Advertisement

அத்தியாயம் – 14

கதிர் அன்றைய அலைச்சலில் அப்போது தான் நன்றாக உறங்கி இருக்க, அழகியோ மருந்தின் விரியத்தால் உறங்கி இருந்தால், இவர்கள் இருவரையும் பார்த்தபடி அடுத்து என்ன செய்வது என்றபடி அமர்ந்து இருந்தான் அவன் நன்பன் மணிகண்டன். இப்போதே கதிரிடம் விஷயத்தை கூறிவிடலாமா?  இல்லை காலை வரை பெருத்து இருக்கலாமா என்று அவன் எண்ணிக்கொண்டு இருக்க…………..

அலைபேசியில் வந்த தகவல் அவனை தூங்கவிடவில்லை. எப்படியும் நாளை ஊருக்குள் சென்றால் பெரிய பூகம்பமே காத்து இருக்கு, அதை சமளி்க்க இவங்க இரண்டு பேருக்கும் தெம்பு வேணும், இப்பவே சொல்லி எதுக்கு இவங்க நிம்மதியை கெடுக்கனும், எதுனாலும் நாளைக்கு பாத்துக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

அவனுக்கு அவன் நன்பன் சென்ன தகவல் இது தான்………………

டேய் எங்கடா போய் தொலைஞ்சிங்க. காலையில் இருந்து உனக்கும் அன்புக்கும் டிரை பன்றேன், இங்க எவ்வளவு பிரச்சனை தெரியுமா? அழகிவீட்டில் வேற என்னனென்வோ பேசிக்கிறாங்க…….. என்றான் படபடப்புடன்.

டேய் முதலில் கத்தாதே என்ன நடந்தது சொல்லு என்றான்…………

நான் சொல்லுவது இருகட்டும், இப்போ அழகி எங்க, கதிர் கூடவா இருக்கா? முதலில் அவங்களை ஊருக்கு வர சொல்லு இங்க நடப்பது ஏதும் சரி யில்லை என்றான்…………

இங்க பார்ரா உடனே எல்லாம் வர முடியாது நாங்க ஆஸ்பத்திரியில் இருக்கோம், அழகிக்கு அடிபட்டு இருக்கு, டாக்டர் நாளைக்கு காலையில் தான் வீட்டுக்கு போக சொல்லி இருக்கார்………………….

என்றவனை இடைமறித்து என்ன அடிபட்டு இருக்கா? அப்போ கதிருக்கு? என்றான் பதட்டதுடன்…….

அவனுக்கு ஏதும் இல்லை.

கதிரும் அழகியும் வண்டியில் போகும் போது அடிபட்டதா? என்றான் அவன்……

ஏன் அதை பத்தி அவன் ஒன்னும் சொல்லையா………………… என்றான் மணிகண்டன்… 

எவன்டா என்றான் அவன் நன்பன்.. ம்மம்மம்மம்மம்மம அது தான் அந்த அன்பு பய…….

டேய் அவன் சொல்லுறது இருக்கட்டும், முதலில் நீ சொல்லு எப்படி அடிபட்டது என்றான்.

மணிகண்டணும் காலை முதல் நடந்தது எல்லாவற்றையும் சொல்ல, அதை கேட்டவனோ, என்ன அப்போ அழகி கதிர் கூட போகலையா என்றான்………….

டேய் எண் ஒளறிட்டு இருக்க, அவளே இந்த அன்பு பய வண்டி முட்டின வேகத்தில் மயக்கமாகிட்டா, நானும் கதிரும் தான் அவளை ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனோம்……. என்றான்.

டேய் இந்த அன்பு இங்க அப்படி சொல்லைடா….. காலையில் இரண்டு பேரும் கோயிலுக்கு போகும் போது கதிர் வழிமறிச்சு அழகிய கூப்பிடதாகவும், அதை தடுக்க போனவன் மேல் வண்டியை தள்ளிவிட்டு அவளை கூட்டி போனதாகவும் சொல்லி இருக்கான் வீட்டில், இதை கேட்டு இங்க எல்லாரும் கொதிச்ச போய் இருக்காங்கடா………….. கிட்டதட்ட இரண்டு பேரும் ஒடி போய்ட்ட மாதிரி இவன் சொல்லி இருக்கான். ஏற்கனவே கதிர் மேல கோவத்தில் இருந்த அவன் மாமா, இதை கேட்டு ஊரில் ஆளுங்களைவிட்டு தேடிகிட்டு இருக்காங்க என்றவன், மேலும் டேய் முடிஞ்சவரை இரண்டு பேரையும், சீக்கரம் கூடி வர வழிய பாரு………..

என்றவன் சொன்ன செய்தியில், இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? என்று தான் தோன்றியது….. அவனுக்கு விடிவதற்காக காத்து இருந்தவன், காலையில் கதிர் எழுந்ததும், வீட்டில் உங்கள் இருவரையும் காணலைனு பெரிய பிரச்சனையாம் கதிர், முதிலில் ஊருக்கு  போகலாம், மத்தவற்றை அப்புறம் பாத்துக்கலாம், என்றவன் இருவரையும் கிளப்பி இருந்தான் ஊருக்கு.

காரில் போகலாமா என்று கதிர் சொன்னதுக்கு, வேண்டாம் மாமா நான் நல்லா தான் இருக்கேன், வண்டியில் போய்விடலாம் என்றாள், மூவரும் ஊரை நேக்கி தங்கள் பயணத்தை தெடங்கி இருக்க. 

அங்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் வந்து கொண்டு இருந்தான் மணிகண்டன்.

……………..

விடிந்து இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் எங்க இருக்காங்கனு கண்டு பிடிக்க முடியவில்லை? என்று இவர்கள் ஆட்கள் வந்து நிற்க, சற்று நேரத்தில், வண்டியில் கதிருடன் வந்து இறங்கினாள் அழகி, அப்போது தான் எல்லோரும் வீட்டு தின்னையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, வரும் மகளை தான் பார்த்து இருந்தார் கனேசன், நேற்றில் இருந்து அவர் மணம் ஒரு நிலையில் இல்லை, அன்பு வந்து சொன்னதில் இருந்து, மகளுக்கு பிடிக்காமல் இந்த திருமணத்தை நடத்தி வைத்தது தவறோ என்று அவர் மன உலைச்சலில் இருக்க, காலையில் இருவரும் நன்றாக தானே கிளம்பி போனார்கள், பின் அன்பு ஏன் இப்படி பேசுகிறான் என்ற குழப்பத்தில் அவனையே அடிக்கடி பார்த்தபடி ரத்தினமும் அமர்ந்து இருந்தனர். நேற்று வரை அக்கா திருமணத்தில் மகழ்ச்சியாக வலம் வந்த இரட்டை சகேதர்கள் இருவரும் இன்று வீடு இருக்கும் நிலை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் அறையில்  அமர்ந்து இருந்தனர்.

இந்த திருமணம் நடத்தால் தன் பேத்தி மகிழ்ச்சியாக இருப்பாள் என்று நினைத்த பாட்டிக்கோ, தன்னால் தான் படிக்கும் பெண்ணின் வாழ்க்கை வீண் ஆகிவிட்டதோ என்று மனம்  கனத்து போய் இருந்தார். இவர்கள் மனநிலை இப்படி இருக்க, கதிருடன் வந்து இறங்கினாள் கதிரழகி, அவள் முகத்தில் இருந்த புன்னகை அதுவரை அன்பு சொன்னதை நம்பலாமா வேண்டாமா? என்ற மனநிலையில் இருந்த கனேசன், அந்த நிமிடம் அன்புவின் பக்கம் அவர் மனம் சாய்ந்து இருந்தது. அதுவரை மகள் அப்படி செய்து இருக்கமாட்டாள் என்று நம்பி இருந்தவர். மகள் தன்னை எதிர்த்த கதிருடன் வந்தவுடன் மனம் அதிருப்பதிக்கொண்டது. 

அன்பு மற்றும் சில சொந்தங்கள் அங்கு அமர்ந்து இருக்க, எல்லோர் பார்வையும், அவளையும், கதிரையும் நோக்கி இருந்தது. கதிருக்கு அவர்களின் பார்வையின் வித்தியாசம் புலபட, திரும்பி மணிகண்டனை பார்த்தான். அவன் அவசரமாக நடந்ததை கதிரிடம் சொல்லி இருக்க, கதிரின் முகம் கோவத்தில் சிவந்து இருந்தது. தன் அக்காவின் மகளை கட்டாயபடுத்தி மனந்தது மட்டும் அல்லாமால், அவள் மேல் இப்படி பழிவேறு சுமத்தி இருக்கிறானே? என்ற கோவம் அவன் முகத்தில்…….. கனேசனை நேக்கி போனவன்………..

நேத்து எல்லாம் இவன் கூட எங்க இருந்த இப்போ எதுக்கு இந்த வீட்டுக்கு வந்து இருக்க? போனவ அப்படியே போக வேண்டியது தானே என்றார் கோவத்துடன்……………கனேசன் 

அவர் தன் மகளிடம் கேட்ட கேள்வியில் அப்படியே நின்று விட்டான்!!!!!!!!!!!!!!! 

கதிரழகி இவர் என்ன கேட்கிறார் என்று அதிர்ந்து நின்று இருந்தாள்………  என்ன அப்பா சொல்லுறீங்க என்றவள் அப்போது தான் அருகில் அன்பு இருப்பதை பார்த்து, அப்பா என்ன சொல்லுறார், நீங்க ஏன் ஆஸ்பிட்டல் வரல, காலுக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி கேட்டு இருந்தவளை……………

எல்லோரும் இது என்ன புது கதை என்பது போல் பார்த்து இருந்தனர். அங்கு இருந்த உறவினர்களில் ஒருவர், ஏன் மா இராத்திரி எல்லாம் எங்க போய் இருந்த, என்றார். அவரை புரியாமல் பார்த்தவள். அன்புவை பார்த்தாள், அவன் அவள் முகத்தை பார்க்காமல் திரும்பி இருக்க, ஏன் ஆஸ்பிட்டல இருந்து தான் வரேன்…………

அவர் ஏதும் சொல்லையா? நேத்து காலையில் இரண்டு பேரும் வண்டியில் போகும் போது கீழவிழுந்து, என்னைய ஆஸ்பிட்டல சேர்த்து இப்பதான் வரறேன். என்னங்க நீங்க ஏதும் சொல்லையா? என்றாள்.

எந்த ஆஸ்பிட்டல், யார் உன்னைய சேர்த்தது. என்றார் மீண்டும் அவர்…….

ஏன் இவர் தான் என்றாள் அன்புவை கை கான்பித்து, அப்படி சொன்னவளை   எல்லோரும் ஏளனமாக பார்க்க……. அவர்களின் பார்வையின் பொருள் புரியாமல் அவள் அப்பாவையும், அன்புவையும் பார்த்தவள், திரும்பி கதிரை பார்த்தாள். அவனோ இந்த சூழ்நிலை விரும்பாதவனாய் எதிரில் இருப்பவர்களை முறைத்து நின்று இருந்தான்.  மாமா இவங்க தானே நேத்து என்னை ஆஸ்பிட்டலில் சேர்த்தாங்க என்றாள் கேள்வியாக?

கதிருக்கு சூழ்நிலையின் விரியம் புரிந்து. நேற்று தான் செய்த மடத்தனமான செயல் அழகியை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்று உணர்ந்தவன். எப்படி இதை கையாள்வது என்று தெரியாமல் விழித்தான். அதற்குள் கதிரின் நன்பர்கள் அங்கு வந்து சேர்ந்து இருந்தனர்.

யாரு? அன்பு உன்னைய ஆஸ்பிட்டல சேர்த்தான்? அவன் நேத்து முழுக்க எங்களோட தான் இருக்கான். நீ தான் கதிர் கூட எங்க இருந்த அப்படினு சொல்லனும் என்றார், கதிருக்கு பெண் கொடுக்க நினைத்தவர், அவருக்கு இந்த சமயத்தை விட்டுவிட மனதில்லை. அதனால் தன் மனதில் இருந்த வன்மத்தை எல்லாம் சபையில் கொட்டி இருந்தார். 

என்ன என்று அவர் வார்தைககளில் எல்லோரும் அதிர்ந்து இருக்க, அன்புவும் கூட இதை எதிர்பார்க்கவில்லை, இவர்கள் இருவரையும் இந்த சம்பவத்தை வைத்து, கொஞ்சம் தட்டி வைத்தால், தன் கைபிடிக்குள் எல்லாம் இருக்கும் என்று நினைத்து தான் அவன் இப்படி ஒரு ஆட்டத்தை ஆடியது ஆனால் அது இப்படி திரும்பும் என்று அவன் நினைக்கவில்லை. 

கனேசனும் கூட அந்த கேள்ளவியில் அதிர்ந்து நின்று இருக்க, கதிர் அவரின் சட்டையை பிடித்துவிட்டான். என்ன மனுசன்யா நீ எல்லாம். உன்விட்டில் ஒரு பெணு இருக்கு இல்ல, அப்புறம் எப்படி உண்ணால் இப்படி பேச முடியுது என்று அவரை அடிக்க பாய்ந்து இருந்தான், நன்பர்கள் அவனை பிடித்து இருக்க………..

அதில் கொதித்த அந்த மனிதர், நானா சொன்னேன், இதோ இங்க இருக்காங்களே இவ புருசனும், அப்பாவும் தான் சொன்னாங்க!!!!!!!!!!!!!!!!! இந்த பெணு நேத்து கதிர் கூட ஓடி போய்ட்டானு என்றார் நாக்கில் நரம்பு இல்லாமல்.

இதை எல்லாம் கேட்டவள் அப்படியே அந்த வீட்டு வாசலில் மயங்கி இருந்தாள். அவள் மயங்கிய உடன் அவளை பிடிக்க ஓடியவன், அங்கு இருந்தவர்களை பார்த்த பார்வையில் எல்லோரும் பயந்து தான் போயினர். பெத்த பெண்ண ஒருத்தன் தப்பா பேசுறான், கட்டின பொண்டாட்டிய பேசவிட்டு பார்த்துட்டு இருக்க நீ எல்லாம்……………………  என்றவன் மேலும் ஏதும் ஏதும் பேசாமல்,  அவளை தூக்கிக்கொண்டு நன்பர்கள் வந்து இருந்த காரில் ஏற்றியவன் மருத்துவமனைக்கு விரைந்தான். 

இதுவரை இங்கு நடப்பவற்றை பார்த்து அதிர்ந்து பார்த்து இருந்தவர்கள், பேசியவரை பார்க்க, அவரோ நான் ஒன்னும் இல்லாதை பேசவவில்லை என்பது போல் அப்போதும் நின்று இருந்தார்.

அதற்குள் கனேசன் தன் வண்டி ஏற்பாடு செய்து, அன்புவுடன் அவர்களை பின் தொடர்ந்து சென்று இருக்க. நேற்று அவளை அனுமதித்து இருந்த மருத்துவமனைக்கே அவளை அழைத்து வந்து இருந்தான் கதிர், இவர்களும் பின்னாடியே வந்து இருக்க. மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை ஆரம்பித்து இருந்தனர்.

அங்கு இருக்கும் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்து இருந்தான் கதிர். அவனுக்கு இந்த பிரச்சனையை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை. நேற்று ஒரு நாளில் எல்லாம் தலைகிழாக மாறிவிட்டதாக அவனுக்கு தோன்றியது கனேசனும் அன்புவும், குற்ற உணர்வில் இருந்தனர். இப்படி தன் வீட்டு பெண்ணை அடுத்துவன் பேசிவிட்டதில் அவர்களுக்கு தலைகுனிவாகி போனது….. என்ன நடந்தது என்று விசாரிக்காமல், இப்படி அன்பு சொன்னதும்,மகள் கதிருடன் சென்றுவிட்டாள் என்று எப்படி நினைத்தேன் என்று தன்னையே நொந்துக்கொண்டார் அவர். அன்புவுக்கோ இது என்ன புது தலைவலி என்பது போல் தான் அமர்ந்து இருந்தான். இவளுக்கு ஏதும் ஆகிவிட்டாள் கனேசன் தன்னை என்ன செய்வார் என்பதோ அவனின் எண்ணமாக இருந்து.

இவர்கள் எல்லோரும் இப்படி இருக்க, மேலும் 1 மணிநேரம் கடந்து வெளியில் வந்த மருத்துவர். கதிரிடம் வந்து அதிர்ச்சி தான், ஸ்கேன் பார்த்துவிட்டு சொல்லுறேன் என்றவர் அதற்கான ஆயத்தங்களில் இறங்கினார். இதில் மேலும் 1 மணி நேரம் கழித்து இருக்க. வெளியில் வந்த மருத்துவர் பயப்பட ஏதும் இல்லை. என்று சொன்னவர் அங்கு இருந்து சென்றுவிட்டார். அப்போது தான் அவன் நேற்று அங்கு தான் தன் மகளை அழைத்து வந்து இருந்தான் என்று அறிந்துக்கொண்ட கனேசன், தன்  தவறை என்னி தலை குனிந்து அமர்ந்து இருந்தார் மற்றவர் பேச்சை கேட்டு மகளிடம் எப்படி ஓரு கேள்வியை கேட்டுவிட்டார், இனி மகள் முகத்தில் எப்படி விழிப்பது என்று இருந்தது அவருக்கு. 

எல்லோரும் அமைதியாக 1 மணி நேரத்தை கழித்த பின், அங்கு வந்த செவிலியர், கதிரிடம் சென்று உங்கள் மனைவி கண் விழிச்சுட்டாங்க, நீங்க போய் பார்க்கலாம் என்றதில் யார் அங்கு அதிகம் அதிர்ந்நு போனது என்று தெரியாமல் அமர்ந்நு இருந்தனர்………………………..

அடுத்து கதிரழகியின் வாழ்வில் வீச போகும் புயல் என்னவோ……………….

    

தொடரும்……………. 

Advertisement