Advertisement

அத்தியாயம் 6

                  அங்கு உள்ள மலை தேவதைக்கு திருவிழா நடந்து கொண்டிருந்ததால்., அக் கிராமத்தின் வழக்கப்படி கணவன் மனைவி இருவரும் கடவுளை வணங்கி விட்டு அங்குள்ள திருமணமானவர்களுக்கு உணவு கொடுப்பது போல இருவருக்கும் ஒரே இலையில் உணவு கொடுத்தனர். அத் தேவதை இருவருக்கும் நல்லதே செய்யும் என்ற நம்பிக்கை., இரவு உணவு அங்குள்ள முறைப்படி இருந்தது கிழங்கு., பழம், கடலை என்று இருந்தது., ஏற்கனவே இவர்களை கணவன் மனைவி என்று நினைத்து இருந்ததால் வேறு வழியின்றி இருவரும் ஒரே இலையில் உணவு உண்டனர். இவள்  சாப்பிடுவதை கவனித்தவன்., நீ இப்படி சாப்பிட போய் தான் லேசா அடிப்பட்டாலே முடியாம ஆகுது. ஒழுங்கா நல்லா சாப்பிடு என்று சொல்லிக்கொண்டே அவளை கொடுத்திருந்த உணவை உண்ண வைத்தான்..

         அது போல அவர்களிடம் அரைகுறை தமிழ் தெரிந்த மலை கிராமவாசி இடம் அவளுக்கு விழுந்து எழுந்த வலியின் காரணமாக காய்ச்சல் வந்திருப்பதை சொல்லி., மருந்தும் அவர்கள் முறைப்படி வாங்கி கொடுத்தான்.., மருந்தைக் கொடுத்தவுடன் அவளுக்கு தூக்கம் வருவதை கண்ட அங்கு உள்ள பெண்கள் செய்கையின் மூலமாகவும் அந்த உடைந்த தமிழ் தெரிந்த மலை கிராமத்து வாசியின் மூலமாகவும் அங்கு தெய்வ வழிபாடு நடப்பதால்., ஆண்கள் ஒரு பகுதியிலும், பெண்கள் ஒரு பகுதியிலும், தங்க வேண்டும் என்று சொல்லி அவளை பெண்கள் பகுதியில் அவர்களோடு தங்க வைத்துக் கொண்டனர்..,

      அவன் அவளை யோசனையோடு பார்த்ததற்கு, அங்குள்ள பெண்கள் தாங்கள் அவளைப் பார்த்துக் கொள்வதாகவும் அவளது காய்ச்சலுக்கு தங்கள் மருந்து அவ்வப்போது கொடுத்து கவனித்துக் கொள்வதாகவும்., அவன் கவலைப்படாமல் இருக்கும் படியும் அவனுக்கு செய்கையில் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே அவளை அழைத்துச் சென்றனர்.,

         அவர்களுக்கு என்று தந்த பகுதியின்  உள்ளே சென்றவுடன், அவளிடம் அப்பெண்கள் செய்கையின் மூலமாக அவருக்கு உங்கள் மேல் அதிக பாசம் என்று கேட்க அவள் சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்துவிட்டாள்..,

      ஏனெனில் இருவரும் ஏட்டிக்கு போட்டியாக கல்லூரியில் நடந்தது., அவளுக்கு மட்டும் தானே தெரியும்..,  மருந்தின் வேகத்தில் தூங்கியவள் காலை நேரத்தில் தான் கண் விழித்தாள்..,

      அதற்குள் அவர்கள் உடைகளை அங்குள்ளவர்கள் தனல் அடுப்பு போல இருந்த ஒரு மேட்டு பகுதியில் கூடாரம் போட்டு அந்த இடத்தில் நல்ல சூடான வெப்பம் வரும்படி கீழே அமைக்கப்பட்ட இடத்தில் தான் அவர்கள் துணிகளை உலர வைத்து எடுத்துக் கொண்டிருந்தனர். அவ்விடங்களில் வைத்து அவர்களுடைய உடைகளையும் காயவைத்து கொடுத்தனர்.,  இவளுக்கு முதுகு பகுதியில் துணி கிழிந்து இருந்ததால் வேறு உடை தரவா என்று கேட்கவும் இல்லை என்று சொல்லி அதையே போட்டுக்கொண்டு அதற்கு மேல் அவனுடைய  ஸ்வட்டரையும் அணிந்து கொண்டாள்.,

    இருவரும் காலையில் எப்படி கிளம்புவது என்று பேச அனைவரும் அவர்களுடைய கைவினைப் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்ல வரும் வண்டியில் இருவர் வருவார்கள் அவர்களிடம் கேட்டு உங்கள் இருவரையும் ஒரு வண்டியில் அனுப்புகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்..,  அது போலவே  அங்குள்ள காலை உணவையும் அவர்களுக்கு கொடுத்து., அவளுக்கு தேவையான மருந்து கொடுத்து அதை அவர்கள் சொன்னபடி இரண்டு நாட்களுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்., என்று சொல்லி அவன் கையில் மருந்தையும் கொடுத்து இருவரையும் சேர்த்து அனுப்பி வைத்தனர்..

       அங்கு பொருட்களை ஏற்ற வந்தவர்களிடம் இவர்களுடைய மலையாளத்தில் அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்றும்., மேலே இருந்து எட்டி பார்க்கும் போது மனைவி விழுந்ததாகவும்., அவளை காப்பாற்ற கணவன் சேர்ந்து இறங்கியதும்., அவர்களாக கற்பனை செய்து கொண்ட கதையை சொல்லி இவர்கள் இருவரையும் மேலே கொண்டு விடுமாறு அங்கு வந்தவர்களிடம் கேட்டுக்கொள்ள., அவர்களும் சரி என்றனர்..,

      பின்பு வந்த இருவரும் ஒரே வண்டியில் ஏறிக் கொள்ள., இவர்கள் இருவரையும் அவர்கள் பின்னே மற்றொரு வண்டியில் வர சொல்லி சென்றனர்.  நம்மூர் பைக் போல இருந்தாலும் அதில் ஒரு வித்தியாசமான சத்தம் அதில் மலைப்பாதையில் ஏறி இறங்கியதால் ஒரு சிறு ஆட்டமும் இருந்தது., அது மட்டுமல்லாமல் அவள் காய்ச்சலோடு இருந்ததால் தன்னை  பிடித்துக்கொண்டு அமரும்படி அவனும் சொன்னான்.,

        நேற்று உருண்ட போது பிடித்துக் கொண்டு தானே இருந்தோம்., அப்போது இல்லாத தயக்கம் இப்போது என்ன.., என்றவன்., பிடிக்க தயங்கினால் இப்பொழுது மறுபடியும் உருண்டு போய்டுவ என மிரட்டி அவளை அவனோடு சேர்த்து பிடித்துக் கொள்ள வைத்தான்.., அதன்படி இருவரும் அங்குள்ள மலை கிராமங்களை பார்த்துக் கொண்டே., அவர்களை வழிகாட்டி சென்ற கைவினைப் பொருட்களை எடுத்துச் செல்லும் ஆட்களின் பின்னாடியே சென்றனர்., அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சற்று தள்ளியே அந்த ஆள் இருவரையும் இறக்கி விட்டான்., மலை கிராமத்தில் விடிவதற்கு நேரம் ஆகி விடும் என்பதால் அவர்கள் அங்கிருந்து கிளம்பவே இவர்களுடைய நேரப்படி காலை 10 மணிக்கு மேலே தான் கிளம்பி இருந்தனர்.., எனவே அந்தப் பாதையில் பயணம் செய்து, மழைக்கு ஒதுங்கி என அவர்கள் வந்து சேரும் போது மதிய நேரம் தொட்டிருந்தது…

     அவனுடைய பேண்ட் பாக்கெட்டில் முன்பக்கமாக செல்போன் வைத்திருந்ததால்., அவளை சேர்த்தணைத்து இருந்த போது  போனுக்கு எந்த அடியும் படவில்லை.., போனும் உடையவில்லை., ஆனால் அங்கு செல்போன் டவர்  எதுவும் கிடைக்காது.., அது மட்டுமல்ல மலை கிராமங்களில் தொலைத் தொடர்பு வசதி., அந்த அளவிற்கு கிடையாது என்ற காரணத்தினாலும் அவனால் யாருக்கும் அழைத்து தகவல் சொல்ல இயலவில்லை..,  மற்றவர்கள் அழைத்ததும் இவனுக்கு வந்து சேரவில்லை..,  அப்படி தான் இவர்கள் இருவரும் மேலே வந்து சேர்ந்தது யாருக்கும் தெரியாது.,  இவர்கள் நல்லபடியாக இருக்கிறார்கள் என்பது மேலே இருந்து தேடுபவர்களுக்கும் தெரியாது..

         அவர்கள் எந்த பகுதியில் இருந்து விழுந்து வந்தார்கள் என்பதை அங்கு உள்ள கிராமவாசிகளுக்கு காட்டி இருந்ததால் அதை ஒரு அளவாக வைத்து கிராம மக்களும் இடத்தை சொல்லி அனுப்பியிருந்தனர்., எனவே கைவினைப் பொருட்களை எடுக்க வரும் அந்த இருவரும் சரியாக இவர்களை அதற்கு சற்று முன்னே உள்ள இடத்தில் கூட்டிக்கொண்டு வரும்போதே இவர்களை தேடிக் கொண்டிருந்த பேராசிரியர் கண்களிலும் சுற்றுலா வழிகாட்டி கண்களிலும் பட அவர்கள் நல்லபடியாக அழைத்துக் கொண்டு வந்தனர்., சுற்றுலா வழிகாட்டி இடம் அவர்கள் இருவரும் நல்ல கணவன் மனைவி என்று பாராட்டிவிட்டு செல்ல., சற்று நேரம் புரியாமல் முழித்தார்.,  பின்பு இவர்கள் முன்னே சென்று விட., சுற்றுலா வழிக்காட்டி பின்னே வந்து சேர்ந்தான். கூடவந்த அந்த கைவினைப்பொருள் வியாபாரிகளும் உடன் வந்து மற்றவர்களையும் பார்க்க வந்தனர்..,

         அங்கு வந்த போது தான் தெரியும் இருவரின் பெற்றோரும் அங்கு காத்திருப்பது., அந்த வியாபாரிகளும் இவர்கள்  நல்ல கணவன் மனைவி அதனால் தான் ஒற்றுமையாக வந்து சேர்ந்தனர்., என்று சொல்லிவிட்டு செல்ல அது அங்கிருந்த சிலருக்கு புரிந்து அவர்கள் இவர்களிருவரிடமும் என்ன என்று கேட்க., மாணவ-மாணவிகளும் பேராசிரியர்களும்  ஒரு நிமிடம் திகைத்துப் போன பின்பு.., அங்கு நடந்த பிரச்சனையை இவன் சொல்ல மற்றவர்கள் சரி என்றாலும்.,  வீட்டிலுள்ள பெற்றவர்கள் மட்டும் தங்கள் குணத்தை அப்போதுதான் காட்டத் தொடங்கினர்.

          அவர்கள் பேசத் தொடங்கும் போதே., ஏதோ பேசப் போகிறார்கள் என்று உணர்ந்த வயதில் மூத்த பேராசிரியர் தங்கும்விடுதிகள் சென்று பேசலாம்., வெளியே இருந்து பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு மாணவ-மாணவிகள் அனைவரையும் அவரவர் இருக்கும் இடங்களுக்கு அனுப்பி விட்டு., அங்கிருந்த ஒரு பெரிய அறையில் பெற்றவர்களையும் அவர்களையும் கூட்டிக்கொண்டு பேராசிரியர்கள் மட்டும் செல்ல நடந்த பிரச்சனைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் நிரஞ்சன் சொன்னான்.

     அவளோ வாயை திறக்காமல் அமைதியாக பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்தாள்.  பிரச்சனைகள் எதுவும் வந்து விட கூடாது என்று தான் வேறு வழியில்லாமல் நான் அப்படி சொன்னேன் என்று தான் நிரஞ்சன் சொன்னாலும்.,

       நிரஞ்சனின் அம்மா நம்ப மறுத்தால்.,  “நான் உன்ன ரொம்ப நல்ல பையனா தான் வளர்த்து இருக்கேன்னு நெனச்சேன்…, ஆனா நீ ஒரு நாள் முழுவதும் ஒரு பொண்ணு கூட இருந்துட்டு,  அவளை உன்னோட ஓய்ப் ன்னு  வேற அங்குள்ள மக்கள் கிட்ட சொல்லிட்டு வந்திருக்கே.., அப்படின்னா என்ன அர்த்தம்.., அப்ப உன் மனசுல அந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்க போய் தான் அந்த வார்த்தை வந்து இருக்கு”.., என்று சொல்லி அவள் கத்த தொடங்கும் போது எப்போதும் அவனை திட்டும் அவன் அப்பா..,

       “நீ கொஞ்சம் அமைதியா இரு”.., என்று அவர் தன் மனைவியை சத்தம் போட்டார்..,

       ஆனாலும் அவள் கேட்காமல் மேலும் மேலும் பேச தொடங்கினாள்., “என் அண்ணன் பொண்ண கட்டிக்கிட்டு  என் அண்ணன் ஃபேமிலியோட போயிரு..,  அவன் தான் பிசினஸ் வச்சி தர்றேன் ன்னு சொல்றான் ல., அதை  நீ கேட்காமல் தானே  பிசினஸ் காக படிக்கிறேன் ன்னு சொன்ன., கடைசில நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணுவ ன்னு எதிர்பார்க்கவே இல்ல..,  நீ எல்லாம் ஒரு பிள்ளையா., உன்னை இப்படியா வளர்த்தேன் என்று சொல்லி.,  நம்ம குடும்ப கவுரவம் என்ன., நம்மளோட வசதி என்ன, இதை  நீ  நினைத்திருந்தால் இந்த பெண்ணை  உன்னோட மனைவி வெளியே சொல்லியிருப்பியா” என்று சொல்லி அவர் திட்டும் போது காய்ச்சல் வேகத்தில் இருந்தவளுக்கு பதில் ஏதும்  சொல்ல முடியாமல் இருந்தாலும்..,

  அவள் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை மட்டுமே பார்த்துவிட்டு குனிந்து கொண்டாள்.. நான் உன்கிட்ட என்னை உன் ஒய்ஃப்  ன்னு சொல்ல சொன்னேன் ஆ என்று மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டாள்..,  தன் எந்தவிதத்தில் குறைந்து விட்டோம் என்று தோன்றினாலும்., அவர்களுடைய வசதி அப்போது தான் அவளுக்கும் தெரியும்.., எனவே அவள் இது தேவை இல்லாத விஷயம் நான் ஒன்னும் உரிமை கொண்டாட போறதும் இல்ல.., என்று மனதிற்க்குள் நினைத்து கொண்டு அமர்ந்திருந்தாள்..,

     “அம்மா., நாங்க ஒன்னும் அந்த மாதிரி மேரேஜ் பண்ணிக்கவும் இல்ல.., ஒரு வார்த்தைக்கு சொன்னா அது நிஜமாகாது” என்று அவன் சொல்லவும்..,

    மேலும் வார்த்தையை விட தொடங்கினார்., “ரெண்டு பேரும் மலை கீழே உள்ள கிராமத்தில் தங்கி இருக்கீங்க…, கணவன்-மனைவி ன்னு சொல்லியிருக்கீங்க…, அங்க நீங்க தனித்தனியா தான் இருந்தீங்க ன்னு நீங்க தானே சொல்றீங்க.., அவங்கள போய் நாங்க கேட்கவா முடியும்” என்று அளவுக்கு அதிகமாக பேசவும்..,

    நிரஞ்சனிற்கும் கோபம் வந்துவிட்ட்து.., “ஏன் மா இவளோ கேவலமா பேசுறீங்க என்னை பத்தி எனக்கு தெரியும்.,  உங்களுக்கும் தெரியும் அப்படி ன்னு நம்புனேன்., ஆனா  நீங்க என்ன நம்பல அப்படி தானே..,  நம்பாதது மாதிரி பேசுறீங்க.,  அப்புறம் எதுக்கு என்னை தேடி வந்தீங்க., கீழ விழுந்துட்டேன் உடனே எதுக்கு தேடி வந்தீங்க., தொலைந்து  போகட்டும் ன்னு விட வேண்டியது தானே” என்று சொல்லவும்..,

       “நீ ஒரு வேளை தனியா உழுந்து எந்திரிச்சு., வந்திருந்தேனா நான் நம்பி இருப்பேன்.,  ஆனா நீ இவள காப்பாற்றுவதற்காக தான் விழுந்திருக்க., அப்போ உன் மனசுல ஆசை இல்லாமலா இவளை காப்பாற்ற விழுந்த” என்று கேட்கவும்..,

      “தப்பா பேசாதீங்க.., கண்ணு முன்னாடி விழும் போது., நான் காப்பாத்தணும் தான் நினைப்பேன்.,  ஆனா நீங்க இந்த அளவுக்கு மோசமா யோசிப்பீங்க ன்னு  நான் எதிர்பார்க்கவே இல்ல.., தயவு செய்து இதுக்கு மேல இதை பத்தி பேசாதீங்க.., அவ அப்படிப்பட்ட பொண்ணும் கிடையாது.., நான் அப்படிப்பட்ட ஆளும் கிடையாது.., அசிங்கமா பேசாதீங்க”.., என்று சொல்லவும்.

      அவன் அப்பா மட்டும் நிரஞ்சன்  தோளில் தட்டிக்கொடுத்து.., “நான் நம்புறேன் என்றார்., என்னை விடு நீ அப்படி கிடையாது என்பது எனக்கு தெரியும்.,  உன்னை எந்த அளவு நம்புறேனோ  அதே அளவுக்கு அந்த பொண்ணையும் நம்புறேன்., முகத்தை பார்த்தாலே எனக்கு தெரியுது அந்த பொண்ணு அப்படிபட்ட பொண்ணு கிடையாது..,  நான் பைனான்ஸ் தொழில் பன்னுறவன் ஒரு ஆளைப் பார்த்தே எடை போட்டு தான்., நான் அடுத்தவனுக்கு பணம் கொடுப்பேன்.,  அப்படி இருக்கும் போது எனக்கு தெரியாதா..?  யார் எப்படின்னு முகத்தை பார்த்து கண்டு பிடித்து விடுவேன்.., நீயும் அப்படிப்பட்டவன் கிடையாது.., அதே மாதிரி அந்த பொண்ணும்.., தப்பு பண்றவங்களா இருந்தா அவங்க முகத்தில் ஒரு கள்ளத்தனம் தெரியும்.., ஆனா உங்க ரெண்டு பேர் முகத்திலயும் அந்த மாதிரி இல்ல..,  நீங்க ரெண்டு பேரும் அப்படி இல்ல ன்னு நான் நம்புறேன் டா.., அவ சொல்லிட்டு கிடைக்கா விடு”… என்று சொல்லவும்

       நாயகி கோபம் வந்து அவரை திட்ட தொடங்கினாள்.., “ நீங்க என்ன இப்படி பேசுறீங்க ஒரு பொண்ணோட ஒரு நாள் புல்லா காட்டுக்குள் இருந்துட்டு வந்து இருக்கான்.., அது எப்படி வெளியே தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம்., இவன் காட்டுக்குள்ள ஒரு பெண்ணை காப்பாற்ற விழுந்துட்டான் ன்னு ஊருக்கே தெரியும்.,  நம்ம வீட்டுக்கும் தெரியும்., எங்க அண்ணன் கிட்ட சொல்லிட்டேன். எது எப்படியோ இந்த விஷயம் தெரிஞ்சா இவனை கட்டிக்க போறவ இதைச் சொல்லிக் காட்டு வா.., இப்போ உள்ள பசங்க எல்லாம் பண்ணாத தப்பு கிடையாது…  இருந்தாலும் என் பிள்ளையை நான் நல்லா வளர்த்து இருக்கேன் ன்னு தைரியமா இருந்தேன்.., ஆனா அந்த எண்ணத்தில் அவன் மண்ணை போட்டு விட்டான்..,  அதனால நீ எப்படியும் போ., இனிமேல் என் மூஞ்சில முழிக்காத., நீங்க உங்க பையனுக்கு என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க., ஆனால் இனிமேல் அவன் என்ன அம்மான்னு சொல்லிட்டு சொந்தம் கொண்டாடிட்டு வரவேண்டாம்…,  இந்த பொண்ணுக்காக என்னை எடுத்து பேசு தானோ.., அவன் எப்படியோ போகட்டும்”., என்று அவர் சத்தம் போடவும்…..

        முதன்முதலாக நிரஞ்சன்  அப்பாவும் அவன் அம்மாவை சத்தம் போட்டார்.., “ நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறியா.., ஒரு பொண்ண பத்தி தப்பா பேசிகிட்டு இருக்க.., இங்க பசங்களுக்கு எவ்வளவு பிரச்சனை வந்தாலும் வெளியே தெரியாது.., ஏதோ பிரச்சினை., ஏதோ ஒரு பிராப்ளம் சொல்லிட்டு முடிச்சிட்டு வாங்க.., ஆனா பொண்ணுங்க பெயரை கெட்டு போயிடுச்சுன்னா..,  அது எவ்வளவு அசிங்கம் தெரியுமா.., நம்ம வீட்டுலையும் பொண்ணு இருக்கு.,  நீ ஏன்  இப்படி பண்ற என்று சத்தம் போட்டு அவன் என்னைக்கும் நம்ம வீட்டுக்கு தான் வருவான்..,  எப்பவும் போல வந்து போய் தான் இருப்பான் என்று சத்தம் போட்டு விட்டு., நீ பேசாம இருடா அவ சொல்லிட்டு கிடக்கிறா”.. என்று சத்தம் போடவும்.,

     இவனுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதி காத்தான்..,  அதுவரை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த மகிமா வீட்டினர் அப்பொழுதுதான் பேச தொடங்கினார்கள்..,

Advertisement