அவளை நெருங்கும் மார்கமும் யாருக்கும் தெரியவில்லை. அவள் பேச்சுகள் குறைந்து போயிற்று, கேட்பதற்க்கு மட்டும் பதில் வரும், அதுவும் ஒர் இரு வார்த்தைகள் தான், தினமும் பாட்டி உடன் சிறிது நேரம் அமர்ந்து இருப்பாள், தம்பிகளுடன் அமர்ந்து இருப்பாள்,ரத்தினத்துடன் சில பேச்சு வார்த்தைகள் இருக்கும், அன்புவிடம் அதுவும் கிடையாது. தாலி கட்டி மனைவியாக வாழ்ந்த ஒருத்தியை எப்படி அப்படி பேசலாம் என்ற கோவம், தன்னை எப்படி பேசவிட்டு இப்படி வேடிக்கை பார்த்தார் என்று கனேசன் மேல் கோவம். எல்லாவற்றையும் விட கதிர் தன்னை மனதில் இப்படி நினைத்து பழகினார் என்ற ஆற்றாமை என்று எல்லாம் அவளை அமைதியாக்கி செய்து இருந்தது.

எல்லோரும் அவள் போக்கில் விட, கதிருக்கு தான் எவ்வளவு மடதனமாக நடந்து இருக்கிறோம் என்ற கோவம் அவனுக்கு அவன் மேலேயே வந்தது. அவளுடன் இருந்த இந்த இரண்டு நாட்களில், அவளை தன் அக்காவின் மகளாக பார்க்க முடிந்தோ தவிர, மனைவியாக என்ன முடியவில்லை, தனக்கு அவள் மேல் இருப்பது, காதல் இல்லை அது அதிகபடியான பிள்ளை பாசம், என் கையில் வளர்ந்தவள், என்னையே சுற்றி வந்தவள், எல்லாவற்றையும், என்னிடம் பகிர்ந்துக்கொண்டவள், தன்னை அவள் அம்மாவின் இடத்தில் வைத்து இருந்தாள் என்பதை அறிந்துக்கொண்டவன், நான் அவளுக்கு தாயுமானவன்னாக தெரிந்து இருக்கிறேன், அப்படி தான் நானும் இருந்து இருக்கிறேன், இதை புரிந்துக்கொள்ளாமல், என்னையும் குழப்பி, அவள் வாழ்க்கையும் குழப்பி வைத்து இருக்கிறேனே என்று மனதால் நொந்து போனான்.

அன்புவோ தன் திட்டம் எல்லாம் இப்படி ஆகிவிட்டதோ, எல்லோரும் தன் கைபிடிக்குள் வைக்கலாம் என்று நினைத்து இருக்க, இப்போது வாய் திறந்து பேச முடியவாத நிலையில் அல்லவா இருக்கிறேன். என்று நினைத்து நொந்து இருந்தான்.

அடுத்த ஒரு வாரத்தில் கிளம்பியவள், கூடத்தில் எல்லோரும் இருக்கும் போது வந்தவள், கல்யாணத்துக்கு எடுத்த லீவ் எல்லாம் முடிஞ்சு போச்சுஇன்னையில் இருந்து தான் கலேஜ் போறேன் என்று சொன்னவள் யார் பதிலையும் எதிர் பார்க்கவில்லை, கிளம்பிவிட்டாள். அன்புவுக்கு காலில் இன்னும் காயம் சரியாவில்லை அதனால் அவன் மருத்துவ விடுப்பில் தான் இருந்தான். அந்த சம்பவத்துக்கு பிறகு அழகி அவனிடம் பேசுவதும் இல்லை, அவர்கள் இருந்து அறைக்கு சொல்லுவதும் இல்லை, இது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்தாலும் யாரும் இது பற்றி பேசவில்லை. அன்புவின் மனதில் இந்த விஷயங்கள் வன்மத்தை வளர்த்துக்கொண்டு தான் இருந்தது.

எல்லோரும் அவர்வர் வேலைகளில் இருந்தாலும் கதிர் மட்டும் நாள் தோறும் அழகியை பார்க்க வந்துவிடுவான், அவன் முன்பு எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கிறான். அவள் பேசினாலும், இல்லை என்றாலும், அவன் அவனாகவே இருந்தான். சில நேரம் பாட்டியின் அருகில் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டு இருப்பான், சிறியவர்க்கள் உடன் கூட அவன் பேச்சுகள் சில நேரங்களில் இருக்கும். ஆனால் கனேசன், ரத்தினம், அன்பு மூவரையும் முற்றிலும் தவிர்த்துவிடுவான்.

அழகி கல்லூரி சொல்லும் போதும், வரும் போதும் தோப்பில் இருந்து அவளை பார்த்துக்கொள்ளுவான், அவளுடன் படிக்கும் அந்த ஊர் பெண்களை மூலம் அவ்வபோது விசாரித்துக்கொள்ளுவான். அது அனைத்தும் முன்புமும் நடந்தது தான் என்பதால் அழகியும் ஏதும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

மேலும் 10 நாட்கள் கடந்து இருக்க, அன்புவும் மருத்துவ விடுப்பு முடிந்து, தன் பணிக்கு திரும்பி இருந்தான், அவனுக்கும் ஏதும் செய்ய முடியாநிலை, ரத்தினம் கூட அவனை அந்த திட்டு திட்டிவிட்டார், கல்யாணம் முடிந்து இரண்டு பேரும் சந்தோஷமாக தானே இருந்திங்க, அதுக்குள்ள எந்த பேய் பிடித்து ஆட்டுது உன்னைய? அந்த புள்ள மேல இல்லாது, பொல்லாது சொல்லுற, நாய குளிபாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது கண்டதை தேடி போகுமாம், அது மாதிரி, நம்ம இருந்த நிலைக்கு இந்த வீட்டு பெண்ணு உன்னைக்கு கட்டி வைத்தால் நீ இப்படி பண்ணிட்டு இருக்க என்று பேசிவிட, அவனுக்கு மனமே வீட்டு போனது, அக்காவிற்காக நம் மனதில் நினைத்த பெண்ணை கூட மறந்து இந்த கல்யாணம் செய்தால், அவள் என்னை மனிதனாக கூட மதிக்கவில்லை, மாமா என் ஏது என்று கேட்பது இல்லை, இப்போது அக்காவும் இப்படி பேச அவனுக்கு, கோவம் உச்சியில் இருந்தது. ஆனால் அதை யாரிடமும் கான்பிக்க முடியாத நிலை. 

அதனால் தான் இன்னும் இரு நாட்கள் விடுப்பு இருந்தும் இன்று கிளம்பிவிட்டான். போகும் வழியில் கதிர், அழகி போகும் பாதையில் நின்று இருக்க, அங்கு இருக்கும் எல்லோரும் இவனை பார்ப்பதாக இவனுக்கு தோன்றியது.

தன் வண்டியில் வேகமாக அந்த இடத்தை கடந்தவன் தன் வங்கிக்கு அருகில் இருக்கும் பூங்காவல் அமர்ந்து இருக்க, அருகில் யாரோ அமர்வதாக தோன்ற திரும்பினால் நந்தினி, ஏதும் போசாமல் இவன் அமைதியாக இருக்க, அவள் பேசினால் கவலை படாதீங்க, எல்லாம் சரியாகும். என்றவள் சற்று நேரம் அவனுடன் அமர்ந்து இருந்தவள், எனக்கு நேரம் ஆகுது, நான் வரேன் என்று கிளம்பிவிட்டாள்.

அவனுக்கு ஏதோ ஆறுதல், கட்டிய மனைவி கொடுக்காத ஆறுதல், தன் அக்கா கொடுக்காத ஆறுதல் யாரோ அவள், இதற்கும் அவளுக்கு நான் ஏதும் நல்லது செய்யவில்லை, ஆனால்……………….. என்று நினைத்தவன், சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு கிளம்பிவிட்டான்.

அன்று வேலை முடிந்தும் அவன் வண்டி எடுக்க போக, அங்கு பூங்கா வாசலில் நந்தினி நின்று இருந்தாள், சிறிது நேரம் பார்த்தவன், பூங்கவின் உள்ளே செல்ல, அவளும் பின் வந்தாள், இருவரும் ஏதும் பேசவில்லை. சிறிது நேரம் காலையில் அமர்ந்து இருந்தது போல் அமர்ந்து இருந்தனர், இதுவே பின் வந்த நாட்களில் வாடிக்கையானது, சில நேரங்களில் அவள் இவனுக்காக ஏதும் சாப்பிட எடுத்து வருவாள். இப்படியே இவர்கள் நாட்களு சென்று கொண்டு இருக்க. மொதுவாக இவர்களின் நெருக்கம் அதிகரித்து. வீட்டில் தன்னிடம் முகம் கொடுத்து பேசாத மனைவி, அதை பற்றி கவலை படாத கனேசன், எல்லாவற்றுக்கும்  தன்னையே காரணம் சொல்லும் அக்கா என்று இருப்பவனுக்கு, நந்தினியினி, இந்த அன்பும்.(!), அனுசரனையும் மிகவும் பிடித்து இருந்தது. தான் சொன்னது எல்லாம் கேட்டு தன்பின்னால் சுற்றி வரும் நாய்குட்டியை போல் அவனுக்கு அவளை மிகவும் பிடித்து இருந்தது.

ஆனால் அதற்கு மேல் போக அவனுக்கு மனது இல்லை, அதற்கு காரணம் இப்போது இருக்கும் இந்த கௌரவமான வாழ்வும், செல்வநிலையும். அதோ சமயம் நந்தினியையும், அவன் தள்ளவில்லை, இப்படியாக இவர்களின் உறவுநிலை இருக்க.

இதுஎல்லாவற்றுக்கும் முடிவுகட்டும் நாளும் வந்தது. அன்று கல்லூரிக்கு சென்ற அழகி, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாக தகவல் வந்து இருக்க. மொத்த குடும்பமும், அடித்து பிடித்து அங்கு சென்றனர். வந்தவர்களுக்கு கிடைத்த செய்தி, அவள் தாய்யாகி இருப்பதாக மருத்துவர் கூற……………………… கேட்டு இருந்த சில தலையில் இடி விழுந்தது போலனது, சிலருக்க சந்தோஷ பூக்களும் மனமேங்கும்……………….

மருந்துவமனை வந்தவர்கள், அவளை பார்த்து இருக்க, செய்தி கேட்டு அங்கு வந்து இருந்தான் அன்பழகன், அவனுடன் நந்தினியும், அவளை புருவ சுழிப்புடன் பார்த்து இருந்தனர் இருவர், ஒன்று கனேசன் மற்றோருவர், கதிர் இவள் இங்கே………….. கடந்து சில நாட்களாக இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வது இருவர் காதுக்கும் வந்து இருந்தது. இருந்தும் இருவரும் இப்போது ஏதும் பிரச்சனை செய்யாமல் அமைதிகாக்க நினைத்தனர் அழகியை மனதில் வைத்து. இப்போது இவள் இங்கு ஏன் என்ற யோசனை இருவருக்கும் ஓடிக்கொண்டு இருந்தாலும், ஏதும் போசாமல் அமைதியாக இருந்தனர்.

வந்தவனிடம் ரத்தினம் விஷயத்தை சொல்ல, இருவருக்கும்மே அதிர்வு தான், நந்தினியிடம் நான் என் மனவாழ்வில் எந்த விதமான சந்தோஷத்தையும் அனுபவிக்கவே இல்லை, என் அக்காவிற்காக தான் இந்த திருமணம் கடைசியில் என் அக்கா கூட என்னிடம் இப்போது சரிவர பேசுவது இல்லை என்று தான் அவன் நந்தினியிடம் கூறியிருந்தான்.

அவளும் அதை அப்படியே நம்பி இருந்தாள். ஏன் என்றால் அவளுக்கு அந்து வீட்டின் நிலை தான் நன்கு தெரியுமே……….. ஆனால் இப்போது அழகி கர்ப்பம் என்று சொன்னது அவளுக்கு தலையில் இடி இறங்கியது போல தான் இருந்தது. அவள் அன்புவை தான் பார்த்து இருந்தாள்.

அவனோ மனதால் என்ன உணர்ந்தான் என்று சொல்ல முடியவில்லை. இவளுடன் நான் ஒர் இரவு தானே இருந்தேன், அதில் இது சாத்தியமா? ஒரு வேளை இது கதிரின் குழந்தையாக இருக்குமோ(!) என்று தான் அவனின் மனம் எண்ணியது. இப்போதும் அவனுக்கு அழகி மேல் நம்பிக்கை இருந்தது, அவள் அப்படிப்பட்டவள் இல்லை என்று, ஆனால் அன்று அவன் விசாரித்த வரை அழகி நினைவு இல்லாமல் இருந்தாள், கதிர் தங்கள் மேல் இருக்கும் கோவத்தில் இவளிடம் ஏதும் ………………………… என்று தான் அவன் சிந்தனை ஓடியது…………………………… எப்போதும் தன்னை போலவே பிறரை பார்க்கும் மனித மனம். அவன் மனதில் இருந்து அழுக்கு, அவனுக்கு எல்லாவற்றையும் அப்படியே காட்டியது. அதை கொண்டு அவன் எடுக்க போகும் முடிவுகள் இங்கு எல்லோர் வாழ்க்கையும் சுழற்றி அடிக்கும் என்று தெரியாது, அதை ஆரம்பித்து வைத்தான்……………………………….

அடுத்து எல்லோர் வாழ்விலும் வீச போகும் புயல் என்னவோ……………….

    

தொடரும்…………….