Advertisement

எனக்கு ஏதும் இல்லை என்றாள் அவள் கண்ணம் பற்றி, அதில் தன் கண்ணத்தின் மேல் ஒரு விரல் வைத்து யோசித்தவள், அது ……………. அது………………… இது எல்லாம் குட்டி பசங்களுக்கு……………………… உங்களுக்கு பத்தாது என்றாள் தன் மழலை குரலில்.

அதை கேட்டு அவள் முகத்தில் புன்னகை இன்னும் விரிய அதற்குள் உள்ளே இருந்து இரு டிபன் பாக்ஸ் உடன் வந்த கதிரழகி, இந்தங்க அக்கா…… இது காலைக்கு பொங்கல், சாம்பார், வடை, இது மத்தியத்துக்கு கலந்த சாதம் என்றாள். அதை பெற்றுக்கொண்டவள், இது என்ன இவ்வளவு இப்படியே சாப்பிட்டு இருந்த இந்த வாசல் கதவை உடைக்க வேண்டி வரும் பார்த்துக்க…………….. என்றாள்.

மணிமேகலை பாக்கியலட்சுமி தலைமை ஆசரியராக இருக்கும் அதே பள்ளியில் தான் கனிணி அறிவியல் ஆசிரியராக பணி புரிகிறாள். கதிரழகியை விட 4 வயது மூத்தவளாக இருப்பாள், எதிர் வீடு அவளுடையது. கீழே இருக்கும் இரண்டு பகுதிகளை வாடகைக்கு விட்டு மேல் வீட்டில் இவள் இருக்கிறாள். சரி நேரம் ஆச்சு சாயந்திரம் பார்க்கலாம் என்றவள் விடை பெற்று செல்ல அதுவரை அவர்கள் இருவர் தவிர அங்கு வேறு யாரும் இல்லை என்பது போல் இருந்து அவர்கள் பேச்சு, அது வரை மகளை பார்த்து இருந்த கனேசன், இப்படி மகள் எப்போது தன்னிடம் பேசுவாள் என்று இருந்து. ஆனால் அது நடக்காது என்று தெரி்ந்து தன் நிலையை தானே தேற்றிக்கொண்டவர். பேத்தியிடம் திரும்பினார். அதற்குள் கதிரழகி எல்லாவற்றை எடுத்துவந்து வைத்தவள். 

மதி கிளம்பளாமா என்றாள் மகளை பார்த்து, இப்போதும் அவள் யாரை பார்க்கவில்லை. மதியும் சரி என்பது போல் தலையாட்டி அம்மாவிடம் செல்ல………………… 

நாம கிளம்புவேம் என்றார் கனேசன், நால்வரும் எழுந்துக்கொள்ள, மீண்டும் மகளை பார்த்தார், அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை, மதிமா தாத்தா போய்ட்டு வரேன் என்றவர் மற்றவர்களை பார்க்க அவர்களும் கிளம்பினர்.

இவர்கள் கிளம்பி வெளிவந்தும் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு வீட்டின் பூட்டு சாவியை எடுத்தவள், வெளியேற, அப்போது தான் அங்கு நின்று இருந்த கதிர்வேலனை பார்த்தாள், மதியும் அவனை பார்த்தவள், கதிர்பா என்ற படி அவனிடம் தாவினாள். அதை பார்த்து இருந்த அன்பழகனுக்கு தான் சுருக்கு என்று இருந்து. இத்தனை நேரம் தன் அருகில் கூட வராத குழந்தை அவனிடம், கதிர்பா என்று தாவியது அவனுக்கு செருப்பால் அடித்து போல் இருந்து. அவன் முகம் மேலும் கருத்து. 

ஆனால் கதிர் இது எதை கவனிக்கும் நிலையில் இல்லை, கதிரழகி தன்னிடம் பேசவில்லை என்றாலும், மதி அவனிடம் தாவியதும் மற்றது அனைத்தும் மறந்து, அவர்கள் இருவரும் தன் உலகில் முழிகினர். நாம கீழ போலாம், அம்மா வருவாங்க. என்றவன் அவளை சுமந்த படி கீழே இறங்கினான்.

அதை பார்த்து இருந்தாவள் தங்கள் உடமைகள் எல்லாவற்றையும் எடுத்து வெளியில் வைத்தவள், அவர்களை பார்க்க, அவர்களும் வெளியில் வந்தனர். வீட்டின் கதவை பூட்டி விட்டு, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இறங்கிவிட்டாள்.

அவள் இறங்கி வந்த நேரம் தான் அந்த வீட்டின் உரிமையாளர் பாக்கியலட்சுமியும் வெளியில் வர, அவளை பார்த்து, கதிர் இன்னிக்கு என்று பேச ஆரம்பித்தவர் அவள் பின்னோடு வந்தவர்களை பார்த்து வாங்க, எப்போ வந்தீங்க என்றார் மரியாதை நிமித்தமாக……..

இப்போ தான் இன்னிக்கு பாப்பா முத நாள் பள்ளிக்கூடம் போறா இல்ல அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தோம் என்றார் ரத்தினம். ஒ…… சரி என்றவர், மதிகுட்டிய நீ கூட்டி வரயா இல்லை நான் கூட்டி போகவா என்றார். இல்லை டீச்சர் நானே கூட்டி வரேன் என்றாள். 

சரி என்றவர் மேகலை வந்துட்டு போய்டாளா என்றார். ம்மம்மம்மம்மம்மம இப்பதான் போனாங்க என்றாள்.

சரி என்றாவர் உள்ளே பார்த்து ஏங்க நான் கிளம்புறேன் என்றவர், அவர்களிடமும் ஒரு தலையசைப்புடன் கிளம்பிவிட்டார்.  இவளும் அந்த பள்ளியில் தான் ஆம்னி வேனில் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து போய், அழைத்து வருகிறாள். பள்ளிக்கு என்று பள்ளி போருந்து இருக்கிறது தான். ஆனால் அது சிலருக்கு சரிவராது. இவர்கள் இருக்கும் பகுதி மிகவும் நெருக்கம் என்பதால் பள்ளி போருந்து வீடு வரை வராது. மேலும் பள்ளி போருந்துக்கு வருடம் 1 முறை மொத்தமாக பணம் செலுத்த வேண்டும், அது ஒரு கணிசமான தொகை வருவதால் அவர்களுக்கு சிரமாக இருந்து. அதனால் அந்த பகுதியில் இருக்கும், பிள்ளைகளை இவள் பள்ளிக்கு அழைத்து போகிறாள். கட்டணமும் பள்ளி போருந்தை விட சற்று குறைவுதான். மாத மாதம் தருவதால் பெற்றோருக்கு அது சிரமாக இருப்பது இல்லை. இவளுக்கும் அது கணிசமான வருமாணம் தான், அது தவிர அந்த பள்ளி வேலை செய்யும் இரு ஆசிரியர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கிறாள், அதற்கும் மாதம் ஒரு தொகை பெற்றுக்கொள்ளவாள். இது எல்லாம் அவள் தேவைக்கு அதிகம் தான். ஆனாலும் காற்று உள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல், தன்னால் இப்போது முடியும் போதே வரும் வருமானத்தை முறையாக எதிர் காலத்துக்கு சேமித்தும் வருகிறாள்

மணிமேகலை அவளின் எதிர் வீட்டில் இருக்கிறாள், இவள் சென்னை வந்த புதிதில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற போது இவளுக்கு பெரிதும் நம்பிக்கை அளித்தவள் மணிமேகலை தான், அவள் தான் நான் வேலைக்கு செல்வதால் எனக்கு காலைக்கும், உணவு சமைத்து தருமாறு கதிரழகியிடம் கூறினாள், அவள் அப்போது இருந்த நிலையில் அவளால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது, ஆனால் அப்போது மணமேகலை கேட்ட போது ஒத்துக்ககொண்டவள், அவள் மூலம் மேலும் இருவருக்கு சமைக்க அவளுக்கு கணிசமான வருமானம் வந்து. அவள் அப்படியே தேங்கிவிடாமல்  அவள் வாழ்வில் அவள் அடுத்த அடி எடுத்து வைக்க எப்போதும் பக்கபலமாக இருப்பவள் அவள். அதனால் இன்னும் அவளுக்கு சமைப்பதை வாடிக்கையாக வைத்து இருக்கிறாள். அதை புரிந்துக்கொண்ட மணிமேகலையும் அதை மறுக்கவில்லை. பொரும்பாலும் காலை வேளைகளில் அவள்  வந்து மதியை பார்த்துவிட்டு உணவை வாங்கி செல்லவாள், இல்லை என்றாள் இவள் கொண்டு போய் கொடுப்பாள், இன்னும் ஒருவருக்கும் மதியம் உணவு சமைத்து கொடுக்கிறாள் அதுவும் மணிமேகலை கேட்டதினால் மட்டுமே, அவர்களுக்கு பள்ளியில் பிள்ளைகளை விட செல்லும் போது கொடுத்துவிடுவாள். 

வீட்டை விட்டு வெளிவந்தவள் தெருமுனைய வந்த உடன் மதிகுட்டி என்று அழைக்கவும், கதிர் அவளை இறக்கிவிட்டான். தன் அம்மாவின் கையை பற்றிக்கொண்டவள், எல்லோரையும் பார்த்து கையசைத்து தன் அம்மாவுடன் கதை பேசியபடி அங்கு இருந்த மெக்கானிக் ஷேட்க்குள் நுழைந்தார்கள் இருவரும். 

இவளை பார்த்தவுடன் ஒரு பையன் புன்னகைத்த படி சாவி எடுத்து கொடுக்க, அதை பெற்றுக்கொண்டவள் அண்ணா இன்னும் வரலயா என்றாள் அவனிடம், இப்பதான் வீட்டு போனார் கா, என்றவன் மதியிடம் திரும்பி, மதிகுட்டி இன்னிக்கு ஸ்கூலுக்கு போறியா என்றான். அவளும் தன் குண்டு கன்னத்தில் குழிவிழ சிரித்தபடி ஆம் என்று தலை அசைத்து அவனுக்கு டாடா காட்டினாள். அதற்குள், அங்கு நின்று இருந்த மாருதி ஆம்னி வேனை வெளியில் எடுத்தவள், மகளை தன் அருகில் இருக்கும் இருக்கையில் அமரவைத்தவள், பள்ளி பிள்ளைகளை பீக்கப் செய்ய கிளம்பினாள். இது எல்லாவற்றையும் பார்த்த படி தான் நின்று இருந்தனர் கதிரழகி வீட்டினர். 

போகும் அவர்களையே பார்த்து இருந்தான் அன்பழகன், தன் மனைவி, தன் குழந்தை ஆனால் இன்று ஏதும் அவனுக்கு சொந்தம் இல்லை.  அன்று நான் மட்டும் அப்படி நடக்காமல் இருந்து இருந்தால் இன்று எனக்கு இந்த அழகான குடும்பம் இருந்து இருக்கும். எத்தனை நம்பி இருப்பாள் என்னை, எத்தனை கொஞ்சி இருப்பாள்……………………. ஆனால் எதையும் காதில் வாங்காமல் போனேன்……….. இன்று அவள் என்னைவிட்டு வெகு தூரம் போய்விட்டாள். மீண்டும் திரும்ப வர முடியாத தூரம். நினைக்க நினைக்க அவன் மனம் கல்லை போல் கனத்து. 

அன்று அவள் அது அவன் பிள்ளை தான் என்று ஊர் முன்னால் கத்தி கதறிய போது அவனுக்கும், பெற்றவர்களுக்கும் அது கேட்கவில்லை. இன்று அது என் பிள்ளை என்று மனதில் கதறுகிறான் தான், அது எல்லோருக்கும் கேட்கிறது தான் ஆனால் ஏதும் செய்ய முடியவில்லை.

ஆனால் ஏதும் செய்ய முடியாது. அவன் முகத்தையே பார்த்து இருந்த நந்தினிக்கு அடுத்து என்ன நடக்கும்மோ என்று மனம் அடித்துக்கொண்டது. தான் விரும்பி மனந்த கணவன் ஆனால் அந்த திருமணம் அவளுக்கு ஒரு நாள் கூட சந்தோஷத்தை கொடுக்கவில்லை. 

அவள் செய்த செயல்கள் எல்லாம் அவளை மனதால் புழுங்க வைத்து. எந்த நேரம் இந்த வாழ்க்கை கைவிட்டு போய்விடுமோ என்று நித்தமும் பயம், சஞ்சலம் தான் மனதில்

அவளின் பெற்றோர் மனநிலையோ வேறு மாதிரியாக இருந்து, இப்போதாவது இவள் கதிரை மணக்க சம்மதிக்க மாட்டாளா? இவளை அவன் கையில் பிடித்து கொடுத்துவிட்டாள், நாம கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம், ஆனால் அவள் தான் எதற்கும் வாய் திறக்க மறுக்கிறாளே என்று அவர்களை பார்த்து பெரு மூச்சுவிட்டார் ரத்தினம்.

ஆம் அவர் தான் அவர்கள் திருமணத்தை தடுத்து, தன் தம்பி அன்பழகனுக்கும் அவளுக்கும் திருமணம் நடக்க காரணமானவர். ஆனால் இன்று அவள் கதிர் உடன் திருமனம் செய்துவைத்து, ஒரு நல்ல வாழ்வு அவளுக்கு அமைந்து விடாதா என்று நித்தம் கடவுளை வேண்டுவரும் அவரே!!!!!!!

தொடரும்………………

Advertisement