Advertisement

அத்தியாயம் – 15

செவிலியர் வந்து கதிரிடம் உங்கள் மனைவி கண்விழித்துவிட்டார்கள் என்று சொன்ன போது முதலில் கதிர் தான் அந்த அறையை அடைந்து இருந்தான். அதுவரை சற்று முன் நடந்தவற்றை மனதில் நினைத்து கொதித்துக்கொண்டு இருந்தவன். அதுவும் கனேசன் கேட்ட கேள்வியில்…………. அவரை ஏதும் செய்துவிடுவோம்மோ? என்றே நினைத்தான்…….. எப்படி இவர்களால் பெற்ற பெண்ணை இப்படி பேச முடிகிறது என்று தனக்குள் கனன்றுக்கொண்டு இருந்தவன், அந்த செவிலியர் வந்து சொல்லவும், அதில் மனது பதியாமல் அறைக்குள் சென்றுவிட்டான். 

ஆனால் அங்கு அமர்ந்து இருந்த மற்றவர்கள் இதை கவனித்தனர், இதுவரை அமைதியாக இருந்தவர்கள், தங்களுக்குள் முனுமுனுத்துக்கொள்ள, கனேசன் இந்த முறை ஏதும் பேசவில்லை. அமைதியாக மகள் இருக்கும் அறைக்கு விரைந்தார். அவரை தொடர்ந்து அன்புவும். 

அங்கு அவர்கள் கண்டது, மகள் கட்டிலில் விழித்தவாறு படுத்து இருக்க,  அருகில் இருந்த நாற்காலியில் கதிர் அமர்ந்து அவளிடம் இப்போ எப்படி இருக்கு அழகிமா என்று கேட்டு கொண்டு இருந்தை தான்………

அவளிடமோ பதில் இல்லை…… பார்வையை வெறித்தபடி படுத்து இருந்தாள். அப்போது உள்ளே வந்த தந்தை மற்றும் அன்புவின் மேல் அவள் பார்வை பட, அவர்களையே பார்த்து இருந்தாள்.

கதிர் இவர்களை கண்டு கொள்ளவில்லை, கனேசன் மற்றோரு பக்கமாக மகள் அருகில் வந்தவர், இப்போ எப்படி இருக்க குட்டிமா என்றார் சற்று தடுமாற்றதுடன். அவருக்கு மகள் தன் கேட்டதை கேட்டு இருப்பளோ? அப்படி கேட்டு இருந்தால் இப்போது அதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று எண்ணம் தான் மனதில் ஒடிக்கொண்டு இருந்து. அவளோ அப்பாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், அன்புவை பார்த்து இருந்தாள், அவள் பார்வையை எதிர் கொள்ள அவனால் முடியவில்லை….. தலை கவிழ்ந்தான்………..

இருந்தும் அவள் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தவன் மனதில் ஏற்பட்ட படபடப்பை அடக்க பார்த்தான்………

சற்று நேரம் அமைதியாக அவனை பார்த்து இருந்தவள், அன்புவை பார்த்து, நேற்று காலையில் என்ன நடந்தது? என்றாள்…….

அவள் இப்படி சட்டென்று தன்னிடம் கேட்பாள் என்று எதிர்பார்க்காதவன், திகைத்து தான் போனான். அவன் நினைத்தது அவள் தன்னிடம் சன்டையிடுவாள், அழுவாள் என்று நினைத்து இருந்தான். ஆனால் அவளின் இந்த நிதானமான பேச்சு அவனுக்குள் குளிர் பரப்பியது. 

அது …….. அது…………… அதுவந்து………… நேற்று நீ வண்டியில் ……….. வரும்போது…………………….. விழுந்துட்ட………………………. இல்ல………. இல்ல………………………. வண்டி என் மேல் விழுந்தது…………………….. இல்ல இவன் தான் வண்டிய குறுக்குல நிறுத்தியதில்……………… என்னை தள்ளிவிடான்…. நான் மயங்கிட்டேன்………………………. எனக்கு ஏதும் தெரியாது, நான் விழித்து பார்க்கும் போது எல்லோரும் இருந்தாங்க…………………….. நீயில்லை………………………….இவன் கூட போயிட்டனு நினைச்சேன் என்றான் வார்த்தைகள் கோர்க்க முடியாமல், ஒருவாரு சொல்லி முடித்தான்.

போயிடன்னா? என் அர்த்தம்…… என்றாள் கூர்மையாக?

அதுவரை அவன் பேசிவற்றை கேட்டு இருந்த கனேசன் கூட ஏன் இவன் இப்படி தடுமாறுகிறான் என்று நினைத்தார்……..

அப்போது கதிர் ஏதோ சொல்ல வர? அவன் கையை பிடித்து தடுத்தவள்………..

அடுத்த தந்தையிடம் திரும்பினாள்…… நீங்க நான் வீட்டுக்கு வரும் போது என்ன கேட்டீங்க? என்றாள் அதோ தோரனையில்……..

இப்போது தினறுவது அவர் முறையானது…………. நேற்று அவன் சொல்லியதை அப்படியே கேட்டு இருக்க கூடாதோ என்று எண்ண தோன்றியது… ஆனாலும் இப்போது அதனால் என்ன பலன்…….

என்று நினைத்தவர் ஒரு பெருமூச்சோடு தப்பு தான் மா நேற்று அன்பு வந்து அப்படி சொன்னதும் நான், உங்களை தேட ஆட்களை அனுப்பி இருந்தேன் ஆனா உங்களை எங்கேயும் கண்டு பிடிக்க முடியலை………….. அதனால…………….

என்று அவர் முடிக்கும் முன்…………….. நான் கதிர் மாமா கூட ஒடிபோயிடேனு முடிவு பன்னிடீங்க…………………………. என்றாள் கண்களில் உஷ்னத்துடன். அவர் ஏதும் போசாமல் அமைதியாக நின்றுவிட, அன்புவும்மே இப்படி இவள் பேசுவாள் என்று எதிர்பார்கவில்லை. அவளின் இந்த நிமிர்வு தான் அவன் பிரச்சனை, பெண்கள் இப்படி பட்ட பேச்சுகளில் கண்ணீர் சிந்துவார்கள், அமைதியாகவிடுவார்கள், காலம் காலமாக நம் சமூகம் பயன்படுத்தும் உத்தி தான், ஒரு பெண்னை தடுக்க வேண்டுமா? அவள் ஒழுக்கத்தை பற்றி பேசிவிட்டால், போதும் அடுத்த அடி அவள் எடுத்து வைக்க தயங்குவாள்,  அவள் முடங்கிவிடுவாள், எதிர்க்கமாட்டாள், அவ்வளவு ஏன் அப்படி பட்ட பேச்சுகள் வந்தால், அவள் வீட்டினர் கூட அவளை தான் குறை கூறுவார்களே தவிர, எதிரில் இருப்பவரை அல்ல!!!!!!!!!!!!!!!!!!!!!!  எத்தனை படித்தாலும், எத்தனை வளர்ந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், சமூகத்தின் இந்த போக்கில் மட்டும் எப்போதும் பெரிதாக மாற்றம் இல்லை……………… இப்படி நினைப்பதில் ஆண்,  பெண், என்று பேதம் இல்லை!!!!!!!!

 

ஆண்கள் மூவரும் அமைதியாகி விட, அன்பு தான் அப்போதும், என்னமோ நாங்க உன்னை தப்பா சொல்லுற மாதிரி பேசுற, அந்த நர்ஸ் கூட தான் இப்போ இவனை (கதிரை கான்பித்து) உன் புருஷன் சொல்லிட்டு போனாங்க, ஏன்? அப்படி சொல்லனும், இங்க உன்னை நேத்து சேர்த்து இருக்கான், இன்னிக்கு காலையில் நீ வீட்டுக்கு வரும் வரை எங்களுக்கு நீ எங்க இருக்கேனு தெரியாது!!!!!!!!!!!!!!! இவன் மனதில் தப்பு இல்லைனா எங்களுக்கு தகவல் சொல்லி இருக்கனும் இல்ல? என்றான் கதிர் மீது குற்றம் சுமத்திவிடும் நேக்கில்………

கதிர் ஏதோ சொல்ல வாய் திறக்கும் முன், நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை……. என்றால் அழகி………… இப்போ பிரச்சனை என்னை வைத்து, என் ஒழுக்கத்தை வைத்து, ஒரு நாள் நான் வீட்டுக்கு வரவில்லை, நீங்களும், நானும் போன வண்டியில் உங்களுக்கு அடிபட்டு விழுந்து கிடகிறிங்க, உங்களை காப்பாத்தி கூட்டு போனவங்க, ஏன் எனக்கு என்ன ஆச்சுனு கேட்கலை, எனக்கும் அடிபட்டு இருக்கும் ஏன் யோசிக்கலை, என்னை உன்மையாகவே தேடினிங்கனா? ஆஸ்பிட்டல தேடி இருக்கனும்…………………. நீங்க நினைக்கற இடத்தில் இல்ல………………………. என்றாள் கோவத்தோடு, இதற்கு மேல் பேசினால் எங்கே தான் சொன்னை பொய்கள் தெரிந்தும் விடும்மோ என்று அன்பு அமைதியாகிவிட.

கனேசன் வாய் திறந்தார், அது அப்படி இல்லைமா, ஏற்கனவே உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, கதிரு உன்னைய விரும்பறதா பிரச்சனை பன்னான், அதனால் அவன் இங்க இருந்தா கல்யாணத்தில் பிரச்சனை பன்னுவான் நினைத்து, அவனை நம்ம பன்னைவீட்டில் வெச்சி இருந்தேன், நேத்து கல்யாணம் முடியவும் தான் அவனை விட்டோம், அதான் அந்த கோவத்தில் கதிர் உன்னைய ஏதும்……….. என்று சொல்ல வந்து நிறுத்தினார் கனேசன்………………. அவருக்கே இப்போது தான் நடந்துக்கொண்டதை நினைத்து அவமானமாக இருந்தது. மகள் முன்னால் இதை சொல்ல…………………….

இது எல்லாம் அழகிக்கு புதிய செய்தி, கதிர்மாமா என்னை திருமணம் செய் நினைத்தாரா?, அப்பாவுடன் அவருக்கு சன்டையா? அப்பா அவரை பன்னைவீட்டில் வைத்து இருந்தாரா? அப்பாவா அப்படி செய்தார். நேற்று நாங்கள் வண்டியில் போகும் போது அதனால் தான் கதிர் மாமா வண்டியில் எங்களை தொடர்ந்து வந்தாரா? இப்போது எல்லாம் புரிந்து அவளுக்கு, ஆனால் புரிந்த விஷயங்கள் தான் மனதுக்கு உவப்பாக இல்லை.

தன்னை சுற்றி இவ்வளவு விஷயம் நடந்து இருக்கிறது… ஆனால் தனக்கு ஏதும் தெரியவில்லை……………. ஆனால் இது எல்லாம் தன்னை வைத்துதான் என்பது அவளுக்கு தலைவேதனையாக இருந்தது, இத்தனை நாள் யாரை எல்லாம் தன் சொந்தங்களாக நினைத்து, அவர்கள் மேல் அன்பும், மரியாதையும் வைத்து இருந்தோம்மோ அவர்களே இப்படியா? என்று தான் தோன்றியது…………………….

என் அம்மா இருந்தால் இப்படி எல்லாம் நடந்து இருக்குமா? என்ற எண்ணம் எழாமல் இல்லை அவளுக்கு. ஏதும் பேசவில்லை அவள், அப்படியே படுத்துக்கொண்டாள்.

கனேசனும், அன்புவும் வெளியேறிவிட, கதிர் மட்டும் அங்கேயே அமர்ந்து இருந்தான். அன்று மாலையே அவளை வீட்டுக்கு போகலாம் என்று கூறிவிட, கனேசன் கார் ஏற்பாடு செய்து இருந்தார், அதில் வீட்டுக்கு அழைத்து வந்து இருந்தனர்.

அதுவரையும் கூட யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை அவள்.

Advertisement