Advertisement

இதை எதிர்பார்காத கதிர், உடனே வண்டியை நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் ஒடிவந்தவன், அழகியை தான் பார்த்தான். அவளுக்கு எங்கும் காயம் பட்டு இருக்கிறதா என்று ஆராய்ந்தான். வெளிப்படையான காயம் ஏதும் இல்லை. ஆனால் அவள் நினைவு இல்லாமல் மயங்கி இருந்தாள், அதற்குள்  அங்கு வந்து இருந்த அவன் நன்பன், நிலைமையை உகித்துவிட்டு தன் வண்டியில் இருந்து நீரை எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தான். ஆனாலும் அவள் மயக்கம் தெளியவில்லை. இவை அனைத்தையும் பார்த்து இருந்தாலும், அன்புவால் ஏதும் செய்யமுடியவில்லை. இவர்களும் அவன் அருகில் போகவில்லை. 

கதிரு தூக்கு ஆஸ்பத்திரிக்கு போலாம் என்றான் அவன் நன்பன், அதுவே கதிருக்கும் சரியாக பட கைகளில் அவளை தூக்கிக்கொண்டான். அப்போது திரும்பி அன்புவை பார்த்தவன், அழகியை ஏமாத்தி கட்டாய கல்யாணமா பன்னிவைக்கிறீங்க, அவ முழிக்கட்டும் எல்லாத்தையும் சொல்லுறேன் அவ கிட்ட, அவள் அப்பா செய்ததையும் சேர்த்து என்று கத்தியவன், அன்புவை அப்படியே விட்டு விட்டு அவளுடன் மருத்துவமனை விரைந்தனர். 

அன்புவால் வண்டியை நிமிர்த்த முடியவில்லை. சரியாக சைலன்ர் அடியில் கால் மாட்டி இருந்தது அவன் கால், அது வேறு சூடுபட்டு அவனுக்கு வலி உயிர் போனது. சட்டைபையில் வைத்து இருந்த அலை பேசி வேறு, எங்கு விழுந்தது என்று தெரியவில்லை. அதனால் யாரையும் உதவிக்கு அழைக்கமுடியவில்லை. அவர்கள் அழகியை தூக்கி போவதை பார்த்தபடி அப்படியே இருந்தான். இதுவரை இங்கு நடந்தவற்றை எல்லாம் மறைந்து இருந்து பார்த்து  இருந்த நந்தினி  அடுத்த 10 நிமிடத்தில் அந்த பக்கம் வயல்களில் வேலை செய்துக்கொண்டு இருந்தவர்களை அழைத்து வந்து அவனை தூக்கி இருந்தார்கள். உடனே ஒருவர் கனேசனுக்கு தகவல் சொல்ல, ரத்தினமும் வந்துவிட்டார் தகவல் தெரிந்து. முதலில் இருந்த பதடத்தில் யாரும் எதையும் கவணிக்கவில்லை பின்பு தான் அழகி அங்கு இல்லை என்று உணர்ந்தவர்கள், அவளை பற்றி கேட்க அதுவரை அமைதியாக இருந்தவன், காலையில் கதிர் தங்களை துரத்தி வந்ததையும், அதை தொடர்ந்து விழுந்துவிட்டதையும், அழகி அவனுடன சென்றுவிட்டாள் என்றும் கூறினான் !!!!!!!!!!!!!

அவன் அப்படி கூற இரு காரணங்கள் இருந்து, ஒன்று அவன் கண்டிப்பாக அழகியிடம் கனேசன் தன்னை அடைத்துவைத்தை பற்றி கூறிவிடுவான் என்றும், அதனால் ஏற்கனவே இந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லை, அதில் இது எல்லாம் தெரிந்தால் அவள் என்ன மாதிரி நடத்துக்கொள்வாள் என்று அவனுக்கு பயமாக இருந்தது. இன்னோன்ரு கதிர் மேல் இருந்த வன்மம், ஒருவேளை இப்படி சொல்லிவிட்டால், கனேசன் இனி கதிருக்கு ஆதரவாக இருக்க மாட்டார் என்று கணக்கிட்டான்.

அவனை பெருத்தவரை இந்த விஷயம் யாருக்கும் தெரியாது, தான் சொல்வதை தான் எல்லோரும் நம்புவார்கள் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அவனுக்கு தெரியாத விஷயம் நந்தினி அனைத்தும் பார்த்துவிட்டாள் என்பது தான்.

அங்கு இருந்த கிளினிக்கு கதிரழகியை தூக்கி சென்றனர், அங்கு மருத்துவர் யாரும் அப்போது இல்லை, செவிலியர் மட்டுமே இருந்தார், அவரும் பார்த்துவிட்டு, முதல் உதவி செய்தவர் மருத்துவர் வரும் வரை அவர்கள் அங்கேயே காத்து இருந்தனர் அவர் வந்து பார்த்துவிட்டு வேறு ஏதும் இல்லை என்று சொல்லிவிட. அதன் பின் எல்லோரும் வீடு வந்தனர். அப்போது இருந்து கதிருக்கு அழைக்க முயன்றனர் அவன் அலைபேசி அனைத்துவைக்க பட்டு இருந்தால், அடுத்து என்ன செய்வது என்று யாருக்கும் ஏதும் தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்த இடத்தில் எல்லாம் தேடினார்கள், அவர்கள் இல்லை, அவர்கள் மருத்துவமனையில் இருப்பதை அவன் நன்பர்களும் அறிந்து இருக்கவில்லை. தெரிந்த அன்புவுக்கும் சொல்ல மனமில்லை, அடுத்து அது எந்த மருத்துவமனை என்பது அவனுக்கும் தெரியாது?!?!

……………….

அது ஒரு சிறிய தனியார் மருத்துவமனை, அங்கு அவர்கள் என்ன நடந்தது என்று கேட்க, அவன் நடந்தவற்றை சொல்லி இருந்தான், உடனே அங்கு இருந்த மருத்துவர் இது விபத்து கேஸ், போலீஸ்சில்  தகவல் சொல்லிவிட்டிர்களா என்று கேட்க, இருவருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே கதிரின் நன்பன் இது விபத்து எல்லாம் இல்லை. வண்டியில் இருவரும் போகும் போது எதிர்பாராமல் வண்டி வேலியில் மேதிவிட்டது என்றும், இவள் மயங்கிவிட்டாள் என்றும், கதிர் அவளின் மாமா தான் என்றும் கூறியவன், ஏதும் பிரச்சனை வரதாது நாங்கள் பார்த்துக்கொள்ளிகிறோம். என்று கூறினர். ஆனால் மருத்துவர் புரிந்துக்கொண்டதோ, வண்டியில் பயனித்த இருவர், கதிர் மற்றும் அழகி என்று நினைத்துக்கொண்டார். மேலும் அவளை சோதித்து பார்த்தில் அடி ஏதும் இல்லை. அவள் அடையாளங்களை வைத்து பார்த்த போது புதியதாக திருமணம் முடித்தவர்கள் போல் இருந்து. 

அவளுக்கு மயக்கம் கூட தூக்கமின்மை மற்றும் சாப்பிடாமல் இருந்தால், திடீர் என்று ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம் தான் என்பதால், அவரும் அதை அப்படியே விட்டுவிட்டார்.

இருவரிடத்திலும் அவள் நிலையை கூறி மயக்கம் தெளிய மருந்து கொடுத்து இருப்பதாகவும், இப்போதைக்கு டிரிப்ஸ் போட்டு இருப்பதால் முடிந்ததும் கிளம்பலாம் என்றும் கூறினார். 

கதிருக்கு இப்போது இருக்கும் சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியவில்லை.  அவன் நன்பனும் கூட இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இருவரும் செய்வது அறியாது அமர்ந்துவிட, நேரம் நன்பகலை கடந்தும் அழகி இன்னும் கண்விழிக்கவில்லை. அங்கு இருந்த செவிலியர் அவர்கள் இருவரையும் பார்த்து நீங்கள் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள், பேஷன்ட் கண் விழிக்க இன்னும் நேரம் எடுக்கும் என்று கூறினார். 

அவர்களுக்கும் பசி எடுக்கவே, இருவரும் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட அமர்ந்தனர். அவர்களும் காலையில் இருந்து அலைந்துக்கொண்டு இருந்ததில் நல்ல பசியில் இருந்தனர், அதனால் எதை பற்றும் யோசிக்கும் நிலையில் இல்லை.

இவர்கள் சென்று அரை மணி நேரம் கழித்து கண்விழித்தவள், மெல்ல தான் இருக்கும் இடம் மருத்துவமனை என்பதை உணர்ந்து அருகில் யாரும் இல்லாது இருப்பதை பார்த்து, அந்த அறையை பார்த்துக்கொண்டு இருந்தால், அந்த நேரத்தில் அங்கு வந்த செவிலியர் அவளை பார்த்து என்னமா கண் விழிசிட்டியா? இப்போ எப்படி இருக்க? எங்காவது வலி இருக்கா? என்று அவளிடம் கேள்ளவிகள் கேட்ட வண்ணம் இருக்க.

அவளோ இல்லை, நான் நல்லா இருக்கேன், தலைவலிக்குது, என்னை யார் இங்க கூட்டி வந்தாங்க என்றாள்………… அவளே காலையில் அவள் இங்கு அட்மிட் ஆகும் போது, கதிர் அவளின் மாமா என்று சென்னதை வைத்து. உன்னோட மாமா தான் உன்னை சேர்த்தார். (காலையில் நீங்கள் வண்டியில் போகும் போது வண்டி வேலியில் மோதி நீ மயக்கமாகிட்ட சொன்னார் என்றாள். அவள் புரிந்துக்கொண்டது அழகியும் கதிரும் வண்டியில் வரும்போது வண்டி மோதியதாக!!!!!!! ஆனால் அழகி புரிந்துக்கொண்டது, அன்பு தான் அவளை இங்கு அட்மிட்செய்த்தாக) அதை கேட்டவள் ஓ….. சரி என்றவள், எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு என்றாள். அவங்க எங்கே?

இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தாங்க, இப்போ 10 நிமிடம் முன்னாடி தான் சாப்பிட போனாங்க என்றாள் அவள். சொல்லவிட்டு மருத்துவரை அழைக்க சென்றாள். மருத்துவர் வந்து பார்த்தவர் அவளை பரிசோதித்தார். வேறு எங்காவது வலி இருக்கிறதா என்று கேட்டவர், அவளுக்கு இப்போதைக்கு டிரிப்சை கண்டினியூ பன்னுங்க, நைட்டுக்கு கஞ்சி மாதிரி ஏதாவது கொடுக்கலாம் என்றவர், நீங்க சரியா தூங்காம இருந்தாலும், காலையில் இருந்து ஏதும் சாப்பிடாமல் இருப்பதாலும் கேஸட்ரிக் ஆகி இருக்கு அதான் தலைவலி இப்போதைக்கு டிரிப் ஸ் கண்டினியூ பன்னிக்கலாம், அதில் உங்களுக்கு கேஸட்ரிக்கான மருந்தும் போடுவாங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க, நான் நைட் பாக்கிறேன் என்றவர் கிளம்மிவிட்டார்.

பசி மயக்கத்திலும், வலியிலும் இருந்தவள், மருந்து போடபட்ட கொஞ்ச நேரத்தில் மீண்டும் உறங்கிவிட, அவர்கள் உண்டு விட்டு வரும் போது அழகி மீண்டும் உறங்கி இருந்தாள்.

வந்தவர்களை அழைத்த செவிலியர், எல்லாவற்றையும் சொல்லி  மருத்துவரை பார்க்க சொல்ல,  மருந்துவரை பார்க்க வந்தார்கள், அவர் ஏதும் கவலை படும்படி இல்லை என்றும், ஆனால் தலைவலி என்று சொல்லுவதால், நீங்கள் விருப்பட்டால் ஒரு சிடி எடுத்து பார்க்கலாம் என்றார், அவர்களும் சரி என்று சொல்லிவிட, நாளை காலையில் தான் அருகில் இருக்கும் ஸ்கேன் சென்டரில் எடுக்க முடியும் என்றும், இரவு இங்கு இருக்கட்டும் என்றும், நாளை ரிப்போட் எல்லாம் பார்த்துவிட்டு, டிஸ்சார்ஜ் செய்வதாக மருத்தவர் சொல்லிவிட, இருவரும் சரி என்று சொல்லிவிட்டு வந்துவிட்டனர்.

இப்போது தான் இருவருக்கும் நிம்மதியாக இருக்க, அடுத்து என் என்று யோசிக்க ஆரம்பித்தனர். கதரின் அலைபேசி எப்போதே சார்ஜ் இல்லாமல் அனைந்து  போய் இருக்க, கதிரின் நன்பன் நடந்த நிகழ்வுகளில் தன் அலைபேசி அழப்புகளை தவிர்த்து இருந்தான், இப்போது தான் ஊரில் இருப்பவனுக்கு அலைபேசியில் அழைக்க, எடுத்தவனோ சொன்ன செய்தியில் அவன் நிலைகுலைந்து போனான். நடக்க போகும் விபரிதம் அறியாமல் உறங்கிக்கொண்டு இருந்தனர் அழகியும், கதிரும்……………………….

    

தொடரும்……………. 

Advertisement