Advertisement

அத்தியாயம் – 10

இவர்களின் இந்த பேச்சுக்கள் ஏதும் அன்பழகன், கதிரழகி மற்றும் கதிர்வேலனை எட்டவில்லை. ரத்தினம் பேசிய பின் அதை பற்றியே கனேசன் யோசித்தபடி இருந்தார். 

அவர் இப்போது கதிரழகியின் திருமனத்தை பற்றி இதுவரை அவர் யோசித்தே இல்லை. இப்படி தீடீர் என்று அவர் அம்மா கேட்பார் என்று அவர் எதிர்பார்கவில்லை. அவர் இந்த யோசனையில் இருக்கும் போது,  என்ன கனேசா எப்படி இருக்க, என்றார், வந்தவர் அவர் முதல் மனைவியின் உறவினர், அவருக்கு மச்சான் முறையாக வேண்டும், நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க என்றார் கனேசன்.

பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, ஆமா, உன் மக சடங்கில் பிரச்சனையான பின்ன நம்ம ரொம்ப சந்திக்க வாய்ப்பு இல்லாம போய்டுச்சு என்றார்.  கனேசன் அதற்கு ஏதும் பேசவில்லை. 

சரி நான் வந்த வேலையை விட்டு வேற பேசிட்டு இருக்கேன் பார். நம்ம கதிருக்கு ஒரு நல்ல வரன் வந்து இருக்கு. அவன் இப்போ உன் கூட தானே இருக்கான், அதான் உன்னை பார்த்து பேசலாம் வந்தேன். அவன் அம்மா போனப்பறம், அவன் இங்கேயே மொத்தமா தங்கிட்டான். அந்த பக்கத்தில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை அவனுக்கு, எனக்கும் இந்த சம்பந்தம் வந்தப்ப கொஞ்சம் தயக்கம் தான் ஒருவேள அவனுக்கு உன் மகள கட்டுவியோனு, அப்படியே இங்கயே அவனும் செட்டில் ஆகிட்டான்னா செத்துக்கு சொத்தும் ஆச்சு, செந்தத்துக்கு சொந்தம் ஆச்சு……… என்ன நான் சொல்லறது என்றார். வந்தவர் பேச்சில் நீ உன் மகளை கதிருக்கு திருமனம் செய்து வைத்து அவன் சொத்தையும் உன்னோடு வைத்துக்கொள்வாய் என்ற குத்தல் பேச்சு இருந்தது. அவர் அதை கவனித்தாலும் ஏதும் பதில் சொல்லாமல் வந்தவர் முகத்தையே பார்த்து இருந்தார்.

அவருக்கு கனசேன் பதில் சொல்லாது பெருத்த ஏமாற்றம், கனேசனின் மனைவி வழி உறவினர் குடும்பங்களில் திருமன வயதில்பெண் வைத்து இருப்பவர்களின் முதல் தேர்வாக நல்ல வசதியோடு  இருக்கும் கதிர்வேலன்   இருந்தான்,  சிலர் அவனை நேரடியாக கேட்டும் இருந்தனர், ஆனால் அவன் யாருக்கும் பிடிகொடுக்கவில்லை. அவனிடம் முயன்று பார்த்து முடியாமல், கனேசன் மூலம் பேசலாம் என்று வந்து இருந்தார். வந்தவருக்கு ஒருவேளை கனேசன் தன் மகளை அவனுக்கு திருமணம் செய்யும் எண்ணம் கொண்டு இருக்கிறாரா என்று தெரிந்துக்கொள்ளவே இவ்வாறு பேசினார்.

ஆனால் கனேசன் முகத்தில் ஏதும் கண்டு பிடிக்க முடியவில்லை, வந்தவர் சரிபா இப்போ ஒரு வரன் வந்து இருக்கு அவனுக்கு முறை தான், பெண் போட்டோ மற்ற விவரம் எல்லாம் இதில் இருக்கு, பார் அவனுக்கும் எடுத்து சொல்லு பிடித்து இருந்தால் மேல பேசலாம் என்றவர் சென்றுவிட்டார்.

இப்போது மகளின் திருமணம் விஷயம் பின்னுக்கு சென்று, கதிரின் திருமணவிஷயம் முன்னால் வந்து இருந்து. நாம் ஏன் அவன் திருமணம் பற்றி இதுவரை யோசிக்கவில்லை, அவனுக்கு திருமன வயது வந்துவிட்டதா? ஒரு வேளை அவன் அக்கா, அம்மா இருந்து இருந்தால் அவனுக்கு இதை எல்லாம் எடுத்து செய்து இருப்பார்களோ, நான் அவனை சரியாக பார்க்கவில்லையோ? என்று எண்ணங்கள் அவருக்கு கவலையை கொடுத்து. தன் முன்னால் இருந்த கவரை எடுத்து பிரித்து பார்தார். பெண் நல்ல அழகு, கதிருக்கு மிகவும் பெருத்தமாக இருப்பாள், படித்து இருக்கிறாள், நாளை அவன் தொழிலுக்கு கூட உதவலாம். ஒரே பெண், பெண்னின் வீடும் நல்ல வசதி தான். எல்லாவகையிலும் அவருக்கு திருப்பியாக இருந்தது. அவருக்கும் பெணின் குடும்பத்தை தெரியும்.

அதை அந்த கவரினுள் வைத்தவர், அந்த நபருக்கு அழைத்தார். பெண் விவரங்களை பார்த்தேன், கதிர் கிட்ட பேசிட்டு செல்றேன் என்றார். அட என் கனேசா நீ, அன்னிக்கு தான் அத்தனை பேர் முன்னால் என் மாமா தான் எனக்கு எல்லாம், அவர் எது செய்தாலும் அது நல்லதாக தான் இருக்கும் சென்னான். நீ சென்னா கேட்டுக மாட்டானா என்ன? அதுவும் இல்லாம பெண்ணுக்கு என்ன குறை லட்சனமா இருக்கு இதுல அவனுக்கு பிடிக்காம போக என்ன இருக்கு, என்றவர். பெண்வீட்டில் ஒரு வார்த்தை சொல்லிவிடலாம். அப்புறம் மத்ததை பேசிக்கொள்ளாம். ஒரு வேள அவங்க வேற இடம் பார்த்துட்டா? என்றார். கனேசனும் சரி, என்று விட்டார்.

இங்கு மீண்டும் சம்பந்த பட்டவனை கேட்காமல் ஒரு திருமணம் முடிவு செய்யபட்டது.

……………………..

அன்பழகன் மாலை வீட்டுக்கு வந்தவுடன், ரத்தினம் அவனிடம் பேச வேண்டும் என்று கூறினார். அவனும் தன் அறைக்கு சென்று தன்னை சுத்தபடுத்திக்கொண்டு வந்தவன், அக்கா கொடுத்த டீயை அருந்தியபடி, அமர்ந்தான். அன்பு உனக்கு வயசாகிட்டே போகுது, உனக்கு கல்யாணம் பன்னலாம் முடிவு எடுத்து இருக்கோம் என்றார் ரத்தினம், அதில் அவன் ஒரு கணம் திடுக்கிட்டாலும், பின் இயல்பானான். 

படித்து வேளைக்கு போனபின்   திருமணம் என்பது இயல்பு தானே என்று நினைத்தான். அவன் மனதில் நந்தினியின் முகம் வந்து போனது. அவளை கதிரழகியின் தோழியாக சிறு வயது முதலே தெரியும் என்றாலும், இப்போது கொஞ்ச வருடங்களாய் அவள் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்தே இருந்தான். 

இவனுக்கும் அவள் மேல் ஒரு பிடித்தம் இருந்த்து என்னவோ உண்மை தான். ஆனால் அதை இருவருமே வெளிப்படையாக சொல்லிக்கொண்டு இல்லை. இப்போது இவன் வேலை செய்யும் பக்கது ஊரின் வங்கி அருகில் தான் அவள் படிக்கும் ஆசிரியர் பயிற்சி பள்ளி இருக்கிறது. முன்பொல்லாம் கதிரழகியுடன் வருபவள், இவனிடம் பேச மாட்டாள். பார்வையும் கூட அவள் தோழிக்கு தொரியாமல் தான் இருக்கும். ஆனால் இப்போது எல்லாம் அவள் பார்வை முழுவதும் இவனை வட்டமடிக்கிறது. 

இவனுக்கு பிடித்து இருந்து, சமயம் வரும் போது அக்காவிடம் பேசி பெண் கேட்கலாம் என்று நினைத்து இருந்தான். இன்று தன் அக்கா திருமண பேச்சு எடுக்கவும், அவள் முகம் தான் கண்முன். டேய் என்னடா நான் பேசிகிட்டு இருக்கேன் நீ என்ன யோசனையில் இருக்க என்றார்.

ஹாங்……………  சொல்லுகா என்றான் தன் நிலைக்கு வந்தவனாய். அது தான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்னே, உனக்கு எப்போ லீவ் எடுக்க முடியம் சொல்லு அதை பார்த்துட்டு தேதி வைக்கலாம் என்றார்.

என்னது தேதி வைக்கலாம்மா? யாருக்கு? அதற்குள் முடிவு செய்துவிட்டார்களா? யார் பெண்?

என்று குழம்பி போனவன் இரு இரு என் சொல்லிட்டு இருக்க………. என்னமோ தேதி வைக்கலாம் செல்ற? பெணு யாரு? என்றான்.

சரியா போச்சு பெண்ணு யார? நம்ம கதிரழகி தான் பெண்ணு, பாட்டி  இப்படி இருப்பதால் உங்க மாமா இந்த மாசத்திலேயே கல்யாணம் முடிக்கலாம் இருக்கார். படிக்கற பெண்ணுக்கு தீடீர் என்று நல்ல மாப்பிள்ளை எங்கே பார்க்க, அதான் உனக்கே கொடுக்காலம்னு, என்று பேசிக்கொண்டே போனவர் பேச்சை நிறுத்தியவன். என்ன நினைச்சுட்டு இருக்க கா நீ………. 

வேற யாரும் மாப்பிளை கிடைக்கலனா நான் தான் கிடைத்தேனா? ஏன் அந்த கதிர்வேலனுக்கு கட்டிக்கொடுக்க வேண்டியது தானே என்றான் கோவத்தில்……. தம்பி இடத்தில் இப்படி ஒரு எதிர்ப்பை அவர் எதிர்பாக்கவில்லை. இது வரை தான் சொன்னால் கேட்டுக்கொள்ளும் தம்பி, இன்று இத்தனை கோவபட இதில் என்ன இருக்கிறது. 

அதிலும் எது நடக்க கூடாது என்று அவர் இதை அவசரமாக செயல் படுத்த முயல்கிறாரோ அதையே இவன் கூறுவது அவருக்கு எரிச்சலாக இருந்து.

கூறு கொட்ட தனமா பேசாத அன்பு, நான் என்ன உனக்கு கொடுதல் செய்வேன் நினைக்கிறயா? என் தம்பி கடைசிவரை என் கண்முன்னால் நல்ல குடும்பம், குழந்தைனு வாழுறத பார்க்கனும் எனக்கு, ஆசை இருக்காதா, நாளைக்கு யாரும் அம்மா, அப்பா இருந்தா உன்னைய இப்படிவிட்டுவாங்களா? என்று கண்ணீர் வழிந்தது அவருக்கு.

அதை பார்த்தும் அவனுக்கு மனதுக்கு கஷ்டமாக போனது, என்னகா பேசுற?   கல்யாணம் அப்படிறது நீ நான் முடிவு செய்வது இல்லை. நமக்கு எப்படி மாமா அவர் பெண்ணை கொடுப்பார். அவங்க வசதி என்ன? அதுவும் கதிர் இருக்கும் போது இது எப்படி நடக்கும் என்று அவன் எதார்த்தை கூற………

இங்க பார் அன்பு இதை எல்லாம் யோசிக்காம இதை முடிவு செய்யல……………………. இன்னும் சொல்ல போன இந்த முடிவு எடுத்ததே உங்க மாமா தான். அவருக்கு அவர் பெண் அவர் கண்ணு முன்னாள் கடைசிவரைக்கும் இருக்கனும், ஆதனால் அவர் தான் இதை சென்னார் என்று ஒரே பேச்சாக முடித்துவிட்டார் ரத்தினம். கனேசனின் முடிவு என்றால் தம்பி மேலும் ஏதும் பேச மாட்டான் என்று நினைத்தார் போலும்.

ஆனால் அன்பு மாமாவா இப்படி சொன்னார்? சரி அவரிடமே இதை நேரடியாக பேசிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு மேற்கொண்டு ஏதும் பேசாமல் அமைதியானான்.

ஆனால் அவன் நினைத்து போல் அவனால் கனேசனிடம் அவனால் பேச பேசமுடியவில்லை. அதற்க்கு காரணம், அன்று இரவே அவர் கதிருக்கு பார்த்து இருக்கும் சம்பந்தம் பற்றி வீட்டில் சொன்னது தான். கேட்டுக்கொண்டு இருந்த கதிரழகிக்கும் மிகுந்த சந்தோஷம். கதிர் மாமாக்கு கல்யாணமா என்று நினைத்து குதுகளித்தாள்.

ஒ அவன் வசதி வாய்ப்பு ஏற்றது போல் பெண் பார்த்து இருக்கிறார் போல், வீட்டோடு மாப்பிள்ளைகாக என்னை தேர்ந்து எடுத்தார் போல் என்று எண்ணிக்கொண்டான். அக்காவிடம் அதை பற்றி கேட்க, அவரும் இங்க பார் அன்பு என்ன தான் நான் இப்போ அவர் மனைவியா இருந்தாலும், இன்னும் இந்த வீட்டில் நமக்கான மரியாதை கிடைக்கல, உனக்கு மட்டும் கதிர் கூட கல்யாணம் முடிந்தாள் , நானும் நிம்மதியா இருப்பேன். இத்தனை நாள் இவர் மேல இருந்த காதல் மட்டும் போதும் என்று இருந்துவிட்டேன். ஆனால் அது மட்டும் போதாது என்று அன்னிக்கு நடந்த விஷயங்கள் புயரிவைச்சிடுச்சு, ஒரு வேளை நாளைக்கு எனக்கோ, இல்லை அவருக்கோ ஏதாவது ஆகிட்டா என் பிள்ளைகளின் நிலை, அதை நினைக்கவே முடியல என்னால….. 

இத்தனை வருடம் கூட இருந்து பார்த்து எல்லாம் நான் அன்று ஒருவர் கூட வரவில்லை, ஆனால்  சொந்தம் எல்லாமே அன்னிக்கு அப்படி பேசுற போது, நாளைக்கு கதிரழகிக்கு வெளியில் இருந்து மாப்பிள்ளை பார்த்த, அவங்க என் பிள்ளைங்களை எப்படி ஏத்துப்பாங்க, என்று கண்ணீர் வீட்டார். அக்காவின் கண்ணீர் முன்னால் அவனுக்கும் நந்தினியை பற்றி பேசும் துணிவில்லை………………. ஆனால் அடுத்த நாள் நந்தினி அவன் முன்னால் நின்ற போது?    

இதற்குள் இந்த திருமன விஷயம் ஊருக்குள் பரவி இருந்து, நந்தினியின் காதுக்கும், கேட்டவள் அடுத்து என்ன செய்வது என்று தெரயவில்லை. இன்று வரை அவள் அன்பழகனிடம் நேருக்கு நேர் பேசியது இல்லை,அவனின் பார்வையை வைத்து அவளுக்கு ஒரு நம்பிக்கை இருந்து. ஆனால் இப்படி நடக்கும் என்று அவள் நினைக்கவேயில்லை. இரவெல்லாம் கண்ணீரில் கரைந்தவள், அடுத்த நாள் அவனை வங்கியில் சந்திப்பது என்று முடிவு எடுத்தால்.

அதன் படி அடுத்த நாள் காலையில் சீக்கரமாகவே கிளம்பி இருந்தாள், அனுக்காக வங்கி வாசலில் அவனுக்காக காத்து இருந்தாள். அன்று காலை போல் வழக்கம் போல் வங்கிக்கு வந்தவன், வாசலில் நந்தினி நிற்பதை பார்த்து அதிர்ந்தாலும் ஏதும் முகத்தில் காட்டாமல் கடந்து செல்லவே நினைத்தான். 

ஆனால் அதற்கு விடாமல் அவள் குரல் தடுத்து, உங்கிட்ட பேசனும் என்றவள் முகத்தை பார்காமல், சிறிது அமைதியாக இருந்தவன், பின் இதை இன்றோடு முடித்துவிட நினைத்தான். சரி வா என்று அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்றான். அந்த நேரத்தில் அங்கு அவ்வளவாக கூட்டம் இல்லை. கோவிலை சுற்றி வந்தவர்கள் அங்கு இருந்த மரத்தின் அடியில் அமர்ந்தார்கள்.

இருவருக்கும் தெரியும் மற்றவர் பேச போவது, ஆனால் யார் தொடங்குவது என்று பார்த்து இருந்தனர், பின் நந்தினியே  வாய்திறந்தாள், நான் கேள்விபட்டது எல்லாம் உண்மையா? உங்களுக்கும், கதிரழகிக்கும் கல்யாணமா? என்றாள்?

ஏதும் சொல்லாமல், ஆம் என்று தலை அசைத்தவன், மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. அவன் வேறு ஏதாவது சொல்லுவான் என்று அவனை பார்த்து இருந்தாள். அவன் வாயே திறக்கவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து. இருந்தும் இது தான் பேசியாக வேண்டிய நேரம் என்று உணர்ந்தவள், கதிருக்கு அவங்க தாய் மாமா கூட தானே கல்யாண பேசி இருக்கனும், அவங்க இருக்கும் போது ஏன் உங்க கூட என்றாள்? 

அவன் என்ன சொல்லவான், தன் அக்காவால் தான் இந்த திருமணம் என்று அவனால் அவளிடம் அவள் அக்காவை விட்டுதர முடியவில்லை, அதை நீ அவளிடம் தான் கேட்க வேண்டும். என்றான் விட்டோந்தியாக…………………………..

இந்த பதிலில் அதிர்ந்தவள், அப்போ இது அவ விருப்பம் சொல்றி்ங்களா? அவ இதுக்கு எப்படு சம்மதிச்சா? அவளுக்கு நான் உங்களை என்று சொல்ல வந்தவள் அதற்கு மேல் முடியாமல் கண்ணீர்  தான் வந்து. அவள் வார்த்தையை கேட்டவன், அவள் சொன்ன செய்தியை உள்வாங்கினான், அப்படி என்றால் இவள் என்னை காதலிப்பது அவளுக்கு தெரியும், இப்போது இருக்கும் சூழ்நிலையில் தன்னால் இந்த திருமணத்தை நிறுத்த முடியாது………… ஆனால் அவள் நினைத்தாள்!!!!! அந்த எண்ணம் தோன்றிய உடன், அவள் முகம் பார்த்தான், நீயே உன் தோழியிடம் பேசு, நான் எங்க அக்கா மாமாவின் நிழலில் வளர்ந்தவன், என்னால் அவர்களை எதிர்த்து ஏதும் பேசமுடியவில்லை. அது நன்றி கெட்ட தனமாக இருக்கும். ஆனால் கதிர் நினைத்தாள் இந்த திருமணத்தை நிறுத்தலாம் நந்தினி  என்றான்.

அவளும் சரி நான் அவளிடம் பேசுகிறேன் என்றாள், சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் பின் கிளம்பி சென்று இருந்தனர்.

ஆனால் அவர்கள் நினைத்துக்கு மாறாக கதிரழகியே இந்த திருமணத்திற்க்கு சம்மதம் சொல்லி இருந்தாள். அதில் இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் திசை மாற்றி இருந்தாள்………………………………. 

 

   

தொடரும்……………. 

Advertisement