Advertisement

அத்தியாயம் – 11

கனேசன் நினைத்து போல் இந்த திருமண விஷயம் எல்லோருக்கும் சந்தோஷத்தை கொடுக்கவில்லை. முதல் எதிர்ப்பு அவருக்கு கதிர்வேலன் இடம் இருந்து, எப்படி மாமா நீங்க என்னை கேட்காமல் இந்த முடிவு செய்யலாம் என்றான் அவன் முன் ருத்திர மூர்த்தியாய் நின்று இருந்தான். 

கதிர்வேலன் காலையில் தான் சென்னையில் இருந்து வந்து இருந்தான். அவன் தெடங்க போகும் தொழிலுக்கு லைசன்ஸ் தொடர்பாக, ஒருவரை சென்று பார்த்துவிட்டு, அதற்கு தேவையான ஆவனங்களை சரிபார்த்து விட்டு வந்து இருந்தான். வந்தவன் ஊருக்குள் வந்த போதே அவனது திருமண செய்தி தான் அவனை வரவேற்றுது. அவனால் அப்போதும் நம்ப முடியவில்லை, எப்படி மாமா இப்படி ஒரு முடிவு எடுக்க முடியம். அதுவும் அழகிக்கு தாய்மாமன் தான் இருக்கும் போது என்று அவனுள் கொதித்துக்கொண்டு வந்தது. இருந்தும் அதை நேரில் சென்று பேசிக்கொள்ளலாம் என்று வீட்டுக்கு வந்தான்.

இவன் வீட்டினுள் நூழைந்த போது அவர் கிளம்ப தயாராக இருந்தார். இவனை பார்த்தும், வா கதிர் இப்பதான் வரியா?  சரி போய் குளிச்சுட்டு சாப்பிடு, ஒரு 11 மணிக்கு பன்னைக்கு வந்துரு, நிறைய வேல கிடக்கு. நம்ம தான் எல்லாத்தையும் பார்க்கனும் நாளு வேற  குறைவா இருக்கு…………. என்று மேலும் என்ன பேசி இருப்பாறோ, அதற்குள் என்ன விஷேசம் மாமா என்றான் கதிர் குரலில் ஒரு அழுத்தம், முகம் இறுகி இருந்து. அவர் இதை எல்லாம் கவணிக்கவில்லை, ஆனால் ரத்தினம் கவணித்தார். அவருக்கு மனதில் பயபந்து உருள தொடங்கியது. ஏதோ பெரியதாக வரபோகிறது என்று நினைத்தவர், ஏதும் போசாமல் இருவரையும் பார்த்து இருந்தார்.

யாருக்கு விஷேசம் என்றதில் அவனை நிமிர்ந்து பார்தார் கனேசன், என்னடா இப்படி கேட்கர, உனக்கும், அழகிக்கும் தான் என்ற அவர் வார்தையில் அவன் ஒரு கணம் நிதானித்தான் என்றால், ரத்தனம் பதறிவிட்டா். என்ன சொல்றிங்க தெளிவா சொல்லூங்க என்றவர், அவர் முகத்தை பார்த்து சொல்லுங்கள் என்பது போல் சைகை செய்தார்.

நீயும் எத்தனை நாள் இப்படி இருக்க போற கதிர், உன் அம்மாவோ, அக்காவோ இருந்தா, இந்த நேரம் உனக்கு கல்யாணம் முடிந்து, பிள்ளை பிறந்து இருக்கும். எனக்கு நீங்க எல்லோரும் சின்ன பிள்ளைகளா தெரிந்தாலும், காலகாலத்தில் நடக்கவேண்டியது நடக்கும் இல்லையா, அது தான் உனக்கு கல்யாணம் முடிவு பண்ணி இருக்கேன். பெண்ணு அழகா இருக்கா, நல்லா படிச்சு இருக்கா, அவங்க வீட்டில் ஓரே பெண்ணு, நாளை பின்னோ உனக்கு தொழிலுக்கும் ஒத்தாசையா இருப்பா, உங்க பக்கதில் உனக்கு கட்டிகிற முறை தான்……….. என்று பேசிக்கொண்டே போனவர் பேச்சை நிறுத்தி இருந்தான் கதிர் தன் ஒற்றை கேள்வியில்.

ஏன் எனக்கும் அழகி கூட தான் கட்டிகிற முறை ஏன் அழகிய எனக்கு கொடுக்கனும் உங்களுக்கு தோனலையா? மாமா? இல்ல வேற ஏதும் காரணம் இருக்கா? என்றான் ரத்தினத்தை பார்த்த படி, அவனின் அந்த பார்வையில் ரத்தினம் அதிர்ந்து தான் போனார். இதுவரை கதிர் அவரிடத்தில் மரியாதை குறைவாகவோ, மனது சங்கட படும் படியாகவோ பேசியதோ, பார்த்தோ இல்லை, ஆனால் இவனின் இந்த பார்வை  விரோதியை பார்ப்பது போல் அவன் பார்த்த பார்வை அவரை கலவரம் அடைய செய்தது. இதுக்கு எல்லாம் காரணம் நீ தானே? என்று கேட்டதோ அந்த பார்வை…………………….

இவன் பேசியதில் முதலில் அதிர்ந்தவர், பின்  என்ன பேசுற கதிர், நான் உன்னை அப்படியா வளர்த்தேன். அவர் மனதிலும் ஒரு குற்ற உணர்வு வந்து இருந்து, நான் இவனை கேட்காமல் இந்த திருமனத்தை முடிவு செய்து இருக்க கூடாதோ, ஆனால் இவனுக்கு நான் என்ன குறை வைத்தேன். என் மகன் போலவே பார்த்துக்கொண்டேனே……….. எனக்கு இந்த உரிமை கூட இல்லையா? இவனுக்கு எல்லாம் நல்லதா செய்யனும் நான் எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்தால் இவன் என்னை இப்படி கேள்வி கேட்கிறான், 

ஊரில் இருப்பவன் எல்லாம் நான் என்னவோ இவனை கூடவே வைத்துக்கொண்டு இவன் சொத்து எல்லாத்தையும் வளைத்து போட்டுவிட்டதாக பேச,  இதில் இவனுக்கு என் பெண்ணை வேறு கொடுத்து இவனை வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிட்டேன் என்று பேச்சு வேறு வாங்க வேண்டுமா? இதை எல்லாம் மனதில் வைத்து நான் இவனுக்கு நல்ல இடம் பார்த்தால் இவன் என்னவென்றால் என்னையே குற்றம் சொல்லுகிறான். என்று குமுறி இருந்தார். அவர் மனதில் இப்படி நினைத்து இருக்க…..

அவனோ கதிரழகியை தான் எனக்கு பிடித்து இருக்கிறது எனக்கு அவளை தான் திருமணம் செய்ய வேண்டும், அவள் படிப்பு முடிய தான் காத்து இருந்தேன் என்று பேசியது ஏதும் அவர் காதிலும், மனதிலும் பதியவில்லை.

ஆனால் ரத்தினம் இதை எல்லாம் கேட்டு இருந்தார், எங்கே கனவர் மனம் மாறிவிடுவாரோ என்று பயந்தவர்,கனவன் முகம் பார்த்தபடி இருந்தார். தான் இவ்வளவு பேசியும் கனேசன் அமைதியாக இருப்பதை கண்டு, என்ன மாமா பயங்கரமா ஒதி இருப்பாங்க போல, அவங்களை மீறி ஏதும் முடிவு எடுக்க முடியலையோ என்றான் ரத்தினத்தின் மேல் பார்வையை வைத்துக்கொண்டே……….

அப்போது தான் அவன் சொல்வதை கவனித்தவர், என்ன சொன்ன என்னை என்ன  பொண்டாட்டி இல்லாம போனா அடுத்த பெண்ணை தேடுறவன் நான்னு நினைச்சியா? என் அம்மாவின் கட்டாயத்தில் தான் இவளை கட்டினேனோ தவிர, ஆசை பட்டு இல்லை என்று அவரும் இடம் பொருள் பார்காமல் பேசிவிட, இந்த வார்த்தைகள், இங்கு நின்று இருந்த ரத்தினத்தை மட்டும் அல்ல, அப்போது தான் வீட்டுக்குள வந்த அன்பழகன் காதிலும் விழுந்து. 

ரத்தினத்துக்கு இது என்ன வாழ்கை என்று ஆனாது. ரத்தினம் என்ன தான் காதல் கொண்டு அவரை மனந்து இருந்தாலும், அவருக்கு தன் மேல் காதல் எல்லாம் இல்லை என்று தெரிந்தாலும், திருமணம் முடிந்து இத்தனை வருடங்கள் கடந்து இருந்த போதும், அவருடன் வாழ்ந்து இரண்டு பிள்ளைகளை பெற்றுவிட்ட போதும், இன்னும் கனவன் மனதில் தான் மனைவியாக பதியவில்லை என்பது அவர் மனதில் ரனமாக பதிந்து.

அதில் கதிர் ஏதோ சொல்ல வர, இப்ப என்ன சொல்ல வர இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பியா இல்லையா…………… உண்மையில் என் மேல் மரியாதை இருந்தா என் பேச்சை மீறாதே என்றார். இதில் இன்னும் கோவமானவன் எனக்கு கதிரழகி தான் பெண்டாட்டி, நேற்று வந்தவன் கிட்ட எல்லாம் அவளை தூக்கி கொடுக்க முடியாது. என்னை தவிர அவள யார் கட்டுவானு பார்க்கிறேன் என்றவன். அங்கு இருந்து நகர போக, நில்லுடா, உன்னைய என் மகன் மாதிரி நினைத்து வீட்டுக்குள் விட்டதுக்கு உன் புத்திய காட்டிட இல்ல, அப்போ இந்த என்னத்தோட தான் இத்தன நாள் இந்த வீட்டில் இருந்தயா? என்று அவரும் வார்த்தையைவிட…………… அதிர்ந்துவிட்டான் கதிர். என்ன தப்பான என்னமா? எனக்கு முறையிருக்கும் பெண்னை கல்யாணம் பன்ன நினைப்பது எப்படி தப்பான எண்ணமாகும் என்றான்.  

அதற்கும் அவர் என்னடா சொல்லற, சின்ன வயிதில் இருந்து அவளை தூக்கி வளர்த்து இருக்க, அப்புறம் எப்படி அவகிட்ட உனக்கு இப்படி ஒரு எண்ணம் வருது. என்றார் இதற்கு என்ன பதில் சொல்லவது என்று தெரியாமல் அவன் அசந்து தான் போய்விட்டான். இனிமே இவரிடம் இதை பற்றி பேசி பயன் இல்லை. இவர் இது தான் முடிவு என்று எடுத்துவிட்டு அது சரி என்று வாதித்துக்கொண்டு இருக்கிறார். இவருக்கு எப்படி என் மனது புரியும். முதலில் இதை பற்றி அழிகயிடம் பேசலாம், அவளுக்கும் இதில் விருப்பம் இல்லை என்று தெரியட்டும், அதன் பின் எங்கள் திருமனத்தை யார் தடுப்பார்கள் என்று பார்க்கிறேன் என்று நினைத்தவன். ஏதும் பேசாமல் அங்கு இருந்து வெளியேறி இருந்தான். கனேசனுக்கோ இந்தனை நாள் என் கைக்குள்ளோ வளர்ந்தவன் தான் என்ன சொன்னாலும் தன் பேச்சை மீற மாட்டான் என்று நினைத்து முடிவு எடுத்து இப்படி தன்னை அவமான படுத்திவிட்டான்னே என்ற ஆதங்கம். எல்லாம் சேர்ந்து இந்த திருமணத்தை எப்படியாவது நடந்திவிட வேண்டும் என்ற விம்பை அவரிடத்தில் கொண்டு வந்து இருந்து.

Advertisement