Advertisement

அதாவது வீட்டின் நுழைவாயில் மாற்ற பட்டிருந்த புகைப்படத்தை கீழே போட்டு உடைத்திருந்தான். அது மட்டுமல்லாது அவர் ஞாபகமாக வைத்திருந்த குட்டி குட்டி புகைப்படமும் ஒருகையால் அவன் கிழித்து போட மறுகையில் இருந்த மதுபானத்தை அறுந்தி கொண்டு இருந்தான்.
அவனின் செய்கையில் திகைப்புற்றவர் ,அவனருகே வந்து அவனின் கண்ணத்தில் ஓங்கி அரை விட அந்த சத்தத்தை விட அவனின் சிரிப்பு சத்தம் பெரிதாக இருந்தது.
“வசி என்ன காரியம் பண்ணிட்டு இருக்க நீ ” என்று கோபமாக கத்த
“என்ன டாடி உங்க கண்ணம்மாக்காக சாரி சாரி என்னோட அம்மாள அவுங்க மறந்துட்டேன் ” என்று நக்கலாக சிரித்தவன் ” அவுங்களுக்காக நீங்க என்னையே கை நீட்டி அடிச்சிட்டிங்கள ” என்று ஆதங்கம் பட்டவன் “இதுக்கு எதாவது பண்ணணுமே ” என்று பித்து பிடித்தவன் போல் அங்கும் இங்கும் நடக்க தொடங்கினான்.
அதற்குள் பாரி அவரின் கண்ணம்மாவின் புகைப்படத்தை எடுக்க போக ,”ஹான் ஐடியா வந்துடுச்சி ” என்றவன் ஆங்காரமாக சிரித்தவன் ,
“தள்ளுங்க டாடி ” என்று அவரை தள்ளி விட்டவன் அந்த புகைப்படத்தின் மேலே மது பாடில்லை கவுத்தி நெருப்பை பற்ற வைத்தான்.
அவன் தள்ளிவிட்டதில் தடுமாறியர் நிலைப்படுத்தி கொள்வதற்குள் அவன் இப்படி ஒரு காரியத்தை செய்து வைக்க , அவருக்கு ஆத்திரம் மட்டுப்படாமல் போக வசியை தன்னால் முடிந்தவரை அடித்தார். ஆனாலும் அவன் கல்லு மாதிரி அப்படியே நின்றான்.
“எவ்வளவு வேணாலும் அடிச்சிக்கோங்க டாடி. ஏன்னா நான் உங்க புள்ள ஆனா யாரோ ஒருத்தருக்காக நீங்க என்னை அடிக்கிறத என்னால தாங்கிக்க முடியாது “
அவனின் கூற்றில் இடி விழுந்தது போல் இருக்க ,” டேய் அவ உங்க அம்மா டா ,அவள பாத்து யாரோ ஒருத்தர்ன்னு சொல்ற உனக்கு என்ன மூலை ஏதும் கெட்டு போச்சா என்ன ” என்று சீற்றத்துடன் கேட்க
“இவ்வளோ நாள் பளிங்கு போல இருந்த மூலை இப்போ தான் சரியா வேலை செய்யுது. அவுங்க அம்மான்னு சொல்றீங்க ஆனா அதுக்கு அவுங்க நம்ம கூடல இருக்கனும். அவுங்க எங்க இங்க இருக்காங்க சொல்லுங்க ” என்று கேள்வி எழுப்ப ,பாரிவேந்தர் அவனின் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் தவித்து போனார்.
” நான் பிறந்ததுல இருந்து அவுங்க நம்ம கூட இல்லையே அது ஏன் பா.? அவுங்க தான் அம்மான்னு சொல்றீங்க அப்புறம் ஏன் அவுங்க என்னைய பாக்க வராம இருக்காங்க சொல்லுங்க .அது கூட பரவால்ல பாக்க தான் வரல அட்லீஸ்ட் ஒரு போன் கால் பண்ணி பேச என்னவாம் . இதை எல்லாம் வச்சி பாக்கும்போது எனக்கு சந்தேகமா இருக்கு அவுங்க தான் என்னோட அம்..” என்று சொல்லி முடிப்பதற்குள் அவனின் கன்னம் பழுத்திருந்தது.
“என்ன பேசிட்டு இருக்க வசி நீ .என்ன பேசுறோம் யார பத்தி பேசுறோம்னு தெரிஞ்சு தான் பேசுறீயா சொல்லு .அவ உன்னோட அம்மா டா உன்ன பத்து மாசம் சுமந்து பெத்தவ .என்னைய விட அவளுக்கு தான் அதிகமான உரிமை உன்மேல இருக்கு. ஆனா அவ அதையெல்லாம் விட்டுட்டு எங்கோ இருந்து கஷ்ட படுறா .யாருக்காக அந்த கஷ்டம் எல்லாம் அனுபவிக்கிறா எல்லாம் உனக்காக, அவளோட வாழ்க்கையே நம்ம இரண்டு பேரு தான் டா. நம்மக்காக மட்டும் தான் எங்கேயோ அவ உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கா .வாய் இருக்குன்றதுக்காக என்னவெல்லாம் பேசலாம்னு அர்த்தம் இல்லை. சொன்ன சொல்லை எப்பவுமே அல்ல முடியாது வசி புரிஞ்சி நடந்துக்கோ ” என்று அவனின் தவறை உணர்த்த நினைத்து பேச அவனோ எங்கோ வெறித்து கொண்டிருந்தான்.
” அவுங்க நம்மக்காக தான் வாழ்றாங்கன்னா இப்போ எங்க இருக்காங்க சொல்லுங்க அவுங்கள போய் உடனே கூட்டிட்டு வந்திடலாம் ” என்க
“அ..அ..அது தெ..ரி..யா..து ” என்று திக்கி திணறி சொல்ல
” தெரியாதா இல்ல தெரியாத போல் நடிக்கிறீங்களா ” என்க
அவனின் கேள்வியில் அதிர்ச்சியடைந்தவர் அதனை மறைத்து கொண்டு “அது வந்து..” என்று இழுக்க
“எதுக்கு அது வந்து பொந்துன்னு இழுக்குறீங்க .அவுங்க தான் என்னோட அம்மான்னா இன்னைக்கு நீங்க அவுங்க எங்க இருக்காங்கன்னு சொல்லியே ஆகனும் டாடி .இல்லன்னா அவுங்க கொடுத்த இந்த உயிர் எனக்கெதுக்கு ” என்று சொல்லி அந்த பாடில்லை உடைத்தவன் அதில் கிடைத்த கண்ணாடி சில்லை கொண்டு மணிக்கட்டில் வைத்து அழுத்தம் தர “வசி என்ன பண்ற நீ ” என்று அதிர்ச்சியடைந்தவர் தடுக்க முயல அவன் இரண்டடி பின்னுக்கு சென்றவன்,
” அவுங்க எங்க இருக்காங்க சொல்லுங்க பா ” என்று மேலும் அழுத்தம் தர மெதுமெதுவாக அவன் உதிரம் வெளியேற தொடங்க அதில் பயந்து போனவர் “சொல்றேன் சொல்றேன் டா ” என்றவர் கை மீறி போன நிலையை எண்ணி மானசியமாக தன் கண்ணம்மாவிடன் மன்னிப்பு கூறியவர் ” செம்மலபுரம் ” என்று கத்தலானார்.
அடுத்த நொடியே “அதான் சொல்லிட்டேன்ல இப்போவாது அத எடுத்து போடு டா ” என்று தந்தையாக தவிப்புடன் சொல்ல
அதுவரை அழுத்தம் கொடுத்ததினாலோ என்னவோ வசி அதை எடுக்கும் போது கையினில் தானாகவே கீச்சியது . அதிலிருந்து இரத்தம் சொட்ட ,பயந்து போன பாரி உடனே விபுவிற்கு அழைத்து மருத்துவரை அழைத்து வர சொன்னார்.
அவனும் சிறிது நேரத்திலே மருத்துவரை அழைத்து வர , வீட்டின் நிலையை கண்ட நொடியே எதுவோ ஒன்று தவறாக பட எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.
லேசான கிழிசல் என்பதால் ஒரே ஒரு ஸ்டிச் மட்டும் போட்டு விட்டவர் ,தேவையான மருந்துகளை கொடுத்து விட்டு சென்றார்.
அவர் நிமிடமே அறைக்கு சென்று கதவை அடைத்தவன் மாலைப் போல் தான் வெளியவே வந்தான் ஒரு பேகை மாட்டிக்கொண்டு….
யாரையும் கவனியாது விருட்டென சென்று விட்டான் வசீகரன். ஒரு தந்தையாக பாரிக்கு அவனின் இன்றைய செயல்கள் அனைத்தும் கவலையை தொடுத்தது.
இதோ அதோ என்று இப்போது ரயிலில் அமர்ந்துள்ளான் வசி. அவனையும் அறியாமல் தந்தையை காயப்படுத்தியதற்காக விழியில் இருந்து கண்ணீர் துளித்தது. பாசத்தையும் அன்பையும் மட்டுமே காட்டி வளர்த்த தந்தையின் மனதை நோகடித்ததை எண்ணி மருகிப் போனான்.
%%%%£%%%%
இங்கே ஆதினியும் பூங்குழலியும் அவர்களின் முதல் தேர்வை வெற்றிகரமாக முடித்த சந்தோஷத்தில் பேக்கரி சென்று ஆளுக்கு ஒரு பப்ஸூம் காபியும் வாங்கி அருந்தினர்.
அதற்குள் அங்கு வேலை பார்க்கும் பையன் ஒருவன் அவர்கள் பக்கத்தில் வந்து ” வேற எதுவும் வேணுமா ” என்று பவ்வியமாக கேட்க
” என்ன கேட்டாலும் கிடைக்குமா ” என்று ஆதினி கேட்க
அவளை கண்டு முழித்தவன் ,” சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்னு அத‌ கொடுக்குறோம் ” என்று சொல்லி நிற்க
அதனை கண்டு சிரித்த இருவரும் ,” சரி அப்போ எனக்கு ஒரு ஐயாயிரம் ரூபாய் அவளுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கொண்டு வா போ ” என்றவள் தோழியின் புறம் திரும்பி ” பத்தாயிரம் போதும் தான‌ பூவு ” என்க
அவளோ சங்கடமாக நெளிந்தவள் ,” கொஞ்சம் அமைதியாயிரேன் டி .எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க பாவம் என்ன பேசுறதுன்னு தெரியாம வாயடிச்சு நிக்கிறாங்க பாரு ” என்று சொல்ல
” அவுங்க எப்படி வேணா நின்னுட்டு போட்டும் டி அது நமக்கு தேவை இல்ல. நானா போய் அவுங்க கிட்ட இது வேணும்னு கேக்கள .அவரா‌ வந்து என்ன வேணும்னு கேட்டாரு .இப்போதைக்கு நமக்கு தேவையானதை கேக்குறோம் அவ்வளோ தான் ” என்றவள் பின்னலிட்டு இருந்த கூந்தலை எடுத்து முன்னுக்கு போட்டாள்.
அங்கு வந்து நின்றவனோ இருவரும் பேசுவதை பேவென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை பார்க்க பூவிற்கு பாவமாக இருக்க, அவள் காதருகில் நெருங்கி ” ஹேய் விட்டுடு டி பாக்கவே பாவமா இருக்கு ” என்று கிசுகிசுக்க
“அப்படியா சொல்ற ,சரி சீக்கிரமா விட முயற்சி பண்றேன் ” என்று கண்ணடித்தாள்.
அவன் புறம் திரும்பிய ஆதினி ,” என்ன‌ அப்படியே வாய பொளந்துக்கிட்டு நிக்குறீங்க போங்க போய் நான் கேட்டத எடுத்துட்டு வாங்க ” என்று சொல்ல
“என்ன மா உங்களுக்கு விளையாட நான் தான் கிடைச்சேன்னா .சாப்பிடுறதுக்கு என்ன வேணும்னு கேட்டா நீங்க காசு வேணும்னு கேட்டுட்டு இருக்கீங்க ” என்று சண்டைக்கு தயாராக..
” நீங்க தான சொன்னீங்க மிஸ்டர் எது கேட்டாலும் தரேன்னு.அதுனால தான எங்களுக்கு வேண்டியத கேட்டோம். இதுல என்ன தப்பு இருக்கு சொல்லுங்க  ” என்று சத்தமாக பேச
அதற்குள் அந்த கடையின் ஓனர் இவர்களின் சத்தத்தை கேட்டு வந்துவிட ,” என்ன மா ஆச்சி எதுக்கு சத்தம் போடுறீங்க ” என்று கேட்க
” அண்ணா இங்க பாருங்க இந்த பொண்ணு தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கு என்ன வேணும்னு கேட்டா காசு வேணும்னு சொல்லுது னா ” என்று தன் முதலாளியிடம் குற்ற பத்திரிகை வாசிக்க
அதனை கேட்டு சிரித்தவள் ,” அவரும் சாப்பிட என்ன வேணும்னு கேக்களையே என்ன வேணும்னு மொட்டையா தான் கேட்டாரு. அது மட்டும் இல்லாம இதோ இவரு நாங்க கடைக்கு வந்ததுல இருந்தே எங்களையே தான் பாத்துட்டு இருக்காரு. ஆடர் வந்த அஞ்சு நிமிஷத்துலையே திரும்ப வந்து என்ன வேணும்னு கேட்டா எப்படி சொல்லுங்க ” என்று ஞாயம் கேட்க
அவனை கண்டு முறைத்தவர் ,” மன்னிச்சிடுங்க மா இனி இந்த மாதிரி எதுவும் நடக்காது நான் பாத்துக்குறேன் ” என்று சொல்லி வாக்குறுதி கொடுத்து சென்றார்.
” பொண்ணுங்கன்னா உனக்கு என்ன டிவியா அப்படியே பாத்துக்கிட்டே இருக்க ,செருப்பு பிஞ்சிடும் பாத்துக்க ஒருத்தனோட பார்வைய கூட புரிஞ்சிக்க முடியாத அளவு முட்டாளுங்க இல்ல டா பொண்ணுங்க . அதுவும் என்கிட்ட இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சிக்காத பாக்குற கண்ண நோண்டி எடுத்து உனக்கே அத தீனியா கொடுத்திடுவேன் ஜாக்கிரதை ” என்று மிரட்டி விட்டு ” வா பூவு போலாம் ” என்று அவளை அழைத்து சென்றாள்.
போகும் அவளையே வெறித்து பார்த்தவன் , அனைவரும் தன்னையே பார்ப்பதை கண்டு வெட்கி உள்ளே சென்றுவிட்டான்.
பூங்குழலியை அழைத்துக் கொண்டு வந்தவள் ,அவளை அவளது வீட்டில் விட்டுவிட்டு வேகமாக தன் அத்தையை காண சந்தோஷமாக சென்றாள்.
வீட்டிற்கு கோபமாக வந்த சதாசிவம் ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டார்.
சரியாக அந்த நேரம் பார்த்து வெளியே வந்த பேச்சியம்மாள் தன் மகனை கண்டு ,” என்னயா ராசா போன வேகத்துலையே வெரசா வீட்டுக்கு வந்துட்ட .போன வேலை எல்லாம் நல்லா படியா முடிஞ்சிதா பா .ஏன் கேக்குறேன்னா நீ போகும் போதே அந்த ராசியில்லாதவள பாத்துட்டு போன அதான்யா கேக்குறேன் ” என்று பொறுமையாக அவர் பக்கத்தில் அமர்ந்து கேட்க
“அதான் நீங்களே சொல்லிட்டிங்களே மா ராசியில்லாதவள பாத்துட்டு போனேன்னு. அப்புறம் எப்படி நான் போன வேலை ஒழுங்கா முடியும் சொல்லுங்க . எல்லாமே போச்சி மா நாம எடுக்க வேண்டிய அந்த ஏலத்தை அவன் எடுத்துட்டான். அந்த சின்னராசு எடுத்ததும் இல்லாம நான் ஜெயிச்சிட்டேன் பாத்தியா ஒரு பார்வை பார்த்துட்டு போறான் மா அவமானமா போச்சி ” என்றவர் கோபத்தில் நாற்காலியிலே ஓங்கி குத்தினார்.
“நம்ம கிட்ட வேலை பாத்து அதுல புளச்சி வந்த அந்த சின்னராசு எல்லாம் என் மவன ஜெயிச்சிப்புட்டானா .இதுக்கு காரணமான அந்த ராசியில்லாதவள இனியும் இங்க விட்டு வச்சா அது நமக்கு தான்யா சாபக்கேடு ” என்று பொறிந்தார் பேச்சியம்மாள்.
அவர் பற்ற வைத்த நெருப்பு சரியாக சதாசிவத்தின் மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்க ,உடனே அவர் சீதாலட்சுமியை அழைத்துக் கொண்டு நங்கையின் வீட்டிற்கு சென்றார்.
இத்தனை வருடங்களில் நங்கையின் வீட்டிற்குள் ஆதினியை தவிர்த்து யாரும் வந்ததில்லை. இன்று அதிரடியாக உள்ளே நுழைந்த சதாசிவத்தை கண்டு திகைத்தவர் ” வாங்க ஐயா ” என்று புன்னகையோடு வரவேற்றார்.
அவரின் புன்னகையில் எதை நினைத்தாரோ , எதுவும் பேசாமல் அவரது உடைமைகளை எடுத்து வெளியே போடத் தொடங்கினார்.
“ஏங்க என்ன பண்றீங்க நீங்க ” என்று பதறிப் போய் தடுக்க முயன்றார் சீதாலட்சுமி.
தன் மனையாளை முறைத்த சதாசிவம் ,” பேசாம இரு இல்ல நீயும் இப்படி வெளியே போக வேண்டியது வந்துரும்.நான் அவமான பட்டு வந்தது உன் கண்ணுக்கு தெரியல ஆனா இந்த ராசியில்லாதவளோட துணிய வெளிய போடுறதுக்கு இப்படி துடிக்கிற .உன்னோட இரத்தம் தான உன் பொண்ணுக்கும் ஓடும். அதான் அவளும் இப்படி இருக்கா ” என்றவர் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களையும் வெளியே போட ஆரம்பித்தார்.
நங்கை எதுவும் கேட்கவுமில்லை தடுக்கவும் இல்லை அமைதியாக ஒரு இடத்தில் ஓரமாக நின்றார். இந்த மாதிரி என்றாவது ஒரு நாள் நடக்கும் என்று யூகித்தவர் தானே .அதுனாலையே அவர் அமைதியாக இருந்தார்.
அனைத்து பொருட்களையும் வெளியே எறிந்தவர் ,நங்கையை நோக்கி நடையிட்டார்.
“உன்னால இந்த ஊருல உள்ளவுங்க கஷ்டப்பட்டதெல்லாம் போதும் . இனியாவது எங்களை நிம்மதியா வாழ விடு. உன்னோட ராசியால நாங்க பட்டது எல்லாம் போதும் வெளிய போ ” என்று நங்கையின் வலக்கரத்தை பிடித்து இழுத்து வந்து வெளியே தள்ளிவிட ,வேகமாக வந்து அவரை இரு கரங்கள் தாங்கி பிடித்தது.
அது யாரென்று இருவரும் பார்க்க ,அங்கே ருத்ர காளியாக நின்றிருந்தாள் ஆதினி.
அவரை நிமிர்ந்து நிற்க வைத்த ஆதினி நங்கை கண்டு ஏகத்துக்கும் முறைத்தவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்களை பார்வையாலே சுட்டெரித்தாள்.
” எதுக்கு உங்க துணி எல்லாம் இப்படி வெளிய போட்டு இருக்க ப்யூட்டி ” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க
அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று விக்கித்து போய் நின்ற நங்கைக்கு கஷ்ட தரமால் சதாசிவமே பதில் கூறினார்.
“இந்த ராசியில்லாத இனி இந்த ஊருல இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதான் இந்த ராசியில்லாதவ உபயோக படுத்தின எல்லாத்தையும் எடுத்து வெளிய தூக்கி போட்டேன். இது இங்க இருந்தா நம்ம ஊருக்கு எந்த ஒரு நல்லதும் நடக்காது ” என்று பதிலுரைத்தார்.
அவரின் பதிலில் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரித்து , அவரின் பீப்பியை ஏற்றினாள் அவரின் தவப் புதல்வி .
” இப்போ எதுக்கு நீ தேவையில்லாம சிரிச்சிட்டு இருக்க கொஞ்சம் வாய மூடிட்டு உங்க அம்மா பக்கத்துல போய் நில்லு ” என்றவர் ” இன்னும் எதுக்கு இங்க நிக்கிற கிளம்பு முதல ” என்று துரத்தி விட..
“சரி  ப்யூட்டி உன்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா நாம் போலாம் ” என்று அவரை அழைக்க
” ஏய் ” என்று கத்தினார் சதாசிவம்.
” எதுக்கு இப்போ இப்படி கத்துறீங்க அப்புறம் உங்களுக்கு தான் பீப்பி வரும் பாத்துக்கோங்க ” என்று தந்தை என்னும் பாராமல் பேச அவளை பார்த்து முறைத்தார் சதாசிவம்.
“எதுக்கு இப்போ முறைக்கிறீங்க . நான் என்ன தப்பா சொல்லிட்டேன் சொல்லுங்க . நீங்க தான சொன்னீங்க அத்தை யூஸ் பண்ண பொருள் எல்லாம் இங்க இருந்தா நல்லது எதுவும் நடக்காதுன்னு. அப்போ அவுங்க வளர்த்த நான் மட்டும் எப்படி இங்க இருக்க முடியும் சொல்லுங்க. அவுங்க மட்டும் அன்னைக்கு உங்களுக்கு உதவி செய்யலன்னா இன்னைக்கு இதோ உங்க பொண்ணா நான் உங்க முன்னாடி இங்க இருந்திருக்க முடியுமா .அத்த மட்டும் இல்லாம இருந்திருந்தா என்ன புதைச்ச இடத்துட இன்னேரத்துக்கு மரமே வளர்ந்திருக்கும் . அவுங்கள பாத்து ராசியில்லாதவன்னு சொல்றீங்க .நம்ம பாக்குற பார்வையிலையும் நினைப்புலையும் இருக்கு. நீங்க யோசிக்கிற கோணத்தை மாத்தின்னா எல்லாமே சரியா தெரியும் பா ” என்றவள் ” வா ப்யூட்டி போலாம் நமக்கு இந்த கேவலமான ஊரு இனி தேவை இல்லை ” என்று அவரின் உடைமைகளை எடுத்து அடுக்க
” அய்யோ ஆதினி என்ன மா பேசுற நீ ” என்று பதறிப் போய் விட்டார் அந்த அன்னை.
அவரை உறுத்து ஒரு பார்வை பார்த்தவள் அமைதியாக வேலையை தொடர்ந்தாள்.
“ஏங்க நம்ப பொண்ணு போறேன்னு சொல்றா .அவளை போக வேண்டாம்னு சொல்லுங்க ” என்று மன்றாட அவரோ கல் போல் நின்றிருந்தார்.
எதையோ சிறிது யோசித்தவர் மொபைலை எடுத்துக்கொண்டு தனியே சென்றார். சிறிது நேரத்திலே திரும்பி வந்து ,” யாரும் எங்கேயும் போக தேவையில்லை .அந்த ராசியில்லாதவ இங்கேயே இருக்கலாம் ” என்றவர் ” ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு அதுக்கு நீ ஒத்துக்கிட்டா அந்த நங்கை இங்க இருக்கலாம் “
பார்வையில் அக்னியை தேக்கியவள் என்ன என்பது போல் பார்க்க ,” உன்ன பாக்க இனி அந்த நங்கை நம்ம வீட்டுக்கு வரகூடாது . அப்புறம் உனக்கு உன்னோட படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் உன்னோட மாமா பையனோட .இதுக்கு நீ சரின்னு சொன்னா அந்த ராசி இல்லாத இங்கையே இருக்கலாம் ” என்றார்.
சிறிது நேரம்  எதையோ யோசித்தவள் ,” தன் அத்தை இங்கே இருந்தால் போதுமென முடிவெடுத்து ” சரி பா நீங்க சொல்ற மாதிரி இனி நங்கை அத்தை நம்ம வீட்டுக்கு வர மாட்டாங்க அதேபோல மாமா பையனையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் ” என்று வருங்காலத்தின் முடிச்சின்னை தெரியாமல் வாக்கு கொடுத்தாள்.
காலங்கள் எவ்வளவு தான் மாறினாலும் இன்றைய தினங்களிலும் இப்படி எல்லாம் நடக்கத் தான் செய்கிறது. ஏதோ ஒன்று எங்கோ நடந்தது என்றாலும் ஒரு பெண்ணையே காரணம் காட்டி அவளை ஒதுக்கி வைக்கும் சமுகம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது. எத்தனை சட்டதிட்டங்கள் வந்தாலூம் மனிதர்களின் எண்ணத்தை முற்றிலுமாக மாற்ற முடிவது இல்லை. ராசியை குறித்து ஒரு பெண்ணை பார்ப்பது மிகவும் தவறான செயலாகும்.
சரணடைவான்…

Advertisement