Advertisement

அத்தியாயம் 8

    உறவுகளின் பாதுகாப்பில் ஒய்யாரமாக வாழ்ந்து வந்தவளுக்கு தனிமை கொடுமையாக தான் இருந்தது..,  ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மற்றவர்கள் தன் முகம் பார்க்கும் போது யாரும் தன் முகத்திலிருந்து எதையும் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு மாறி இருந்தாள்..,

    அருகிலுள்ள அந்த கிளாத் டிசைனிங் நிறுவனத்தில் வேலை பார்த்தது ஒரு பக்கம் அவளுக்கு சிறந்த பயிற்சியாகவே தெரிந்தது..  அங்கு வரைந்து கொடுத்த மாடல்களை அவள் மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது என்பதற்காக அவர்களிடமே கொடுத்து விட்டாள்…,  அவர்கள் அதற்கு தனியாக பணம் தருவதாக சொன்ன போது வேண்டாம்., இத்தனை நாள் நீங்கள் இங்கு வேலை கொடுத்ததே பெரும் உதவி என்று சொல்லி மறுத்துவிட்டாள்.,.

     இந்திய அளவில் எழுதிய அந்த தேர்வில் இவள் தேர்வாகி இருந்ததால் மும்பை கம்பெனியில் வந்து வேலைக்குச் சேரும்படி சொல்லியிருந்தார்கள்.., இங்கு வேலை பார்த்த காசு அனாவசியமாக செலவு செய்யாமல் சேர்த்து வைத்த பணம் என சொல்லி கையில் சேர்த்து வைத்த சேமிப்புகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால் அவளுக்கு தேவையான உடைகளை மட்டும் கொஞ்சம் வாங்கிக் கொண்டாள்.., ஏனெனில் அங்கே போன பிறகு சம்பளம் வாங்கிய பிறகு மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்று அது தவிர பயிற்சி காலம் முடியும்வரை முதல் ஆறு மாதங்களுக்கு கம்பெனி செலவில் அங்கு உள்ள இடத்தில் தங்கிக் கொள்ளலாம் என்றும்., அதன் பிறகு விருப்பமிருந்தால் கம்பெனியில் கொடுக்கும் அப்பார்ட்மெண்டில் வாடகை கொடுத்து தங்கிக் கொள்ளலாம் என்றும்., வசதி வாய்ப்புகள் அங்கு கொடுக்கப்பட்டிருந்தால் அதை உபயோகித்துக் கொள்ளலாம்.,  என்ற எண்ணத்துடன் அங்கிருந்து கிளம்ப தயாரான நேரத்தில், அங்குள்ள பேராசிரியர்களும் சரி அவளுடைய வகுப்பில் படித்த மாணவ மாணவிகளும் சரி அனைவரும் அவளுக்கு தாங்கள் எல்லோரும் எப்போதும் இருப்பதாகவும், எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தங்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றும் கூறி அனுப்பி வைத்தனர்..,

       இதற்கிடையில் அங்குள்ள பேராசிரியர்கள் எத்தனையோ முறை அவள் வீட்டிற்கு பேச முயற்சி செய்து தோல்வியை தழுவினார்கள்…, அவளுடைய அண்ணன் மட்டும் ஒரு முறை போன் செய்து வீட்டில் பெரியப்பா மகளுக்கும் கல்யாண ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும்., ஏற்கனவே பெரியப்பாவின் ஒரு மகளுக்கும்., மகனுக்கும் திருமணமாகி இருந்ததால்.,  அவளுடைய அண்ணனுக்கும் வரன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னான்..,

     அதுமட்டுமன்றி இங்கு நடக்கும் எதுவும் சரி இல்லை., நீ அங்கே இருப்பது தான் உனக்கு பாதுகாப்பு என்றும் சொல்லிக்கொண்டிருந்தான்.,,  அம்மாவிடம் பேசி உன்னை இங்கு அழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.,  ஆனால் பேசுவதற்கு முன்பே அத்தை வீட்டில் அவள் இங்கு வரக்கூடாது என்று பேசியதாகவும்., வந்தால் தங்கள் குடும்பத்தினருக்கும் கேவலம் என்றும் பேசுவதாக சொல்லி அதனால் பேசாமல் விட்டதாகவும்., அவள் அண்ணன் சொன்னான்…

     இவள் எதையும் கண்டுகொள்ளவில்லை.,  சரி விடு நான் என் வேலையை பார்த்துக் கொள்கிறேன்..,  நீ குடும்பத்தை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு எனக்காக பேசி நீ கெட்ட பெயர் வாங்காதே என்று சொல்லிவிட்டாள்..,  அதன் பிறகு அவள் அண்ணனிடம் பேசவில்லை மும்பை சென்ற பிறகு போன் நம்பரை மாற்றியவள் முக்கியமான சில பேராசிரியர்களுக்கும் நெருங்கிய நட்புக்கும் மட்டும் அவளுடைய அலைபேசி எண்ணை கொடுத்தாள்..

          ஒருமுறை அவள் அவளுடைய பயிற்சி வகுப்பில் இருந்து திரும்பிய நேரம்., அவளுடைய பேராசிரியர் ஒருவர் அலைபேசியில் அழைத்து “நிரஞ்சன் வந்திருந்ததாகவும்., அவன் டெக்ஸ்டைல் பிசினஸ் ஆரம்பிக்கப் போவதாகவும்., உன்னுடைய மும்பை அட்ரஸ் கேட்டான்.., நான் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டேன் கொடுக்கவா”.,  என்று கேட்டதற்கு

    “இல்ல மேம் வேண்டாம் கொடுக்க வேண்டாம்., நான் தான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேன்ல மேம்.., என்னால யாருக்கும் பிரச்சனை வேண்டாம்., அதுக்கு தான் கொடுக்காதீங்க”..,  என்று சொல்லிவிட்டாள் “என்னால யாருக்கும் எந்த கஷ்டமும் வந்துடக் கூடாதுன்னு., அதனால் தானே நானே ஒதுங்கியிருக்கேன்., இல்லாட்டி எங்க வீட்ல போய் அம்மா கிட்ட பேச தெரியாமலா., எங்க ஊர பத்தி எனக்கு தெரியும்., எங்க அம்மா அப்பாவை பத்தி எனக்கு தெரியும்., அந்த குடும்பத்தை பற்றியும் தெரியும்., ரொம்ப கெளரவம் பாப்பாங்க., ரொம்ப பிரச்சனை பண்ணுவாங்க.,ன்னு..  நான் திரும்பி ஊருக்கு போகாமல் இருக்கேன்”..,

    “அவங்களாவது பேமிலியோடு  நல்லா இருக்கட்டும்.., அதனால என்ன பத்தி யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்” என்று சொன்னாள்.., பிறகு அந்த பேராசிரியர் இடமே “எனக்கு நிரஞ்சன் தொடங்கப் போகும் கம்பெனியின் விலாசம் மட்டும் வேண்டும்” என்று கேட்டாள்.

    எதற்கு என்று கேட்டதற்கு “என் உயிரை காப்பாற்றி நான் இன்று உயிரோடு இருப்பதற்கு காரணமான நிரஞ்சன் சாருக்கு ஒரு சின்ன கிஃப்ட் வாங்கி அனுப்பனும்.. அட்ரஸ் நான் மும்பையில் இருந்து அனுப்ப மாட்டேன்., என்னோட பிரண்டு ஒருத்தர் நெக்ஸ்ட் வீக் டெல்லி போறாங்க.., அவங்க கிட்ட சொல்லி டெல்லியிலிருந்து அனுப்பிப்பேன்..,  நான் எங்க இருக்கேன் கூட அவங்களுக்கு தெரியாது.., ஆனா அவங்க கையில கிடைக்கிற மாதிரி அனுப்பி விடுவேன்”.. என்று சொல்லி விலாசம் மட்டும் வாங்கிக் கொண்டாள்.,

      அவன் கம்பெனி எப்போது தொடங்குகிறது.., எப்போது திறப்பு விழா என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு திறப்பு விழா முடிந்து பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து அவன் கையில் கிடைக்கும் படி ரெஜிஸ்டர் போஸ்டில் அவனுக்கான பரிசு பொருள் ஒன்றை அனுப்பி வைத்தாள்.. அது எவ்வளவு பெரிய பரிசுப்பொருள் என்பது அத்துறையில் இருப்பவர்களுக்கு நிச்சயமாக தெரியும்.  அப்படிப்பட்ட பரிசு பொருள் ஒன்றை அவன் கையில் சேரும் வண்ணம் அனுப்பி வைத்து நன்றி மட்டும் தெரிவித்து “என்றும் நன்றி மறவா மகிமா” என்று மட்டும் போட்டிருந்தாள்.., அதற்கு மேல் “இன்று நான் உயிரோடு இருப்பதற்கு மிக முக்கியமான காரணமான நிரஞ்சன் அவர்களுக்கு” என்று தொடங்கி இருந்தால் அதன் பிறகு “இந்தப் பரிசு நிச்சயம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்பி அனுப்புகிறேன். உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள் இது இனி உங்கள் உரிமை” என்று மட்டும் போட்டிருந்தாள்..

    சரியாக அவள் அனுப்பிய மூன்றாம் நாள்.., அவன் கையில் அந்த பரிசுப் பொருள் கிடைக்கவும்., பார்த்தவனுக்கு ஒருபுறம் சந்தோஷம் என்றால்.., மறுபுறம் மனம் வலிக்கும் அளவிற்கு ஒரு வலியை உணர்ந்தான்.., எவ்வளவு திறமை அவளை நான் எதற்கெடுத்தாலும் திட்டியிருக்கிறேன்..  இப்படி திறமை வாய்ந்த ஒரு பெண்ணின் படைப்பு என்கையில்  எனக்கான பரிசாக, அவள் அனுப்பியிருக்கிறாள்., இது அவளுடைய எத்தனை வருட உழைப்பாக இருக்கக்கூடும் அல்லது எத்தனை மாத உழைப்பாக இருக்கக்கூடும் அத்தனையும் உரிமை உங்களுக்கு என்று எழுதி இருக்கிறாளே என்ற எண்ணத்தோடு அதையே சற்று நேரம் வெறித்து பார்த்தவன்., அதை பத்திரமாக முக்கியமான பொருள் வைக்கும் இடத்தில் வைத்து பூட்டினான்.., ஏனெனில் அது அவன் தொழிலுக்கு மிகவும் உதவக்கூடியது., அவன் தொழிலை உயரத்தில் ஏற்றக்கூடிய ஒன்று என்று அவனுக்கும் தெரியும்..

      அதன் பிறகு பயிற்சி முடிந்ததும் தெரியாமல் முடிந்து.., வேலையும் வேகமாக போய்க் கொண்டிருந்தது.., அவளுடைய வரையும் நேர்த்தி, அவளை மேலும் மேலும் உயர்த்திக் காட்டியது. எந்த ஒரு வேலை எடுத்தாலும் நேர்த்தியாக செய்யும் விதம், அவளுக்கு எல்லாரிடமும் நல்ல பெயரையும் அங்குள்ளவர்கள் திறமையான ஆடை வடிவமைப்பாளர் என்று சொல்லுமளவிற்கு பெயர் பெற்றாள்…

     குறிப்பிட்ட மாடல்களும்., முன்னணியில் இருக்கும் மாடல் அழகிகளும்.., சினிமா நட்சத்திரங்களும்.., தங்களுக்கு எப்படிப்பட்ட உடை வேண்டும் என்பதை அவளிடம் சொல்லி அவள் வடிவமைத்துத் தரும் ஆடைகளையே உடுத்திக் கொள்ளும் அளவுக்கு நிலைக்கு வந்திருந்தனர்..,

     கிட்டத்தட்ட ஐந்து வருட அவளது வனவாசம்…,  மும்பை வாசம் அவளை முழுதாக மாற்றியிருந்தது., தொழிலில் நேர்த்தி நேர்மை என்று இருப்பவள் எல்லோரையும் ஒரு அடி தள்ளி நிற்கும்படி தான் வைத்திருப்பாள்.., யாரிடமும் அனாவசியமாக பேச மாட்டாள், அவள் சிரித்து பேசி பார்ப்பது மிகவும் அபூர்வம், அவளுக்கு உதவியாளராக இருக்கும் அவளுடைய ஜூனியர் மாணவி ஒருத்தியிடம் மட்டுமே சாதாரணமாக பேசுவாள்.., மற்ற யாரிடமும் அவள் சாதாரணமாக பேசி யாரும் பார்க்க முடியாது, என்ற நிலையில் தான் இருந்தாள்.

    மூன்று வருடம் அந்த மாடலிங் கம்பெனியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவள்., அதன் பிறகு அங்கு உள்ள பெரிய மாடலிங் கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்து ஆடை வடிவமைத்து கொடுப்பதை செய்துகொண்டிருந்தாள்., ஆனால் எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் அதன் பிறகு அவள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவில்லை., அவளுடைய வருமானம் அதிகரித்திருந்தாலும், அவள் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பாளர் என்பது அவளைப் பார்த்தால் யாரும் சொல்ல முடியாது., அந்த அளவிற்கு தான் அவளுடைய நடை உடைகள் இருக்கும்.., பார்த்தாள் பக்கத்து வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவி போல தான் இருப்பாள் கல்லூரி காலத்திலேயே இடுப்பு அளவிற்கு முடி வைத்து இருந்தவள்., அதன் பிறகு இடுப்பைத் தாண்டி வளர்ந்த நீள முடியோடு., எப்பொழுதும் புடவை அல்லது சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு மிகவும் சாதாரண பெண்ணாக காட்சியளித்தாள்..,

     எப்போதாவது வேறுவழியில்லை அதிக தூரம் பயணம் செய்து வெளியே செல்ல வேண்டியது இருந்தால் மட்டும்., ஜீன்ஸ் குர்தி என்று அணிந்து கொள்வாள்.., அவளது உடை அவளை ஒரு தனித்தன்மையோடு காட்டியது., அது மட்டுமல்லாமல் அவள் யாருடனும் பேசும் போது சற்று தள்ளியே நில் என்று சொல்லும் அவளது நேர் கொண்ட பார்வை அனைவரையுமே அவளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வைத்தது..,

     நான்கு வருட வாழ்க்கையில் தனிமையும் வேதனையும் இருந்தாலும்..,  அதை யாரிடமும் காட்டி கொள்ள மாட்டாள்., வீட்டிலிருந்து அண்ணன் மட்டும் அவ்வப்போது அழைத்துப் பேசுவான்., அவனுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தை கூட இருக்கிறது.., வீட்டில் உள்ள அனைவருக்குமே திருமணமாகிவிட்டது என்று தெரியும் ஒருமுறை அவள் அண்ணன் சீக்கிரம் திருமணம் செய்துகொள்., என்று சொன்னதற்கு பார்க்கலாம்., என்று மட்டும் சொல்லி விட்டால், அதன் பிறகு வேறு எதுவும் சொல்லவில்லை..

         நிரஞ்சன் தொடங்கியிருந்த கம்பெனியின் நேம் தெரியும் என்பதால்., அவனுடைய கம்பெனியின் வளர்ச்சி இவள் காதுக்கு வந்து கொண்டு தான் இருந்தது.., அவன் ஆசைப்பட்ட படி ஒரு பிராண்ட் நேம் பெயரை சொன்னால் அதில் கிடைக்கும் அத்தனை துணிமணிகளும் அவன் கம்பெனியில் கிடைக்கும் அளவிற்கு., அவனது தொழில் முன்னேறி இருந்தது.., அதில் மாடல்களும் இவள் கொடுத்தவை சில மாடல்கள் பெயர் புகழ் பெற்றாலும்.., அவன் இதுவரை எந்த பேட்டியும் யாருக்கும் அளித்ததில்லை.., அவனும் தொழில்துறையில் மிக முன்னேறி வரும் ஒரு நிறுவனத்தில் தலைவராகவே இருந்தான்.., இருவரும் போட்டி போட்டு முன்னேறியது போலவே சில சமயங்களில் அவளுக்கு தோன்றும்…

       அம்முறை டெக்ஸ்டைல் துறையில் சிறந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. அதில் யார் யார் விருது பெறுகிறார்கள் என்பது தெரியாத நிலையிலேயே அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.., அந்த அழைப்பு வந்திருந்த சூழ்நிலையில் மகிமா போக வேண்டுமா என்று யோசிக்கும் போது..,

       அவளுடைய ஜூனியர் மாணவியான அவளுடைய உதவியாளர்.., “என்ன அக்கா இப்படி சொல்றீங்க, கண்டிப்பா போகணும்.., நீங்க எவ்ளோ பெரிய ஆடை வடிவமைப்பாளர் அவார்ட் வாங்குறீங்க.., இதுவரைக்கும் சினிமால கொடுத்தால் கூட நீங்க போய் வாங்கல.., ஒன்னு டைரக்டர் வாங்க சொல்லிருவீங்க.., இல்லாட்டி வேற யாராவது வாங்குவாங்க.., அந்த பிலிம் ல நீங்க டிசைன் பண்ணி கொடுத்த டிரஸ் எவ்வளோ பெருசா பேசினாங்க.., நீங்க எதிலுமே முகம் காட்ட மாட்டேங்கறீங்க.., கேட்டா வேண்டாம் நீங்க டிரஸ் டிசைனர் சொல்லி உங்க பேர கூட சொல்ல மாட்டீங்க..,  போன தடவை கூட பாருங்க அந்த பிலிம் அவார்ட் கொடுக்கும் போது அழகான ஆடை வடிவமைப்புக்கான இந்த படத்திற்கான ஆடை வடிவமைப்பாளர் என்று மட்டும் தான் சொல்ல சொன்னீங்க.., உங்க பேர வெளியே சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க ஏன் இப்படி பண்றீங்க” என்று அந்தப்பெண் வருத்தத்துடன் கேட்க…

        “புரியாது ஜெனிஃபர்..,  நான் வந்து வீட்டை விட்டு விலகி இருக்கிறது.., உனக்கும் தெரியும் இந்த நேரத்துல, நான் சினிமால உள்ளவங்களுக்கு டிரஸ் டிசைன் பண்ணிக் கொடுக்கறேன் அப்படின்னா,,  எங்க ஊர்ல உள்ளவங்களோ.,  இல்ல வேற யாரோ பார்த்தா இந்த பொண்ணு ஏதோ ஒன்னு.., அப்படிங்கற மாதிரி தான் பேசுவாங்க..  சினி பில்டு குள்ள நார்மலா நம்ம தனித் தன்மையோடு தனியா இருந்தாலும்.., நம்மள பத்தி பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க.., அதனால நான் யாருன்னு தெரிய வேண்டாம்.., நான் உன்கிட்ட என்ன சொல்வேன்.., எப்பவுமே நான் டிரஸ் டிசைன் பண்ணிக் கொடுக்கறேன், அப்படின்னா அவங்களுக்கு தேவையான டிசைனா அவங்க தான் வந்து சொல்லணும்.., நான் எந்த சூழ்நிலையிலும் அவங்க இடத்துக்கு நான் போக மாட்டேன்.., அது உனக்கே தெரியும்..,  யாருக்கு என்ன தேவையோ  எவ்ளோ பெரிய நடிகர்கள் நடிகைகளா இருந்தாலும் சரி.,  எவ்வளவு பெரிய மாடலாக இருந்தாலும் சரி ஏன் இடத்துக்கு வந்து எந்த மாதிரி வேண்டும் என்று., என்ன மெட்டீரியலில் வேண்டும் ன்னு அவங்க கேட்கிறார்களோ அது படி செய்து கொடுப் பேனே ஒழிய.,  நான் யார்கிட்டயும் போய் அப்படி இருக்கணும்.., இப்படி இருக்கணும்.., நான் சொல்லவும் மாட்டேன்.., நான் செஞ்சும் கொடுக்க மாட்டேன்.., அதனால நான் தள்ளி நிற்கிறது தான் எனக்கு மரியாதை”..,

    “என்னோட மரியாதையை நான் காப்பாற்றுகிறேன்..,  தனியா ஒரு பொண்ணு இந்த உலகத்துல வாழ்வது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா..,  உனக்கு புரியாது அதெல்லாம் ஃபேமிலி சப்போர்ட்., இல்லாம பக்கத்துல வேற யார் சப்போர்ட்டும் இல்லாமல்..,  தனியே நிற்கும் போது நம்ம பேரு வெளியே ஒரு இடத்தில் வருது.., அப்படின்னா நம்ம ஈஸியா தப்பா பேசுறது க்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு..,  இதைத் தவிர்க்க நம்ம தள்ளி நிற்கிறது தான் நல்லது .., அந்த விதத்தில் தான் தள்ளி நிக்கிறேன்., அதுக்காக நான் என்னோட வளர்ச்சியோ.., என்னோட முன்னேற்றத்தையோ தடை பண்ணல., அது அதுபாட்டுக்கு போய் கிட்டே தான் இருக்கு.., இது இது பாட்டுக்கு.., என்று சொல்லவும்.,

    அவளும் சிரித்துக் கொண்டே “சரி அக்கா உங்க இஷ்டம்., என்று சொல்லிவிட்டாள்.., ஆனால் அந்த அவார்ட் பங்ஷனுக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று டெக்ஸ்டைல் துறையில் இருந்தும்., பெரிய நிறுவனங்களிடம் இருந்தும்., தனிப்பட்ட முறையில் தகவல் வந்ததால் வேறு வழியில்லாமல் அவார்ட் பங்ஷனுக்கு செல்ல வேண்டும் என்ற முடிவோடு இருந்தாள்.., தன்னோடு தன்னிடம் பணிபுரியும் உதவியாளர் பெண் ஒருத்தியும்.,  டிசைனிங் உதவி செய்யும் மற்றொரு பெண்ணையும் அழைத்துக் கொண்டு தான் சென்றாள்.

Advertisement