Advertisement

அன்று மதியம் கல்லூரியில் இருந்து வந்தவள், நேராக சென்று நின்றது என்னவோ அன்பழகன் முன்பு தான். அதுவரை அவர்கள் இருவரும் ஒரே விட்டில் இருந்தாலும், இப்படி நேருக்கு நேர் இருவரும் பேசிக்கொண்டு இல்லை. இன்று தன் முன்னால் வந்து நிற்கும் அவளை கண்டதும் அவன் புருவம் சுருக்க, என்ன என்பது போல் அவள் முகத்தை பார்த்தான். 

அவளை இன்று காலை தான் நந்தினி கல்லூரி போகும் வழியில் சந்தித்து இருந்தாள். முதலில் அவள் பேசிய தோரனையே ஏன் எங்கள் காதலுக்கு இடையில் வருகிறாய் என்பது போல் தான் இருந்து. மேலும் உனக்கு தான் உன் கதிர் மாமா இருக்கார் இல்லை பின்ன என்ன அவரை கல்யாணம் பன்னிக்க வேண்டியது தானே என்று அவள் பேசிக்கொண்டே போக,  அழகிக்கு அவள் பேசியதில்  தலையும், புரியாமல், வாலும் புரியாமல் என்ன சொல்ல வர நந்து யார் காதலுக்கு நான் குறுக்கே வரேன் என்றாள்.

சும்மா உனக்கு ஏதும் தெரியாது போல் பேசாதே அழகி, உனக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு, ஊருக்கே தெரியும் உனக்கு தெரியாதா? என்ற அவள் கேள்வியில் அதிர்ந்தவள், அடுத்து அவள் சொன்ன அன்புடன் திருமணம் என்றதில் இன்னுமே அதிர்ந்துவட்டாள்.

உளராதே நந்தினி, எனக்கு என் வயசு ஆகுது? இப்பதான் 1st year படிக்கிறேன்,எனக்கு எவ்வளவு கனவு இருக்கு தெரியுமா, நீ என்னனா கல்யாணம், அது இது உளறிகிட்டு இருக்க, எனக்கு மட்டும் இல்லை உனக்கும் தான். ஸ்கூல் டைம்ல தான் காதல் அது இதுனு சுத்திட்டு உளறிகிட்டு இருந்தேனு பார்த்தா,  இன்னும் அந்த பைத்தியம் உனக்கு தெளியலையா? என்றாள் கோவமாக…………. மேலும் உன் வீட்டின் நிலம தெரிந்தும் எப்படி உன்னால் இப்படி பெறுப்பு இல்லாமல் பேச முடியுது. உனகும், எனகும் இது கல்யாண வயசா………………… போய் படிக்கிற வழிய பார் இல்லை நானே இதை பத்தி வீட்டில் சொல்லிடுவேன். என்றாள்.

என்ன பைத்தியமா? நானா என்று நினைத்தவள், ஏய் என்னடி பேசிட்டு இருக்க, நான் இங்க மனசு நெந்து போய் இருக்கேன், இங்க பார் நான் மட்டும் இல்ல, அன்பும் என்னை காதலிக்கிறார். நாங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புரோம், நீ மட்டும் எங்களுக்கு குறுக்கே வராமல் இருந்தால் போதும், நீ நினைச்சா இந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாம்.ப்ளிஸ் அழகி என்று அவள் கையை பிடித்துக்கொண்டு  அழுகையில் அழகிக்கு எரிச்சல் தான் வந்து. ஏதும் பேசாமல் முறைத்தவிட்டு நகர்ந்து இருந்தாள். இவள் பேசுவதை அவள் தோழிகளும் கேட்டு இருந்தனர். என்னடி என்று கேட்க, ஒன்றும் இல்லை என்றவள் மனதில் இதுவே ஒடிக்கொண்டு இருக்க, முதல் இரு வகுப்புகளை மட்டுமே கவணித்தவள், பின் இதை அப்பாவிடம் பேசிவிட வேண்டும் என்று விடுமுறை சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து இருந்தாள். போருந்தில் வரும் போது எல்லாம் அவளுக்கு தந்தை இதை செய்து இருப்பாரா என்ற கேள்வி தான். எதையும் தன்னை கேட்டு செய்யும் தந்தை தன் திருமண விஷயத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பார் என்று அவளாள் நம்ம முடியிவில்லை. ஏதோ தவறான புரிதல் அப்பாவிடம் பேசி சரி செய்துவிடலாம் என்று நினைத்து தான் கல்லூரியில் இருந்து கிளம்பி இருந்தாள்.

ஆனால் அவள் வீட்டில் நூழையும் முன் தோட்டத்தில் அங்கு அமர்ந்து இருந்த அன்பழகனை   பார்த்தால், நந்தினி

 சொன்ன விஷயம் மனதில் வந்து போனது, இவனுக்கு என்ன படித்து நல்ல வேலையில் இருக்கிறான், அவளுக்கு என்ன வயது இப்போது தான் படிக்கவே ஆரம்பித்து இருக்கிறாள், இப்போது போய் காதல் அது இது என்று அவள் மனதில் என்ன எண்ணம்மெல்லாம் வளர்த்து வைத்து இருக்கிறான். அவள் அப்படி சொன்னாலும், அதற்கு இது வயது இல்லை என்று கூறி அவளுக்கு புரியவைக்காமல், அவளுடன் சேர்ந்து இவனுக்கும் புத்தி புல் மேய போய்விட்டதா என்று மனதில் அவனுக்கு அர்ச்சனை செய்தவள். அது பற்றி கேட்க அவன் முன் நின்று இருந்தாள் 

படிச்சு தானே இருக்கீங்க, உங்களுக்கு கொஞ்சமும் அறிவு இல்லையா…………… அவ தான் ஏதோ காதல் அது இது உளறிகிட்டு இருக்கானா, நீங்க அவளுக்கு புத்தி சொல்லாம அவ கூட சேர்ந்து என்ன பன்னிட்டு இருக்கீங்க. என்றாள் கோவமாக……………….. 

எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்திவிடும் எண்ணத்தில் இருந்தவன், வீட்டுக்குள் நுழைந்த போது கனேசன் பேசிய பேச்சை கேட்டு இருந்தான். இப்போது இவளின் இந்த பேச்சில், இவங்க குடும்பத்தில் அப்படி என்ன நாங்க தாழ்ந்து போய்ட்டோம், எல்லாம் இவங்க இஷ்டம்தானா,என்று எண்ணியவன் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான். இன்னிக்கு வந்து உனக்கும், அன்புக்கும் கல்யாணம் முடிவுபண்ணிட்டாங்கலாம், அவர் இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லை அப்படி இப்படினு உளறிட்டு இருக்கா, என்று பேசிக்கொண்டே போனவளை நிறுத்து என்பது போல் கையை காட்டியவன், ஊரில் யார் எண்ண சொன்னாலும், அதை கேட்டு வந்து என்கிட்ட எகிறுவியா? என்றான் அவளை பார்த்து, அதிர்ந்து  அவனை    பார்த்தவள், என்ன சொல்ரிங்க என்று கேட்க வந்தவள், அடுத்து  பேசும் முன் அவள் தந்தையின் குரல் உள் இருந்து கேட்க, உள்ளே சென்றாள். 

அவளுக்கு காலையில் இருந்து கேட்ட செய்திகள் எல்லாம் மனதில் அவ்வளவு குமுறல்களை இருந்தன. ஆனாலும் சட்டென்று ஏதும் கேட்க முடியாமல் அமைதி காத்தாள். ஏன்ஏற்படுத்தி என்றால் இதுவரை அவள் தந்தை அவளை கேட்காமல் ஏதும் செய்து இல்லை. அவர் இரண்டாவது திருமணம் உட்பன, அப்படி இருக்கையில் இப்படி ஒரு திருமண ஏற்பாட்டை தந்தை செயு்து இருப்பார் என்று அவளால் எண்ண முடியவில்லை.

ஆனால் அவள் நினைத்துக்கு மாறாக வரும் வெள்ளி கிழமை அவளுக்கு அவர்கள் குல தெய்வ கோவிலில் திருமணம் என்று கனேசன் சொல்ல, அதை கேட்டு அதிர்ந்தவள், அதை மறுத்து பேச வாய் எடுக்க, நீயும் ஏதாவது பேசி என் மனசை கஷ்ட படுத்தாதே, இப்பதான் கதிர் அவனாள முடிந்த மட்டும் எல்லாம் பேசிட்டு போய்டான். இந்த கல்யணம் நடக்கனும் இல்லைனா நான் இல்லைனு நினைச்சுகோ என்றவர், வேறு ஏதும் பேசவிடாமல் கிளம்பிவிட, பெண்ணவளோ இடிந்து போய் அமர்ந்துவிட்டாள்.

தான் ஒன்று நினைத்து பேசவந்து தந்தை இப்படி சொல்லிவிட்டு போவது அவளுக்கும் பெரும் மனவலியை கொடுத்து.

அப்படி அமர்ந்து இருந்தவள் அருகில் வந்த ரத்தினம், அவள் தலையை ஆறுதலாக தடவினார், அப்பா இப்படி பேசினாங்க கவலை படாதே கன்னு, நேத்து உங்க பாட்டி தான் நான் போறதுக்கு முன்னால் என் பேத்தி கல்யாணம் பார்க்கனும் உன் அப்பாகிட்ட கேட்டாங்க, உங்க அப்பாவும் அம்மாவோட கடைசி ஆசைனு ஒத்துகிட்டாங்க. ஆனா உன்னைவிட பெரியவன் கதிர் அவனுக்கு முடிக்காம, உனக்கு எப்படி முடிக்க முடியம் அதனால் அவனுக்கும் ,அவங்க வீட்டு பக்க சொந்தத்தில் ஒரு வரன் வரவும் பேசி முடிச்சுடாங்க, ஆனால் அவன் என்னைய கேட்காமல் எப்படி நீங்க இப்படி சொய்யலாம்னு இப்பதான் உங்க அப்பா கிட்ட சன்டை போட்டு போறான். அதான் அப்படி பேசிடாங்க, நீ ஏதும் மனதில் வைத்துக்கொள்ளாதே. என்றார் 

இதை கேட்டு இருந்தவள் ஆனா நான் படிக்கனும் மா என்றாள், அதுக்கு என்ன நம்ம அன்பு தான் கல்யாணம் முடிந்தும் நீ இங்க தான் இருக்க போறா, அப்புறம் போய் படி யார் உன்னைய வேண்டாம் சொன்னாங்க என்றார். அதில் ஏதும் போசமல் எழுந்து சென்றவள். அப்படியே தோட்டத்து பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.

யோசித்த படியோ இவள் வெகு தூரம் நடந்து இருக்க. இருந்தாள்அவளுக்கு மனதில் அழுத்தம். எப்படி இப்படி திருமணம் என்று திடீர் ஏற்கொள்ள முடியும், இவர்கள் சொல்வது போல் என்னால் அப்புறம் என்னை படிக்க வைப்பார்களா? என்ற கேள்விகள் மனதில் அழுத்த, இதை யாரிடம் பேசுவது என்று நினைவுடன் நடந்துக்கொண்டு இருந்தாள்.  அவள் எதிரில் நின்று இருந்தான் கதிர்வேலன். அழகி அவனை பார்த்து மாமா என்றவள் கண்களில் கண்ணீர் துளிகள்……………..அதை பார்த்த மூவருக்கும் மனதில் வேறு வேறு எண்ணங்கள்…………………….

  

ஏதும்      

தொடரும்……………. 

Advertisement