Advertisement

அத்தியாயம் – 12

யோசித்த படியோ இவள் வெகு தூரம் நடந்து  இருந்தாள், அவளுக்கு மனதில் அழுத்தம். எப்படி இப்படி திருமணம் என்று திடீரயென  ஏற்கொள்ள முடியும், இவர்கள் சொல்வது போல் என்னால் அப்புறம் என்னை படிக்க வைப்பார்களா? என்ற கேள்விகள் மனதில் அழுத்த, இதை யாரிடம் பேசுவது என்று நினைவுடன் நடந்துக்கொண்டு இருந்தாள். அப்படியே அவர்கள் தோட்டத்திற்க்கு வந்து இருந்தாள்,  அவள் எதிரில் நின்று இருந்தான் கதிர்வேலன். அழகி அவனை பார்த்து மாமா என்றவள் கண்களில் கண்ணீர் துளிகள். சிறு வயது முதல் அவளை வளர்த்தவன், அவளின் எல்லாற்றிலும் உடன் இருந்தவன், இந்த நேரத்திலும் அவன் தோள் சாய்ந்துவிட்டாள், கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துக்கொண்டு இருந்து, என்ன டா? மா ஏன் இப்படி அழற, என்றவனுக்கு காரணம் தெரிந்தும் அவள் வாய் மொழிக்கேட்க வேண்டும் என்று நினைத்தான். இந்த பாட்டி தான் இப்படி சொல்லுச்சுனா, அப்பாவும் கல்யாணம் பன்னிக்க சொல்லூறார் மாமா என்றவள்.

இப்படி தான் அப்பாவையும் கல்யாணம் கட்டிக்க சொல்லுச்சு போல என்றாள் மேலும் மன அழுத்தம் தாளாமல், ஆம் கனேசன் ரத்தினத்தை திருமணம் செய்ய வேண்டும் என்று அவர் இப்படி தான் சாப்பிடாமல் இருந்து திருமணத்தை முடித்து வைத்தார். இப்போது அது அவள் மனதில் வந்து போக எங்கே தனக்கும் அப்படி செய்துவிடுவார்களோ என்பது தான் அவளின் கவலையாக இருந்து. 

நீ கவலை படதே அழகி மாமாவே மீறி இந்த கல்யாணம் எப்படி நடக்குதுனு பார்க்கிறேன். மாமா இருக்கிறேன் உனக்கு, உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்வேன் என்றவன் அவள் தலையை ஆறுதலாக தடவிக்கொடுத்தான். ஆனால் அப்போதும் கதிர் அவளை தன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கவில்லை, அவளுக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதை அவன் அறியாமல் போனது தான் விதியின் செயல்……….

சரி என்று தலையாட்டியவள், சிறுது நேரம் அங்கு இருந்துவிட்டு புறபட்டுவிட்டாள்.

இவள் வீட்டைவிட்டு அழுதுக்கொண்டே போவதை பார்த்த அன்பழகன் அவளை பின் தொடந்து வர, அவள் பேசியது அனைத்தும் கேட்டு இருந்தவன் மனதில் இப்போது இந்த திருமனத்தை எப்படியாவது நடத்தி ஆக வேண்டும் என்ற எண்ணம் வேர் பிடிக்க தொடங்கி இருந்தது. 

அங்கு ஏற்கனவே இருந்த கனேசனுக்கு இவர்கள் பேசியது கேட்டதும், மனம் சமநிலையை இழந்து இருந்து. என் மகள் என்னைவிட்டு அவனிடம் ஆறுதல் தேடுவதா,அதுவும் அவள் என் திருமணத்தை பற்றி அவனிடம் பேசுவதா, இவன் என்வென்றால் இந்த திருமணம் நடக்காது நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறான், இந்த திருமணச்செய்தி ஊர் முழுவதும் தெரிந்து இருந்து. போதாதகுறைக்கு காலையில் அந்த பெண்விட்டில் இருந்து அழைத்து இருந்தார்கள். உங்களை நம்பி தானே எங்கள் வீட்டுக்கு பெண்ணுக்கு பேசினோம், ஆனால் கதிர் காலையில் வந்து இந்த திருமணம் நடக்காது என்பது போல் பேசிவிட்டு சென்றதாக,  கூறி அவர்கள் வேறு பேசி இருக்க, இப்போது இந்த திருமணம் நின்றுவிட்டாள். தன் பெண் நிலை எண்ணவாகும் என்று கவலை அவர் மனதில், என்ன நடந்தாலும் இந்த கல்யாணம் நடந்தே தீரும் என்று அவரும் மனதில் என்னிக்கொள்ள……………..

அடுத்த 3 நாட்களில் திருமண வேலைகள், வேகமாக நடந்துக்கொண்டு இருந்து, விடிந்தால் திருமணம் என்ற நிலையில், தன் அறையில் கவலையில் அழுத் கரைந்து இருந்தால் நந்தினி, அவள் அவ்வளவு சொல்லியும் , அழகி திருமணத்தை நிறுத்த வில்லை என்ற கோவம் அவளுக்கு. அடுத்த நாள் அவள் அழகியை சந்தித்து பேச, அழகியே எப்படியும் இந்த கல்யாணத்தை கதிர் மாமா நிறுத்திவிடுவார், அன்புவிடம் பேசியதை வைத்து அவர் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. இவள் இப்படியே இருந்தாள் எதிர் காலத்தை வீண் அடித்துவிடுவாள் என்று எண்ணியவள், இங்கே பார் நந்தினி, நீ நினைப்பது போல் ஏதும் இல்லை, அப்படி இருந்தால் அன்பு மாமாவே இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பார், நீயே மனதில் எதையாவது நினைத்துக்கொண்டு, உன் படிப்பை கெடுத்துக்கொள்ளாதே, இதை பற்றி இனிமேல் என்னிடம் பேசினால் நான் உன் அம்மா, அப்பாவிடம் பேச வேண்டி இருக்கும் என்றவள் சொல்லிவிட, அன்பு சென்னது போல், அவர் கட்டாயத்தின் பேரில் தான் இந்த கல்யாணத்தை செய்துக்கொள்கிறார் என்று நினைத்தவள், மேலும் என்ன செய்து என்று தெரியாமல், தன் கோவத்தை எல்லாம் அழகி மேல் வளர்த்துக்கொண்டள்.

கதிரிடம் பேசிவிட்டு வந்த அடுத்த நாள் கதிர் அவளை கேவிலில் பார்த்து, திருமணத்துக்கு முன் வந்து அவளை அழைத்து செல்வதாக சொல்லிவிட்டு சென்றவன். அதற்கு பின் அவள் கண்ணில் படவே இல்லை. எப்படியும் திருமணம் நின்றுவிடும் என்று எண்ணி இருந்தவள் மனதில் விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மனதில் பயம் எழ ஆரம்பித்து. என்ன செய்வது என்று தெரியவில்லை. தந்தை வேறு அவளையே கண்காணித்த வண்ணம் இருக்க, அவளால் கதிருக்கு அழக்க கூட முடியவில்லை. ஏதும் தோன்றாமல், தன் அம்மாவின் படத்தின் அருகில் அமர்ந்து இருந்தால். எல்லாம் தன் கைவிட்டு போன உணர்வு, இனி என்ன வேண்டும் மானாலும் நடக்கட்டும் என்று நிலைக்கு வந்து இருந்தாள்.

என்ன அழகி இங்கயே உறங்கிட்டியா மணி   4 ஆச்சு சீக்கரம் குளித்து கிளம்பு மா கோவிலுக்கு போகனும் என்றவர் மற்றவர்களை பார்க்க சென்றுவிட, ஓரு பெரு மூச்சுடன் எழுந்தவள், குளிக்க சென்றாள், குளித்துவந்தவளை, அலங்கரித்தனர், அவள் அம்மாவின் நகைகளை எல்லாம் போட்டவிட்டவர்கள், அவளை தாயர் செய்ய, கனேசன் வந்து மகளை பார்த்த போது அவர் கண்களில் கண்ணீர் தூளிகள், மகளை குழந்தையாக கைகளில் ஏந்திய நினைவுகள் அவருள்.

இது எதுவுமே அவளை பாதிக்கவில்லை, கதிர் ஏன் இன்னும் வரவில்லை, அவனுக்கு என்னவாயிற்று, என்பதே அவள் மனதில் ஒடிக்கொண்டு இருக்க, இப்படியே நேரம் கடந்து இருக்க, கனேசன்  தான் அவன் தன்னிடம் சன்டையிட்டு வெளியைர் சென்றுவிட்டதாக சொந்தங்கள் மத்தியில் சொல்லி இருந்தார். அதனால் வந்தவர்கள் யாரும் கூட கதிரை பற்றி ஏதும் பேசவில்லை.   எல்லோரும் கோவில் நேக்கி புறபட்டு இருக்க, அவர்களின் பன்னைவீட்டில் கைகால்கள், கட்டபட்ட நிலையில் மயங்கி இருந்தான் கதிர். 

இங்கு எல்லோரும் கோவில் வந்து இருக்க, பூசாரி, அம்மன் காலடியில் வைத்து தாலியை எடுத்துக்கொடுக்க, எல்லோர் ஆசியுடன் அதை அழகி கழுத்தில் கட்டினான் அன்பழகன். அது வரை அவன் மனதில் ஆயிரம் சஞ்சலங்கள், கோவங்கள்  இருந்தலும், அவள் கழுத்தில் தாலி கட்டிய அந்த நொடி, இவள் என்னவள், இவளை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்ற எண்ணமே அவன் மனதில். அவளுக்கும் அப்படியே, இது தான் தனக்கு விதிக்கபட்டது, இது ஏற்றுக்கொள்கிறேன் என்ற மனநிலைக்கு அவளும் வந்து இருந்தாள்.

திருமணம் முடிந்து, எல்லோரும் வீட்டுக்கு வந்த இருந்தனர், எல்லோர் மனதில் ஒரு ஆசுவாசம் முக்கியமாக அன்பு மற்றும் கனேசன் முகத்தில், எந்த நேரத்தில் கதிர் வந்து பிரச்சனை செய்துவிடுவானோ என்று பயம் இருவருக்கும் இருந்து. அப்படி ஏதும் இல்லாமல் எல்லாம் நல்ல படியாக முடிய நிம்மதி அவர்கள் முகத்தில். பார்வதி பாட்டியும் கூட சற்று தெம்பாகவே அமர்ந்து இருந்தார்.

அகிலன், முகிலன் இருவருக்கும் கொண்டாட்டம் தான், ரத்தினத்திற்க்கும் ஏதோ இன்று தான் இந்த வீட்டின் முழு உரிமையும் அவருக்கு கிடைத்துபோல் பூரித்து இருந்தார். எல்லாம் நல்ல படியாக முடிந்து சொந்தங்கள் விருந்து உண்டு கிளம்பி இருக்க, வந்தவர்கள் எல்லோரும் பரவாயில்லை கல்யாணம் முடிந்தும் இந்த வீட்டிலேயே இருப்ப, எந்த பிரச்சனையும் இல்லை, எங்கள மாதிரியா பிறந்தவீட்டுக்கும், புகுந்தவீட்டிக்கும் கிடந்து அல்லாட வேண்டாம் என்று பேசிய படி இருக்க, அழகி மனதில் கூட ஒரு நிம்மதி உணர்வு தான். நெருங்கியவர்கள் மட்டும் இருந்தனர் வீட்டில், இரவு சடங்கிற்க்கு நேரம் குறித்து இருக்க, மணமக்கள் இருவரையும் ஒய்வு எடுக்க அனுப்பிவிட்டு, கனேசன் பன்னைவீட்டை நேக்கி சென்றார். அங்கு காவலுக்கு இருதவனை பார்த்து தலை அசைத்தவர். உள்ளே செல்ல, அங்கு கதி்ர் இ்ன்னும் மயக்கத்தில் தான் இருந்தான். அவருக்கு மனதில் ஏதோ பிசைந்து, நானே இவனிடம் இப்படி நடந்துக்கொண்டேனே?  என்று ஒரு மனது நினைத்தாலும், நான் இப்படி செய்யவில்லை என்றால் இன்று ஊர் முன்னால் என்னால் தலை நிமிர்ந்து நடக்க முடியாமல் செய்து இருப்பான்.  என்று நினைத்தவர், அவன் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, அவனுக்கு தேவையானவற்றை அங்கு வைத்துவிட்டு, அவன் அலைபேசியையும் அருகில் வைத்தவர்,  அறையை பூட்டாமல், அங்கு இருந்து கிளம்பிவிட்டார். காவலுக்கு இருந்தவனையும், கிளம்ப  சொல்லி இருந்தார். இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று அவனையும் மிரட்டி இருந்தார்.

ஆம் அன்று அவன் கடைசியாக கதிரழகியை பார்த்துவிட்டு வந்து க்கொண்டு இருந்தவன், பக்கத்து ஊரில் இருக்கும் அவன் நன்பனுக்கு அழைத்து அவளை அன்று மாலையயே அழைத்து சொல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்க. கனேசன் முடிவு செய்துவிட்டார், இவன் இருந்தால் நிச்சயம் பிரச்சனை தான் என்று அதனால் அவன் தனியாக தோட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போது தன் ஆட்களை வைத்து, அவனை பின் இருந்து தாக்கி, பன்னைவீட்டில் கட்டிவைத்துவிட்டார். 

கனேசனை போல் அன்புவும் கதிரை பின் தொடர்ந்துக்கொண்டு தான் இருந்தான், அவனுக்கு கனேசன் அவனை கட்டி வைத்து இருந்தது எல்லாம் தெரியும் தான். அவனும் நடப்பவற்றை எல்லாம் கவணித்துக்கொண்டு இருந்தானே தவிர எதிலும் தலையிடவில்லை. ஆனால் கதிரின் நன்பர்கள் அவனை கானது தேட, போலீஸ் போகலாம் என்று முடிவு எடுத்தது, அதை செயல் படுத்தும் முன் அதை கனேசனுக்கு தெரியபடுத்தி இருந்தான். அவன் நேரடியாக எதிலும் இறங்கவில்லை. ஆனால் திருமணத்திற்க்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொண்டான்.

இப்படியாக கதிரின் தலையிடு இல்லாமல் திருமணம் முடிந்து இருந்து. அன்று மாலை வந்து இருந்த பெண்கள் கதிரழகியை மீண்டும் குளித்து வர செய்து இரவுக்கு அவளை தயார் செய்தனர். அவளுக்கு இப்போது மனதில் பயபந்து உருள தொடங்கியது காலையில் இருந்து திடம் இப்போது இல்லை. என்னவாகும் மோ என்ற பயம் அவளை படுத்த தொடங்கியது. எப்படியாவது அன்புவிடம் படிப்பை பற்றி பேசி அதை தொட்டர வேண்டும் என்ற எண்ணம் அவளுள் ஒடிக்கொண்டு இருந்து.

இரவு உணவு முடிந்து இருவரும் அறைக்கு அனுப்பிவைக்க பட்டனர். இருவருக்கும் முதல் தனிமை, இதயத்தின் ஒசை அவளுக்கு வெளியே கேட்டது, மொதுவாக அன்புவிடம் வந்தவள் அருகில் அமர்ந்தாள், இருவரும் சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க.

அழகியே முதலில் ஆரம்பித்தால், அது………… வந்து ……………. நான் என்று ஆராம்பித்தவள், முகத்தையே பார்த்து இருந்தான் அன்பு, இவள் இந்த திருமணத்தில் வருப்பம் இல்லை என்று சொல்லி விடுவாளோ, கதிரை தான் பிடித்து இருக்கிறது என்று சொல்லிவிட்டால் என்ன செய்தவது, என்ற எண்ணத்துன்டன் அவள் முகத்தையே பார்த்து இருந்தான் அன்பு.

ஓரு வழியாக தன்னை தோற்றி, நான் படிக்கனும் என்றாள் மெதுவாக, என்ன என்று புருவம் சுருக்கினான் அன்பு, அது தான், நான் காலோஜ் படிச்சு முடிக்கனும், படிப்பை நிறுத்த மாட்டேன் என்றாள். என்னவோ ஏதோ என்று இருந்தவனுக்கு, அவளின் இந்த வார்த்தைகள், ஒரு ஆசுவாசத்தை கொடுத்து. சரி என்று தலையாட்டினான். அவளுக்கும் இப்போது சற்று மூச்சுவிட முடிந்தது. சற்று தளர்வாக அமர்ந்தாள். 

உனக்கு இந்த கல்யாணம் பிடித்து இருக்கா? என்று கேட்டுவிட்டவன் அதன் பின்னே அதில் இருக்கும் அபத்தம் புரிந்து ஏன் இப்படி கேட்டோம் என்று நினைத்து இருந்தான். ஆனால் இதை கேட்டவள் முகத்தில் புன்னகையே ரொம்ப சீக்கரம் கேட்டிங்க என்றாள் சிரித்த படி. அவள் சிரிப்பில் இவனும் இளகுவாக, பின் இருவரும் சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர். இருவரும் இப்போது தான் இவ்வளவு பேசி இருக்கிறார்கள், அவன் அவளை முதலில் குழந்தையாக பார்த்து, அவள் அவனை பற்றி பயந்தது என்று அவர்கள் பேச்சு நீண்டுக்கொண்டே இருந்து. அப்போது அவள் சட்டென்று கதிர் மாமாவை இரண்டு நாளா பார்க்கவில்லை? என்று சொன்னதும்….. அவன் அமைதியாகிவிட, அவள் அதை கவணிக்காமல் பேசிக்கொண்டு இருந்தாள். நீங்க கேட்ட மாதிரி இந்த கல்யாணத்தில் எணக்கு முதலில் பெருச விருப்பம் இல்லை, இன்னும் கேட்ட இந்த கல்யாணம் நடக்காதுனு தான் நினைத்தேன். ஆனால் எல்லாம் மாறிவிட்டது. இப்போது நான் இங்க இருக்கேன் என்று தன் போக்கில் பேசிக்கொண்டு இருந்தவள், அவனிடம் இருந்து பதில் இல்லை என்றதும் நிமிர்ந்து பார்த்தாள், அப்போது தான் தான் சொன்ன வற்றை யோசித்தவள், தலையில் அடித்துக்கொண்டாள், அவன் கேட்ட கேள்ளவி எவ்வளவு அபத்தமோ, அதைவிட முட்டாள் தனம் தான் பேசியது என்று புரிந்தது. 

சரி தூங்கலாம்மா எனக்கு தூக்கம் வருகிறது என்றாள் நகைகளை கழற்றியபடியே!!! அதுவரை அமைதியாக இருந்தவன், சட்டென்று தன் முகத்தை மாற்றிக்கொண்டு. எனக்கு என்ன வயசு தெரியும்மா? என்றான் அவளிடம்…………. இவன் என்ன கேட்கிறான் என்பது போல் அவனை பார்த்தாள் அழகி…… ம்மம்மம்மம்மம்மம 29 என்றான் அவன், என்ன இவனுக்கும் எனக்கும் 10 வருடம் இடைவெளியா என்று நினைத்தாலும், அதை முகத்தில் கான்பிக்கவில்லை அவள். நீயோ படிக்கனும் சொல்லுற, நீ படிச்சு முடித்து நம்ம வாழ ஆரம்பிக்கும் போது எனக்கு 35 ஆகிடும் போல என்றான் அவன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே, அவள் முகம் சிவந்துவிட்டு இருந்தது என்ன இவன் இப்படி பேசுகிறான் என்று. எப்படியும் நீ, நான்  இங்க தான் இருக்க போறோம், உன் படிப்புக்கு நான் கேரண்டி, ஆனா அதுக்காக எல்லாம் என்னால் காத்து இருக்க முடியாது என்றவன் மெதுவாக அவள் கைப்பற்ற, அவளுக்கு வேர்த்து வடிந்தது. 

அது…… வது……… இல்லை என்று அவள் மறுப்புகள் ஏதும் அவனிடம் எடுபடவில்லை. மொல்ல அவளை தன் வசம் கொண்டு வந்தவன். அவளை தன்னவள் ஆக்கிய விட்டான். அவளும் அவனுடன் இசைந்து, இனைந்து அந்த பந்தத்தில் முழுமனதாக தான் கலந்தாள்.

இருவருக்கும் இந்த இனிய இல்லறம் தொடங்கிய இன்று கடைசியாகவும் இருக்கும் என்று இருவரும் அறியவில்லை.

இருவரும் கூடல்முடிந்து நள்ளிரவு தாண்டி தான் உறங்கி இருந்தனர்.  ஆனால் அப்போது அன்பழகன் அறிவில்லை அழகியின் இந்த வார்த்தைகள் தான் அவள் வாழ்க்கையை சுழற்றி அடிக்க போகிறது என்று! அழகிக்கும் தெரியவில்லை தான் சொன்ன இந்த வார்த்தைகள் தான் நாளை தனக்கு எதிராக திரும்பும் என்று! இருவரும் நாளை வருவது தெரியாமல் உறக்கத்தை தழுவி இருந்தனர்.  கதிர் மெல்ல கண்களை திறந்தான். தான் எங்கு இருக்கிறோம் என்று அவனுக்கு புரியவில்லை, தலைவலி உயிர் போனது, முதலில் தட்டு தடுமாறி எழுந்து அமர்ந்தவன், பின் இருக்கும் அறையை சுற்றி பார்த்தான். என்ன நடந்து மனதில் ஒட்டி பார்த்தான், மங்களாக சில நினைவுகள், சிலர் அவனை தூக்கி வந்து இங்கு கட்டியது போல், இடையில் யார் குரலோ அது மாமாவின் குரலா? இல்லை அன்பு வேறு யாரும்……. எல்லாம் அவனுக்கு முழுதாக ஞாபகம் வரவில்லை. அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகம் கழுவினான், தண்ணீர் குடித்தான். இப்போது சற்று தெளிவந்து இருந்தது. அவன் அருகே உணவு வைக்கபட்டு இருந்தது. எடுத்து உண்டான். இப்போது முழுதும் தெளிந்தான் தான் இருப்பது, எந்த இடம் என்று விளங்கியது. சிறிது நேரத்தில் எல்லாம் நினைவு வந்துவிட, தன்னை சமன் செய்தவன்,அருகில் இருந்த அலைபேசியை எடுத்து தன் நன்பனுக்கு அழைத்து தன் இருக்கும் இடம் கூறிவர சொன்னான். பின் ஒரு முடிவுடன் வெளியில் வந்தான்.

இனி இவன் முடிவு……………………….. அழிகியின் வாழ்வு……………….. 

  

    

தொடரும்……………. 

Advertisement