Advertisement

அத்தியாயம் – 13

இரவு நிலவு மகள் தன் பணியை முடித்துக்கொண்டு புறபட்டுவிட, ஆதவன் அந்த காலை வேளையில் தன் பணியை செய்ய வந்து இருந்தான். இந்த உதயம்  யாருக்கு எல்லாம் வெளிச்சத்தையும், யார் வாழ்வில் எல்லாம் இளுனையும் கொண்டு வரும் என்று  பார்கலாம்.

இருவரின் அகம் பேசிக்கொண்டதோ இல்லையோ அவர்களின் புற தேடல்கள் முடிந்து, அந்த அதிகாலை வேளையில் நல்ல உறக்கத்தில் இருந்தவர்கள், அலைபேசி அழைப்பில் எழுந்தார்கள், முதலில் உறக்கத்தில் இருந்து எழுந்தவள், அழகி தான் எழுந்தவள், கண்களை கசக்கிக்கொண்டு, மேஜை அருகில் இருந்த அலைபேசியை எடுத்து பார்த்தாள், ரத்தினம் தான் வீட்டு எண்ணில் இருந்து அழைத்து இருந்தார். அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் பேசும் முன், அந்த பக்கம் ரத்தினம் பேச ஆரம்பித்து இருந்தார்.

என் கண்ணு எழுந்துட்டியா, அன்பு என்ன பன்றான், என்று கேட்டவர் அவள் பதில் சொல்லும் முன், காலையில் இரண்டு பேரும் கோவிலுக்கு போகனும் ம்மா, அது தான் எழுப்பிவிட்டேன். இரண்டு பேரும் சீக்கரம் எழும்பி குளித்து வாங்க. அப்புறம் வந்து கூட சத்த நேரம் தூங்கிக்கோங்க என்றவர், இனைப்பை துண்டித்துவிட்டார்.

என்ன தான் அவர் நினைத்தது போல் திருமணம் முடித்துவிட்டாலும், இருவரும் சந்தோஷமாக தங்கள் வாழ்வை வாழ வேண்டும் என்று மனதில் வேண்டாத தெய்வம் இல்லை. இன்று காலை முதலே எழுந்து அவர்கள் அறையை தான் பார்த்துக்கொண்டு இருந்தார். என் இருந்தாலும், இது அவரின் அன்புவின் வாழ்க்கை, என் லாபத்துக்காக தம்பியின் வாழ்க்கை வீண்ணாகி விடுமோ என்று அச்சம் வேறு அவருக்கு இரவு எல்லாம் உறக்கம் இல்லை.

அதனால் தான் அவர்களை கோவிலுக்கு அனுப்ப வேண்டும் என்று சாக்கிட்டு போன் செய்துவிட்டார். ஆனால் என்ன கேட்பது என்று அவருக்கு தெரியவில்லை, அப்படியே கேட்டாலும், பதில் எதிர் மறையாக இருந்தால் என்ன செய்வது என்று மனதின் சஞ்சலங்கள் அவருக்கு, அதனால் தான் பேசி வைத்துவிட்டார். இப்போது சமையல் அறையில் இருந்து அவர்கள் அறையை தான் பார்த்துக்கொண்டு இருந்தார். அவர் பயந்தது போல் இல்லாமல், இருவரும் குளி்த்து கிளம்பி மலர்ந்த முகத்துடன் அறையைவிட்டு  வெளிவந்தனர். அதை பார்த்த பின் தான் அவர் மனது ஆசுவாசம் கொண்டது. இவர்களை பார்த்துவிட்டு இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தவர். இருவரையும் கோவிலுக்கு சென்று வர சொன்னார். இவ்வளவு சீக்கரமாகவா? என்றான் அன்பு.

ஆமா தம்பி, கல்யாணம் முடிந்து முத நாள் கோவிலுக்கு போயட்டு வரணும், நம்ம அவசரத்துக்கு கல்யாணத்தை கோவிலில் சுருக்கா முடிச்சுட்டோம். இன்னிக்கு ராவுக்கு உங்களுக்கு வரவேற்றபு இருக்கு, இந்த விஷேசத்திக்கு எல்லா சொந்த பந்தமும் வருவாங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வர ஆரம்பித்து விடுவார்கள். அதுக்கு அப்புறம் எல்லோரும் இருக்க புறப்பட்டு போன நல்லா இருக்காது, அது போக ஒருத்தர் கண்ணு போல் இன்னோறுத்தர் கண்ணு இருக்காது. அதான் இப்பவே போய் வந்துவிடுங்கள். வந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் வேன தூங்குங்க என்று நீளமாக பேசி முடித்து இருந்தார்.

அவர்கள் அறையில் இருந்து வந்த தோனிய அவருக்கு நல்ல விதமாக பட்டு இருக்க, அவருக்கு இருந்த கலக்கமும் போய் இருந்து, அதனால் அவர்களை உடனே கோவலுக்கு போய் வர சொன்னார். சரி என்றவர்கள், காபியை அருந்திவிட்டு, கதிரழகி பூஜை அறைக்கு சென்று சாமிக்கும் தாய் படத்திற்க்கும் விளக்கு ஏற்றியவள், கோவிலுக்கு தேவையானவற்றுடன் அந்த இருள் பிரியாத காலை வேளையில் அன்புவின் இருசக்கர வாகனத்தில் கிளம்பி இருந்தனர்.

…………………

இவர்கள் கிளம்பியதும் கதிரின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது, இவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்று, கதிரும் எழுந்தவன், பன்னைவீட்டின் பின் புறத்தில் இருந்த தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். இவர்கள் தோப்பை தாண்டி தான் கோவிலுக்கு சொல்ல வேண்டும், அவர்களுக்காக இவன் இவர்களின் தோப்பு வாசலில் காத்து இருந்தான். மனதில் எரிமலை வெடித்தாலும்,  முகத்தில் ஏதும் காட்டாமல் இருந்தான். அன்று மாலை அவன் பேசிக்கொண்டு இருக்கும் போது யாரோ பின் மண்டையில் அடித்தது தான் அவனுக்கு ஞாபகம் இருந்தது, அதன் பின் அவன் விழிக்கும் போது கை, கால்கள் கட்டபட்டு ஒரு இருட்டு அறையில் இருப்பது தெரிந்தாலும், அது எந்த இடம் என்று அவனுக்கு புலப்பலவில்லை, அந்த அளவிற்க்கு அவனுக்கு நினைவு இல்லை, உடலில் தெம்பும் இல்லை. இந்த இரண்டு நாட்களில் அவன் விழிக்கும் போது திரவ  உணவுகள் தான் அவனுக்கு கொடுக்கப்பட்டது, அதில் கனேசன் பணங்களை கலந்து கொடுக்க சொல்லி  இருக்க அதுவும் கூட அவனை ஒரு கிறக்கித்திலேயே வைத்து இருந்து. முதல் நாள் அவனுக்கு ஒன்று புரியவில்லை என்றாலும் அடுத்த நாள் இதை செய்தது தன் மாமா கனேசன் தான் என்பதில் அவன் கொதித்து போனான். அவரா இப்படி, என்னை தூக்கி வளர்த்த அவளால் எப்படி  இப்படி ஒரு செயலை செய்ய முடிந்தது, இதில் இந்த அன்பு பயலும் கூட்டு போல, ஏன் என்றால் கனேசன் இவனை இங்கு வைத்து இருப்பது தெரிந்து அன்புவும், அவனை அடிக்கடி வந்து பார்த்து சொல்வான். 

அப்படி அவன் வரும் போது தன் நன்பன் ஒருவனுக்கு அழைப்பு எடுத்து பேசி, இவனை இங்கு அடைத்து வைத்து இருப்பது பற்றி கூறி திருமணம் வரை எந்த தடங்களும் வர கூடாது, இவன் மீது ஒரு பார்வை வைத்துக்கொள் என்று பேசி இருந்தான். அதை அரை மயக்கத்தில் இருந்த கதிரும் கேட்டு இருக்க, இருவரும் சேர்ந்து தான் தன்னை கடத்தி இருக்கிறா்கள் என்று நினைத்துக்கொண்டான்.

இதை எல்லாம் நினைத்து பார்த்தவன் மனம் கொதித்துக்கொண்டு இருந்தது இவர்களின் துரோகத்தில், இரவு அவனுக்கு நள்ளிரவுக்கு மேல் தான் நினைவே வந்து, அதன் பின் அவனுக்கு தலை பாரமாக இருக்கவே தன்னை நிதான படுத்தவே அவனுன்கு  2 மணி நேரம் ஆனது, அதன் பின் தன் நன்பனுக்கு அழைத்தவனுக்கு, திருமணம் காலையில் முடிந்துவிட்டது என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் தான் இருக்கம் இடம் கூறி, தலைவலிக்கு மருந்து வாங்கி வர சொல்லியவன், தன் முன் இருந்த உணவை அருந்தி இருந்தான், அவன் நன்பனும் வந்துவிட, மருந்தை எடுத்துக்கொண்டவன், நடந்தது அத்தனையும் அவனிடம் கூறியிருக்க, கேட்டவனுக்கும் கொலை வெறி தான்.

இந்த இரண்டு நாளா அழகி உன்னைய பத்தி தான் கேட்டுகிட்டு இருந்தது. கல்யாணத்தன்னிக்கு மன மேடை போறப்ப கூட என்னையை கூப்பிட்டு நீ வந்துட்டியான்னு தான் கேட்டுச்சு, அது முகத்தில் சந்தோஷமோ இல்லை தெரியுமா? உங்கள் பக்கத்து சொந்தங்கள் கூட யாரும் பெருசா வரல. நானும் கூட உன் மாமன் கிட்ட கேட்ட போது நீ கோச்சிகிட்டு எங்கயோ போய்யிட்ட சொல்லிட்டார் டா………..

என்றவன் அடுத்து கதிர் முகம் பார்தான் என்ன செய்யலாம் என்று. கதிர் இந்த கல்யாணத்தில் அழகிக்கு சுத்தமா விருப்பம் இல்லை. இத்தனை வருஷமா புள்ளை போல வளர்த்த என்னையோ இப்படி அடைச்சி வைச்சு இந்த கல்யாணத்தை நடத்தி இருக்காங்கனா, நாளைக்கு இவங்க அழகிக்கு என்ன வேனா செய்வங்க. 

இவங்களை இப்படியே விட கூடாதுடா என்றான் கோவமாக. சரி சொல்லு மாப்பள என்ன பன்னும் என்றான். அந்த நேரத்தில் தான் அவன் மற்றோர் நன்பனிடம் இருந்து அவர்கள் கோவிலுக்கு கிளம்பிவிட்டதாக அவனுக்கு அலைபேசியில் தகவல் வந்தது. அவர்களுக்காக அவன் அவர்களின் தோப்பு அருகில் காத்து இருக்க, அந்த நேரத்தில் கதிரழகியும், அன்புவும் இருசக்கர வாகனத்தில் பேசியபடி வந்துக்கொண்டு இருந்தனர். முதலில் அன்பு தான் கதிர் அங்கு நிற்பதை பார்த்தான். அவனை அவன் இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை நேற்று இரவு அவனை வெளிய விட்டதை பற்றி அறியாத அன்பு சட்டென்று தடுமாறி போனான். 

கதிரழகியும் அவன் உடன் இருக்க இப்போது, இவன் ஏதாவது பேசிவைத்தால் இந்த இதமான சூழ்நிலையை அவன் கெடுக்கவிரும்வில்லை, எனவே  யோசித்தவன், அவனை கானாது போல் திரும்பிக்கொண்டு, அழகியுடன் பேசியபடி அந்த இடத்தில் இருந்து போனால் போதும் என்ற எண்ணத்தில் வண்டியின் வேகத்தை அதிக படுத்தி இருந்தான்.

கதிரழகி இவனுடன் பேசிபடி வந்தவள் கதிரை முதலில் கவணிக்கவில்லை. இவனை பார்த்ததும் அன்பு வண்டியின் வேகத்தை அதிகபடுத்தவும், கதிர் அழகியை அழைத்தான். முதலில் அவன் அழைத்தது பேச்சு சுவாரசியத்தில் அவளுக்கு  கேட்டவில்லை என்றாலும், பின் அதை கவணித்தவள். மாமா கதிர் மாமா அங்க நிக்கிறார் வண்டியை நிறுத்துங்க என்று  அவனிடம் கூற இவன் வேகம் இன்னும் அதிகமாகியது. அதை கவனித்த கதிர் தன் வண்டியில் இவர்களை பின் தொடர, அன்பு சட்டென்று வேகத்தை கூட்டவும் அவனால் அந்த சாலையில் வண்டியை சமநிலை படுத்த முடியாமல் வேலி மேல் வண்டியை மோதி இருந்தான்.

என்ன நடந்து என்று உணரும் முன் இவை எல்லாம் நடந்து இருக்க, சட்டென்று ஏற்பட்ட அதிர்வில், கதிரழகி மயக்கம் அடைந்து இருக்க. அன்பழகன் கிழே விழுந்து அவன் கால் மேல் வண்டி விழுந்து இருந்து, அவன் நினைவில் இருந்தாலும், அவனால் உடனடியாக எழுந்திரிக்க முடியவில்லை.

Advertisement