சற்று நேரத்தில் மழை விடவும் இருவரும் வேகமாக அந்த கிராமத்தை நோக்கி அவரவர் எண்ணங்களோடு நடக்கத் தொடங்கினர்…
அதே நேரம்., அங்கு இவர்களிருவரும் விழுந்த நேரத்திலிருந்து தள்ளி விட்ட பெண்களுக்கு சரமாரியாக பேராசிரியர்களும்., உடன் வந்த மாணவ மாணவிகளும் திட்ட தொடங்கிவிட்டனர். “இருவரில் யாருக்கு எது என்றாலும்., நீங்கள் இருவரும் தான் ஜெயிலுக்கு போக வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் தள்ளி விடுவதை வேற ஒரு மாணவன் போட்டோ எடுத்து வைத்திருந்தான். தற்செயலாக அவன் அங்குள்ள இயற்கை காட்சியை போட்டோ எடுப்பதற்காக தன்னுடைய செல்போனை எடுத்து போட்டோ எடுக்கத் தொடங்கிய நேரத்தில்., இந்த பெண்கள் தள்ளிவிடவும் அந்த காட்சியும் அதில் பதிவாகி இருந்தது., எனவே அது வேறு அந்த இரு பெண்களுக்கும் எதிரான சாட்சியமாக அமைந்திருந்தது., அதே நேரத்தில் கல்லூரி நிர்வாகத்திற்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டிருந்தது., கல்லூரி நிர்வாகத்தின் பெயரில் அவர்கள் இருவருடைய பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு., இருவரையும் உடனே கிளம்பி வரும்படி சொல்லி இருந்தனர். கீழே விழுந்தவர்களை எப்படி தேடுவது என்று வழிகாட்டியாக வந்த சுற்றுலா வழிகாட்டியிடம் கேட்ட போது., அவர் கீழே உள்ள கிராம மக்களை தான் அணுக வேண்டும்.,
அக் கிராமத்திலிருந்து யாராவது வருவார்கள் என்றும்., அவர்களிடம் சொல்லி தான் கீழே இறங்க வேண்டும். நாம் யாரும் இறங்க முடியாது என்றும், அப்படி இல்லை என்றாலும் கீழே உள்ள மலை கிராமத்து பக்கமாக போய்., அவர்கள் அனுமதியோடு கிராமத்தின் வழியாக தான் இப்பாதையில் வந்து பார்க்க முடியும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்..
கல்லூரி நிர்வாகத்திற்கும் இருவரின் பெற்றோருக்கும் தெரிவித்த பின்னர்., அங்கு அருகிலேயே இருந்த தங்கும் விடுதியில் மாணவர்களுக்கும்., மாணவிகளுக்கும்., அறை ஏற்பாடு செய்து அவர்களுடைய உடமைகள் அனைத்தும் கொண்டு வரப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.,
ஏனெனில் கீழே விழுந்த இருவரையும் தேடும் பொறுப்பு கல்லூரி சுற்றுலா வந்த பேராசிரியர்களின் பொறுப்பாய் அவர்களையே சேரும் என்பதால் அனைவரும் காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.. அப்பொழுது தான் நிரஞ்சன் கையில் செல்போன் இருப்பது அனைவருக்கும் தெரியும்., இல்லை ஒருவேளை கீழே விழுந்து இருந்தால் எதுவும் செய்ய முடியாது., இல்லையெனில் இருவரில் யாராவது ஒருவர் பிரச்சினை இல்லாம் தப்பித்தால் கூட எப்படியும் நமக்கு தகவல் வரும் என்றே அனைவரும் அங்கே காத்திருந்தனர்..
வேகமாக மலை கிராமத்தில் கிராம மக்களை போய் சந்திக்கும் போது., அங்கு அவர்கள் இடத்தில் ஒரு திருவிழா நடந்து கொண்டிருந்தது.., அவர்கள் ஊர் தெய்வத்திற்கு அவர்கள் திருவிழா நடத்திக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் இவர்களை கண்ட உடன் யார் என்று விசாரித்தனர்.
அங்கு மலையாளம் பேசுபவர்கள் இருந்ததால் கொஞ்சம் தவித்துப் போனார்கள்., அங்கு உள்ளவர்கள் பேசுவது வெளியே உள்ள மக்கள் பேசும் மலையாளம் போல இல்லை., கொஞ்சம் வித்தியாசமாக இருந்த்து.., இவர்கள் இருவரும் இங்கிலீஷ் மட்டும் தெரியும் என்ற நிலையில் இவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை., நிரஞ்சனுக்கு ஓரளவுக்கு கன்னடம் தெரியும் என்பதால் அவர்களிடம் எப்படி சொல்லி தெரியப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
பின்பு அங்கிருந்த ஒரு மலை கிராமவாசி ஒருவர் தனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் புரியும் என்பதை மலையாளத்தில் சொல்ல அதையும் அரைகுறையாக புரிந்து கொண்டு., அவன் பதில் சொல்லத் தொடங்கினான்., கீழே விழுந்த எழுந்த நேரத்திலிருந்து ஏதோ யோசனையோடு இருந்த மகிமா அவன் கை பிடியிலேயே இருந்தாள்..,ஏனெனில் அவள் பயந்து போய் அதிர்ந்து இருக்கிறாள் என்பதால் அவளை தனியே விட அவன் தயங்கினான். காலில் செருப்பு கூட இல்லாமல் பாதையில் நடந்து வந்ததால் அங்கு கல் குத்தியது., முள் குத்தியது., என்று அவள் காலிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தது.., வேறு வழியின்றி அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அவன் அருகில் நின்று கொண்டிருந்தாள்., குளிர் வேறு ஒருபுறம் இருக்க மழை வேறு அங்கு விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்ததால், அவளால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.
அதை அவனும் உணர்ந்திருந்தான் போலும்., எனவே அவளை தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டு அந்த தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்ற மலை கிராமவாசி இடம் பேசத்தொடங்கினான்., அவரோ மலையாளத்தில் இருவரும் காதலர்களா என்று கேட்க அதில் வரும் பிரேமம் என்ற வார்த்தை மட்டுமே அவனுக்கு புரிய…, இல்லை என்று சொன்னான்..,
பின்னே எப்படி கீழே விழுந்த என்று அவர் அரைகுறை தமிழ் கலந்த மலையாளத்தில் இவனிடம் விசாரிக்க., அவனோ தமிழில் இவள் இறங்கி பார்க்க முயன்றதாகவும்., அதே நேரத்தில் இவள் கால் வழுக்கி விட்டதாகவும்., அவளை காப்பாற்ற அவள் கையை பிடிக்க போக இருவரும் சேர்ந்து உருண்டு விட்டதாகவும்., தமிழில் தெளிவாகச் சொன்னாலும்
அவருக்கு மனைவியை காப்பாற்ற., கணவன் இறங்கி விட்டான் என்றே எண்ணிக் கொண்டு அதையே அங்குள்ள கிராம மக்களிடம் சொன்னார்., இவனுக்கு பாரியா என்ற வார்த்தை புரிந்தாலும் இப்போது அவர்களிடம் மறுத்துப் பேசி அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு தனக்கு சக்தி இல்லை என்பதை உணர்ந்தவன்., ஆமாம் என்று சொல்லிக்கொண்டான் அவளிடம் அதையும் சொன்னான்.,
“ வேறு வழியில்லாமல் சொல்லியிருக்கிறது அமைதியாக இரு, எதையும் மறுத்து பேசாதே” என்று சொல்லவும்., அவளும் தலையை ஆட்டி கொண்டால் புரிந்த ஒரு சில வார்த்தைகளை வைத்து அங்கு ஒரு குழப்பம் அரங்கேறிக்கொண்டிருந்தது.. அது புரியாமல் நிரஞ்சனும்., மகிமாவும் வேறு வழியில்லை எப்படியோ இங்கிருந்து வெளியே சென்றால் போதும் என்ற அளவிலேயே நினைத்திருந்தனர்…
அன்று அங்கு கோயில் திருவிழா என்பதாலும்., இப்பொழுது அவர்களை கொண்டு வேறு பாதையில் விட ஆள் இல்லை என்பதாலும்., அவர்களை அன்று மட்டும் அங்கேயே இருக்க சொன்னார்கள்.. வேறு வழி இல்லை என்பதால் அவனும் அவளும் சம்மதித்தார்கள்.,
இருவருக்கும் மாற்று உடைகள் என்று காய்ந்த உடைகளை அங்கு உள்ளவர்கள் உடுத்துவது போல் கொடுத்தார்கள்., அதை அங்கு உள்ள பெண்கள் அவர்கள் அணிவது போல மாற்றி அணிய சொல்லிக் கொடுத்தனர்., இவளுக்கு அவ் உடை வித்தியாசமாக இருந்ததால் வெளியில் வர தயங்கிக் கொண்டு உள்ளே இருப்பதாக அப்பெண்களிடம் செய்கையில் சொல்லவும்., அவர்களும் சரி என்று அங்கு இருந்த ஒரு குடிசையில் அவளை தங்க வைத்து விட்டனர்..,
அவன் அங்கு உள்ளவர்கள் போல் சாதாரணமாக வேஷ்டி கட்டி., வித்தியாசமான சட்டை போட்டு, துண்டை வைத்து மூடி இருந்தாலும் குளிருக்கு அவர்கள் போல் நெருப்பு சுற்றி அமர்ந்து இருந்ததால் அவனுக்கு எதுவும் தெரியவில்லை.., பெண்கள் புறமாக அவன் கண்களால் அவளை தேடுவதை கண்டு பெண்கள் அவள் உள்ளே இருப்பதாக சொல்லி விட்டனர். இவனும் சரி என்ற எண்ணத்தோடு அமைதியாக இருந்து கொண்டான். கோயில் காரியம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்லி.,
கணவன் மனைவி என்ற எண்ணத்தோடு இவர்களுக்கு சைகையில் சொல்லி புரிய வைத்துக்கொண்டிருந்தனர், அக்கிராம மக்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் இருவரும் தலையை மட்டுமே ஆட்ட முடிந்தது.,( ஏனெனில் கிராமத்து மக்கள் பேசும் மலையாளம் மலை கிராமத்து மக்கள் பேசும் மலையாளம் அந்த அளவிற்கு தெளிவாக புரியாது வெளியில் உள்ளவர்கள் பேசும் மலையாளம் அனைவருக்கும் புரியும்படியாக இருந்தாலும் இவர்கள் பேசுவது உள்பகுதியில் பேசும் மக்கள் பேசும் மலையாளம் போல இருந்ததால் இவர்களுக்கு சரிவர தெளிவாக புரியவில்லை)..
அவளிடம் பேசுவதற்காக அவர்களிடம் செய்ய சொல்லிவிட்டு உள்ளே வந்தவன். அவளை பார்த்த உடன் சிரித்து விட்டான். அங்கு உள்ள மலையாள பெண்கள் போல சேலை அணிந்து இருந்தாள்., அங்குள்ள பெண்கள் முழு சட்டை போல போட்டு அதன் மேலே சேலை அணிந்திருந்தனர்., அதுபோல இவளையும் அணிய வைத்திருக்கவும் இவனுக்கோ சிரிப்பு தாங்கவில்லை. அவள் அவ்வளவு கஷ்டத்திலும் அவனை முறைத்து பார்த்து “இப்போ உங்களுக்கு என்ன பாத்தா எப்படி தெரியுது.., நீங்க ஏன் இப்படி சிரிக்கிறீங்க” என்று சொல்லவும்..,
“மேடம் டிரஸ் டிசைனர் ன்னு தெரியாம., இப்படி டிரஸ் கொடுத்துட்டாங்களே ன்னு சிரிச்சேன்”.,,என்றான்.
சிரித்துக் கொண்டே ஒன்றும் இல்லை., இங்க அவங்க இப்படித்தான் நினைச்சு இருக்காங்க என்று அவர்கள் நினைப்பு பற்றி., அவர்களுடைய எண்ணங்களை பற்றி சொல்லி., நீ எதுவும் சொல்ல வேண்டாம்., சைகையில் கூட சொல்லிவிடாதே., நாம ரெண்டு பேரும் இங்க இருந்து வெளியே முதல்ல போகனும் அது நமக்கு முக்கியம்.
“இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகல ங்கிறதோ., நீயும் நானும் கணவன் மனைவி இல்லை என்பதையோ., அவங்ககிட்ட செய்கையில் சொல்லி புரிய வைத்து விடலாம். ஆனால் புரிய வைத்து என்ன பண்ண அவங்க நம்மல தப்பா நினைக்க வேண்டிய சூழ்நிலை வரும்., இவங்க ரெண்டு பேரும் மட்டும் எதுக்கு வந்தாங்க அப்படிங்கற மாதிரி கொஸ்டின்ஸ் எல்லாம் வரும்”..,
அதனால “கிராமத்து மக்கள் அந்த மாதிரி யோசிப்பாங்க., அதனால நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்., வெளியே எதுவும் சொல்லாத சைகையிலே கூட மத்தவங்க கிட்ட தெரியப்படுத்திறாதே”.., என்று சொல்லவும், இவளும் சரி என்று சம்மதித்து கொண்டாள் அது அவர்களை எங்கு கொண்டு விடப்போகிறது என்பது தெரியாமல்.