Advertisement

அத்தியாயம் 7

       அதுவரை அங்கு நடந்த பிரச்சினைகளை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த மகிமா வீட்டினர் அப்போது பேசத் தொடங்கினார்கள். ஏற்கனவே அவர்கள் கூட்டுக் குடும்பம்., குடும்ப கௌரவம் என்று அதிகமாக யோசிக்கும் குடும்பத்திலிருந்து மகிமா வந்து இருப்பதால் அவர்கள் ஒரே வார்த்தையில் “அவளுக்கும்., எங்களுக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் கிடையாது. நீ உழுந்த அந்த பள்ளத்தில் உருண்டு., நீ செத்துப் போயிருந்தால் கூட என் பொண்ணு செத்து போய்ட்டா ன்னு வெளியே சொல்லீருப்பேன்..,  ஆனா நீ இப்போ திரும்பி வந்ததை நான் எப்படினு சொல்ல முடியும்., ஒரு பையன் கூட ஒரு நாள் ஃபுல்லா அந்த காட்டுக்குள்ள இருந்துட்டு வந்துட்டான்னு சொல்லனுமா”.. என்றார்.

     “ஐயோ அப்பா நீங்க தப்பா புரிஞ்சு இருக்கீங்க.., என்ன காப்பாற்றுவதற்காக தானே வந்தாங்க”.., என்று மகிமா எடுத்துச்சொல்ல முன் வரவும்..,

           “நீ வாய மூடு” என்று சொல்லிவிட்டு மகிமா வின் அம்மா அவளை ஓங்கிய அறையவும்.வேகத்தில் சற்று தள்ளி நின்றாள். எங்க குடும்ப மானம்., கௌரவம் எல்லாம் போயிருச்சு உன்னால., இதற்கு நீ செத்தே போயிருக்கலாம் என்று சொல்லி மறுமுறை அறைய ஏற்கனவே காய்ச்சலில் இருந்த அவளால் அவர்களது அடியை தாங்க முடியாமல் கீழே விழப்போகும் போது.., அவள் விழப் போகிறாள் என்று தெரிந்தவுடன் வேகமாக சென்று அவளை பிடித்தான் நிரஞ்சன்., பிடித்து தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டான்., அவளும் சோர்வில் அவன் தோளில் சாய்ந்து விட மீண்டும் சத்தம் போடத் தொடங்கினார்கள் இரு வீட்டினரும்..,

இதில் நிதானமாக இருந்தது நிரஞ்சனின் அப்பாவும்., மகிமாவின் அண்ணனும் மட்டும் தான்..,

   நிரஞ்சனின் அம்மா., “அவளை அவங்க வீட்ல அடிச்சா., உனக்கு என்னடா செய்து ஓடிப்போய் பிடிக்கிற., பிடிச்சது மட்டும் இல்லாம உன் கைப்பிடியில் வச்சிக்கிற., அவளும் உன் தோளில் சாய்ந்து இருக்கா.,  அப்போ நீ வந்து ஒரே நாள்ல அந்த பொண்ணு ட்ட மயங்கிட்ட அப்படித்தானே” என்று சத்தமாக கேட்கவும்..

     “அம்மா ப்ளீஸ் நீங்க தப்பா பேசுறீங்க நான் அப்பவே சொல்லிட்டேன்.., அந்த மாதிரி எதுவும் இல்ல..,  நேத்தில இருந்து  ஃபுல்லன் ஃபுல் காய்ச்சல இருக்கா.., நேத்து நைட்ல இருந்து அவளுக்கு பச்சை மருந்து கொடுத்துருக்கங்க..,  இன்னைக்கு காலையில கூட்டிட்டு வரும் போது கூட காய்ச்சலுடன் மருந்து கொடுத்து தான் கூட்டிட்டு வந்து இருக்கு.., அப்படி இருக்கும்போது அந்த பொண்ண திருப்பி அடிச்சா போன பீவர் திரும்பி வந்துவிடும்.., வேற எதுவும் உடம்புக்கு முடியாம ஆயிடுச்சு நா என்ன பண்ணுவீங்க.., நான்  பிடிச்சது தப்பா..,  இப்போ அந்த பொண்ணு வந்து என் தோளில் சாஞ்சியிருக்காளா.., அவ மயங்கிட்டா அதுகூட தெரியாம எல்லாரும் கத்திக்கிட்டு இருக்கீங்க..,  உங்கள எல்லாம் என்ன செய்ய.., கொஞ்சம் கூட ஈவு இரக்கம் எல்லாம் உங்களுக்கு கிடையவே கிடையாது”..,

    “ஆமா டா.., இப்ப அப்படி தான் தெரியும்”..,

     “அம்மா நீங்க தப்பான நோக்கத்தில்  பாத்தீங்கன்னா பார்த்துக்கோங்க…,  எனக்கு அதைப்பற்றி ஒன்றும் இல்லை.., ஒரு பொண்ணும்., பையனும், மனசால தப்பு பண்ணனும்னு நெனச்சா மட்டும் தான் அந்த இடத்துல தப்பு நடக்கும்.., தப்பா இருக்க கூடாது.., நம்ம நேர்மையா இருக்கனும்.,ஒழுங்கா இருக்கணும்.,  நினைச்சா எத்தனை வருஷம் ஆனாலும் ஒழுங்கா தான் இருப்பாங்க.., நீங்க இவ்வளவு தான் அப்படிங்கும் போது  நாங்க ஒன்னும் பண்ண முடியாது” என்று சொன்னான்…

         சொல்லிவிட்டு அவன் அப்பாவை பார்க்கும்போது..,  அவன் அப்பாவும்.., “ நீ சொல்றதுல தப்பே இல்லடா.,  நிரஞ்சன் நான் உன் பக்கம் தான் இந்த விஷயத்தில்” என்று சொல்லவும்…

    மகிமாவின் அப்பா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை..  மகிமாவின் அம்மா “நீங்க ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு.., நமக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்லிட்டேன்., அதுக்கப்புறம் பேசி என்ன ஆகப் போகுது வா நம்ம கிளம்புவோம் என்று சொல்லவும்…

         மகிமா வின் அம்மா திட்ட தொடங்கும் போது தான் அவள் மயக்கம் தெளிந்து அவன் தோளில் இருந்து நகர்ந்து நின்றாள்..  மீண்டும் திட்டத் தொடங்கினார் “உன்னல்லாம் பெத்து வளர்த்தற்கு எங்களுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துட்ட” என்று சொல்லி அதிகமாக திட்டிவிட்டு “எங்கள் மூஞ்சில முழிக்காத எங்க குடும்ப கௌரவம் போச்சு உன்னால..,  ஊர்ல போய் எப்படி தல காட்டுவோம்., காலேஜ்ல இருந்து போன் பண்ணி சொன்னதிலிருந்து தாத்தா ஒரு பக்கம் திட்டுறாங்க.., உங்க அத்தை ஒரு பக்கம் திட்டுறாங்க.., பொம்பள பிள்ளை அதிகமா படிக்க வைக்காத ன்னு சொன்னாங்க கேட்காம…, உன் ஆசைப்படி அனுப்புனேன் இல்ல…, இப்ப எல்லோர் முன்னாடியும் திட்டு வாங்குற மாதிரி பண்ணிட்ட., கல்லு மாதிரி நிக்குற..,  நீ இப்படி தான் இருப்ப”., என்று சொல்லித் திட்டி விட்டு அவர்கள் கிளம்பும் போது..,

      அதுவரை அமைதியாக இருந்த மகிமாவின் அண்ணன் மட்டும் அருகில் வந்து “உன்னை நான் நம்புறேன்.., ஊர்ல உள்ள நிலைமை தான் உனக்கு தெரியுமே.., இனி அம்மா அப்பாவை சமாதானப் படுத்துவது கொஞ்சம் கஷ்டம்.., முடிந்தளவு முயற்சி பண்ணி பார்கிறேன்.., முடியலன்னா என்னால ஒண்ணும் பண்ண முடியாது நீ உன் படிப்பை கன்டினியூ பண்ணு” என்று சொல்லிவிட்டு.., அம்மாவும் அப்பாவும் வெளியே போனவுடன் அங்குள்ள கல்லூரி பேராசிரியர்களிடம் “அவளுக்கு இன்னும் இரண்டு மாத படிப்பு தான் இருக்கிறது., அவளுக்கு தேவையான பணத்தையும்., காலேஜ்., ஹாஸ்டல் பீஸ்., எக்ஸாம் பீஸ்., போன்றவற்றை தான் அனுப்புவதாகவும்., அதுவரை கல்லூரியில் அனுமதிக்க வேண்டும்., அவளுடைய பாதுகாப்பையும் பார்த்து கொள்ளுங்கள்”, என்றும்  கேட்டுக் கொண்டான்..

        அவர்களும் கண்டிப்பாக பிரின்ஸ்பல் இடம் கல்லூரி நிர்வாகத்திடமும் பேசுவதாக சொல்லிவிட்டார்கள்..

     நிரஞ்சனின் அம்மா நிரஞ்சனின் அப்பாவிடம்.,  “அவன் எப்படியும் போறான் நீங்க வீட்டுக்கு வரீங்களா இல்லையா”.., என்று கேட்கவும்.,

“ என் பிள்ளையை வீட்டுக்கு வரக்கூடாது சொல்வதற்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது.., அவன் எப்பனாளும் வீட்டுக்கு வருவான்.,  நீ என்ன இப்படி பேசுற” என்று சொல்லவும்..,

      “நீங்க பேசாம வீட்டுக்கு வருவான் சொல்றீங்க.., வர்றவன் அந்த பொண்ணயும் கூட்டிட்டு வர போறான்” என்று சொல்லவும் தான்.,  அவன் கையின் அணைவில் இருப்பதை கண்டு மகிமா அவசரமாக விலகி நின்றாள்..

       “இங்க பாருடா நீ மட்டும் வீட்டுக்கு வர்றதா இருந்தா வா…,  இல்ல அந்த பெண்ணையும் நான் பாத்துக்கணும் நான் கூட தான் கூட்டிட்டு வருவேன் அப்படின்னு சொன்னா அப்படியே இங்கேயே இருந்துக்கோ., வீட்டு பக்கம் வராதே” என்று நிரஞ்சன் அம்மா கத்தவும்…

       மகிமா தான்..  “அய்யோ ஆன்ட்டி நீங்களும் தப்பா புரிஞ்சு இருக்கீங்க.., ஆக்சுவலா நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல கடமை பட்டு இருக்கேன்…,  என்ன காப்பாத்தி இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்து விட்டு இருக்காங்க.., எங்க பேரன்ட்ஸ் ட்ட  சொல்லி புரிய வைக்கிறது கஷ்டம்.,  அவங்க கிராமத்தில் உள்ளவங்க இப்ப வரைக்கும் கிராமத்தில் தான் இருக்காங்க.., ஊர்ல எதுவும் சொல்லுவாங்க என்கிறதுக்காகவே என்னை அவங்க ஏத்துக்க மாட்டாங்க என்று எனக்கு தெரியும்.., நீங்க பயப்படற மாதிரி எதுவும் கிடையாது ஆன்ட்டி.,  கண்டிப்பா அவங்க உங்க பையனா உங்க கூட வந்துருவாங்க.., எனக்கு இன்னும் டூ மன்த்ஸ் படிப்பு இருக்கு நான் கிளம்புறேன்.., காலேஜ்க்கு” என்று சொல்லிவிட்டு..,

      அங்கு வந்த பேராசிரியர்களிடம் சென்று பேசவும்.., அவர்களும் உடனடியாக பிரின்ஸி க்கு போன் செய்து இங்கு நடந்த விஷயத்தையும் பிரச்சினைகளையும் சொல்லும் போது மகிமா கல்லூரிக்கு அழைத்து வர பிரின்ஸ்பல் கல்லூரி நிர்வாகம் ஒத்துக்கொண்டது .., நிரஞ்சனும் பெங்களூர் சென்று கல்லூரியில் சொல்லி விட்டே வேலையை விட்டுவிட்டு சென்னை வருவதாக சொன்னான்., அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்து கொண்டு அவர்கள் சுற்றுலா பாதியில் முடிந்தது போல் முடிந்து அனைவரும் கிளம்ப தொடங்கினர்.. நிரஞ்சனின் அம்மாவும் அப்பாவும் சென்னை கிளம்ப நிரஞ்சனின் அப்பா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்.., “நீ கிளம்பி வா” என்று சொல்லவும்

        “கண்டிப்பா வரேன் பா.., ஆனா அந்த பொண்ணு” என்று அவன் தயங்கவும்..

“ நீ ஏன் தயங்குற.., அந்த பொண்ணு காலேஜ் போகுது அது படிப்பை முடிக்க போகுது நீ வேலைய போய் எழுதிக் கொடுத்துட்டு ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு கிளம்பி வா”.., என்று சொல்லிக்கொண்டிருந்தார்..,

“ நான் வருவது பிரச்சினை இல்லை அப்பா..,  அந்த பொண்ணு வீட்ல அவங்க அண்ணன் பீஸ் கட்டுறேன் ன்னு சொன்னாங்க.., ஒருவேளை அவங்க பீஸ் கட்டலை  ன்னா” என்று சொல்லும் போது..,

“ சரி கல்லூரியில் சொல்லி வைத்து விட்டு வா.., அவர்கள் அந்த பெண்ணின் படிப்பை முடிக்க பணம் உதவி செய்யவில்லை என்றால் நாம் செய்துகொள்ளலாம்” என்று சொல்லி இவனின் அப்பா சென்றுவிட்டார்.,  அதற்கு முன்பே அம்மா கோபப்பட்டு கொண்டு முதல் ஆளாக சென்றுவிட்டார்..

      போகும் வழியில் அவளுக்கு காய்ச்சலுக்கான மருந்து வாங்கி கொண்டு அருகிலுள்ள மருத்துவர் ஒருவரை பார்த்து ஊசியும் போட்டுக்கொண்டே கிளம்பினார்கள்.., நல்ல அடிபட்டு இருந்ததால் அவளுடைய கைகளிலும் நெற்றியிலும் மருந்திட்டு பிளாஸ்டர் ஒட்டப்பட்டது..,  அவனுக்கு லேசான சிராய்ப்பு என்பதால் துடைத்து மருந்து மட்டும் போட்டுவிட்டார்கள்..

     ஒரே நாளில் தன் வாழ்க்கை திசை திரும்பும் என்று சற்றும் எதிர்பார்க்காதவள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் ஏதோ யோசனையில் வந்தாள்., யாருடனும் பேசவில்லை அவளுடைய துறுதுறுப்பும் குறும்பும் மறைந்து போனது போல அங்குள்ள பேராசிரியர்களுக்கும் உடன் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் தோன்றியது.., தோழியிடம் கூட எதுவும் பேசவில்லை..,  அவளை தள்ளி விட்ட  மாணவிகள் இருவரையும்.,  இங்கு எதுவும் கம்ப்ளைன்ட் செய்யாமல் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி கூறியிருந்தார்கள்.., இங்கு கம்ப்ளைன்ட் செய்வதாக இருந்தால் செய்யலாம் என்று சொல்லும் போது மகிமா மறுத்துவிட்டாள்.., நான்தான் உயிரோட வந்துட்டேன் இல்ல அப்புறம் எதுக்கு அந்த பொண்ணுங்கள கம்ப்ளைன்ட் பண்ணி பிரச்சனை பண்ணனும் விட்ருங்க என்று சொல்லவும்..,, முழுவதுமாக அவள் அவன் மனதில் நிறைந்து நின்றாள்..,  அவள் மேல் தோன்றிய எண்ணத்தை கண்டு சிரித்துக் கொண்டான்..

     அங்குள்ள பேராசிரியர்கள் “விபத்துக்கு காரணமானவங்க இந்த பொண்ணுங்க  தான் அவங்கள கம்ப்ளைன்ட் பண்ணாம எப்படி இருக்கிறது” என்று சொல்லவும்..,

     “கம்ப்ளைன்ட் பண்ணா  மட்டும் என் நிலைமை மாறிருமா என்ன இல்ல இல்ல.., அப்புறம் என்ன விட்டுருங்க..,  நான் ஒருத்தி கஷ்டப்படுவது போதாதா.., எல்லாரும் கஷ்டப்பட வேண்டுமா” என்று கேட்டு அனைவரின் வாயையும் அடைத்து விட்டாள்.., அதன் பிறகு யாரும் எதுவும் பேச வில்லை அவளை தள்ளிவிட்ட மாணவிகள் தாங்கள் இருவரும் தங்களை தாழ்வாக உணர்ந்தார்கள்..

      கல்லூரி வந்து சேரும் போது சற்று காய்ச்சல் இருந்தாலும்., உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலும்., கல்லூரி நிர்வாகத்திடம் பிரின்ஸ்பல் இடமும் காரணங்களை விலக்கிவிட்டு பிரச்சினைகளை பெருசாக வேண்டாம் என்று தான் கம்ப்ளைன்ட் செய்யவில்லை என்பதையும்., சொல்லிக் கொண்டு..  அவர்கள் படிப்பு என்னால் வீண் ஆனதாக இருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு தனது இரண்டு மாத படிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்… அதற்கு கல்லூரி நிர்வாகம் இருமாத படிப்பையும் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்வதாக கூறி விட்டார்கள்..,  யாரும் அவளுக்கு பணம் கட்ட வேண்டிய தேவை இல்லை என்று கல்லூரி நிர்வாகமே சொல்லிவிட்டது…,  ஏனென்றால் அவள் அந்தப் பெண்கள் மேல் கம்ப்ளைன்ட் செய்யாமல் இருந்தது அவர்கள் கல்லூரியின் கௌரவத்தை காப்பாற்றியது போல என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.., இது எதுவும் தெரியாமல் இருந்தாலும்., அவள் நிலையில் சரியாக இருந்தாள்.., நிரஞ்சனோ வேலையை விட்டு விட்டு தன் ஊருக்கு கிளம்ப தயாராகிவிட்டான்..

     அன்று கல்லூரியில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போது அவன் கிளம்புவதாக இருந்ததால் வந்து சொல்வதற்காக இவள் வகுப்பிற்கு வந்தான். அனைத்து மாணவ மாணவிகளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பும் போது..,” நான் மகிமா ட்ட பேசனும் கொஞ்சம் வெளியே வா” என்று கூப்பிட்டான்..,

       அவளும் சரி என்று பேச சென்றாள்.., “என்ன ஹெல்ப் நாளும் போன் பண்ணு” என்று சொல்லி அவனுடைய அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு சென்றான்.., அவள் எப்போதும் அழைக்க போவதில்லை என்பது தெரியாமல்…

      அந்த விபத்திற்கு பிறகு அவளின் பழைய துறுதுறுப்பும் குறும்பும் காணாமல் போய் இருந்தது.., அவளுடைய படிப்பில் முழு வேகத்துடன் கவனம் செலுத்தினால்., ஏனெனில் இனி தனக்கு படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என்ற நிலைக்கு அவள் தள்ளப்பட்டு இருந்தால்.,

     இதற்கு இடையில் ஒருமுறை அவள் அண்ணன் கல்லூரி விடுதிக்கு போன் செய்து இருந்தான்., “அப்போது வீட்டிற்கு தெரியுமா நீ என்னிடம் பேசுவது” என்று கேட்டதற்கு

   “இல்ல தெரியாது தெரியாம தான் பேசுறேன்”., என்று சொன்னதோடு..,  “உனக்கு ஏதும் பணம் வேண்டுமா.., அப்படி னா சொல்லு அனுப்பி வைக்கிறேன்” என்று கேட்டான்…

“ இல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்” ஏனெனில் கல்லூரி நிர்வாகத்தினர் அவளுக்கு பணம் கட்ட வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார்கள். கல்லூரிக்கும் பீஸ் கட்ட வேண்டியதில்லை என்று சொல்லி விட்டிருந்தனர்..,  எனவே அவளுடைய படிப்பு தடையின்றி போய்க்கொண்டிருந்தது டூர் சமயத்தில் வீட்டில் இருந்த கொடுத்த பணம் அவள் செலவு செய்யாமல் வைத்திருந்ததால் அது அவளுக்கு அப்போதைய செலவிற்கு போதுமானதாக இருந்தது..,

       அது மட்டுமல்லாமல் மாலை வேளைகளில் அவளுடைய டிரஸ் டிசைனிங் மாடல்கள்., சில கம்பெனிகளில் இருந்து வரைந்து தரும்படி கேட்டு இருந்ததால்.., அதற்காக வரைந்து கொடுப்பதில் அவளுக்கு தேவையான பணம் கிடைத்துக் கொண்டிருந்தது.., அவர்கள் கேட்கும் மாடல்களை வரைந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்..,  மாலை நேர வேலையாக கல்லூரி விடுதியில் இருந்தே செய்து கொடுத்துக் கொண்டே இருந்ததால் அவளுக்கு வருமானம் கிடைத்தது.., அது கல்லூரியை சேர்ந்த ஒரு உடை தயாரிக்கும் கம்பெனி என்பதால் அவளுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சிபாரிசின் பேரில் அந்த சிறு  வேலைகளையும் செய்து கொடுத்திருந்ததால் அவளுக்கு செலவிற்கு தேவையான பணம் கிடைத்துக் கொண்டிருந்தது.., அதனால் அவள் யாரையும் எதிர்பார்க்கும் நிலையில் இல்லாமல் இருந்தாள்..

   இரவின் இருளுக்குள் அழுகையில் தன்னை கரைத்தாலும் தன் அழுத முகம் யாருக்கும் தெரியாத அளவில் பார்த்துக்கொண்டாள்.., எல்லோரும் மன தைரியத்தோடு இருக்கிறார்கள் இருக்கிறாள் என்று நினைக்க அவள் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டிருப்பதை யாரும் உணரவில்லை..,  ஆனால் ஒரு சிலருக்கு சந்தேகம் இருந்தாலும் யாரும் அவளிடம் கேட்கும் துணிவு வரவில்லை..,

       ஏனெனில் அவளின் மாற்றம் அவ்வாறு இருந்தது.., அதுவரை துறுதுறுப்பும் சேட்டையும் குறும்பு நிறைந்த பெண்ணாக இருந்தவள்..,  அதன்பிறகு ஒரு பொறுப்பு நிறைந்த பெண்ணாக இருப்பது போல தோன்றியது., கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் பேசிக்கொண்டார்கள் ஒரு சின்ன விபத்து இந்த அளவுக்கு ஒருத்தரை மாற்றுமா என்று.., ஏனெனில் அதன் பிறகு அவள் யாரிடமும் அதிகமாக பேசுவது கிடையாது., வகுப்பு தோழனாக இருந்தால் கூட தள்ளி நில் என்று கண்ணில் ஒரு எச்சரிக்கை காட்டும் அளவிற்கு ஒரு கோபப்பார்வையை சுற்றி கொள்வாள்.., தன்னைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக் கொண்டது போல அங்குள்ளவர்கள் உணர்ந்தார்கள்.., யாரையும் தன்னிடம் நெருங்க விடாத அளவிற்கு…

     அவளுடைய கல்லூரி இறுதி தேர்வு நெருங்கியது.., அதற்கு உண்டான படிப்பு வேலைகளில் மும்முரமாக இருந்தாலும்., தேர்வு முடிந்தவுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் சற்று குழம்பினாள்., அந்த நேரத்தில் அவளுக்கான சிறு வேலை ஒன்று அருகில் அமைந்தது கல்லூரியோடு உள்ள அந்த துணி தைக்கும் நிறுவனத்திற்கு வரைந்து கொடுக்கும் பொறுப்பில் சில மாதங்கள் வேலை செய்யும்படி கல்லூரி நிர்வாகத்தின் மூலம் அனுப்பப்பட்டால்..,

      ஏனெனில் அவளுக்கு தேவையான சம்பாத்தியமும் அதில் கிடைக்கும்.., தங்குவதற்கு அருகிலேயே ஒரு பெண்கள் விடுதியில் இடமும் பார்த்து கொடுக்கப்பட்டது.., அங்கு வேலை பார்க்கும் பெண் பேராசிரியர் ஒருவரின் மூலம்.., அது மட்டுமல்லாமல் அங்குள்ளவர்கள் பார்த்துக் கொள்வதாக சொன்னாலும் அவள் சிரித்துக்கொண்டே அவர்களிடம் மறுத்து விட்டாள்.., வேலை வாங்கிக் கொடுத்ததே பெரிய விஷயம் என்று..,

    அவளுடைய கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆன கம்பெனியிலிருந்து.., அடுத்த தேர்வுக்கான ஆர்டர் வரும் வரை அங்கு வேலை செய்ய வேண்டும் என்று.., ஆர்டர் வந்து அவள் மீண்டும் இந்திய அளவில் தேர்வு எழுதி அதில் தேர்வானால் அவள் மும்பைசெல்லும் வரை அவ்விடத்தில் வேலை பார்க்கலாம் என்று சொல்லி இருந்ததால் அங்கு வேலைக்கு சேர்ந்தாள்…

  பெண்ணுக்கு மட்டும் எப்பொழுதும் தனி நீதி வகுக்கும் சமுதாயம் இது..,  இங்கு பெண்மையை கலங்கப்படுத்தும் கூட்டத்தில் முதன்மையாக நிற்பது பெண்களே..,  பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது பல நேரங்களில் உண்மையாகத் தான் போகிறது

Advertisement