் கட்டிவைக்கல………………….. அதுவும் எப்படி தெரியுமா? உனக்கு கள்ளு கொடுத்து மயக்கத்திலே வைச்சு இருந்தார். என்றான் நக்கலாக,

இது கதிருக்கு புதிய செய்தி அவனை நினைத்தது அன்பு தான் தன்னை இப்படி அடைத்து வைத்தாக………………….. ஆனால் அவன் மாமாவா? அவனால் நம்பத்தான் முடியவில்லை. ஏதோ ஒன்று விட்டுபோனது மனதால் யாரை தன் அம்மா, அக்காவிற்க்கு பிறகு அதிகம் நம்பி இருந்தானோ, யாரை தனக்கு தகப்பன் இடத்தில் வைத்து இருந்தானோ அவரா தனக்கு இப்படி செய்தது…………………………

அழகியோ அதிர்வில் இருந்தாள், தன் அப்பாவா இப்படி, எல்லா குழந்தைக்கும் தன் அப்பா தான் ஹீரோ, அவர்களை கொண்டே அவர்களின் எதிர் கால கணவுகள் நிர்ணயக்கபடுகிறது, அப்படி பட்ட தந்தை, அதுவும் தன் கதிர் மாமாவை………………………. அதுவும் எந்த நிலையில் வைத்து இருந்தார்…………… இப்போது விடைகிடைக்காத கேள்ளவிகள் எல்லாம் அவளுக்கு விடைகிடைத்தது. கதிர் மாமா ஏன் தன்னிடம் அப்படி நடந்துக்கொண்டார். அன்பு ஏன் முதலிரவில் தன்னிடம் அப்படி நடந்துக்கொண்டான். அதன் பின் நடந்து பேச்சு வார்த்தைகள், நிகழ்வுகள் எல்லாம் ஒன்றை ஒன்று தொடர்புக்கொண்டு இருப்பது இப்போது புரிந்தது. ஆனால் புரிந்துக்கொண்ட விஷயங்கள் மனதில் பெரும் பாரமாக அமர்ந்துக்கொண்டது.

இத்தனை நாள் யார் எல்லாம் தன் உறவுகள் என்று நினைத்து இருந்தாளோ அவர்களே தன்னிடம், தனக்கு உன்மையாக இல்லை………………….. மனம் வருந்தினாள். ஏதும் பேசவில்லை………….

பார்வை இப்போதும் அன்புவை தான் நோக்கியது, நிச்சயம் இவன் இதை இதோடுவிட்டு விடுவான் என்று தோன்றவில்லை………………………. இன்றும் ஏதோ இருக்கிறது……..

அன்பு அப்படி எல்லோர் முன்னாலும் இந்த விஷயத்தை இப்படி போட்டு உடைத்துவிடுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அன்று ஏதோ கோவத்தில், தான் பார்த்து வளர்ந்தவன், தனக்கு எதிர்றாக நிற்பதா என்ற கோவத்தில் செய்தது, இன்று இப்படி தன்னையே தாக்கும் என்று என்னவில்லை. அன்று பெரியதாக தெரியாத விஷயம் இன்று மகள் தன்னை திரும்பியும் பார்க்கவில்லை என்றதில் மனம் அடிவாங்கியது. 

கதிர் அப்போதும் அமைதியாக அது எனக்கும் என் மாமனுக்கும் இருக்கும் பிரச்சனை அதில் நீயேன் தலையிடுகிறாய் என்றான். 

எனது உனக்கும் உன் மாமானுக்கும் பிரச்சனையா? அப்போ எதுக்கு நீ அவளை தூக்கிட்டு போன?

அந்த இரண்டு நாள் அவள் உன் கூட தானே இருந்தா? என்ன நடந்தோ? அவர் மேல இருந்த கோவத்தில் நீ அவளை என்ன செய்தியோ என்று அவன் முடிக்கவில்லை. கதிர் கையை ஓங்க

அறைவாங்கி இருந்தான்……………….. அங்கு இருந்த யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. அடித்தது கதிரழகி!!!!!!!!!!

எப்போது எப்படி படுக்கையில் இருந்து எழுந்து வந்தாள், எப்போது அவன் அருகில் வந்தாள் என்று யாரும் கவணிக்கும் முன் விட்டு இருந்தாள் ஒரு அறையை அவன் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்………………………..

என்னடா சொன்ன……………………. என்னை என்னனு நினைச்ச நீ ஏது பேசினாலும் வாய் பொத்தி அழுதுட்டு முலையில் இருப்பேன் நினைச்சியா? கதிரழகிடா…………. என்னிக்கு கல்யாணம் ஆனா அடுத்த நாளே அடுத்தவன் கூட என்னை சேர்த்து வைத்து பேசினியோ அன்னிக்கே உன்னை என் புருசனா நினைக்கல………………………. இப்போ உன்னை மனுசனா கூட நினைக்க மாட்டேன். போடா வெளியில்………………….. என்றாள் ஆங்காரமா……………………………. எல்லோரும் அமைதியாக இருக்க, அந்த இடத்தில் அவள் குரல் எல்லோரையும் அச்சமுட்டியது……………………. அப்படி ஒரு ஆக்ரோசம் அவளிடம். யாரும் ஏதும் பேசவில்லை,பேசமுடிவில்லை…………………

அன்புவுக்கு மீண்டும் தோல்வி, இவளிடம், இப்படி அடித்துவிட்டாளோ………. அதுவும் எல்லோர் முன்னாலும்………………. ஆனால் ஏதும் செய்ய முடியவில்லை. ரத்தினம் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்………… ஏன்டா உன் புத்தி இப்படி போது, நல்ல வாழ்க்கையை நீயே கொடுத்துகிட்டதும் இல்லாமா…….. அந்த புள்ள மேலே சேற்றை வாரி இறைக்கிறியே இது உனக்கே நல்லா இருக்கா…………. என்றார் கண்ணீருடன். என்ன அக்கா ரொம்ப நல்லவ மாதிரி பேசுற, இது எல்லாத்துக்கும் காரணம் நீ தானே, நீ காதலித்த மனுசன கல்யாணம் பன்னிகிட்ட, அதுக்கு அப்புறமும் உனக்கு அங்க ஒரு பிடிப்பு வேணும் தானே அவளை எனக்கு கட்டி வைச்ச, எல்லாத்தையும் நீ செய்தா அது சரி நான் கேள்வி கேட்டா அது தப்பா? என்றான் அடுத்த இடியாக…………………….. ரத்தினம் வாயடைத்து போனார். இன்று வரை அவர் கனேசனை காதலித்த விஷயம் யாருக்கும் தெரியாது கனேசனுக்கு கூட, அப்படி இருக்கையில் இப்படி எல்லோர் முன்னாலும் அதிலும் எப்படி பட்ட சூழலில் இதை சொல்லுகிறான்.  அவன் சொல்வது போல் எண்ணத்தில் தான் அவர் இந்த திருமண ஏற்பாட்டை செய்து இருந்தாலும். இந்த பெண்ணுக்கு என்ன குறை இவள் போல் ஒர் பெண் இவனுக்கு கிடைக்க இவன் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் ஆனால், இவன் என்ன இப்படி இவன் வாழ்க்கையை நான் கெடுத்துவிட்டதாக சொல்லுகிறான்.

மனம் வலித்தது அவருக்கும், அங்கு யாரும் யாரையும் பார்க்கவில்லை. இத்தனை நடந்து இருக்கிறது தன்னை சுற்றி ஏதும் தெரியாமல் இவர்கள் சொன்னவற்றுக்கு எல்லாம் தலையாட்டி இருக்கிறோம் என்று நினைத்தவள், அன்புவின் மேல இருந்த பார்வையை மட்டும் அகற்றவில்லை. அவளின் நிமிர்ந்த பார்வை, அவன் வெறுக்கும் அந்த பார்வை………………………

………………

பிரச்சனைகள் நடந்து இரண்டு நாட்கள் கடந்து இருந்தது. அன்று அவ்வாறு  பேசிய பின் எப்படி மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்தார்கள் என்று அவர்களுக்கே வெளிச்சம். வீட்டில் அசாத்திய அமைதி, அங்கு பேசிவிட்டாலும், அதன் பின் வீட்டுக்கு வந்து அறையை விட்டு வெளிவரவில்லை அழகி, கதிர் தான் அவளுக்கு தேவையனவற்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு போவான். அவன் வைத்துவிட்டு போகும் உணவுகளை  பசித்தால் உண்ணுவாள், அவனிடமும் ஒர் வார்த்தை பேவில்லை அவள். அவன் தான் அவளிடம் பேசியபடி இருப்பான். தன் உடல் நிலை முழுவதும் தளர்ந்தாலும் அவர் வீட்டில் நடக்கும் விஷயங்கள் பாட்டியை இன்னும் மனம் நேக செய்த்து. தன்னால் தான் இது எல்லாம். படிக்கும் பெண்னின் வாழ்வை கொடுத்துவிட்டதாக நினைத்தார். காலம் யாருக்கும் காத்து இருக்காமல் அடுத்த இரு வாரங்கள் கடந்து இருக்க, இன்று மருத்துவர் வர சொன்னா நாள் என்பதால் காலையில் கதிர் வீட்டுக்கு வந்து இருந்தான், வந்தவன் கனேசனிடம் சென்று இன்று ஸ்கேன் செய்ய போகவேண்டும் என்று கூற அவரும் தலையாட்டினார். அந்த நிகழ்வுக்கு பிறகு இன்று தான் அவன் அவரிடம் பேசுகிறான். எல்லோரும் அங்கு தான் இருந்தானர்.

அன்வோ யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்து இருக்க, ரத்தினமோ அவனிடம் வாய் திறக்க பயந்தார். அன்று அவன் மருத்துவமனையில் பேசிபின் கனேசன் அவரிடத்தில் முகம் கொடுத்து பேசவில்லை. அதிலேயே அவர் மன சோர்ந்து இருந்தது, அன்று அன்பு சொன்ன வார்த்தைகள் உன்மை தான் என்றாலும், அவர் அந்த வீட்டில் யாருக்கும் கொடுதல் நினைத்து எதையும் செய்யவில்லை. அழகியை தன் மகள் போல் தான் பார்த்துக்கொண்டார்…………….. ஆனால் இப்போது நிலை ……………………

கனேசன் அன்புவிடம், இன்று மருந்துவமனைக்கு போகனும், பேங்க் லீவ் சொல்லிடுங்க என்றார். அவனோ நான் எதுக்கு வரனும். எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாருக்கு வேனுமோ அவங்களை கூட்டி போங்க………….. என்றவன் கிளம்பிக்கொண்டு இருக்க, என்ன சொல்லுற அன்பு என்றவர் பதறிவிட்டார். அன்று ஏதோ கோவத்தில் பேசுகிறான் என்று நினைத்தவர் இன்று அவன் பதில் பதறித்தான் போனார். 

இங்க பாருங்க மாமா, அன்னிக்கு சொன்னது தான் இன்னிக்கும் எனக்கும் அந்த குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்புறம் நான் எதற்கு வரனும். வேனா நான் சொல்லுறமாதிரி செய்ங்க, இந்த குழந்தையை கலைக்க சொல்லுங்க. அப்புறம் இந்த பய இந்த வீட்டுபக்கம் வர கூடதாது, நான் உங்க பெண்ணு பன்ன தப்பு எல்லாத்தையும் மண்ணிச்சி அவளை ஏத்துகிறேன். என்று அசராமல் எல்லார் தலையிலும் இடியை இறக்கி இருந்தான். யாருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இதை எல்லாம் கேட்டபடி அந்த கூடத்தில் தான் எல்லோரும் அமர்ந்து இருந்தனர். 

அடுத்து என்ன என்று யோசிக்க கூட முடியாதபடி எல்லோரும் அமர்ந்து இருக்க, அங்கு சப்பதம் இல்லாமல் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு அடுத்து அவர்களை கலங்கவைத்து இருந்தது…………………..

    

தொடரும்……………. 

Advertisement